(இ - ள்.) சுந்தரப்பொடியும் - அழகிய மணப்பொடியும், சுரும்பொடு பூவும் - அளிகளுடனே மலர்மாலைகளும், வீசி - ஊடிய மகளிர்கள் வீசுதலாலே, துதைந்து - செறியப்பட்டு, சந்திரன் தவழும் மாடம் - திங்கள் தவழ்கின்ற மேனிலைமாடங்களையுடைய, சக்கிரவாள மன்னன் - சக்கிரவாளகிரிக்கு அரசனும், அந்தரத்து அமரர்கோமான் - வான்உலகை ஆளும் இந்திரன், அணிந்து போந்தனைய நீரான் - அழகு செய்துகொண்டு வந்தாற்போன்ற அழகுடைய பெற்றியானும், மந்தரம் மலைக்கும் யானை - மந்தர மலையொடு போர்செய்யும் பரிய யானையையுடையவனுமாகிய, வச்சிரதாடன் என்பான்- வச்சிர தாடன் என்னும் பெயருடையானும், (எ - று.) சக்கிரவாளத்து மன்னனும், யானையை உடையானும், இந்திரனை ஒத்தவனும் ஆகிய வச்சிரதாடனும், என்க. |