(இ - ள்.) செம்பொன் மாளிகையும் - செவ்விய பொன்னாலியன்ற மாளிகைகளும், வயிரத்திரள் தம்பமுற்ற - வயிரம் என்னும் மணியாற்றிரண்ட தூண்களையுடைய, தமனியக்கூடமும் - பொன்னம்பலங்களும், அம் பொன் ஆடரங்கும் - அழகிய கூத்தாடுதற்குரிய பொன்அரங்கிடங்களும், அகிற் சேக்கையும் - அகிற்புகை கமழும் படுக்கை யிடங்களும், வம்பு நீர்மையவாய் - புதுமைத் தன்மை பொருந்தியனவாய், வளங்கொண்ட - வளப்பங்கொண்டமைந்தன, (எ - று.) மாளிகையும், தமனியக் கூடமும், ஆடரங்கும், படுக்கை யிடங்களும் புதிய முறையிலே அவ்வரண்மனைக்கண் அமைக்கப்பட்டுள்ளன, என்க. |