(இ - ள்.) போற்றி - தந்தையே எம்மைப் போற்றியருள்க! நம் புறணிசூழ் காடு பாழ் செய்வான் - நமது மேட்டு நிலம் சூழ்ந்த காட்டகத்தை அழிக்கும் பொருட்டு, சீற்றம் மிக்குடையது ஓர் செய்கண்சீயம் சேர்ந்தது - சினம் மிகுந்ததாகிய சிவந்த கண்களையுடைய ஓர் அரிமா எங்கிருந்தோ வந்து சேர்ந்தது, வேற்றுவன் தமர்கள் வந்துரைப்ப - அச்செய்தியை நம் பகைவனாகிய அச்சுவகண்டனுக்குத் தமராய தூதுவர் வந்து எமக்கு அறிவிக்க, எம்பி இவவாற்றல் சால்அடியன் - என் அருமைத்தம்பியும் ஆற்றல் மிக்கவனும் தங்கள் அடியவனும் ஆகிய இத்திவிட்டநம்பி, சென்று அதனை நீக்கினான் - போய் அவ்வரிமாவைக் கொன்று அவ்விடுக்கணைப் போக்கினான், (எ - று.) தந்தையே! நம்புறணி சூழ் காடு பாழ்செய்வான் ஓர் அரிமா எய்திற்று; அதனை உரைப்ப, இவ்வாற்றல்சால் திவிட்டன் சென்று கொன்றான் என்றான், என்க. |