753.

இயங்கு கின்னர ரின்புறு நீரவே
1தயங்கு கின்றன தானமந் தாரமே
பயங்கொள் வார்பயங் கொள்ப வனைத்தையும்
தயங்கு கின்றன தானமந் தாரமே.
 

      (இ - ள்.) தயங்குகின்றன தான மந்தாரம் - திகழாநின்ற வானவருலகத்து மந்தார
மரமாகிய தேவதருவோ எனில், இயங்குகின்னரர் இன்புறுநீரவே - அத் தருநிழலிலே
இயங்கும் இயல்புடைய கின்னரதேவர்கள் மட்டும் இன்புறுதற் குரியனவாம், தானம் -
இவ்விடத்துள்ள, மந்தாரம் - இம் மந்தார மரங்கள், பயங்கொள்வார் பயங்கொள்வ
அனைத்தையும் - தம் பால் பயன் கொள்ளுதற்குரியார் எல்லாருக்கும் அவர் பயன்
நுகர்தற்குரியவற்றை யெல்லாம், தயங்குகின்றன, தம்பால் உடையனவாய்த் திகழாநின்றன,
(எ - று.)

     தானம் - வானுலகம்; இடம். வானவருலகத்தே உள்ள மந்தார மரங்கள் ஆண்டுள்ள
கின்னரர்க்குமட்டுமே இன்பந்தருவன, இங்குள்ள மந்தாரம் வரையாது வள்ளல்போன்று
எல்லோர்க்கும் இன்ப மளிப்பனவாம் என்க.
 

( 181 )