தொடக்கம் |
|
|
4.இரதநூபுரச் சருக்கம் | வித்தியாதரருலகின் வருணனை | |
119. | புரிசை நீண்மதிற் போதன மாநகர் அரசர் வார்த்தையவ் வாறது நிற்கவே விரைசெய் வார்பொழில் விஞ்சையர் சேடிமேல் உரையை யாமுரைப் பானுற நின்றதே. |
|
உரை
|
|
|
|
|
120. | நிலவு வெண்சுடர் பாய்நில மொப்பநீண் டுலவு நீள்கட றீண்டி யுயர்ந்து போய் மலர மின்மணி வானவின் மாடெலாம் விலகி நின்றது விஞ்சையர் குன்றமே. |
|
உரை
|
|
|
|
|
121. | தொக்க வானவர் சூழ்குழ லாரொடும் ஒக்க வாங்குள ராய்விளை யாடலால் உக்க சோதிகள் சோலையி னூடெலாம் செக்கர் வானக முஞ்சிறி தொக்குமே. |
|
உரை
|
|
|
|
|
122. | அவிழுங் காதல ராயர மங்கையர் பவழ வாயமு தம்பரு கிக்களி தவழு மென்முலை புல்லத் ததைந்ததார் கமழ நின்றன கற்பகச் சோலையே. |
|
உரை
|
|
|
|
|
123. | கிளருஞ் சூழொளிக் கின்னர தேவர்தம் வளரும் பூண்முலை யாரொடு வைகலால் துளருஞ் சந்தனச் சோலைக ளூடெலாம் நளிருந் நெய்வ நறுங்குளிர் நாற்றமே. |
|
உரை
|
|
|
|
|
124. | மங்குல் வாடைமந் தார்வான் மீதுழாய்ப் பொங்கு தாதொடு பூமதுக் கொப்பளித் தங்க ராகம ளாயர மங்கையர் கொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே. |
|
உரை
|
|
|
|
|
125. | தேன கத்துறை யுஞ்செழுஞ் சந்தனக் கான கத்தழை யின்கமழ் சேக்கைமேல் ஊன கத்தவர் போகமு வந்தரோ வான கத்தவர் வைகுவர் வைகலே. |
|
உரை
|
|
|
|
|
126. | மஞ்சு தோய்வரை மைந்தரொ டாடிய அஞ்சி லோதிய ராரள கப்பொடி பஞ்ச ராகம் பதித்த பளிக்கறைத் துஞ்சு பாறைகண் மேற்றுதை வுற்றதே. |
|
உரை
|
|
|
|
|
127. | மாத ரார்நடை கற்கிய வானிழிந் தூது வண்டுண வூழடி யூன்றிய பாத ராகம் பதித்த பளிக்கறை காத லார் தம கண்கவர் கின்றவே. |
|
உரை
|
|
|
|
|
128. | ஆகு பொன்னறை மேலரு வித்திரள் நாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா வேக மும்மத வெள்ள மளாவிய போக மல்லிகை நாறும் புனல்களே. |
|
உரை
|
|
|
|
|
129. | பூக்க ளாவன பொன்மரை பூம்பொழில் காக்க ளாவன கற்பகச் சோலைகள் வீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமேல் ஊக்கி யாமுரைக் கின்றதிங் கென்கொலோ. |
|
உரை
|
|
|
|
|
130. | வரையின் மேன்மதி கோடுற வைகிய திருவ நீளொளித் தென்றிசைச் சேடிமேல் இரத நூபுரச் சக்கர வானமென் றுரைசெய் பொன்னக ரொன்றுள தென்பவே. |
|
உரை
|
|
|
|
|
வேறு இரத்தின நூபுரநகர் வருணனை | |
131. | அம்பொன் மாலை யார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க் கொம்ப னார் கொ டுத்த முத்த நீர வாய கோழரைப் பைம்பொன் வாழை செம்பொனேழுத்து வீழ்ந்த சோதியால் வம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ மானுமே. |
|
உரை
|
|
|
|
|
132. | வேய்நி ழன்னி லாவி லங்கு வெள்ளி விம்மு பாளைவாய்ப் பாய்நி ழற்ப சுங்கதிர்ப் பரூஉம ணிக்குலை குலாய்ச் சேய்நி ழற்செ ழும்பொ னாற்றி ரண்ட செம்ப ழத்தவாய்ப் போய்நி ழற்பொ லிந்து வீழ்வ போன்ற பூக ராசியே. |
|
உரை
|
|
|
|
|
133. | காந்தி நின்ற கற்பகந்நி ழற்க லந்து கையறப் பாய்ந்தெ ரிந்த போல்விரிந்து பாரி சாத மேர்செய வாய்ந்தெ ரிந்த செம்பொன் மாடவாயி லாறு கண்கொளப் போந்தெ ரிந்த பொன்மரம்பு றம்பொ லிந்தி லங்குமே. |
