(இ - ள்.) வளமா நிலை - செழிப்பான நிலைமையையுடைய, மேதி - எருமை, மருப்பின் இடம் - கொம்பினாலே இடித்தாலே, இளவாழை நுதியின் - இளைய வாழைப்பூவின் நுனியில் வடிகின்ற, கமழ்தேன் ஒழுகி - மணங் கமழும் தேன் ஒழுகி, குளம் ஆர் குளிர் தாமரை கொண்ட - குளத்தின்கட் பொருந்திய குளிர்ந்த தாமரைக் கொடிகள் கொண்டுள்ள, நகைத்தளவாய் - மலர்ந்த பூக்களின் இதழிடத்திலே, உகுகின்றனகாண் - சிந்துவனவாதலைக் காண்பாயாக, (எ - று.) மேதி - எருமை. வாழை - வாழைமரம். நகைத்தளம் மலர்ந்த பூவிதழ். |