தொடக்கம் |
|
|
8.கல்யாணச் சருக்கம் | கவிக்கூற்று | |
827. | செங்கண்மால் சிங்கம் வென்று செழுமலர்த் திலகக் கண்ணித் திங்கள்வாள் வண்ண னோடுந் திருநகர் பெர்ந்த பின்னை அங்கண்மாற் குரிய நங்கை யரும்பெற லவட்குத் தாதை வெங்கண்மாற் களிறன் னான்றன் றிறமினி விளம்ப லுற்றேன். |
|
உரை
|
|
|
|
|
828. | உற்றவான் குழவித் திங்க ளொளிமுழை யகட்டுப் போந்து முற்றுவான் முளைத்த போலு மெயிறுடை மூரிச் சிங்கம் மற்றம்மா லழித்த தல்லாம் வானமா றாகச் சென்ற ஒற்றனா லுணர்ந்து வேந்த னுவகையங் கடலு ளாழ்ந்தான். |
|
உரை
|
|
|
|
|
சடிவேந்தன் மணவினைக்கு ஏற்பாடு செய்தல் | |
829. | கரியவாய் விலங்கி நீண்டு களிக்கய லிரண்டு தம்முட் பொரியபோ கின்ற போலும் பொங்கரித் தடங்கட் பேதைக் குரியமா லவற்குச் சென்று கொடுப்பனென் றுலகங் காக்கும் பெரியவன் றமரோ டெண்ணிக் கடிவினை பெருக்க லுற்றான். |
|
உரை
|
|
|
|
|
சடிவேந்தன் மணவினையின் மேல் போதனபுரம் செல்லும் சமயம் தன் நகருக்குக் காவலாக வைத்த எண்மரின் விவரம் | |
830. | கிளரொளி மாடக் கோயிற் கின்னரர் கெழுவ லோவா வளரொளி வயங்கு தோன்றல் வருத்தமா னத்து மன்னன் உளரொளி யுமிழும் பூணான் பிரீதிதிமா வர்த்த தனனென் றோதும் தளரொளி தயங்கு மேனித் தாமரைச் செங்க ணானே. |
|
உரை
|
|
|
|
|
831. | மண்ணலங் கனியுஞ் சாதி மணிமுழா வதிரு மாடக் கண்ணலங் கனியுந் தோன்றல் கந்தருவ நகரங் காப்பான் விண்ணலங் கனியுஞ் சீர்த்தி விருகவெல் கடிகொள் பேரான் பெண்ணலங் கனியு நீர்மை பெருகிய வுருவத் தோளான். |
|
உரை
|
|
|
|
|
832. | பூமரு பொலங்கொள் சோலைப் பொன்னணி புரிசை வேலிக் காமரு கபாட வாயிற் கந்தமா தனத்தைக் காப்பான் தேமரு திலதக் கண்ணித் திவாகர தேவ னென்பான் தாமரை தயங்கு சோதித் தாரணி துரகத் தேரான். |
|
உரை
|
|
|
|
|
833. | சுந்தரப் பொடியும் பூவுஞ் சுரும்பொடு துதைந்து வீசிச் சந்திரன் றவழு மாடச் சக்கிர வாள மன்னன் மந்தர மலைக்கும் யானை வச்சிர தாட னென்பான் அந்தரத் தமரர் கோமா னணிந்துபோந் தனைய நீரான். |
|
உரை
|
|
|
|
|
834. | காரணங் குருவ மேகங் கருவு கொண் டதிர்ந்து வெய்யோன் தேரணங் குறுக்கு மாடத் தேவர வனத்துச் செல்வன் ஏரணங் குறுக்கும் பைந்தா ரிரமிய தரனென் றேங்கும் சீரணங் குறுக்குஞ் செய்கைச் செஞ்சுடர்த் திலகப் பூணான். |
|
உரை
|
|
|
|
|
835. | கண்ணிலாங் கனக மாடக் கதலிகை முகிலோ டாடி விண்ணிலா விருண்டு தோன்றும் விசய கூடத்து மன்னன் வெண்ணிலா விரிந்த பூணான் வேகமா ரதனீண் முந்நீ்ர் மண்ணெலாம் வணங்க நின்ற மழகளிற் றரசோ டொப்பான். |
|
உரை
|
|
|
|
|
836. | மென்னரம் பனுக்குந் தீஞ்சொன் மெல்லிய லவர்கள் பாடல் கின்னரம் பிணிக்குஞ் செய்கைக் கிருதமா தனத்தைக் காப்பான் கைந்நவின் றிலங்குஞ் செவ்வேற் காவலன் கருடன் சேர்ந்த மெய்நவின் றிலங்குஞ் செம்பொ னங்கதம் விளைந்த பேரான். |
|
உரை
|
|
|
|
|
837. | ஓங்குநீர்ப் புரிசை வேலி யொண்டுறைக் குவளை வேய்ந்த தூங்குநீ ருடுத்த பாங்கிற் சோபன முடைய தோன்றல் தேங்குநீர்க் கடலந் தானைச் சித்திர தரனிவ் வையம் தாங்குநீ ரொளியோ டொன்றித் தண்ணளி தயங்க நின்றான். |
|
உரை
|
|
|
|
|
838. | என்றிவ ரெண்மர் தம்மை யிரதநூ புரத்து ளானா நின்றுநீர் காமி னென்று நிறீஇயபின் னீதி மன்னன் ஒன்றிய வுலக மெல்லா மொருங்குடன் விழுங்க லுற்றுச் சென்றுயர் கடலோ டொக்குஞ் சேனைபண் ணமைக்க வென்றான். |
|
உரை
|
|
|
|
|
839. | வெண்ணிலாக் குழவித் திங்கண் மேகத்துப் பதித்த போலும் ஒண்ணிலா வுருவக் கோட்ட வோடைமால் களிற்றின் மேலோர் பண்ணெலா மணிந்து தோன்றப் பருமித்துக் கருவி யேற்றிக் கண்ணிலாம் பதாகை சேர்த்திக் காழகில் கழும விட்டார். |
|
உரை
|
|
|
|
|
840. | கட்டிய கம்மச் செய்கைக் கதிர்மணிக் கனகச் சூலம் பட்டமொ டிலங்கப் பண்ணிப் பக்கரை பதைப்ப யாத்து மட்டவி ழலங்கல் வீரர் சேர்தலும் வலத்து முன்னாற் கொட்டிய குரத வாலித் தெழுந்தன குதிரைச் சேனை. |
|
உரை
|
|
|
|
|
