(இ - ள்.) பாசிலைப் பாரிசாதம் - பசிய இலைகளையுடைய பாரிசாத மரங்கள் பரந்து பூ நிரந்த பாங்கர் - பரவி மலர்கள் நிறைந்த பகுதிகளை யுடைய, மூசின மணி வண்டார்க்கும் - மொய்த்துள்ள நீலமணியை ஒத்த வண்டுகள் ஆரவாரிக்கும், முருகு அறா மூரிக்குன்றம் - மணம் ஒழியாத பெரிய மலைகளின் வளத்தை, காயசின வேலினான்றன் கண்களி கொள்ளக்காட்டி - சுடுசின வேலை ஏந்திய திவிட்டன் கண்கள் களிக்குமாறு காட்டி, யோசனை எல்லைசார்ந்து - ஒரு யோசனை தூரத்தைக் கடந்து எய்தி, பின்னை இஃது உரைக்கலுற்றான் - மீண்டும் பின் வருமாறு கூறுவான் தொடங்கினான், (எ - று.) பாரிசாதம் பரந்து பூநிரந்து பாங்கர் வண்டார்க்கும் மூரிக்குன்றம் வேலினான் களிகொள்ளக் காட்டி யோசனை சென்று மீண்டும் உரைக்க லுற்றான் என்க. |