|
உரை
|
|
|
|
|
134. | மாசில் கண்ணி மைந்த ரோடு மங்கை மார்தி ளைத்தலில் பூசு சாந்த ழித்தி ழிந்த புள்ளி வேர்பு லர்த்தலால் வாச முண்ட மாருதம் வண்டு பாட மாடவாய் வீச வெள்ளி லோத்தி ரப்பொ தும்பர் பாய்ந்து விம்முமே. |
|
உரை
|
|
|
|
|
135. | ஆந்து ணர்த்த மால மும்ம சோக பல்ல வங்களும் தாந்து ணர்த்த சந்தனத் தழைத்த லைத்த டாயின மாந்து ணர்ப்பொ தும்பர் வந்து வைக மற்ற தூன்றலால் தேந்து ணர்ச்சு மந்தொ சிந்த சைந்த தேவ தாரமே. |
|
உரை
|
|
|
|
|
136. | தெய்வ யாறுகாந்தளஞ்சிலம்பு தேங்கொள் பூம்பொழில் பௌவ முத்த வார்மணற் றம்பு மௌவன் மண்டபம் எவ்வ மாடு மின்ன போலி டங்க ளின்ப மாக்கலால் கவ்வை யாவ தந்நகர்க்கு மாரனார் செய் கவ்வையே. |
|
உரை
|
|
|
|
|
137. | மற்ற மாந கர்க்கு வேந்தன் மான யானை மன்னர்கோன் அற்ற மின்றி நின்ற சீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான் முற்று முன் சடிப் பெயர்சொன் மூன்று லஃகு மான்றெழப் பெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார். |
|
உரை
|
|
|
|
|
138. | இங்கண் ஞால மெல்லைசென்றி லங்கு வெண்கு டைந்நிழல் வெங்கண் யானை வேந்திறைஞ்ச வென்றி யின்வி ளங்கினான் கொங்கு கொண்டு வண்டறைந்து குங்கு மக்கு ழம்பளாய் அங்க ராக மங்கணிந்த லர்ந்த வார மார்பினான். |
|
உரை
|
|
|
|
|
139. | விச்சை யாய முற்றினான் விஞ்சை யார்க ளஞ்சநின் றிச்சை யாய வெய்தினா னேந்து செம்பொ னீண்முடிக் கச்சை யானை மானவேற் கண்ணி லங்கு தாரினான் வெச்செ னுஞ்சொ லொன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான். |
|
உரை
|
|
|
|
|
வேறு சடியரசனது ஆட்சிச்சிறப்பு | |
140. | வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவன் ஒற்றை யந்தனிக் கோலுல கோம்புநாள் குற்ற மாயதொன் றுண்டு குணங்களால் அற்ற கீழுயிர் மேலரு ளாமையே. |
|
உரை
|
|
|
|
|
141. | செம்பொ னீண்முடி யான்செரு வின்றலை வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம் நம்பி யாள்கின்ற நாளி னடுங்கின கம்ப மாடக் கதலிகை போலுமே. |
|
உரை
|
|
|
|
|
142. | மின்னு வார்ந்தமந் தார விளங்கிணர் துன்னு தொன்முடி யானொளி சென்றநாள் மன்னு மாடவர் மேல்வளைந் திட்டன பொன்ன னார்புரு வச்சிலை போலுமே. |
|
உரை
|
|
|
|
|
143. | வெண்ணி லாச்சுட ருந்தனி வெண்குடை எண்ணி லாப்புக ழானினி தாண்டநாள் உண்ணி லாப்பல வாயுள வாயின கண்ண னாரொடு காமக் கலங்களே. |
|
உரை
|
|
|
|
|
144. | மாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல் நோக்கி வைக நுனித்தவ னாண்டநாள் தாக்க ணங்கனை யார்தம தாயரால் வீக்கப் பட்டன மென்முலை விம்முமே. |
|
உரை
|
|
|
|
|
145. | வடிய வாளவ னாளவும் வாய்களில் கடிய வாயின கள்ளவிழ் தேமலர் அடிய வாய்ப்பயப் பட்டடங் காவலர்க் கொடிய வாயின கொங்கவிழ் சோலையே. |
|
உரை
|
|
|
|
|
146. | மாய மாயநின் றான்வரை மார்பிடை மேய பூமகள் போல விளங்கினாள் தூய வாமுறு வற்றுவர் வாயவள் வாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள். |
|