841. | மணித் தொழில் வளைந்த சூட்டின் மறுப்பறுத் தியற்றப் பட்ட அணித் தொழி லாரக் கோவை யாடகக் கொடிஞ்சி யம்பொன் துணித்திடை பதித்த தட்டிற் சுடர்மணித் துரகத் திண்டேர் கணித்தளப் பரிய நீர கல்லெனக் கலந்த வன்றே. |
|
உரை
|
|
|
|
|
842. | ஒட்டிய கலிங்கந் தாண்மேற் றிரைத்துடுத் துருவக் கோடிப் பட்டிகை பதைப்ப யாத்துப் பரட்டைய நரல வீக்கிக் கட்டிய கழலர் தாரர் கதிரொடு கனலும் வாளர் மட்டுய ரலங்கல் சூடி மறங்கிளர் மள்ளர் சூழ்ந்தார். |
|
உரை
|
|
|
|
|
சடிமன்னன் தம்பியின் புறப்பாடு | |
843. | இன்னிசை யமரர் பேகொண் டியன்றமா நகரங் காக்கும் பொன்னவில் கடகப் பைம்பூட் புரந்தர னனைய மாண்பின் மன்னவற் கிளைய வேந்தன் வயங்கெரிப் பெயர்கொ டேரான் கன்னியைக் காக்கு நீர்மைக் கடற்படை பரப்பிச் சென்றான். |
|
உரை
|
|
|
|
|
சடிமன்னனுடைய மருகன் புறப்படுதல் | |
844. | அங்கல மலர்ந்த தோன்ற லரிபுரத் தவர்கள் கோமான் பொங்கல ரணிந்த பைந்தார்ப் புலிப்பெயர்ப் பொலங் கொ டேரான் மங்கலக் களிற்றி னான்றன் மருமகன் மகர முந்நீர்த் தங்கொலி மிகுத்த தானை யொடுகதி ரெறிப்பச் சார்ந்தான். |
|
உரை
|
|
|
|
|
சடிவேந்தன் மகன் அருக்ககீர்த்தியின் புறப்பாடு | |
845. | வாரணி முரச மார்ப்ப வரிவளை வயிரொ டேங்கத் தாரணி மறவர் சூழத் தமனியக் கலங்க டாங்கி ஆரணி யுருவத் திண்டே ரானைமே லருக்க கீர்த்தி நீரணி கடலந் தானை நிலநெளி பரப்ப நின்றான். |
|
உரை
|
|
|
|
|
சடிமன்னன் ஒரு விமானத்தை நிருமித்தல் | |
846. | சேனைபண் ணமைத்துச் சென்று திருக்கடை செறிந்த போழ்திற் றானையுள் படுநர் மாண்பிற் றாரவற் றொழுது கூற வேனவிற் றடக்கை வேந்தன் விண்ணியல் விமான மொன்று வானவில் லுமிழ்ந்து மின்ன மனத்தினா னிருமித் திட்டான். |
|
உரை
|
|
|
|
|
847. | மற்றதன் வடிவு கேட்பின் மரகத மணிக்க றன்மேல் பெற்றதன் னிலையிற் றாகிப் பெருகிய வளமை தோன்றிச் சுற்றிய பசும்பொற் சோதி சொரிந்துபோய்த் துறக்கங் காண முற்றிய முகட்டு நீலக் குவட்டிடை முடிந்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
848. | பாரித்த பவழத் திண்காற் பளிங்குபோழ் பலகை தன்மேற் பூரித்த சுடரின் செம்பொற் போதிகைப் புடங்க டோறு மூரித்தண் சுடர்வெண் முத்தின் பரூஉத்திரண் முயங்கி ஞான்ல வேரித்தண் டுவலை கால மாலைகள் விசித்த வன்றே. |
|
உரை
|
|
|
|
|
849. | தடுத்துவில் லுமிழுஞ் செம்பொற் றண்டிகைத் திரள்க டாங்க மடுத்தன வயிரத் தம்ப மாடநீண் மதலை தோறும் தொடுத்தன சுரும்பு பாயுந் துணரணி தயங்கு மாலை அடுத்தன நிறத்த வாக வழுத்தின மணிக ளெல்லாம். |
|
உரை
|
|
|
|
|
850. | ஊன்றிய மகரப் பேழ்வா யொளிமுகந் தெளிப்ப வீழ்ந்து நான்றன மணிசெய் தாம நகைமுக நிறைந்த சோதி கான்றன கனக சாலங் கலந்தன கங்க ணீகம் தோன்றின பதாகை சூழ்ந்து சுடர்ந்தன சூல நாயில். |
|
உரை
|
|
|
|
|
851. | அஞ்சிறைப் பறவைச் சாதி யாவிப்ப வணிந்து மேலால் விஞ்சையர் மிதுனத் தேவர் விண்ணியங் குருவ மெல்லாம் செஞ்சுட ரெறிப்பச் சேர்ந்து செங்கதிர்ப் பரவை சிந்தி வெஞ்சுடர் விலங்க நீண்டு விண்ணிடை விரிந்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
852. | வாரணி பசும்பொன் வாழை மரகதக் கமுகொ டோங்கித் தோரணத் தூண்க டோறுஞ் சுடர்மணி சிலம்ப நான்று நீரணி நிழல்கொண் முத்த மணன்மிசை நிரந்து தோன்றிப் பூரண குடங்கள் செம்பொற் கொழுங்கதிர் புதைந்த கீழால். |
|
உரை
|
|
|
|
|
853. | கொழுந்திரள் வயிரக் கோடிக் கூர்முளை செறித்துச் செம்பொற் செழுந்திரட் புடகஞ் சேர்ந்த திருவளர் கபாட வாயிற் பொழிந்ததண் சுடர வாகிப் பொலந்தொடர் புலம்பத் தூங்கி எழுந்தொலி சிலம்ப விம்மி யிணர்கொண்ட மணிக ளெல்லாம். |
|
உரை
|
|
|
|
|
854. | பாய்கதிர்ப் பளிங்கிற் கோத்துப் பருமணி வயிரஞ் சூழ்ந்த வாய்கதிர்ச் சால வாயி லகிலயா வுயிர்த்த வாவி மாயிரு விசும்பின் மான்று மழைதவழ் குன்றம் போலச் சேயவர்க் குருவங் காட்டித் தேநிரை கொண்ட வன்றே. |
|
உரை
|
|
|
|
|
