நங்கையர் மனதில் விசயன் | 82. | வார்வளை வண்ணனென் மனத்து ளான்பிறர் ஏர்வளர் நெடுங்கணுக் கிலக்க மல்லனாற் கார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய் ஆர்வளர்த் தவர்கொலென் பவரு மாயினார். | (இ - ள்.) வார்வளை வண்ணன் - நீரில் தோன்றுகின்ற சங்கைப்போலும் வெள்ளிய நிறமுடையவனான விசயன்; என் மனத்து உளான் - என்னுடைய உள்ளத்தின் கண்ணே இருக்கின்றான்; பிறர் - மற்றவர்களது; ஏர்வளர் நெடும் கணுக்கு இலக்கம் அல்லன் - அழகு பொருந்திய நீண்ட கண்கட்கு அவன் காணப்பெற மாட்டான்; அவ்வாறாகவும்; கார்வளர் கொம்பு அனார் இவர்கள் - கார்காலத்தே வளராநின்ற கொழுவிய பூங்கொடியை ஒத்த இம்மகளிருடைய; காமநோய் - அவாநோயை ஆர் வளர்த்தவர் என்பவரும் ஆயினார் - யார் மிகுதிப்படுத்தியவர்கள் என்று கேட்பவர்களும் சிலர் உளராயினார். (எ - று.) இது விசயனைக் கண்டு மயங்கினா ளொருத்தி கூற்றென்க. இவள் பேதைமை:- ... ... ... “நெஞ்சிடை வஞ்சன் வந்து புக்கனன் போகாவண்ணம் கண்ணெனும் புலங்கொள்வாயில் சிக்கென அடைத்தேன் தோழி“ (கம்ப. உலா. 14) என்று கூறிய மிதிலை நகரத்தாள் பேதைமையைப் போன்றது. வளைவண்ணன் - விசயன். வார் - நீர். | (13) | | |
|
|