வேறு

756.

மேவுவெஞ் சுடரொளி விளங்கு கற்றலம்
தாவில்பூந் துகளொடு ததைந்து தோன்றுவ
பூவுக விளையவர் திளைத்த பொங்கணைப்
பாவுசெந் துகிலுடைப் பள்ளி போலுமே.

     (இ - ள்.) மேவு வெஞ்சுடரொளி விளங்கு கற்றலம் - தோன்றிய திங்களின்
நிலாவொளி படர்ந்து விளங்கும் கல்லிடம், தாவில் பூந்துகளொடு ததைந்து - குற்றமற்ற
பூந்தாதுக்கள் செறிந்து, தோன்றுவ - தோன்றுவன, இளையவர் பூவகத் திளைத்த
பொங்கணை - காதலிளைஞர்கள் பூக்கள் சிதறுமாறு கலவிப் போராற்றிய பரிய அணையாகிய, பாவு செந்துகில் உடைப்பள்ளிபோலும் - விரித்த செந்நிறமான துகிலையுடைய பள்ளியை ஒக்கும், (எ - று.)

     திங்கள் ஒளிபரவிய கற்பாறைகள் மேல் பூந்துகள் படிந்துள்ள தோற்றம், இளையவர்
திளைக்கும் பள்ளியைப் போலும் என்க.

( 184 )