855. | செம்பொனங் களியிற் செய்து சித்திரந் தெளிப்பத் தீட்டி வம்பவெண் முத்தச் சாந்தின் மட்டித்து மணிக ளெல்லாம் நம்பிய வொளிய வாகத் தெளித்துநன் கெழுதப்பட்டுத் தம்புலந் தெரிந்து தோன்றுந் தடத்தின தலங்க ளெல்லாம். |
|
உரை
|
|
|
|
|
856. | பாடக மிலங்கச் செங்கேழ்ச் சீறடிப் பரவை யல்குல் நாடக மகளி ராடு நாடக வரங்கு நன்பொன் மாடகந் தெளிப்ப வேய்ந்த மண்டபத் தலமும் வண்ண ஆடக மணிந்த கூட நிலைகளு மயல வெல்லாம். |
|
உரை
|
|
|
|
|
857. | மரகத மணிக ளீன்ற கதிரெனுந் தளிர்கள் வார்ந்து சொரிகதிர் வயிரங்கான்ற சுடரெனுங் கொழுந்து தோன்றிப் புரிகதிர் முத்த மென்னும் புதுநகை யரும்பு பம்பி விரிகதிர்ச் செம்பொன் பூத்து விண்ணணங் குறுப்ப வீங்கி. |
|
உரை
|
|
|
|
|
சயம்பவையை அழைத்துவர மன்னன் பணித்தல் | |
858. | கதிர்நகைக் கனபொற் சோதிக் கனகசா லங்க ளென்னு மதுநகப் பருகி மான்ற மணிவண்டு மயங்கி வானோர் விதிநகு விமான மென்னுங் கற்பகம் விரிந்த போழ்திற் பதிநகர்க் கிறைவன் பாவை சயம்பவை வருக வென்றான். |
|
உரை
|
|
|
|
|
859. | இன்ன தருண் மன்னவன் தென்றுகடை காக்குங் கன்னிய ருணர்த்தலி னிணர்க்கொடி கடுப்பாள் பன்னிய பளிக்கறையொர் பஞ்சணையின் மேலாள் மன்னுமணி மாடமிசை மஞ்ஞையி னிழிந்தாள். |
|
உரை
|
|
|
|
|
860. | மாகமலை யன்னமணி மாடநிலை யுள்ளாற் போகமிகு பூந்தவிசின் மீதுபுதை வுற்ற வாகைவன மாலைபுனை மன்னன்மகள் செல்வாள் மேகபட லத்திடை மினற்கொடியொ டொத்தாள். |
|
உரை
|
|
|
|
|
861. | அங்கையி னயிற்படைய ராணுடையர் பூணர் கொங்கைவள ராதகுழ லார்கள்புடை காப்பப் பங்கயமு கத்தவர்ப லாண்டுபல கூறி நங்கையடி போற்றியென நங்கைநடை கற்றாள். |
|
உரை
|
|
|
|
|
862. | காவன்மிகு கன்னிநகர் கன்னியர்கள் காக்கும் வாவியகி னாறுமணி வாயிலவை நீங்கி் நாவிகமழ் கொம்பனைய நங்கைநகை வேலான் தேவியமர் கோயிலது செவ்வன மடைந்தாள். |
|
உரை
|
|
|
|
|
863. | மௌவன்மலர் வேய்ந்துமது நாறுமணி யைம்பாற் கொவ்வைதுயில் கொண்டதுவர் வாய்க்கொடியொ டொப்பா டெய்வமண நாறுதிரு மேனிபுறங் காக்கும் அவ்வையரொ டெய்திமுத லவ்வையடி சேர்ந்தாள். |
|
உரை
|
|
|
|
|
864. | வணங்கிய கணங்குழையை வாங்கிமுலை நோவக் குணங்கெழு குலத்தலைவி கொண்டுமிசை புல்லி மணங்கமழ் குழற்சிகையுள் வண்டிரிய மோந்தாங் கணங்கினனை யாளுவகை யாழ்கடலு ளாழ்ந்தாள். |
|
உரை
|
|
|
|
|
865. | செம்பொனணி சீரியன சேரினிடை நோமென் றம்பொனணி நொய்யன வணிந்தலர் மிலைச்சி வம்பினணி வாட்கணிடை மைபிறழ வைத்துக் கொம்பினனை யாள்குளிரு மாறுகுயில் வித்தாள். |
|
உரை
|
|
|
|
|
சயம்பவை விமானமேற் கொள்ளல் | |
866. | அன்னவகை தேவிமக ளோடமரு மெல்லை முன்னுமுக வோரையொடு மூர்த்தநல நோக்கி மன்னுபுல வோர்கள்சொல மன்னன்மக டன்னை இன்னகைவி மானதல மேறுகினி தென்றான். |
|
உரை
|
|
|
|
|
867. | தொண்டைதொலை வித்ததுவர் வாய்மகளிர் சூழக் கண்டுவளர் தாயரொடு கஞ்சுகியர் காப்பா விண்டுவளர் சோதிகொள் விமானமது சேர்வாள் வண்டுவளர் கற்பமுறை வான்மகெளா டொத்தாள். |
|
உரை
|
|
|
|
|
868. | முன்னிமுடி வித்தமிகு விஞ்சையின் முதிர்ந்தார் அன்னநடை யாட்கடிமை யார்வமொ டடைந்தார் பின்னிவிடு கூந்தலர் பிடித்தவயில் வாளர் கன்னியரி ராயிரவர் கன்னிபுடை காத்தார். |
|
உரை
|
|
|
|
|
869. | அஞ்சுடர் மணிக்குழவி யாடுகழன் மாடம் பஞ்சுடைய பந்துகிளி பாவையொடு பூவை மஞ்சுடைய மின்னினனை யாண்மகிழு நீர செஞ்சுடர் விமானமது சேர்ந்தன செறிந்தே. |
|
உரை
|
|
|
|
|
870. | கற்பக மலர்ப்பிணையல் சேர்ந்துகமழ் கின்ற பொற்பமைசெங் கோடிகமொ டாடைபுதை வுற்ற நற்புடைய பேழை நறுஞ் சாந்துநனி பெய்த செப்பொடு கடப்பக மடுத்தன செறிந்தே. |
|
உரை
|
|
|
|
|
871. | பெருங்கல நிறைந்தமிகு பெட்டகமோ டெல்லா அருங்கலமு மார்ந்தவறை யாயினக ளாய்பொன் நெருங்கொளி நிறைந்தமிகு சோதிநிழல் சூழப் பெருங்கலி விமானமது சென்றது பெயர்ந்தே. |
|
உரை
|
|
|
|
|
வேறு பலவகைச் சம்பிரமங்கள் | |
872. | முரச மார்த்தன முரன்றன முரிவளை முகிலிடை வயிரேங்க அரியொ டாகுளி யாலித்த வதிர்ந்தன யணிமுழ வரு கெல்லாம் விரைசென் மாவொடு விரவின களிறும்தண் மிடைந்தன கடுமான் றேர் புரைசை யானையி னெருத்திடை யரசனும் புகழொடு பொலிவுற்றான். |
