(இ - ள்.) பைத்தலைப் படம் நாகம் - நச்சுப் பையையுடைய படப்பாம்பு, அழன்று - வெம்பி, படமுயர்த்துத் தம் பொய்த்து அளைத்தலை - தம்முடைய உள்ளீடற்ற வளைகளிடத்தே, போதர - புகச்செல்லுதல் கண்டு, அத்தலைச்சிலமான் - அவ்விடத்திலே நின்ற சில மான்கள் அவற்றை, காந்தள் - கோடல், கார்செய்வான் கைத்தலம் முகிழ்க்கின்றன, என்று - வேனிலின் கடுமை பொறாது கார்ப்பருவம் வருதலை விரும்பி இறைவனைத் தம் மலர்க்கரங்கள் முகிழ்த்து வணங்குகின்றன என்று கருதிச் சென்றுநோக்கி, அயர்வெய்தும்-அவை காந்தண் மலரன்மை கண்டு வருந்தாநிற்கும். (எ - று.) பொய்த்து - உள்ளீடற்றது. பாம்புப் படங்களை வாடிக்கூம்பிய காந்தள் மலர் மழைபெய்யும் பொருட்டுக் கைகுவித்து வானத்தைக் தொழுவனவாகக் கருதி மான் அவற்றைத் தின்னச்சென்று ஏமாற்றமடைந்து வருந்தும் என்றவாறு. |