(இ - ள்.) மகரம் பேழ்வாய் ஊன்றிய ஒளிமுகம் - பெரிய வாயை யுடைய மகரமீனின் முகவடிவிற்றாய் இயற்றி ஊன்றிய ஒளிமுகம் என்னும் உறுப்பின்கண், தெளிப்ப வீழ்ந்து நான்றன மணிசெய்தாமம் - மிளிர விழுந்து தொங்குவனவாகிய மணியாற் செய்யப்பட்ட மாலைகள், நகைமுகம் நிறைந்த சோதி கான்றன - தம் நகுகின்ற முகங்களில் நிறைந்துள்ள ஒளியை வீசின, கனக சாலம் - பொன்குவியல்கள், கலந்தன - தம்சோதியை அவற்றோடு கலந்து வீசின, கங்கணீகம் தோன்றின - கங்கையின் அலைகள் போன்று தோன்றியவாய, பதாகை - கொடிகளும், சூலம் ஞாயில் - சூலங்கள் ஞாயில் களும், சுடர்ந்தன - ஒளி வீசின, (எ - று.) கங்கணீகம் - கங்கையின் அலை. ஒளிமுகம் - முகப்பு. முகப்பின் கண் மணிமாலைகள் தூங்கி ஒளிபரப்பின என்க. |