|
உரை
|
|
|
|
|
873. | சிகர யானையின் கவிழ்மணி சிலம்பின சிலம்பின பணிலங்கள் முகர வாயின பணவங்கண் முரன்றன முரன்றன முகிலெல்லா மகர மால்கடல் வரைமிசை யெழுந்தனெ வெழுந்தது படைமாற்ற நகர வாயிலின் புறம்பணை நடந்தது நடுங்கின கொடியெல்லாம். |
|
உரை
|
|
|
|
|
874. | ஒளிறு வாட்படை யுளர்ந்தது கிளர்ந்தன ருழைக்கல வுழையோர்கள் களிறு காத்திர முறுத்தலி னெறித்தலை கருமுகி னெரிவுற்ற குளிறு மின்னியங் குழுமலிற் செழுமலைக் கொடுமுடி யுடனார்த்த வெளிறில் கேள்வியான் பெரும்படை விசும்பிடை நிரந்தொளி விரிந்தன்றே, |
|
உரை
|
|
|
|
|
சயம்பவைக்கு அவள்தோழி நாட்டுவளங் காட்டல் | |
875. | அமித மாகிய பெரும்படை யகன்கட லகல்விசும் பழகெய்த அமித மாகிய பெருவரை நிமிர்சிகை யதனய லமர்ந்தேக அமித மாகிய நிலைத்தலை மலையணி யருவிக ளவையெல்லாம் அமித மாபவை சயம்பவைக் கடிதொழு தவையவை யறிவித்தாள். |
|
உரை
|
|
|
|
|
876. | நங்கை காணிது நம்மலைக் கும்பரப் பொன்மலைப் புடைவீழுங் கங்கை யாறிதன் கரையன கற்பகக் காவுகளிவை கண்டாய் இங்கு நாமிரு விசும்பிடை யியங்கலிற் சிறியவொத் துளவேனும் அங்க ணார்க்குநம் முலகினை யளப்பவொத் துளவவை யறியுங்கால். |
|
உரை
|
|
|
|
|
877. | இரைக்கு மஞ்சிறைப் பறவைக ளெனப்பெய ரினவண்டு புடைசூழ நுரைக்க னென்னுமக் குழம்பு கொண்டெதிர்ந்தழெ நுடங்கிய விலையத்தாற் றிறைக்க ரங்களிற் செழுமலைச் சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத் தரைக்கு மற்றிது குணகடற் றிரையொடும் பொருதல தவியாதே. |
|
உரை
|
|
|
|
|
878. | முந்து மற்றிதன் முதன்மலைப் பிறந்துநம் மலையது முழைப் பேருஞ் சிந்து வென்பது வலத்தது செழுங்கலஞ் சிதர்கின்ற திகழ்யாறு நுந்து பொன்னொளித் திரையெனுங் கரதலப் புடங்களி னுரையென்னும் பந்து பொங்கநின் றடித்திடத் திளைப்பதொத் துளததுப கருங்கால். |
|
உரை
|
|
|
|
|
879. | உயருஞ் சந்தனப் பொழிலலைத் தொளிர்மணிக் கலங்களை யுமிழ்ந் திட்டுப் பெயருந் தெண்டிரைப் பிறங்கலுட் பிணங்கிய பெருவரை யகிறேக்கி வயிர வேதிகை மலைவது கோபுர வாய்தலின் படிதீண்டி அயிரை வார்கரைக் குடகடற் றிரையொடு பொருதல தவியாதே. |
|
உரை
|
|
|
|
|
880. | தேனெய் பாலொடு கலந்தன சின்மொழிச் சிறுநுதற் றிருவேநஞ் சேனை மாமுகிற் படலங்கண் மிசைச்செலச் சினைமுகில் முரலக் கேட் டேனை யானைக ளிணையென விருந்திட விருங்கைமா வினங்காக்கும் கான யானைகள் கருவரை யனையன கனல்வன விவை காணாய். |
|
உரை
|
|
|
|
|
881. | பேய்மை யானங்கொண் டிருந்தன்ன பெருவரை நெரிதரத் திரைசிந்தித் தீமை யானைகள் செவிபுகு செறிகடாந் திளைத்தலிற் றிசைநாறிப் போய்மை யானங்கொண் டிழிதரும் பெருந்திசைப் புடையன புனல்யாறு சேய்மையா னமக்கொளிர் முத்தின் பருவடந் தெளிப்பவொத் துளபாவாய். |
|
உரை
|
|
|
|
|
882. | கருவிவா னத்தி னகடுதொட் டனவென நிலத்திடைக் கவின் செய்ய மருவிநங் கட்கு மணிவட்டுச் சிதர்ப்ப வொத் துளசில மலை யெல்லாம் அருவி வெண்டிரை சொரிகின்ற வருவரைக் குவடுக ளவை முன்னாற் பரவை வெண்கொடி யெடுத்துநம் படைக்கெதி ரெழுவதொத் துளபாவாய். |
|
உரை
|
|
|
|
|
883. | அலங்கல் வார்குழ லிமிர்தன்ன சின்மொழி யரிவைநம் மருங்கெல்லாம் விலங்கல் போல்வன வெண்மருப் பிரட்டைய வேழங்கள் விளையாடி இலங்கு மால்வரை யிறுவரைத் தடங்குத்தி யிடந்திட விருபாலும் கலங்கொள் பேழைகள் கவிழ்ந்தனெக் கதிர்மணி சொரிகின்ற வவை காணாய். |
|
உரை
|
|
|
|
|
884. | அங்கண் மால்வரை யருவிதந் தடக்கையிற் புடைத்துநின் றமர்ந் தாடிப் பைங்கட் செம்முகப் பரூஉக்கையம் பகடுதம் பிடிக்கணம் புடை சூழச் செங்கற் றூளிதஞ் செவிப்புறத் தெறிதலிற் சிகரங்க ளிடையெல்லாம் பொங்கிக் குங்குமப் பொடியொத்துப் பொலிகின்ற பொலங்கொடி புடைநோக்காய். |
|
உரை
|
|
|
|
|
885. | துளங்கு வார்குழைத் துவரிதழ்த் துடியிடைச் சுடர்நுதற் சுரிகோதாய் விளங்கு வெங்கதிர் விலங்கிய விசும்பிடை யியங்குதல் புலன்கொள்ளாப் பளிங்கி னொள்ளறைப் பரப்பிடைப் பாய்வித்த பருமணி நெடுமான்றேர் வலங்கொ ணம்படைக் கடலிடை மறித்தவை சுழல்கின்ற வகை நோக்காய். |
