(இ - ள்.) உம் மயரி மன்னன் - உங்கள் மன்னனாகிய மயக்கமுடைய அச்சுவகண்டன், அடலுடை கடுத்தொழில் - கொல்லுதற் றொழிலுடைய நஞ்சைக்கொண்டுள்ள, கொடி எரி விலங்கு ஆரழல் நோக்குடை - ஒழுங்குபட்ட ஒளிக்கதிரோடு கண்டோர் அஞ்சி அகலுதற்குக் காரணமாக தீயுடைய கண்களோடு கூடிய, அரவின் படமுடை மணிகொள - பெரும் பாம்பின் படத்தின்கண் அமைந்த தலைமணியைக் கவர்ந்து கொள்ள, கருதிப் பார்ப்பதோர் - நினைக்கின்றறை ஒப்பதோர், மடம் உடை மனத்தன் - அறியாமையுடைய மனத்தவன் ஆதல் வேண்டும், (எ - று.) மன்னன் மனத்தன் என்க. மயக்கமுடைய அச்சுவகண்டன் அரவின் மணிகொளப் பார்ப்பதோர் மடமுமடை மனத்தன் என்றான் என்க. |