(இ - ள்.) வளர் செங்கிடையின் எழில் வைத்த நுதல் - வளராநின்ற செவ்விய கிடைச்சாகிய அழகு பொருந்திய நெற்றியையும், வளர்செங் கிடையின் ஒளிவவ்விய வாய் - வளராநின்ற செவ்விய கிடைச்சாகிய ஒளியுடைய வாயையும், வளர் செங்கிடையின் - வளராநின்ற செவ்விய கிடைச்சாகிய, வளை - வளையல்களையும், ஆடும் வயல் வளர் செங்கிடை மாமலர் - ஆடாநிற்பனவும் வயலிடத்தே வளர்வனவுமாகிய செவ்விய கிடைச்சுகளின் சிறந்த மலர்களாகிய, மல்கு சிகை - பருத்த கொண்டை கயினையும், உடையவளும், (எ - று.) செங்கிடையாகிய நுதலையும், வாயையும், வளையையும், கொண்டையையும் என்க. செங்கிடை - ஒருவகைச் செடி; இது - செந்நிறமுடையதாகலின் இங்ஙனம் உருவகித்தனர். சிகை - கொண்டை. |