கலி விருத்தம்
7. மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாமலர்
இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது
விஞ்சைநீ ளுலகுடன் விழாக்கொண் டன்னது
துஞ்சுநீள் நிதியது சுரமை யென்பவே.
 
     (இ - ள்.) மஞ்சுசூழ் - முகில்களாற் சூழப்பெற்றதும்; மணி - அரிய
மணிகளையுடையதுமான; வரை - கோடிக்குன்றம் என்னும் மலையை; எடுத்த - கைகளால்
தூக்கிய; மால்அமர் - திருமாலின் கூறாகிய திவிட்டன் அரசு வீற்றிருக்கின்ற; இஞ்சிசூழ்
அணி நகர் - மதில்கள் சூழ்ந்த அழகிய போதனம் என்னும் நகரத்துக்கு; இருக்கை நாடது
- இருப்பிடமான நாடாவது; விஞ்சைநீள் உலகுடன் - வித்தியாதரர்களுடைய நீண்ட
உலகத்தோடு கூடி; விழா கொண்டன்னது - திருவிழாக் கொள்வதுபோன்ற
சிறப்பினையுடையது; துஞ்சும்நீள நிதியது - யாவரும் பெரு; ராதலால் இரப்பாரையற்று
வீணே பெருகிக்கிடக்கு்; வத்தையுடையது; சுரமை என்ப - சுரமை என்னும் நா உயர்ந்தோர்
சொல்லுவர், (எ - று.)

     மணிவரை என்பதற்கு அழகிய மலை என்று உரை அமையும். மஞ்சுசூழ் என்னும்
அடைமொழி மலையின் விளக்கி நிற்கின்றது. அச்சுவக்கிரீவன் முதலிய பகை வென்று
திவிட்டன் முடிசூடினான். புராணங்களை நன்கு கற்ற புலவர்கள் சிலர் திவிட்டனைப்பார்த்து, “தங்கள் வரலாறு மன்னர் பலர் வரலாறுகளோடு புராணங்களுட் கூறப்பட்டுள்ளது.
தாங்கள் பலபத்திரனோடு கூடிப் பகைவரை வென்று பஞ்சாயுத கருட சீதேவியாகிய
எழுவகைப்பட்ட அருங்கலத்தையும் இரு நிதியையும் பதினாறாயிரம் நகரங்களையும் அரசர்
கூட்டங்களையும் பெறுவீரென்றும், அதன் பின்னர்க் கோடிக்குன்றம் என்னும் மலையினைப்
பெயர்த் தேந்துவீர்களென்றும் புராணங்கள் கூறுகின்றன. எதிர்கால நிகழ்வுகளையுணர்ந்த
முனிவர்களால் கூறப்பெற்ற இப்புராணங்கள் பொய்யாக மாட்டா. அந்நிகழ்ச்சியினையும்
நாங்கள் காண விரும்புகிறோம்“ என்றனர். திவிட்டன் பலரும் தன்னைப் புடைசூழச்சென்று
கோடிக்குன்றம் என்னும் மலையைப் பெயர்த்தெடுத்துக் குடையைப் போலக்
கையிலேந்தினன்; இச்செய்தி அரசியற்சருக்கத்தில் கூறப்பெறும். இவ்வரலாறு கண்ணபிரான்
கோவர்த்தனகிரியைக் குடையைப்போல் எடுத்து ஆக்களைப்புரந்த செய்தியோடு
ஒத்திருக்கிறது. “மஞ்சுசூழ் மணிவரை எடுத்தமால்“ என்னும் தொடர் திவிட்டனுக்கும
திருமாலுக்கும் பொருந்துமாறு அமைந்துள்ள நயம் போற்றத்தக்கது.

     மால் அமர் அணிநகர் என்று இயைக்க. திருவிழாக்காலத்தில் நகரம் சிறப்பாக
அழகுசெய்யப்படுதல் இயல்பாதலின், அவ்வாறு அழகு செய்யப்பட்டாலல்லாமல் சிறப்புப்
பொருந்திய விஞ்சையருலகமும் இயற்கையழகமைந்த இந்நாட்டிற்கு ஒப்பாகாதெனச் சுரமை
நாட்டின் சிறப்பைக் கூறினார். இன்பவளத்தினும் செல்வநலத்தினும் சிறந்ததாகையால்
விஞ்சையருலகமும் எடுத்துக்காட்டப்பட்டது.

( 7 )