அரசன் மனைவியருடன் அமர்ந்திருத்தல்

85. மற்றொர்நா 1ளமரிகைக் கொடிகொண் மாமணிச்
சுற்றுவான் சுடரொளி தழுவிச் சூழ்மலர்
முற்றிவண் டினம்விடா முடிகொள் சென்னியக்
கொற்றவ னிளையவர் குழைய வைகினான்.
 
     (இ - ள்.) ஒர்நாள் - ஒருநாள்; அமரிகை - அமரிகை என்னும் யாற்றின்கண்
தோன்றும்; கொடிகொள் மா மணிச்சுற்று - ஒழுங்குகொண்ட சிறந்த மணிமாலைகளைச்
சுற்றிய சுற்றினின்றும் எழும்; வான் சுடர் ஒளி தழுவி - சிறந்த பேரொளியாற் றழுவப்பட்டு;
சூழ்மலர்முற்றி - கட்டிய மலர் மாலைகளாற் சுற்றப்பட்டு; வண்டு இனம்விடா -
வண்டுக்கூட்டங்கள் அம் மாலையில் மொய்த்தலை விடாத; முடிகொள் சென்னி - முடியணியைக் கொண்ட தலையையுடைய; அக்கொற்றவன் - அப் பயாபதி மன்னன்;
இளையவர் குழைய - இளமை மிக்கவர்களாகிய மனைவியர் உள்ளங்குழைந்து நிற்க;
வைகினான் - அமர்ந்திருந்தான். (எ- று.) மற்று - அசை.

     விசய திவிட்டர்கள் வளர்ந்து இளமைப் பருவத்தை யடைந்துள்ள காலையில்,
ஒருநாள் பயாபதி மன்னன் தன் மனைவியர்களோடு இனிது தங்கியிருந்தான். அமரிகை -
ஒரு யாறு. இதன் கண் தோன்றும் மணிகள் சிறப்புடையன.
 

 ( 16 )