(இ - ள்.) கன்னியர்கள் காக்கும் - இளமகளிர்களால் காவல் செய்யப்பட்ட, காவல்மிகு கன்னிநகர் - காவற்றொழில் மிக்க கன்னி மாடத்தின், அகில் வாவிநாறும் - அகிற்புகை தாவிப்படர்ந்து மணங்கமழும், வாயிலவை நீங்கி - பல வாயில்களையும் கடந்து, நாவிகமழ் கொம்பு அனைய நங்கை - கத்தூரி மணங்கமழும் பூங்கொம்புபோலப் பொலிவுற்றுத் திகழும் சுயம்பிரபை, நகை வேலான் - ஒளியுடைய வேலேந்திய சடிமன்ன னுடைய, தேவியமர் - பெருந்தேவி வதியும், கோயிலது - அரண்மனையை, செவ்வனம் - நேரிதின், அடைந்தாள் - எய்தினாள், (எ - று.) சுயம்பிரபை கன்னிமாடத்தை அகன்று, தன் நற்றாயின் அரண் மனையை எய்தினாள் என்க. |