(இ - ள்.) சங்குபோல் ஒளியவன் தாதைதன் படை - சங்கினது நிறத்தை ஒத்த நிறமுடைய விசயன் தந்தையாகிய பயாபதியின் பெரும்படை, கங்ைகைபோற் படர்ந்தது - கங்கையாறு செல்வது போன்று சென்றது, மங்குல்சேர் மணிவரை மன்னன் தானை - முகில்தவழும் அழகிய இமயமலைக்கு அரசனாகிய சடியின் பெரும்படை, கலக்குங்காதலால் - அக்கங்கை யாற்றினோடு கலக்கும் ஒரு விருப்பத்தாலே, இங்கு - இவ்விடத்தே, யமுனையின் நீர் இழிவது ஒத்தது - யமுனையாற்றின் வெள்ளம் விரைந்து செல்லுதலை ஒத்துச் சென்றது, (எ - று.) பயாபதியின்படை கங்கையாற்றைப் போன்று படர்ந்தது; சடியின் படை அவ்வியாற்றிற் கலக்கும் யமுனைபோல விரைந்ததென்க. |