உரை
|
|
|
|
|
147. | பைம்பொற் பட்ட மணிந்தகொல் யானையான் நம்பப் பட்ட நறுங்குழ லார்க்கெலாம் செம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல் அம்பொற் பட்டுடை யாளணி யாயினாள். |
|
உரை
|
|
|
|
|
148. | கோவை வாய்க்குழ லங்குளிர் கொம்பனாள் காவி வாணெடுங் கண்ணியக் காவலற் காவி யாயணங் காயமிழ் தாயவன் மேவு நீர்மைய ளாய்விருந் தாயினாள். |
|
உரை
|
|
|
|
|
அருக்க கீர்த்தியின் சிறப்பு | |
149. | முருக்கு வாயவண் முள்ளெயிற் றேர்நகை உருக்க வேந்த னொருங்குறை கின்றநாள் பெருக்க மாகப் பிறந்தனன் பெய்கழல் அருக்க கீர்த்தியென் பானலர் தாரினான். |
|
உரை
|
|
|
|
|
150. | நாம நல்லொளி வேனம்பி நங்கையாய் ஏம நல்லுல கின்னிழிந் தந்நகைத் தாம மல்லிகை மாலைச் சயம்பவை காம வல்லியுங் காமுறத் தோன்றினாள். |
|
உரை
|
|
|
|
|
151. | கங்கை நீரன ஞான்ற கதிரிளந் திங்க ளாற்றொழப் பட்டது செக்கர்வான் மங்கை மார்பிறப் பும்மட மாதரிந் நங்கை யாற்றொழப் பாடு நவின்றதே. |
|
உரை
|
|
|
|
|
152. | வண்டு சூழ்மலர் போன்றள கக்கொடி கொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகம் கெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை உண்டு கொல்லென வுண்டு மருங்குலே. |
|
உரை
|
|
|
|
|
153. | காதின் மீதணி கற்பகத் தொத்திணர் ஊது தேனிற கூன்றியி ருத்தொறும் போது தேர்முகத் தும்புரு வக்கொடி நோத லேகொல் நொசிந்துள வாங்களே. |
|
உரை
|
|
|
|
|
154. | விண்ண ணங்க விழித்து விளங்கொளி மண்ண ணங்குற வேவளர் வெய்திய பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலொ கண்ண ணங்குறு காரிகை கண்டதே. |
|
உரை
|
|
|
|
|
155. | கொங்கை போதரு வான்குமிழ்க் கின்றன அங்க ராக மணிந்ததை யன்றியும் நங்கை நாகரி கம்பொறை நாண்மதுத் தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே. |
|
உரை
|
|
|
|
|
156. | மங்கு றோய்வரை மன்னவன் றொல்குடி நங்கை போற்றியென் றேத்தி நறுங்குழல் மங்கை மார்பலர் காப்ப வளர்ந்துதன் கொங்கை யாற்சிறி தேகுழை வெய்தினாள். |
|
உரை
|
|
|
|
|
157. | வாம வாணெடு நோக்கி மடங்கனி தூம வார்குழ லாடுவர் வாயி்டை நாம நல்லொளி முள்ளெயி றுள்ளெழு காம னாளரும் பிற்கடி கொண்டவே. |
|
உரை
|
|
|
|
|
158. | மஞ்சு தோய்வரை யாரஞ்சு மாண்பினால் அஞ்சி லோதி நினைப்பி னகத்தவாய் விஞ்சை தாம்பணி செய்தல் விரும்பினான் எஞ்சி லாவகை யாலிணர் கொண்டவே. |
|
உரை
|
|
|
|
|
159. | நங்கை தோன்றிய பின்னகை வேலினாற் கங்கண் ஞால மமர்ந்தடி மைத்தொழில் தங்க நீண்முடி யாற்றலை நின்றனர் வெங்கண் யானை விளங்கொளி வேந்தரே. |
|
உரை
|
|
|
|
|
ஆசிரிய விருத்தம் வசந்தகால வருகையை வயந்தமாதிலகை மன்னனுக்குக் கூறுதல் | |
160. | நங்கையாள் வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து மங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளுள் பைங்கண்மால் யானை யாற்குப் பருவம்வந் திறுத்த தென்றாள்
வங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள். |
|
உரை
|
|
|
|
|
161. | "தங்குலா மலங்கன் மாலச் செறிகழன் மன்னர் மன்ன!
