797.

கார்மணந்த கானயாறு கல்லலைத் திழிந்தொலிக்கு
நீர்மணந்த நீள்கரை நிரைத்தெழுந்த 2நாணல்சூழ்
வார்மணற் பிறங்கன்மாலை வல்லிவிண்ட 3தாதணிந்து
தார்மணந்த வாரமார்ப 4யாகசாலை போலுமே.

     (இ - ள்.) கார்மணந்த கானயாறு - முகில்கள் சூழ்ந்துள்ள காட்டகத்தே யுள்ள யாறு,
கல்அலைத்து - மலைகளைவருத்தி, இழிந்துஒலிக்கும் - ஒழுகி ஆரவாரிக்கும், நீர்மணந்த
நீள்கரை - நீரைப் பொருந்திய அவ்வியாற்றின் நீண்ட கரையின்கண், நிரைத்தெழுந்த
நாணல்சூழ் - வரிசையாக முளைத்து வளர்ந்துள்ள நாணல்களாற் சூழப்பட்ட, வார்மணல்
பிறங்கன்மாலை - நீண்ட மணற்குன்றுகளின் நிரல். வல்லிவிண்ட தாதணிந்து - பூங்கொடிகள்
உதிர்த்த பூந்துகள் போர்க்கப்பட்டு, தார்மணந்த ஆரமார்ப - மாலையை அணிந்து
சந்தனந்திமிர்ந்துள்ள மார்பையுடையோனே!, யாகசாலைபோலும் - யாகசாலையை ஒக்கும், (எ - று.)

     கானயாற்றின் கரை நாணல் சூழ்ந்து மணற் பரப்போடே பூங்கொடிககள் மகரந்தத்தை
உதிர்த்துப் பரப்புதலாலே யாகசாலை போன்று தோன்றும் என்க.கார் துளித்தலாலும் தருப்பையிருத்தலாலும் பூந்தாதுகள் சிந்தப் பெறுதலாலும் யாகசாலையை ஒக்கும் என்க.

( 225 )