|
உரை
|
|
|
|
|
886. | எடுத்த மாருத மெறிதலி னெகிழ்ந்தன சிகழிகை யிணரோடும் தொடுத்த மாலைகள் துணர்கொளப் புனைவன துகிலிடை புடைசோர உடுத்த காஞ்சியி னொளிமணிக் கதிர்நகைப் பட்டங்க ளுடையாக அடுத்து வீழுமொ ரணியிழை யிளையவள் படுகின்ற ததுகாணாய். |
|
உரை
|
|
|
|
|
887. | மல்கு மும்மத மதகளி றுழக்கலின் மயங்கிய மழைமேகம் பில்கு நுண்டுளி யுறைத்தலிற் பனித்தநம் பெரும்படை மடவார்கள் நல்கு காதல ரகலத்து ளொடுங்குதல் பலர்முன்னை நனிநாணி மெல்கு பூந்துகில் விரித்தவா வருகின்ற விதலைகண் மிகநோக்காய். |
|
உரை
|
|
|
|
|
888. | இலைய நாடகத் தெழில்கெழு விமானமஃ தியல்கின்ற விசைதன்னான் மலையி னம்மொடு வருவவொத் துளவவை வரவில மடனோக்கி உலைவில் வையகத் தொளிசெயும் பகலவ னுறுசுடர் சொரிகின்ற வலையங் கையல வருவது மற்றிதன் சலத்தது வலிகண்டாய். |
|
உரை
|
|
|
|
|
யாவரும் போதன புரத்தை அடைதல் | |
889. | இன்ன போல்வன விளையவட் குழையவ ளினியன பலகாட்டிப் பன்னு மாயிடைப் பழனங்கள் வளாவிய படுகலி நெடுநீத்தம் துன்னு நீர்வயற் சுரமியத் தகணியுட் சுடரணி நகர்சார்ந்து தென்னென் றேனிமிர் திருநிலை யகமெனுஞ் செறிபொழி லதுசேர்ந்தார். |
|
உரை
|
|
|
|
|
வேறு ஒரு சோலையில் யாவரும் தங்கிய வருணனை | |
890. | மோடு விட்டலர் மொய்ம்மலர்க் காவினுள் பாடி விட்டது பாவைதன் கோன்படை கூடி யிட்டிடை யாரன கோதைமேல் மூடி விட்டமர் தேன்முரி வித்தவே. |
|
உரை
|
|
|
|
|
891. | ஆர்ந்த வெங்களி யானைக் கவுட்புடை வார்ந்து வீழ்மத மூசிய வண்டினம் சோர்ந்து வீங்கெருத் திற்றொடர் கண்ணிடைப் பேர்ந்து வீழ்வன போலப் பிறழ்ந்தவே. |
|
உரை
|
|
|
|
|
892. | முந்தி நின்றிமிர் தேன்முரன் றாக்கிய மந்த வின்னிசை வாங்க வனத்திடைச் சந்த னத்தடந் தாளொடு சார்ந்தன கந்தெ னக்கன லுங்களி யானையே. |
|
உரை
|
|
|
|
|
893. | குங்கு மக்குளிர் பூநெரி தூளிமேற் பொங்கு ளைக்கலி மாக்கள் புரண்டுவிற் றங்கொ ளிப்பல கைத்தலம் பாவிய மங்க லப்பெரும் பந்தியின் வந்தவே. |
|
உரை
|
|
|
|
|
894. | பட்ட மார்நெடுந் தேர்பைம் பொனான்மிடை கொட்டில் சேர்ந்தன கோனுறை கோயிலும் வட்ட மாக வகுத்தனர் வானுல கிட்ட மாய்வந் திழிந்தது போலுமே. |
|
உரை
|
|
|
|
|
895. | செம்பொன் மாளிகை யும்வயி ரத்திரட் டம்ப முற்ற தமனியக் கூடமும் அம்பொன் னாடரங் கும்மகிற் சேக்கையும் வம்பு நீர்மைய வாய்வளங் கொண்டவே. |
|
உரை
|
|
|
|
|
896. | தெள்ளி வெண்பவ ழத்திர ளூன்றிய வெள்ளி மண்டப மும்விரை நாறுப பள்ளி யம்பல மும்பகற் கோயிலும் வள்ள றன்னகர் வாய்மலி வுற்றவே. |
|
உரை
|
|
|
|
|
897. | வௌவு நீரென்ன வாவியு மாடெலாம் தெய்வ நாறுவ தேங்கொள்செய் குன்றமு மௌவன் மண்டப மும்மணற் றாழ்வரும் எவ்வ பாலு மிசைந்துள வென்பவே. |
|
உரை
|
|
|
|
|
898. | கொற்ற வன்கொடிக் கோயிற் புறம்பணை சுற்றி விட்டது சுற்றும் பெரும்படை மற்றை மன்னரெல் லாம்வனத் தின்புடை முற்ற முன்னினர் முத்தணி மாலையார். |
|
உரை
|
|
|
|
|
899. | கன்னி மூதெயில் சூழ்கடி காவினுட் கன்னி தாதைகண் ணார்நக ரிஞ்சியுட் கன்னி மார்பலர் காக்குங் கடையதோர் கன்னி மாநகர் கன்னிக் கியற்றினார். |
|
உரை
|
|
|
|
|
900. | மின்னி னார்ந்த விமானத் தலத்திடைப் பொன்ன னார்பலர் போற்ற விழிந்துதன் மன்ன னாரரு ளான்மணி மாளிகைக் கன்னி மாநக ரெய்தினள் கன்னியே. |
|
உரை
|
|
|
|
|
வேறு சடிமன்னனுடைய வரவு கேட்ட பயாபதி செயல் | |
901. | மற்றவ ரிருத்தலு மருசி சென்றுபின் சுற்றுநீர் வளவயற் சுரமை நாடுடைக் கொற்றவன் கழலடி தொழுது கூறலும் வெற்றிவே லவனொளி துளும்ப வீங்கினான். |
|
உரை
|
|
|
|
|
அயலிலுள்ளார்க்கு இட்ட கட்டளை | |
902. | ஏரணி மணிக்கல மணிக யாருமென் றாரணி வளநக ரறைக கோடணை தோரணந் திசைதொறுஞ் சுடர நாட்டுக பூரண பொற்குடம் பொலிய வைக்கவே. |
|
உரை
|
|
|
|
|