பூங்குலாய் விரிந்த "சாலப் பொழிமத் திவல தூவக்
"காங்கெலாங் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ "ம"பால்
பாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்த பருவ மென்றாள். |
|
உரை
|
|
|
|
|
162. | வேய்ந்திண ரொசிந்த சோலை வேனிலான் வென்றி யோகைத் தேந்துணர் கொடுப்ப மூழ்கித் தேறல்வாய் நெகிழ மாந்தித் தாந்துணர் துணையோ டாடிச் சாறுகொண் டூறு மேரார் மாந்துண ரொசிய வேறி மதர்த்தன மணிவண் டெல்லாம். |
|
உரை
|
|
|
|
|
163. | கடிமலர்க் கணையி னான்றன் கழலடி பரவிக் காமரர் படிமலர்த் தும்பி யென்னும் பாண்படை தொடர்ந்து பாடக் கொடிவளர் மகளிர் பூங்கட் குடைந்துநீர் குடிமி னென்று் வடிமலர் வள்ளத் தேந்த வாய்மடுத் திட்ட வன்றே. |
|
உரை
|
|
|
|
|
164. | அஞ்சுடர் முருக்கி னங்கே ழணிமல ரணிந்து கொம்பர்த் துஞ்சிடை பெறாது தும்பி துவன்றிமேற் றுகைக்குந் தோற்றம் செஞ்சுட ரிலங்குஞ் செந்தீக் கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி் மஞ்சுடை மயங்கு கானம் மண்டிய வகையிற் றன்றே. |
|
உரை
|
|
|
|
|
165. | அந்தழை யசோகம் பூத்த வழகுகண் டவாவி னோக்கி வெந்தழற் பிறங்க லென்று வெருவிய மறுவி றும்பி கொந்தவிழ்ந் துமிழப் பட்ட குளிர்மதுத் திவலை தூவச் செந்தழற் பிறங்க லன்மை தெளிந்துசென் றடைந்த வன்றே. |
|
உரை
|
|
|
|
|
166. | மாஞ்சினை கறித்த துண்டந் துவர்த்தலின் மருங்கு நீண்ட. பூஞ்சினை முருக்கஞ் சோலைப் பூக்கள்வா யார மாந்தித் தீஞ்சுவை மிழற்று கின்ற சிறுகுயில் செல்வ ரேனும் தாஞ்சுவை திரிந்த பின்றைச் சார்பவ ரில்லை யன்றே. |
|
உரை
|
|
|
|
|
167. | கோவைவண் டூது கின்ற குரவெனுங் குழைகொண் மாதர பாவைகொண் டாடு கின்ற பருவத்தே பயின்ற காமன் ஆவிகொண் டிவளைக் கைவிட் டகலுமோ வென்று தத்தம் பூவையுங் கிளியுங் கொண்டு புலம்பின பொழில்க ளெல்லாம். |
|
உரை
|
|
|
|
|
168. | வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடும் உயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும் கயந்தலைக் களிறுந் தேரும் வையமுங் கவின வேறி நயந்தன னகரி நீங்கி மனோவன நண்ணி னானே. |
|
உரை
|
|
|
|
|
தரவு கொச்சகக் கலிப்பா மன்னனுக்கு இயற்கையின் வரவேற்பு | |
169. | கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித் தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போல் தூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே. |
|
உரை
|
|
|
|
|
170. | கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு வடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே புடைவாசங் கொளமாலம் பூங்கவரி யெடுத்தெறியக்
குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே. |
|
உரை
|
|
|
|
|
171. | கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி அடிபாடு மலர்களென வணிவண்டு முரன்றனவே வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல் கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே. |
|
உரை
|
|
|
|
|
172. | குரவகத் துக்குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த் தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய் விரை மலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்
புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைந்ததே. |
|
உரை
|
|
|
|
|
மன்னவன் தன் மகளிருக்குப் பொழிலழகுகாட்டி விளையாடல் | |
173. | இன்னவா றிளவேனி லெதிர்கொள்ள வெழில்யானை மன்னவாந் தனிச்செங்கோன் மறவேல்வை யகவேந்தன் தன்னவா மடவாரைத் தானுவந்து பலகாட்டி மின்னவா மிடைநோவ விளையாட வருளினான். |
|
உரை
|
|
|
|
|
174. | எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம் பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம் வரியணிந்த வண்டூத வளர்கின்ற விளவேனில் புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே. |
|
உரை
|
|
|
|
|
175. | காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச் சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று திகழ்ந்தனவே வாரணிந்த முலையீர்நும் மருங்குறனின் வகைநோக்கி ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே. |
|
உரை
|
|
|
|
|
176. | மாந்தளி ரிவைநுமது நிறங்கொண்டு வளர்ந்தனவே ஏந்திளங் குயிலிவைநுஞ் சொற்கற்பா னிசைந்தனவே தேந்தளங் குழலீர்நுஞ் செவ்வாயி னெழினோக்கித் தாந்தளிர் முருக்களிய தாதோடு ததைந்தனவே. |
|
உரை
|
|
|
|
|
177. | காவியுஞ் செங்கழுநீருங் கமலமுங் கண்விரிந்து ஒளி வாவியு மண்டபமு மதனனைய மருட்டுமே தூவியங் கிளியன்ன சொல்லினீர் துணையில்லார் ஆவியுய்ந் துளராத லரிதேயிவ் விளவேனில். |
|
உரை
|
|
|
|
|
கலிவிருத்தம் அரசன் சைனாலயத்தை யடைதல் | |
178. | இன்னண மிளையவர் மருள வீண்டுசீர் மன்னவன் வயந்தமாட் டருளி மாமணிக் கன்னவில் புரிசையுட் கடவுட் காக்கிய பொன்னவி றிருநகர் பூவொ டெய்தினான். |
|
உரை
|
|
|
|
|
கோயிற் கதவுகள் திறக்கப்படுதல் | |
179. | உலமுறை தோளினா னுவகை கூர்ந்தனன் குலமுறை வழிபடுந் தெய்வக் கோயிலை வலமுறை வந்தனன் வரலு மாமணிக் கலமுறை கதிர்நகைக் கபாடம் போழ்ந்ததே. |
|
உரை
|
|
|
|
|
180. | பிணிநிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன மணிநிலை விசும்பொடு வரங்க ளீவன கணிநிலை யிலாத்திறற் கடவுட் டானகம் மணிநிலைச் சுடரொளி மலர்ந்து தோன்றவே. |
|
உரை
|
|
|
|
|
181. | மெய்ம்மயி ரெறிந்தொளி துளும்பு மேனியன் கைமீமுகிழ் முடித்தடங் கதழச் சேர்த்தினான் வெம்மைசெய் வினைத்துகள் விளிய வென்றவன் செம்மலர்த் திருந்தடி சீரி னேத்தினான். |
|
உரை
|
|
|
|
|
182. | அணியாது மொளிதிகழு மாரணங்கு திருமூர்த்தி கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறையுமே கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறைந்தாலும் அணிஞால முடையாயை யறிவாரோ வரியரே. |
|
உரை
|
|
|
|
|
183. | பகைநாறு மயிற்படைகள் பயிலாத திருமூர்த்தி இகன்மாற வென்றுயர்ந்த விறைவனென் றறையுமே இகன்மாற வென்றுயர்ந்த விறைவனென் றறைந்தாலும் அகன்ஞால முடையாயை யறிவாரோ வரியரே. |
|
உரை
|
|
|
|
|
184. | திருமறுவு வலனணிந்து திகழ்கின்ற திருமூர்த்தி ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துமே ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துகினும் அருமறையை விரித்தாயை யறிவாரோ வரியரே. |
|
உரை
|
|
|
|
|
கலிவிருத்தம் மன்னவன் கோவில் முற்றத்தை அடைதல் | |
185. | இன்னண மிறைவனை யேத்தி யேந்தறன் சென்னியுட் சேர்த்திய சேடப் பூவினன் பொன்னவி றிருமணிக் கபாடந் தாழுறீஇ முன்னிய திருநகர் முற்ற முன்னினான். |
|
உரை
|
|
|
|
|
186. | ஆரணங் கவிரொளி யெரிய வாயிடைச் சாரணர் விசும்பினின் றிழிந்து தாதைதன் ஏரணி வளநகர் வலங்கொண் டின்னணம் சீரணி மணிக்குரல் சிலம்ப வாழ்த்தினார். |
|
உரை
|
|
|
|
|
வரிப்பாட்டு அவர்கள் இறைவனை யேத்தல் | |
187. | விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய் உரையணிந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை உண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங் கண்மகிழ நின்றாய்கட் காதலொழி யோமே. |
|
உரை
|
|
|
|
|
188. | முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றாய அருகணங்கி யேத்தி யதுமகிழ்வா யல்லை அதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக கதிமகிழ நின்றாய்கட் காதலொழி யோமே. |
