கை முதலியன | 78. | 3சங்கியல் வலம்புரி திகிரி யென்றிவை தங்கிய வங்கைய னடித்தண் போதினன் மங்கல மழகளி றனைய 4செல்கையன் இங்குமுன் மொழிந்தவற் கிளைய நம்பியே. | (இ - ள்.) இயல் வலம்புரிச்சங்கு - அழகிய வலம்புரிச் சங்கும்; திகிரி - சக்கரமும்; என்று இவை தங்கிய அம் கையன் - என்று சொல்லப்பெற்ற இவைகள் (இரேகைகளாகத்) தங்கப் பெற்ற அழகிய கைகளையுடையவன்; அடித்தண் போதினன் -குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற அடிகளையுடையவன்; மங்கலம் மழகளிறு அனைய செல்கையன் - நன்மைபொருந்திய யானைக்கன்றின் நடையைப்போன்ற அழகிய நடையை யுடையவன்; இங்கு முன் மொழிந்தவற்கு இளைய நம்பி - இங்கே முன்பு கூறப்பட்ட விசயனுக்கு இளையவனாகிய திவிட்டன் என்பான். (எ - று.) சங்கரேகை சக்கரரேகை ஆகியவைகள் தங்கப்பெற்றிருத்தல் நல்லிலக்கணமாகும். செங்கயல் என்ற பாடங்கொண்டு - சிவந்த கயல் மீனும் என்று பொருளுரைத்து மச்சரேகை சங்கரேகை சக்கரரேகை என்று கூறுதலும் ஒன்று. மேலே 114 ஆம், செய்யுளில் சங்க லேகையும் சக்கர லேகையும், அங்கையுள்ளன வையற் காதலால்“ என்று கூறுவர். அங்கையன் - அகம் + கை “அகம் முனர்க்கைவர இடையன கெட்டன“ (நன்-மெய்-19) என்னும் விதிப்படிகொண்டு அகங்கையையுடையவன் எனினுமாம். மழ, இளமையை யுணர்த்தும் உரிச்சொல் “மழவுங் குழவும் இளமைப் பொருள“ என்பது சூத்திரம். | ( 9 ) | | |
|
|