(இ - ள்.) அன்னவகை - அவ்வாறு, தேவியர்களோடு அமரும் எல்லை - சுயம்பிரபை தாயர்களோடு வீற்றிருந்த பொழுது, மன்னுபுல வோர்கள் - சோதிடநூலில் நிலைபெற்ற அறிவுடையோர்கள், முகவோரை யொடு மூர்த்தநலம் நோக்கி - முதன்மையுடைய ஓரை (இராசி) முழுத்தம் இவற்றின் நலன்களை ஆராய்ந்தறிந்து, சொல - சொல்லுதலாலே, மன்னன் - சடி வேந்தன், மகள்தன்னை - தன் மகளாகிய சுயம்பிரபையை, இன்னகை விமான தலம் ஏறுகினிது என்றான் - இன்புறத்திகழும் எழிலுடைய விமானத்தில் இனிதே ஏறுக என்று பணித்தான், (எ - று.) அவ்வாறு ஒப்பனை செய்யப்பட்டுச் சுயம்பிரபை தாயரோடே வைகிய பொழுது புலவர்கள் ஓரை முழுத்த முதலிய நாள்நன்மை நோக்கிச் சொல்ல, சடிமன்னன் மகளை, விமானத்தில் இனிதே ஏறுக என்றான், என்க. |