மெய்க்காப்பாளர் அரசனைக் காத்தல் | 92. | மஞ்சிவர் வளநகர் காக்கும் வார்கழல் நஞ்சிவர் 1வேனர பதியை யாயிடை வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர் கஞ்சுகி 2யவர்கண்மெய் காவ லோம்பினார். | (இ - ள்.) மஞ்சு இவர் வளநகர் காக்கும் - உயர்வினால் முகில் தவழ்தற்குக் காரணமான வளப்பம்பொருந்திய நகரைப் பாதுகாக்கும்; வார்கழல் நஞ்சு இவர் வேல் நரபதியை - நீண்ட மறக்கழலை யணிந்த நஞ்சு தடவப்பெற்ற வேற்படையையுடைய பயாபதி மன்னனை; ஆஇடை - அவ்விடத்திலே; வெம்சுடர் வாளினர் - வெவ்விய ஒளிபொருந்திய வாட்படையை யுடையவர்களும்; விசித்த கச்சையர் - இறுகக்கட்டப்பெற்ற இடைக்கட்டை யுடையவர்களுமாகிய, கஞ்சுகி அவர்கள் - சட்டை அணிந்த காவலர்கள்; மெய் காவல் ஓம்பினார் - திருமேனியைப் பாதுகாத்தல் செய்தார்கள். (எ - று.) மஞ்சு - முகில். நரபதி - பயாபதி. கஞ்சுகி - வடசொல் என்பர். ஆயிடை - அப்பொழுது என்றும் பொருள் கூறலாம். இடத்தை யுணர்த்துஞ் சொற்கள் காலப்பொருளையுங் குறிக்கும். | (23) | | |
|
|