(இ - ள்.) குயிலுவர் ஒலியொடு - நரப்புக் கருவியாளர் எழுப்பும் இசையுடனேயும், குடமுழ அதிர்வொடு - குடமுழா என்னும் தோற்கருவியின் முழக்கத்துடனேயும், அவிநயமடநடை - அவிநயம் பிடிக்கும் கூத்தியர் நடைபோலப் பொருந்திய மடப்பமுடைய நடை பொருந்திய, மயில் இன மகளிர் தம் அவை - மயில்போன்ற அழகிய மகளிர் தொகுதி, அயில்இயல் அரசர்தம் அருகு பெருகலின் - வேலேந்தும் இயல்புடைய மன்னர்களின் பக்கத்தே வந்து மேலும்மேலும் பெருகுதலாலே, இயலிய வளநகர் - இயல்பாகவே வளமுடைத்தாகிய அப்போதன நகரத்தின் இடம், இடமில - தெருக்களாகிய இடங்கள் அக்கூட்டத்திற்குப் போதிய விரிவுள்ள இடமாக இல்லை, (எ - று.) அவை - தொகுதி. இயலிய - இயல்பாகவே உடைய; அஃதாவது, நாடா வளத்தது என்றபடி. குயிலுவர் - நரப்புக் கருவியாளர். மயிலின மகளிர் - மயில்போன்ற மகளிர். |