(இ - ள்.) திருவளர் செல்வர்மேல் - அழகுமிக்க அரசிளங்காளைகளின்மேல்; சென்ற சிந்தை நோய் - செல்லுகின்ற மனநோயாகிய காதல்நோய்; ஒருவரின் ஒருவர் - ஒருவரைப் பார்க்கினும் மற்றொருவர்; மிக்கு உடையர் ஆதலால் - மிகுதியாகக் கொள்வதனால் அவ்விசயதிவிட்டர்; உருவளர் கொம்பனார் - அழகு வளரும் பூங்கொம்பைப்போன்ற பெண்களின்; உள்ளம் காய்வது ஓர் - உள்ளத்தைச் சுடுவதாகிய ஒப்பற்ற; எரி வளர்த்திடுவது - காதல்தீயை வளர்க்கத்தக்க; ஓர் இளமை எய்தினார் - சிறந்த காளைப்பருவத்தை யடைந்தார்கள். (எ - று.) அந்த மங்கையர்கள் கொண்ட காமநோய் ஒருவரைப் பார்க்கினும் மற்றொருவருக்கு மிகுதியாக இருந்தது. ஆகவே விசய திவிட்டர்கள், அம் மங்கையரின் காதல் தீயை வளர்த்திடற்குரிய நல்ல இளமைப் பருவத்தையடைந்தார்கள் என்க. |