|
உரை
|
|
|
|
|
189. | மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை கொண்டுவப்பா யல்லையெனி னுங்குளிர்ந்துலகம் கண்டுவப்ப நின்றாய்கட் காதலொழி யோமே. |
|
உரை
|
|
|
|
|
கலிவிருத்தம் சாரணரது துதியின் பயன் | |
190. | தீதறு முனிவர்தஞ் செல்வன் சேவடிக
காதலி னெழுவிய காம ரின்னிசை ஏதமின் றெவ்வள விசைத்த தவ்வள வோதிய வுயிர்கெலா முறுகண் டீர்ந்தவே. |
|
உரை
|
|
|
|
|
சாரணர் மன்னனுக்கு உபதேசம் செய்ய விரும்பியது | |
191. | இறைவனை யின்னண மேத்தித் தந்தொழில குறைவிலா முடிந்தபின் குணக்குன் றாயினார் மறமலி மன்னனை நோக்கி மற்றவற் கறமழை பொழிவதோ ரார்வ மெய்தினார். |
|
உரை
|
|
|
|
|
சாரணர் பிண்டி நிழலில் சிலாதலத்தில் அமர்தல் | |
192. | தென்றலுஞ் செழுமதுத் திவலை மாரியும் என்றுநின் றறாததோ ரிளந்தண் பிண்டியும் நின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும் சென்றவ ரமர்ந்துழித் திகழ்ந்து தோன்றுமே. |
|
உரை
|
|
|
|
|
193. | வென்றவன் றிருநகர் விளங்கு வேதிகை முன்றில்சேர்ந் திருந்தனர் முனிவ ராதலும் மின்றவழ் விளங்குவேல் வென்றி வேந்தனும் சென்றவர் திருந்தடி முடியிற் றீட்டினான். |
|
உரை
|
|
|
|
|
சாரணர் கட்டளையினால் மன்னன் அமர்தல் | |
194. | பாசிடைப் பரப்புடைப் பழன நாடனை ஆசிடை கொடுத்தவ ரிருக்க வென்றலும் தூசுடை மணிக்கலை மகளிர் சூழ்தர ஏசிடை யிலாதவ னிருக்கை யெய்தினான். |
|
உரை
|
|
|
|
|
சாரணர் மன்னனது நலம் வினவுதல் | |
195. | தாளுயர் தாமரைத் திருவுந் தண்கதிர் நீளெழி லாரமு நிழன்ற கண்குலாம் தோளிணை செவ்வியோ வென்னச் சூழொளி வாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான். |
|
உரை
|
|
|
|
|
196. | முனிவருட் பெரியவன் முகத்து நோக்கியொன் றினிதுள துணர்த்துவ தடிக ளென்றலும் பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக் கனியமற் றின்னணங் கடவுள் கூறினான். |
|
உரை
|
|
|
|
|
197. | துன்னிய வினைப்பகை துணிக்குந் தொன்மைசால இன்னுரை யமிழ்தமெக் கீமி னென்பதாம் மன்னநின் மனத்துள தென்று மாமணிக் கன்னவில் கடகக்கை கதழக் கூப்பினான். |
|
உரை
|
|
|
|
|
ஆசிரியவிருத்தம் சாரணர் அறிவுரை | |
198. | மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்து வெய்ய கையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தின் மையுற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலை நெய்யுற நிழற்றும் வேலோ யினைத்தனெ நினைக்க லாமோ. |
|
உரை
|
|
|
|
|
199. | சூழ்வினை துரப்பச் சென்று சூழ்வினைப் பயத்தி னாலே வீழ்வினை பிறிது மாக்கி வெய்துற விளிந்து தோன்றி ஆழ்துய ருழக்கு மந்தோ வளியற்ற வறிவில் சாதித் தாழ்வினை விலக்குஞ் சார்வு தலைப்படா வளவு மென்றான். |
|
உரை
|
|
|
|
|
200. | காதியங் கிளைகள் சீறுங் காமரு நெறிக்குங் கண்ணாய்ப் போதியங் கிழவர் தங்க டியானத்துப் புலங்கொண் டேத்தி் ஆதியந் தகன்று நின்ற வடிகளே சரணங் கண்டாய் மாதுய ரிடும்பை தீர்க்குஞ் சரணெனப் படுவ மன்னா. |
|
உரை
|
|
|
|
|
201. | மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞானம் அப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி இப்பொரு ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபொற் றாரோய். |
|
உரை
|
|
|
|
|
202. | உற்றடு பிணியு மூப்பு மூழுறு துயரு நீக்கிச் சுற்றுநின் றுலக மேத்துஞ் சுடரொளி யுருவந் தாங்கிப் பெற்றதோர் வரம்பி லின்பம் பிறழ்விலா நிலைமை கண்டாய் மற்றவை நிறைந்த மாந்தர் பெறப்படு நிலைமை மன்னா. |
|
உரை
|
|
|
|
|
203. | அருந்துய ரறுக்கு மாண்பி னாரமிர் தவைகண் மூன்றும் திருந்தநன் குரைப்பக் கேட்டே தீவினை யிருள்கள் போழும் விரிந்தநல் லறிவின் சோதி விளங்கலிற் சனங்க ளெல்லாம் பரிந்தகங் கழுமத் தேறிப் பவம்பரிந் தவர்க ளொத்தார். |
