734. வழையும்வா ழைத்தடங் காடுமூ டிப்புடங்
கழையும்வே யுங்கலந் திருண்டுகாண் டற்கரு
முழையுமூ ரிம்மணிக் கல்லுமெல் லாநின
திழையினம் பொன்னொளி யெறிப்பத்தோன் றுங்களே. 

     (இ - ள்.) வழையும் - சுரபுன்னையும், வாழைத்தடங்காடும் - வாழைமரம் செறிந்த
பெரிய காடும், மூடி - கவிழ்ந்து, புடம் கழையும் - பக்கங்களில் அழகிய கரும்பும், வேயும் -
மூங்கில்களும், கலந்து - இருண்டு செறிந்து இருளைச் செய்து, காண்டற்கு அரும் முழையும்
- காணுதற்கியலாத நெடிய குகைகளையும், மூரிம் மணிக்கல்லும் - பெரிய மாணிக்கக்
கற்களையும் உடையவாய், எல்லாம் - இவைகள் எல்லாம், நினது இழையின் - உன்னுடைய
அணிகலன்களையும் ஆடைகளையும்போல, அம்பொன் ஒளியெறிப்பத் தோன்றுங்கள் ஏ -
அழகிய பொன் ஒளிவீசித் தோன்றுவனவாம், (எ - று.)

     வாழை வாழை முதலிய பசிய ஆடைகட்கும் மணி முதலியன அணி கட்கும் கொள்க.
 

( 162 )