(இ - ள்.) வளங்கெழு குமரரை வலங்கொண்டு எய்தின - எழில் ஆற்றல் முதலிய வளமனைத்தும் நிறைந்துள்ள அவ்வரச மக்களை எதிர்கொண்டு நகர் வலமாக அழைத்துச்சென்றவை, இளங்களிக் குஞ்சரம் - இளமையுடைய செருக்குற்ற யானைகள், இரட்டித்தாயிரம் - இரண்டாயிர மாம், துளங்கு ஒளிக்கலினமா - திகழும் ஒளியையுடைய கடிவாளமிட்ட குதிரைகள், தூளி எல்லைய - துகள்கள் எத்தனை அத்தனை, அதன்படையின் எல்லை - விரிந்த அக் குதிரை தேர் ஆள் ஆகிய மூவகைப் படையின் அளவினை, அளந்து அறிந்திலம் - அளவைகளால் யாம் அளந்து கண்டோமில்லை, (அளவிறந்தன என்றபடி.) (எ - று.) இரண்டாயிரம் யானைகளும் எண்ணிறந்த குதிரை முதலியனவும் விசயதிவிட்டர்களை எதிர்கொண்டழைத்துக் கொண்டு நகர்வலமாகச் சென்றன என்க. |