903. | இரவல ரிருநெதி கவர்க வீண்டயற் புரவலர் வருகெனப் போக தூதுவர் திருவலர் சினகரன் செல்வப் பொன்னகர் விரவலர் மழையொடு விழவு செய்கவே. |
|
உரை
|
|
|
|
|
904. | எரிமணிச் சுடரணி யிலங்கு நங்கைதன் திருமணிக் காவினுட் செல்லுஞ் செய்கையாற் புரிமணிப் பொலங்குழைப் பொம்மல் வெம்முலைக் குருமணிக் கொம்பனார் கோலஞ் செய்கவே. |
|
உரை
|
|
|
|
|
905. | உழைக்கல மகளிரொ டுவந்து செல்வன புழைக்கைய விளம்பிடி புகுந்து பண்ணுக தழற்புகை நவின்றகைத் தானை வீரர்தம் அழற்படை யொடுபுகுந் தமைக காவலே. |
|
உரை
|
|
|
|
|
பயாபதி மருசிக்கு மரியாதை செய்தல் | |
906. | இன்னன வுழையவர்க் கருளி யேந்துதோண் மன்னவன் மருசியை மருளக் கட்டுரைத் தென்னொடும் பெயர்திநும் பாடிக் கென்றொரு பொன்னகர் மாளிகை புகுகென் றேயினான். |
|
உரை
|
|
|
|
|
மந்திரக் கிழவருடன் ஆலோசித்தல் | |
907. | வேண்டுப வவன்றிறத் தருளி வேந்தர்கோன் ஈண்டிய மந்திரக் கிழவர்க் கென்னையாங் காண்டகு திறலவற் காணு மாறென ஆண்டகைக் கவர்களு மறியச் செப்பினார். |
|
உரை
|
|
|
|
|
908. | விண்ணியல் விஞ்சையர்க் கிறைவன் வேந்தராற் கண்ணிய பெருங்குலக் கடலுட் டோன்றினான் நண்ணிய தொடர்ச்சியு நமிக்கணண்ணுமால் எண்ணுவ வவன்றிறத் திறைவ வில்லையே. |
|
உரை
|
|
|
|
|
909. | குலத்தினுங் குணத்தினுங் கொண்ட கோலமா நலத்தினு நின்னொடு நிகர்க்கு நன்மையன் மலைத்தலில் வயத்தினும் பெரியன் மல்லினும் உலத்தினும் பெருகிய வுருவத் தோளினான். |
|
உரை
|
|
|
|
|
910. | ஆதலா லவன்றிறத் தியாது செய்யினும் ஏதமாங் கில்லைகோ லிறைவ வென்றனர் கோதிலாக் குணம்புரி குன்ற னாற்கொரு நீதிநூற் கடலினின் றனைய நீர்மையார். |
|
உரை
|
|
|
|
|
வேறு பயாபதி தன் அரண்மனையை அடைதல் | |
911. | ஆங்கவர் மொழியக் கேட்டே யறிவினுக் கரச ரென்று வாங்கிருங் கடலந் தானை மன்னவன் மகிழ்ந்து மற்றப் பூங்குழை மகளிர் காக்கும் பொன்னணி வாயில் போகித் தேங்கம ழலங்கன் மார்பன் றிருநகர் முற்றஞ் சேர்ந்தான். |
|
உரை
|
|
|
|
|
மருசியை அனுப்ப அவன் செய்த ஏற்பாடுகள் | |
912. | அடுகடா மாவி நாறு மழிமதங் கருவி வீழத் தொடுகடா வயிரத் தோட்டி யுடையன தொடர்க ணூன்ற விடுகொடா வியாள நிற்ப மெல்லவன் பணிகள் செய்யும் படுகடாக் களிறுந் தேரும் புரவியும் பண்ணு கென்றான். |
|
உரை
|
|
|
|
|
913. | பணித்தசொல் லதனைக் கேட்டே பகைநிலைக் கந்தி னோடும் பிணித்தபொற் றொடர்கண் விட்டுப் பெயர்ந்தகா னிகள நீக்கி மணித்தொடர் மருங்கின் வீழ்த்து வரிபுரிக் கச்சை வீக்கி அணித்தகைப் பாகர் பண்ணிக் கொடியெடுத் தருகு சேர்ந்தார். |
|
உரை
|
|
|
|
|
914. | செம்பொன்செய் கிடுகு கோத்துத் திகிரிவாய்ப் புளகஞ் சேர்த்திப் பைம்பொன்செய் பரவைத் தட்டிற் பருமணி பதித்த திண்டேர் கம்பஞ்செய் துலக மெல்லாங் கைவளைக் கொள்வ போல அம்பொன்செய் கொடுஞ்சி நெற்றி கொடியெடுத் தணைந்த வன்றே. |
|
உரை
|
|
|
|
|
915. | முற்றத்தா னெரியுஞ் செம்பொன் முகனனி கருவி சேர்த்திச் சுற்றத்தா தணிந்து காமர் சூழ்மணிக் கோவை சூழ்ந்து மற்றுத்தாம் வகுக்கற் பால மங்கல மரபிற் பண்ணிப் பொற்றத்தார்க் கவரி வேய்ந்து பொருகின்ற புரவி யெல்லாம். |
|
உரை
|
|
|
|
|
916. | ஒட்டிய வூழி னன்றி யுயிர்கொள லொழிக வென்று சுட்டினர் மொழிப வாயிற் கூற்றமுந் துளங்கு நீரார் கட்டிய கழலர் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர் மட்டுய ரலங்கல் சூடி வயவரும் வந்து சூழ்ந்தார். |
|
உரை
|
|
|
|
|
வரிசைகளுடன் மருசியை அனுப்புதல் | |
917. | அன்னணந் தானை பண்ணி யணைந்தபின் னமைச்சரோடு மன்னவன் மருங்கி னின்ற மருசியை வருக வென்று பொன்னுதல் வேழ மொன்று பொலங்கலம் புலம்ப வேற்றி முன்னுற நின்று காதன் முறுவலோ டருளிச் செய்தான். |
|
உரை
|
|
|
|
|
பயாபதி சித்திரதரனுக்கு இட்டகட்டளை | |
918. | தேங்கம ழலங்கன் மார்பன் சித்திர தரனைக் கூவிப் பாங்கமை பஞ்சு பட்டுந் துகில்களும் பரப்பி மேலால் வீங்கிய சுடர வாய மிடைமணிக் கலன்கள் விஞ்சை நீங்கருந் திறலி னான்றன் னெடுநகர் நிறைக்க வென்றான். |
|