|
உரை
|
|
|
|
|
204. | மன்னிய முனிவன் வாயுண் மணிகொழித் தனைய வாகிப் பன்னிய பவங்க டீர்க்கும் பயங்கெழு மொழிக டம்மால் கன்னவில் கடகத் தோளான் காட்சியங் கதிர்ப்புச் சென்றான் பின்னவ னுரிமை தானும் பெருவத மருவிற் றன்றே. |
|
உரை
|
|
|
|
|
கலிவிருத்தம் சயம்பவையின் செயல் | |
205. | மன்னவன் மடமகள் வணங்கி மற்றவர் இன்னுரை யமுதமுண் டெழுந்த சோதியள் பன்னியோர் நோன்புமேற் கொண்டு பாங்கினால் பின்னது முடிப்பதோர் பெருமை பேணினாள். |
|
உரை
|
|
|
|
|
206. | முனிவரர் திருந்தடி வணங்கி மூசுதேன் பனிமலர் விரவிய படலை மார்பினான் கனிவளர் பொழிலிடைக் கடவு ணன்னகர் இனிதினின் வலமுறை யெய்தி யேகினான். |
|
உரை
|
|
|
|
|
207. | வாமமே கலையவர் மனத்தில் வார்பொழில் காமவே ளிடங்கொள வருளிக் கண்ணொளிர் தாமவே லிளையவர் காப்பத் தாழ்கதிர் நாமவே னரபதி நகர நண்ணினான். |
|
உரை
|
|
|
|
|
208. | அகநக ரரைசரோ டரைசன் சென்றபின் சகதபி நந்தன ரென்னுஞ் சாரணர் மிகநவின் றிறைவனை வணங்கி விண்ணிடைப் பகனகு சுடரொளி படர வேகினார். |
|
உரை
|
|
|
|
|
209. | அழற்கொடி யெறித்தொறுஞ் சுடரு மாடக நிழற்கொடி யதுவென நிறைந்த காரிகைக் குழற்கொடி யனையவள் கொண்ட நோன்பினால் எழிற்கொடி சுடர்வதோ ரியற்கை யெய்தினாள் |
|
உரை
|
|
|
|
|
210. | முகைத்தவார் முல்லையை முருக்கு மெல்லெயில் தகைத்தவார் குழலவ டன்மை யாயினும் வகுத்தவா றுயர்ந்தன நோன்பு மாசிலா அகத்துமாண் புடையவர்க் கரிய தில்லையே. |
|
உரை
|
|
|
|
|
211. | இந்திர வுலகமும் வணக்கு மீடுடைத் தந்திர நோன்பொளி தவழத் தையலாள் மந்திர நறுநெய்யால் வளர்ந்து மாசிலா அந்தர வழற்கொடி யனைய ளாயினாள். |
|
உரை
|
|
|
|
|
212. | தாங்கருஞ் சுடரொளி சக்கர வாளமென் றோங்கிரும் பெயர்கோணொன் புயர நோற்றபின் தீங்கரும் பனையசொற் சிறுமி தெய்வதைக் காங்கொரு பெருஞ்சிறப் பயர்தல் மேயினாள். |
|
உரை
|
|
|
|
|
213. | தண்ணவிர் நிலாச்சுடர் தவழு மவ்வரைக் கண்ணவிர் சென்னிமேற் கடவுட் டானமஃ தண்ணலங் கோமக ளருச்சித் தாயிடை விண்ணவ ருலகமும் வியப்ப வேத்தினாள். |
|
உரை
|
|
|
|
|
214. | ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை போதியங் கிழவனை பூமிசை யொதுங்கிய சேதியஞ் செல்வநின் றிருவடி வணங்கினம். |
|
உரை
|
|
|
|
|
215. | காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை தேமலர் மாரியை திருமறு மார்பனை தேமலர் மாரியை திருமறு மார்பனை மாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம். |
|
உரை
|
|
|
|
|
216. | ஆரருள் பயந்தனை யாழ்துய ரவித்தனை ஓரரு ளாழியை யுலகுடை யொருவனை ஓரரு ளாழியை யுலகுடை யொருவனை சீரருண் மொழியநின் றிருவடி தொழுதனம். |
|
உரை
|
|
|
|
|
217. | கருவடி நெடுநல்வேற் கண்ணி யின்னணம் வெருவுடை வினைப்பகை விலக்கும் வீறுசால் மருவுடை மொழிகளாற் பரவி வாமன திருவடிச் சேடமுந் திகழச் சூடினாள். |
|
உரை
|
|
|
|
|
218. | வானுயர் கடவுளை வயங்கு சேவடித் தேனுயர் திருமலர்ச் சேடங் கொண்டபின் மானுயர் நோக்கியர் பரவ மங்கைதன் கோனுயர் வளநகர்க் கோயின் முன்னினாள். |
|
உரை
|
|
|
|
|
219. | வெஞ்சுடர் வேலவற் குணர்த்தி மெல்லவே பஞ்சுடைச் சேவடி பரவச் சென்றுதன் அஞ்சுடர் மெல்விரல் சிவப்ப வாழியின் செஞ்சுட ரங்கையிற் சேட நீட்டினாள். |
|
உரை
|
|
|
|
|
220. | அல்லியி னரவவண் டிரிய வாய்மலர் வல்லியின் வணங்கிய மகளை மன்னவன் முல்லையஞ் சிகழிகை முச்சி மோந்திவை சொல்லிய தொடங்கினான் சுடரும் வேலினான். |
|
உரை
|
|
|
|
|
221. | தேந்துணர் பலவுள வேனுஞ் செங்குழை மாந்துணர் வயந்தனை மலரத் தோன்றுமே பூந்துண ரோதிநீ பிறந்து பொன்செய்தார் வேந்துவந் திறைஞ்சயான் விளங்கு கின்றதே. |
