தொடக்கம் |
|
|
2.நகரச் சருக்கம் | போதனபுரம் | |
36. | சொன்னநீர் வளமைத் தாய சுரமைநட் டகணி சார்ந்து மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட பொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோர் நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே |
|
உரை
|
|
|
|
|
37. | சங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த் அங்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச் செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும் நங்கையோர் படிவங் கொண்ட நலத்ததந் நகர மன்றே. |
|
உரை
|
|
|
|
|
38. | செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும் மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத் தஞ்சுட ரிஞ்சி யாங்கோ ரகழணிந் தலர்ந்த தோற்றம் வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே. |
|
உரை
|
|
|
|
|
39. | இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக் கரும்பிடு கவள மூட்டுங் கம்பலை கலந்த காவின் அரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற் சுரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதி லிருக்கை யெல்லாம். |
|
உரை
|
|
|
|
|
40. | மானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்க ணார்தம் தேனளா முருவக் கண்ணிச் செல்வர்தோ டிளைக்கு மாடம் கானளாங் காம வல்லி கற்பகங் கலந்த கண்ணார் வானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே. |
|
உரை
|
|
|
|
|
41. | அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும் முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும் துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும் இகலின மலையொடு மாட மென்பவே. |
|
உரை
|
|
|
|
|
42. | கண்ணிலாக் கவர்வன கனக கூடமும் வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும் தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ மண்ணினா லியன்றில மதலை மாடமே. |
|
உரை
|
|
|
|
|
43. | மாடவாய் மணிமுழா விசையு மங்கையர் ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும் பாடுவார் பாணியும் பயின்று பல்கலம் மூடிமா ணகரது முரல்வ தொக்குமே. |
|
உரை
|
|
|
|
|
44. | தாழிவாய்க் குவளையுந் தண்ணெ னோதியர் மாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென் றியாழவா மின்குர லாலித் தார்த்தரோ ஏழைவாய்ச் சுரும்பின் மிளைக்கு மென்பவே. |
|
உரை
|
|
|
|
|
45. | பளிங்கு "பாழ்ந் தியற்றிய பலக "வதிக
விளிம்பு"தாய் நெடுங்கொடி வீதி வாயெலாம்
ளங்குபூ மால"ஞ் சுரும்புந் "தான்றலான்
வளங்கொள்பூங் கற்பக வனமும் "பாலு"ம.
|
|
உரை
|
|
|
|
|
46. | காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம் பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும் தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென வாவிவா யிளவன மயங்கு மென்பவே. |
|
உரை
|
|
|
|
|
47. | விலத்தகைப் பூந்துணர் விரிந்த கோதையர் நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய அலத்தகக் குழம்புதோய்ந் தரச வீதிகள் புலத்திடைத் தாமரை பூத்த போலுமே. |
|
உரை
|
|
|
|
|
48. | கண்ணிலாங் கடிமலர்க் குவளைக் கற்றையும் வெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும் வண்ணவான் மல்லிகை வளாய மாலையும் அண்ணன்மா நகர்க் கவைக் கரிய வல்லவே. |
|
உரை
|
|
|
|
|
49. | தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும் மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில தவள மாடமே. |
|
உரை
|
|
|
|
|
போதனபுரத்துக்கு விண்ணுலகம் உவமை | |
50. | மைந்தரு மகளிரு மாலை காலையென் றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையாற் சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னகர் இந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே. |
|
உரை
|
|
|
|
|
51. | மற்றமா நகருடை மன்னன் றன்னுயர் ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப் பெற்றியான் பயாபதி யென்னும் பேருடை வெற்றிவேல் மணிமுடி வேந்தர் வேந்தனே. |
|
உரை
|
|
|
|
|
52. | எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான் அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான் நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும் தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே. |
