(இ - ள்.) ஏறுகொண்ட கோவலர் - காளைகளையுடைய இடையர்கள், ஏந்து தண்ணவக்குரல் - ஏந்தியுள்ள ஒரு கட்பறையின் ஒலியோடு, மாறு கொண்ட - மாறுபட்ட, கோடியர் - கூந்தர்களுடைய, மணிமுழா முழங்கலில் - அழகிய மத்தளமும் முழங்குதலால், தூறுகொண்ட தோகை - அடர்ந்த தோகையையுடைய, மஞ்ஞை ஆடல்கண்டு - மயில்கள் களித்தாடுதலைப் பார்த்து, கண்மகிழ்ந்து - கண்களித்து, மான்கணம் சாறு கொண்டு தயங்கும் நீர - மான்கூட்டங்கள் திருவிழாக் கண்டு களிப்பன ஒத்தன, சாரெலாம் - இப்பக்கங்கள் எல்லாம், (எ - று.) ஒருசார் கோவலரின் தண்ணவ இன்னிசை பரவ, ஒருசார் கூத்தரின் இன்னிசை பரவ, மயிற்கணங்கள் ஒருசார் கூத்தாட, விழாக்கண்டு மகிழும் மகளிரைப் போன்று மான் கணங்கள் கண்டும் கேட்டும் மகிழ்ந்தன என்றபடி. |