(இ - ள்.) கோடல் - வெண்காந்தளிடத்தே, அணங்குஅமர்வன - தீண்டி வருத்தும் தெய்வங்கள் உறையும், அவை பிறர்கோடல் அரிது - ஆதலால் அவ்வெண்காந்தன் மலரையாரும் கொள்ளுதல் இயலாதாம்; வணங்கிளர்வன தோன்றி - செந்நிமமைந்தனவாகிய செங்காந்தள்கள், தோன்றி - எங்கும் காணப்பட்டு, வகைசுடர்வன - பல்வேறுவகை வண்ணமுடைய வாய்த் திகழா நிற்கும், இணங்கு, இணர்வன இஞ்சி - பொருந்திய பூங்கொத்துக்களை யுடைய இஞ்சிப் பூண்டுகள், எரி பொன் - ஒளிர்கின்ற பொன்னை ஒத்து மலர்வன, யுடையிஞ்சி - வாவிக்கரை களிடத்தே, மருதம் அயல்வரை - அயலதாகிய மருதநில எல்லைக்கண் உள்ள, வனமருதம் - அழகிய மருத மரங்கள், மணங்கமழ்வன - இங்குத் தம் மணம் கமழும்படி செய்யும், (எ - று.) இஞ்சி எரிபொன் - இஞ்சிமலர்கள் எரிபொன்போல் மலரும். புடையிஞ்சி - வாவிக்கரை. இஞ்சிப்புடை என்பது முன்பின் மாறி நின்றது. |