(இ - ள்.) கீழால் - அவ்விமானத்தின் தளத்திலே, வார் அணி பசும்பொன் வாழை - நீண்டு அழகிதாய பசும்பொன்னாலியன்ற வாழைமரங்கள் மரகதக் கமுகு - மரகதமணியாலாகிய கமுகமரங்களோடு, ஓங்கி - உயர்ந்து தோன்றவும், தோரணத் தூண்கள்தோறும் - தோரணங்கள் கட்டப்பட்ட தூண்களிலெல்லாம், சுடர்மணி சிலம்ப - ஒளியுடைய கண்டாமணிகள் ஒலிக்கும்படி, நான்று - தொங்கி, நீர் அணி நிழல்கொள் முத்தம் மணல் மிசை - நீரோட்டம் உடைய ஒளிநிறைந்த முத்துக்களாகிய மணற் குவியலின்மேல், செம்பொன் பூரணக்குடங்கள் - செம்பொன்னா லியன்ற பூரணக்குடங்கள், நிரந்துதோன்றி - வரிசையாகக் காணப்பட்டு, கொழுங்கதிர் புதைந்த - தம் கொழுவிய கதிர்களிலே புதைந்தன, (எ - று.) (அவ்விமானத்தின் றளத்திலே பசும்பொன் வாழைகளும் மரகதக் கமுகுகளும் நாட்டப்பட்டன; தூண்களிலே கண்டாமணிகள் கட்டப்பட்டுள்ளன; கீழே முத்துக்களை மணலாகப் பரப்பிப் பொன்னாலாய பூரணகுடங்கள் வைக்கப்ட்டுள்ளன என்க. |