உரை
|
|
|
|
|
919. | பொன்னணி கலத்தின் குப்பை புரிமணிக் கோவைப் போர்வை மன்னிய வயிரக் குன்றம் வலம்புரி மணியின் கோவை பின்னிய பவழ வல்லிப் பிறங்கலோ டனைய வெல்லாம் கொன்னவில் வேலி னான்றன் கோயின்முன் குவிக்க வென்றான். |
|
உரை
|
|
|
|
|
920. | ஆண்டுற வணைந்து வேகித் தழல்கின்ற மதுவின் றண்டோ டீண்டிநின் றினவண் டார்க்கு மின்சுவை நறவின் சாதி வேண்டுநர் வேண்டு மாறு விருந்தயர்ந் துயரும் வண்ணம் தீண்டரும் விஞ்சை வேந்தன் றிருநகர்ச் செறிக்க வென்றான். |
|
உரை
|
|
|
|
|
921. | தேங்கனி குழவித் தீநீர் செம்பழத் திரளின் கண்ணி பாங்கமை பளிதச் சாதி பாசிலைத் தழையின் கற்றை தீங்கழைக் கரும்பின் கட்டி திரணறைக் கடிகை யின்ன தோங்கலந் திலாத சொல்லான் றொன்னகர்ச் சொரிக வென்றான். |
|
உரை
|
|
|
|
|
922. | கண்ணியுங் கமழுஞ் சூட்டுங் கற்றையாக் கட்டப் பட்ட தண்ணிய மலருந் தாம மாலையுஞ் சதங்கை தம்மோ டெண்ணிய வண்ண மாலை யெழினக ரெல்லை யெல்லாம் விண்ணியல் விமான வீதி வெறிகொள மிடைவி வேலோய். |
|
உரை
|
|
|
|
|
923. | குங்குமக் குழம்பு கொட்டிச் சந்தனத் தொளிகண் கூட்டி அங்கலுழ் விரையின் சேற்றோ டகநக ரளறு செய்து மங்குலாய் விசும்பு மூட வகிற்புகை மயங்க மாட்டிப் பொங்குபொற் சுண்ணம் வீசி மணவினை புனைவி யென்றான், |
|
உரை
|
|
|
|
|
பயாபதி தன் மக்களை வரும்படி ஏவுதல் | |
924. | அனையன வவனை யேவி யரசிளங் குமரர் தம்மைப் புனைமலர்க் கண்ணி சூடிப் பொன்னெழி லாரந் தாங்கி் நனைகவுள் வேழ மேறி நம்மொடு வருக வென்றான் கனைகுரன் முரச மார்க்கும் கடிபடைக் கால வேலான். |
|
உரை
|
|
|
|
|
தன் பட்டத்து யானையை வருவித்தல் | |
925. | திங்களை யிரண்டு கூறாச் செய்துமுன் செறித்த போல மங்கல வடிவின் வந்த வலனுயர் வயிரக் கோட்டுச் செங்களி விதிர்த்த போலுஞ் செம்பொறிச் சிறுகண் வேழம் வெங்களி வியாளம் வல்ல விறலது வருக வென்றான். |
|
உரை
|
|
|
|
|
926. | அருளறிந் துழைய ரோடி யரசுவா வருக வென்ன மருளிவண் டுழலுந் தாரை மழகளி றதனை மேய்ப்பான் இருளிருங் குன்ற மேய்க்கு மிரும்பிண ரெருத்த மேறி வெருவரு மொழியிற் றேறி மேன்முறைத் தொழில னானான். |
|
உரை
|
|
|
|
|
927. | அரைசுவா வதனோ டாடி யியலறிந் தணைந்த பாகன் புரைசைதா னெகிழ்த்து மற்றோர் புதுவடம் புரள வீக்கி உரைசெய்காற் சுவடு நுங்கச் செறித்தொன்று புறத்த தாக்கி நிரைசெய்கா னிகளம் விட்டு நிலத்தவ ரேறு கென்றான். |
|
உரை
|
|
|
|
|
928. | பின்னவ னேறித் தூசப் பெருவடம் பிடித்த பின்னைப் பொன்னவிர் தொடர்கண் விட்டுப் புறத்துக்காற் புரோசை கோத்து மன்னவ னருளு மாறு மங்கலக் கோலஞ் செய்வான் துன்னருங் கவைமுட் கோலோர் சூழ்ந்துவந் தணைக வென்றான். |
|
உரை
|
|
|
|
|
929. | கரும்பொடு முடித்த காய்நெற் கதிரணிக் கவளக் கற்றை இரும்புடை வயிரக் கோட்டி னிடையன பயிரி நீக்கிச் சுரும்பொடு மலர்கள் வாய்ந்த துகளையு மகல வாரி அரும்புடை யலங்கன் மார்ப னரத்தநீ ரெறிவித் தானே. |
|
உரை
|
|
|
|
|
930. | குங்குமக் குழம்பு கொட்டிச் சந்தன வெள்ளை கொண்டு மங்கல வயிரக் கோட்டு வலங்கொள வரைந்து மற்றுச் சங்கின துருவி னாலும் வலம்புரிச் சவியி னாலும் அங்கதன் பாகத் தீரத் தருகெலா மணிவித் திட்டான். |
|
உரை
|
|
|
|
|
931. | பொற்றிரட் கடிகை பூட்டிப் புரிமணி யோடை சேர்த்தி முற்றிய புளகச் சூழி முகம்புதைத் திலங்க வீழ்த்துச் சுற்றிநின் றெரியுஞ் செம்பொற் சுடர்நிலைப் பட்டஞ் சேர்த்திக் கற்றையங் கவரிக் கண்ணி கருணமூ லத்து வைத்தான். |
|
உரை
|
|
|
|
|
932. | தாரணி தயங்கச் சாத்தித் தவிசின்மேல் விரித்து மஞ்சில் ஏரணி திருவில் லேய்ப்ப விருவடம் விலங்க வீக்கிச் சீரணி மணிகள் வீழ்த்துச் செம்பொன்செய் சுண்ணஞ் சிந்திக் காரணி மின்னிற் றோன்றக் கதலிகை நடுவித் தானால். |
|
உரை
|
|
|
|
|
பயாபதி யானையின்மேல் ஏறுதல் | |
933. | வேழமாங் கணிந்த பின்னை வேந்தர்போற் றிசைப்ப வேறி்ச் சூழொளி யார மின்னச் சுடர்க்குழை திருவில் வீச ஏழையர் கவரி யேந்த வெரிகதிர் விரிவ தொத்தான் ஊழிநீ ருலகங் காக்கு முழவுத்தோ ளுருவத் தாரான். |
