(இ - ள்.) மோடு விட்டு அலர் மொய்ம்மலர் காவினுள் - உயர்ந்து மலர்ந்துள்ள மலர்கள் செறிந்த திருநிலையகம் என்னும் அப் பூம்பொழிலில், பாவைதன் கோன்படை - சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனின் படை, பாடிவிட்டது - இயங்கிற்று, கூடிவிட்டிளையாரன கோதைமேல் - அங்குக் கூடிய இளமையுடைய மகளிரினுடைய மலர் மாலைகளின்மேல். தேன் - அளிக்குலங்கள், மூடிவிட்டு - மொய்த்து மூடி, அமர் முரிவித்த - போர்தொடுத்தன, (எ - று.) மோடுவிடல் மோடிடல், பாடிவிடுதல் - படைகள் தங்குதல். கூடிவிட்டு - கூடி. இளையாரன : ஆறாவதன் பன்னை யுருபு. திருநிலையகம் என்னும் பூம்பொழிலிலே சடிமன்னன் படைகள் இறங்கின; அவ்விடத்தே மகளிரின் குழலிலே வண்டுகள் மொய்த்துப் போரிட்டன என்க. வண்டுகள் மொய்த்து அமர் செய்தன என்றது அப்பொழில் வளத்தைச் சிறப்பிக்கும் குறிப்பேதுவாய் நின்றது. |