அரிமஞ்சு அரிகேதுவினை மாயச்சிங்கமாக்கி ஏவுதல்

696. அன்னண மனத்தி னாலே 1யிழைத்தரி கேது வென்னு
மின்னணங் குருவப் பைம்பூண் விஞ்சையன் 2றன்னைக்கூவிக்
கன்னவி றோளி னாற்குக் கருமமீ தென்று காட்டி
மன்னுமோர் மாயச் சீய மாகென வகுத்து விட்டான்.
 

    (இ - ள்.) அன்னணம் - அவ்வாறு, மனத்தினாலே இழைத்து - மனத்தின்கண்
சிந்தனைசெய்து, அரிகேது என்னும் - அரிகேது என்னும் பெயரையுடையவனும், மின்
அணங்கு உருவப்பைம்பூண் விஞ்சையன் தன்னைக்கூவி - ஒளிமிகுதியால் மின்னலையும்
மழுங்கச் செய்யும் அழகிய பசிய அணிகலன்களையுடையவனும் ஆகிய விச்சாதரன்
ஒருவனை அழைத்து, கல்நவில் தோளினாற்கு - கல்லைஒத்த தோளையுடைய அவ்வரி
கேதுவிற்கு, கருமம் ஈது என்று காட்டி - அவன் செய்யவேண்டிய காரியம் இதுவெனக்கூறி,
மாயமன்னும் ஓர்சீயம் ஆகென - மாயமே நிலைபெற்ற ஒரு சிங்கம் ஆகுக என்று,
வகுத்துவிட்டான் - கூறி ஏவினான், (எ - று.)

     அரிமஞ்சு இவ்வாறு கருதி, அரிகேது என்பானை அழைத்துக் கருமம் உணர்த்தி,
மாயச்சிங்கம் ஆகென விட்டான் என்க. கருமம் ஈதென்று காட்டி என்றது நீ இவ்வாறு
திவிட்டனை ஏமாற்றி மெய்ச் சிங்கத்தோடு புணர்த்திவிடல் வேண்டும் என்று கூறிய
சூழ்ச்சியை என்க.
 

( 124 )