(இ - ள்.) நிறைபுனல் தடத்து வாழ்வார் - ஈண்டுள்ள நிறைந்த நீர்நிலைகளில் வாழ்பவர்கள், இருபுடையும் வார் வீக்கி - இரண்டு பக்கங்களினும் கச்சிறுக்கிக் கட்டப்பட்டு, வடம் சுமந்து - மணிவடங்களைத் தாங்கி, எழுந்து - பணைத்தெழுந்து, வேங்கை ஏர் இருஞ்சுணங்கு சிந்தி - வேங்கைமலரின் நிறம் போன்ற பொன்னிறமான பெரிய தேமல் பாய்ந்து, எழுகின்ற இளமென் கொங்கை - எழுச்சியையுடைய இளைமையுடைய மெல்லிய முலைகளையும், அங்கொண்டை கார் இருங்குழல் - அழகிய கொண்டையாகப் புனையப் பெற்ற கரிய பெரிய கூந்தலையும், கதிர்நகை கனகப் பைம்பூண் - சுடரால் திகழ்கின்ற பொன்னாலாகிய பசிய அணிகலன்களையும் உடைய, நீரர மகளிர் கண்டாய் - நீரர மகளிர்கள் ஆவார் என அறிதி, (எ - று.) |