784.

விசையி னோடு 2வெண் டேர்செலக் 3கண்டுநீர்
தசையி னோடிய நவ்வி யிருங்குழா
மிசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய
வசையின் மேன்மகன் போல வருந்துமே.
 

      (இ - ள்.) வெண்டேர் - வெள்ளிய பேய்த்தேர், விசையினோடு செலக்கண்டு -
விரைந்து ஓடுதலைக்கண்டு, நீர் நசையின் ஓடிய - நீர் வேட்கைமிக்கு அக்கானலை நீர் என
மதித்து விரைந்தோடிய, நவ்வி இருங்குழாம் - மானின் பெரிய கூட்டம், இசையில்
கீழ்மகன்கண் ஈந்து கொள்ளும் புகழ் சிறிதும் இல்லாத வச்சையானான கீழ்மகனிடத்தே,
இரந்து எய்திய - நல்குரவால் இரந்து சென்ற - வசையில் மேன்மகன்போல் - குற்றமற்ற
மேன்மகனைப் போல, வருந்தும் - வருத்தம் எய்தும், (எ - று.)

     பேய்த் தேரை நீரென்று கருதி ஓடி ஏமாற்றமடைந்து மான்கீழ் மகன்போல் இரந்து
சென்ற மேன்மகனைப் போலப் பெரிதும் வருந்தின என்பதாம்.

( 212 )