|
உரை
|
|
|
|
|
222. | கங்கைநீர் பாய்ந்துழிக் கடலுந் தீர்த்தமாம் அங்கணீ ருலகெலா மறியப் பட்டது நங்கைநீ பிறந்ததற் பின்னை நங்குடி வங்கநீர் வரைப்பெலாம் வணங்கப் பட்டதே. |
|
உரை
|
|
|
|
|
223. | போதுலாந் தாமரை பூத்த பொய்கையைத் தீதுலாங் கீழுயிர் தீண்டச் செல்லல மாதுலா மடந்தைநீ பிறந்திம் மண்டிலம் ஏதிலா ரிடைதிற மிகந்து நின்றதே. |
|
உரை
|
|
|
|
|
224. | வானகத் திளம்பிறை வளர வையகம் ஈனகத் திருள்கெட வின்ப மெய்துமே நானகக் குழலிநீ வளர நங்குடி தானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே. |
|
உரை
|
|
|
|
|
225. | கண்பகர் மல்லிகை கமழக் காதலால் சண்பகத் தனிவனந் தும்பி சாருமே பெண்பகர் திருவனாய் பிறந்து நங்குடி மண்பக ருலகெலா மகிச் செல்லுமே. |
|
உரை
|
|
|
|
|
சயம்பவையை அரசன் அந்தப்புரத்துக்கு அனுப்புதல் | |
226. | கொவ்வையந் துவரிதழ்க் கோல வாயவட் கிவ்வகை யணியன கூறி யீண்டுநும் மவ்வைதன் கோயில்புக் கடிசி லுண்கென மவ்வலங் குழலியை மன்ன னேயினான். |
|
உரை
|
|
|
|
|
227. | பல்கலம் பெரியன வணியிற் பாவைதன் அல்குனோ மெனச்சிலம் பணிந்து மெல்லவே செல்கவென் றிருமக ளென்று செம்பொனான் மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான். |
|
உரை
|
|
|
|
|
சயம்பவையின் மணத்தைக் குறித்து அரசனது சிந்தனை | |
228. | மண்ணருங் கலமெலாம் வலிதின் வவ்வினும் விண்ணருங் கலமெலாம் விதியி னெய்தினும் பெண்ணருங் கலமிது பெறுதன் மானுடர்க் கெண்ணருந் தகைத்தனெ விறைவ னெண்ணினான். |
|
உரை
|
|
|
|
|
229. | மையணி வரையின் வாழ் மன்னர் தொல்குடிக கையணி நெடுநல்வேற் காளை மார்களுள் நெய்யணி குழலிவட் குரிய நீர்மையான் மெய்யணி பொறியவ னெவன்கொல் வீரனே. |
|
உரை
|
|
|
|
|
230. | பொலங்கலக் குரியவாம் பொருவின் மாமணி் இலங்கல மென்னல வீயஞ் சேர்த்தினும் குலங்கலந் தில்வழிக் குரவர் கூட்டினும் அலங்கலங் குழலிய ரன்றென் கிற்பவோ. |
|
உரை
|
|
|
|
|
231. | அந்தைதா முறுவது கருதி யாருயிர்த் தந்தைதா யென்றிவர் கொடுப்பிற் றையலார் சிந்தைதா யிலாதவர் திறத்துஞ் செவ்வனே நொந்துதாம் பிறிதுரை நொடிய வல்லரோ. |
|
உரை
|
|
|
|
|
232. | காதலா லறிவது காமங் காதலே ஏதிலா ருணர்வினா லெண்ணலாவதன் றாதலான் மாதரா டிறத்தி னாணைநூல் ஓதினா ருரைவழி யொட்டற் பாலதே. |
|
உரை
|
|
|
|
|
233. | தன்னுணர் பொறிபிறர் தங்கண் கூட்டென இன்னண மிருவகைத் திறைவர் வாட்கை தான் தன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி் தின்னண மியற்றுகென் றமைச்ச ரேவுவார். |
|
உரை
|
|
|
|
|
234. | தண்ணிய தடத்தவே யெனினுந் தாமரை விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும் புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும் கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே. |
|
உரை
|
|
|
|
|
235. | மாமலர் நெடுங்கடன் மதலை மாசிலாக் காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல் வேலவ ரொழுக்கமும் வேலை காணுமே. |
|
உரை
|
|
|
|
|
236. | ஒன்றுநன் றெனவுணர்ந் தொருவன் கொள்ளுமே அன்றதன் றொருவனுக் கறிவு தோன்றுமே நின்றதொன் றுண்டினி நீதி நூலினோ டொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே. |
|
உரை
|
|
|
|
|
237. | அந்தண ரொழுக்கமு மரைசர் வாழ்க்கையும் மந்திர மில்லையேன் மலரு மாண்பில இந்திர னிறைமையு மீரைஞ் ஞாற்றுவர் தந்திரக் கிழவர்க டாங்கச் செல்லுமே. |
|
உரை
|
|
|
|
|
மந்திரச் சுற்றத்தாருக்கு அறிவிப்பு | |
238. | என்றுதன் மனத்தினா னெண்ணி யீண்டுசீர நின்றநூற் கிழமையி னீதி மாக்களை ஒன்றிநீர் தருகென வுழைக்குற் றேவலார் சென்றவர்க் கருளிது வென்று செப்பினார். |
|
உரை
|
|
|
|