|
உரை
|
|
|
|
|
53. | நாமவே னரபதி யுலகங் காத்தநாட் காமவேள் கவர்கணை கலந்த தல்லது தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை நாமநீர் வரைப்பக நலிவ தில்லையே |
|
உரை
|
|
|
|
|
54. | ஆறிலொன் றறமென வருளி னல்லதொன் றூறுசெய் துலகினி னுவப்ப தில்லையே மாறிநின் றவரையும் வணக்கி னல்லது சீறிநின் றெவருயிர் செகுப்ப தில்லையே. |
|
உரை
|
|
|
|
|
55. | அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர் முடிநிழல் முனிவரர் சரண முள்குமே வடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே. |
|
உரை
|
|
|
|
|
56. | மன்னிய பகைக்குழா மாறும் வையகம் துன்னிய வரும்பகைத் தொகையு மின்மையால் தன்னையுந் தரையையுங் காக்கு மென்பதம் மன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ. |
|
உரை
|
|
|
|
|
57. | மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால் நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே போலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான். |
|
உரை
|
|
|
|
|
58. | கொதிநுனைப் பகழியான் குறிப்பி னல்லதொன் றிதுநமக் கிசைக்கென வெண்ணு மெண்ணிலா நொதுமலர் வெருவுறா நுவற்சி யாளர்பின் அதுவவன் பகுதிகளமைதி வண்ணமே. |
|
உரை
|
|
|
|
|
59. | மற்றவன் றேவியர் மகர வார்குழைக் கொற்றவர் குலங்களை விளக்கத் தோன்றினார் இற்றதிம் மருங்குலென் றிரங்கி வீங்கிய முற்றுறா முலையினார் கலையின் முற்றியார். |
|
உரை
|
|
|
|
|
60. | பஞ்சனுங் கடியினார் பரந்த வல்குலார் செஞ்சுணங் கிளமுலை மருங்கு சிந்தினார் வஞ்சியங் குழைத்தலை மதர்வைக் கொம்புதம் அஞ்சுட ரிணர்க்கொசிந் தனைய வைம்மையார். |
|
உரை
|
|
|
|
|
61. | காமத்தொத் தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார் தாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார் தூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார் வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார். |
|
உரை
|
|
|
|
|
62. | ஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர் மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார் சேயிருந் தாமரைத் தெய்வ மன்னரென் றேயுரை யிலாதவ ரிருவ ராயினார். |
|
உரை
|
|
|
|
|
63. | தீங்கரும் பமிழ்த மூட்டித் தேனளாய்ப் பிழிந்த போலும் ஓங்கிருங் கடலந் தானை வேந்தணங் குறுக்கு மின்சொல் வீங்கிருங் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி தாங்கருங் கற்பிற் றங்கை சசியென்பாள் சசியொ டொப்பாள். |
|
உரை
|
|
|
|
|
64. | பூங்குழை மகளிர்க் கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன தேங்குழன் மங்கை மார்க டிலதமாய்த் திகழ நின்றார் மாங்கொழுந் தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த காலத தாங்கெழுந் தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே. |
|
உரை
|
|
|
|
|
65. | பெருமக னுருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளு மருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும் திருமகள் புலமை யாக்குஞ் செல்வியென் றிவர்கள் போல இருவரு மிறைவ னுள்ளத் தொருவரா யினிய ரானார். |
|
உரை
|
|
|
|
|
66. | மன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர் தங்கள் இன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்கட் கென்னைகொ லொருவர் தம்மே லொருவர்தம் முள்ள மோட முன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர்க் கணையி னானே |
|
உரை
|
|
|
|
|
67. | சொற்பகர்ந் துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி மற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார் பொற்பகங் கமழப் பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றாக் கற்பகக் கொழுந்துங் காம வல்லியங் கொடியு மொப்பார். |
|
உரை
|
|
|
|
|
68. | மங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி அங்கவ ரமர்ந்த தல்லா மமர்ந்தருள் பெருகி நின்றான் செங்கயன் மதர்த்த வாட்கட் டெய்வமா மகளிர் தோறும் தங்கிய வுருவந் தாங்குஞ் சக்கரன் றகைய னானான். |
|
உரை
|
|
|
|
|
69. | முற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று மூரி ஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பிக் கொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலைத் தடத்து மூழ்கி மற்றவற் கரசச் செல்வ மின்னண மமர்ந்த தன்றே. |
|
உரை
|
|
|
|