இதுவுமது
987..

அருங்கல மகளிர்க் கேற்ற வழகெலாந் தொகுத்து மற்றோ
ரிருங்கலி யுலகங் காணப் படைத்தவ னியற்றி னான்கொ
1லொருங்கலர்ந் துலகின் மிக்க 2மகளிர துருவ மெல்லாம்
பெருங்கல வல்கு றன்பாற் புகுந்துகொல் 3பெயர்த்த தென்றான்.
 

     (இ - ள்.) அருங்கல மகளிர்க்கு ஏற்ற - பெறற்கரிய அணிகலன்களையுடைய
மகளிர்களுக்குப் பொருந்திய, அழகெலாம் - புற அழகும் அக அழகும் ஆகிய
எல்லாவற்றையும், தொகுத்து - ஒரு சேரக் கூட்டி, இருங்கலி உலகம் மற்றோர் காண -
பெரிய ஆரவாரத்தையுடைய உலகின்கண் உள்ள ஏனையோர் கண்டு மகிழும் பொருட்டு,
படைத்தவன் - படைப்புக்கடவுள், இயற்றினான் கொல் - இச்சுயம்பிரபை என்பாளைப்
படைத்தனனோ!, உலகின் மிக்க மகளிரதுருவம் எல்லாம் - இப்பேருலகத்தே உயரிய உருவச்
சிறப்புவாய்ந்த மகளிர்களின் அழகனைத்தும், பெருங்கல அல்குல் தன்பால் -
பேரணிகலன்களை அணிந்த அல்குற்றடத்தையுடைய இச் சுயம்பிரபையினிடத்தேதான்,
புகுந்துகொல் பெயர்ந்தது என்றான் - முதலிற் சென்றெய்திப் பின்னர் ஏனையோரிடத்துச்
சென்றதாதல் வேண்டும் என்று இயம்பினான், (எ - று.)

அழகிற்கே சுயம்பிரபை பிறப்பிடமாகலின் ஏனைய மகளிர் அழகெல்லாம் இவளிடத்திருந்து
சென்று பொருந்தியது என்க. இவ்வாறே “பெண்களா னார்க்கு நல்ல அழகெலாம் பெருக்கி
நீட்ட, எண்களால் அளவா மானக் குணந்தொகுத்து இயற்றினாளை,“ எனக் கம்பரும் கூறுவர

(161)