7. கருடாங்கதன்
836.

மென்னரம் பனுக்குந் தீஞ்சொல் 2மெல்லிய லார்தம் பாடல்
கின்னரம் பிணிக்குஞ் செய்கைக் கிருதமா தனத்தைக் காப்பான்
கைநவின் றிலங்குஞ் செவ்வேற் காவலன் கருடன் சேர்ந்த
மெய்நவின் றிலங்குஞ் செம்பொ னங்கதம் விளைந்த பேரான்.
 

     (இ - ள்.) மெல் நரம்பு அனுக்கும் தீஞ்சொல் - மெல்லிய யாழின் நரம்பை வருத்தும்
இனிய சொல்லையுடைய, மெல்லியலார்தம் - மென்மைத் தன்மை மிக்க மகளிர்களின், பாடல்
- இசைப்பாடல், கின்னரம் பிணிக்கும் -கின்னரப் பறவைகளைக் கட்டுதலைச் செய்யும்,
செய்கை - செயலையுடைய, கிருதமாதனத்தைக் காப்பான் - கிருதமாதனத்தைக்
காவல்செய்வான், கை நவின்று இலங்கும் செவ்வேற் காவலன் - கையிடத்தே பொருந்தி
விளங்கும் செவ்விய வேலையுடைய அரசன், கருடன் சேர்ந்த - கருடன் என்னும் சொல் சேர்ந்த, மெய் நவின்று இலங்கும் செம்பொன் - உடலிடத்தே பொருந்தித் திகழும் செவ்விய பொன்னாலியன்ற, அங்கதம் - அங்கதம் என்னும் சொல், விளைத்தபேரான் - தோற்றுவித்த கருடாங்கதன் என்னும் பெயருடையானும், (எ - று.)

     அங்கதம் - தோள்வளை. கருடன் சேர்ந்த அங்கதம் விளைத்த பேர். கருடாங்கதன்
என்பதாம். கிருத மாதனத்து மன்னனும் வெவ்வேலுடை யோனும் ஆகிய கருடாங்கதனும் என்க.

( 10 )