அப்பொழுது உலகில் ஏற்பட்ட குழப்பம்
699. பொடித்தலை புலம்பிக் கானம் 3போழ்ந்துமா நெரிந்துவீழ
வடித்தலை கலங்கி வேழம் பிடிகளோ டலறி யாழப்
புடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்க
விடித்தலின் மனித்த ரெல்லா மெயிறுற விறுகிச் 4சோர்ந்தார்.
 

      (இ - ள்.) பொடித்தலை புலம்பி - மணல்பரந்த வெளியில் எதிர் முழக்கொலி
எழாநிற்பவும் ; கானம் போழ்ந்து - காடுகள் பிளந்து போகவும், மாநெரிந்துவீழ -
அதன்கண் உறையும் விலங்கினங்களின், உடல்நெரிந்து வீழவும், அடித்து அலைகலங்கி - அவ்வொலி தாக்கி அலைத்தலாலே கலக்கமுற்று, வேழம் பிடிகளோடு அலறி ஆழ - களிறுகள் பிடியானை களோடு கதறி வீழவும், புடைத்துழி - நெல்லை முறத்திலிட்டுப் புடைக்கும் பொழுது, பதடிபோல - பதர்கள் பறந்து வீழ்தல்போல, துறுகற்கள் புரண்டு பொங்க - மலையடிவாரங்களில் கிடக்கும் குண்டுக் கற்கள் புரண்டு குவியவும், இடித்தலின் - இடிபோல முழக்கம் செய்தலாலே, மனித்தர் எல்லாம் - அந்நாட்டின் வாழும் மனிதர்கள் எல்லோரும், எயிறுறஇறுகி - பற்கள் கிட்டி, சோர்ந்தார் - மூர்ச்சையுற்றனர், (எ - று.)

     அடித்தலை கலங்கி - அடித்து அலைத்தலால் கலங்கி என்க. அரிகேது
முழங்கியவுடன் வீழ, அலறியாழ, புரண்டு பொங்க. மனிதர் எல்லாம் பல்லிறுகி
மூர்ச்சையுற்றனர் என்க.

( 127 )