இதுவுமது

995.

மாதவக் குலத்து ளார்கண் மாதவ சேனை யுள்ளிட்
டோதிய பெயரின் மிக்க ருலகறி கலையின் வல்லார்
கோதையுங் குழையுந் தோடுங் குளிர்முத்த வடமுந் தாங்கிப் போதிவர் குழலி
தாதை பொன்னகர் முன்னி னாரே.க.
 

      (இ - ள்.) மாதவக் குலத்துளார்கள் - பெருமைமிக்க தவப்பள்ளியிலே
வதிபவர்களாகிய, மாதவசேனை யுள்ளிட்டு - மாதவ சேனை என்பாளை யுள்ளிட்டு, ஓதிய -
கூறப்பட்ட, பெயரின் மிக்கார் - சிறப்புப் பெயர்களையுடையோரும், உலகறி கலையின்
வல்லார் - சான்றோர்களால் அறிவதற்குரிய கலைகளிலே வல்லுநரும் ஆகிய
ஆரியாங்கனையாரோடும், கோதையும் குழையும் தோடும் குளிர்முத்த வடமும் தாங்கி -
மலர்மாலைகளும் தோடுகளும் தண்ணிய நித்திலக்கோவைகளும் (சுயம்பிரபைக்குப்
பரிசினிமித்தம்) ஏந்தியவராய், போதிவர்குழலி தாதை - மலர்துதைந்த அளகத்தையுடைய
சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனின், பொன்னகர் முன்னினார் - அழகிய
அரணிமனையை எய்தினார்கள், (எ - று.)

தவ வொழுக்கமுடைய மாதவசேனை முதலிய மகளிரோடே, மதுகரி வயந்தசேனை முதலிய
மகளிரும், சுயம்பிரபையைக் காண வந்தோர் சடியின் கோயில் எய்தினார், என்க.

( 169 )