|
உரை
|
|
|
|
|
934. | ஒத்துநின் றுலக மெல்லா மொருங்குடன் குளிர வோம்பி வித்தகர் புகழு மேரார் வெள்ளிவெண் குடையொன் றோங்கி முத்தவெண் மாலை நான்று முடிமிசை நிழற்ற மூரி மத்தமால் களிறு நுந்தி வளநகர் மருளச் சென்றான். |
|
உரை
|
|
|
|
|
பயாபதி சடிமன்னனைச் சந்திக்கப்புறப்பட்ட வருணனை | |
935. | அரசிறை யரசரொ டெழுதலு மதிர்தரு முரசெறி யிமிழிசை முழவொடு கழுமின திரைசெறி நெடுவரை கடைதொறு திசைதிசை கரைசெறி கடலொலி கடுகிய தனெவே. |
|
உரை
|
|
|
|
|
936. | துளைபடு குழலிசை துடியொடு சிறுபறை கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர வளையொடு வயிரிசை மருவின மழையென வளைபடு மணியர வறிவயர் வுறவே. |
|
உரை
|
|
|
|
|
937. | சொரிவன மலர்மழை சுழல்வன வெழுபுகை இரிவன மதுகர மிருள்வன திசைமுகம் எரிவன சுடர்மணி யெழுவன கதலிகை தெரிவன வரியன தெருவொடு திசையே. |
|
உரை
|
|
|
|
|
938. | கொடியொடு குடையிடை மிடைவன விருள்செய முடியொடு சுடர்குழை முளைவெயி லொளிசெய அடியொடு புனைகழ லரசிறை படையெழ இடையிடை யிரவொடு பகலிசை வனவே. |
|
உரை
|
|
|
|
|
939. | புரவிய குரமுக மிடுதொறு பொடியெழு மருவிகொண் மதமழை பொழிதொறு மளறெழு மருவிய மனிதரு மனநனி யயர்வுறு தெருவுகள் படுவது சிலரிடை தெரிவார். |
|
உரை
|
|
|
|
|
940. | செருவியல் களிறுகள் செவிபுடை யரவமும் உருவிய லிவுளிக ளொலிகலி யரவமும் கருவிகொள் வயவர்கள் கழனர லரவமும் விரவிய செவிபிற விளிகொள லிலவே. |
|
உரை
|
|
|
|
|
941. | வளையவர் மனநிறை யழிதரு வடிவுடை இளையவ ரிருபுற வுரைகளி னிடையிடை திளையொடு நகைநனி சிலபல கனிவன விளைவுடை யவர்களும் விழைவுறு தகவே. |
|
உரை
|
|
|
|
|
942. | குயிலுவ ரொலியொடு குடமுழ வதிர்வொடு மயிலின மகளிர்த மவிநய மடநடை அயிலிய லரசர்த மருகவை பெருகலின் இயலிய வளநக ரிடமிட மிலவே. |
|
உரை
|
|
|
|
|
சடிமன்னன் எதிர்கொள வருதல் | |
943. | சுரமைய ரதிபதி வருமென மருசிசென் றருமைகொள் புகழற் கறைதலி னெதிர்கொள வரமிகு நெடுவரை மணிமுடி நெடியவன் உரமிகு படையெழு வுரைநனி யரிதே. |
|
உரை
|
|
|
|
|
944. | கருவரை வருவன வெனவுள களிறுகள் பெருவரை யருவிக ளெனவுள பெயர்கொடி அருவரை யடுபுலி யெனவுள ரிளையவர் பருவரை யிறையுடை யெழுவதோர் படையே. |
|
உரை
|
|
|
|
|
945. | நிலமிசை யவர்படை நிலநெளி வுறவரும் மலைமிசை யவர்படை மலைநெரி வுறவரும் அலைதிரை யொலிகட லவைபுடை பெயர்தரு நிலைபெரி தரிதிப நெடுவரை நிரையே, |
|
உரை
|
|
|
|
|
946. | முகிலிடை புகுவன புரவிக ளெனினவை முகிலிடை புகுவதொர் முறைமையை யுடையன அகிலிடு நுழைபுகை யவைகமழ் வனவெனின் அகிலிடு நுழைபுகை யவர்புக ழதுவே. |
|
உரை
|
|
|
|
|
947. | வனமலர் பொழிவன மழைமுகின் மழைமுகில் இனமல ரிடையிடை விரைமழை சொரிவன கனமலி மணிவரை யுடையவ னுழையவர் இனமலி யமரரி னிழிவது சிறிதே. |
|
உரை
|
|
|
|
|
948. | அலர்மிசை யிளையவ ரடியிட வடியிடம் மலர்மிசை யியல்பவ ரியல்புக ளெனினல நிலமிசை யவரொடு நிலநடை படர்கென மலைமிசை யவரிறை யருளிய வகையே. |
|
உரை
|
|
|
|
|
949. | சங்குபோ லொளியவன் றாதை தன்படை கங்கைபோற் படர்ந்தது கலக்குங் காதலால் இங்குநீர் யமுனையி னிழிவ தொத்தது மங்குல்சேர் மணிவரை மன்னன் றானையே. |
|
உரை
|
|
|
|
|
950. | மாவியல் கடற்படை மயங்கி வானிடைப் பூவிய லிணரொடு கவரி பொங்கலாற் பாவிய பனித்திரைப் பரவை பாற்கடல் மேவிய விசும்பிடை விரிந்த தொத்ததே. |
|
உரை
|
|
|
|
|
951. | கழுமிய முகிலொடு களிறு கான்மிடைந் தொழுகிய வருவிநீ ருகுக்கு மாதலால் மழைமுகின் மழகளி றென்னும் வேற்றுமை உழையவ ருழையவர்க் குணர்த்தல் வேண்டுமே. |
|
உரை
|
|
|
|
|
952. | புண்ணிய மணிநிரை பரந்து பூவுதிர்ந் தெண்ணியல் கொடிமிடைந் திருண்டு பாங்கெலாம் கண்ணியல் கவரிமாக் கலந்து கானக மண்ணியல் பரவையாய் வருவ தொக்குமே. |
|
உரை
|
|
|
|
|
953. | நந்திய சுடர்மணி நாக மீமிசைப் பைந்துகிற் கதலிகை பரந்து தோன்றுவ நந்திய சுடர்மணி நாக மீமிசைப் பைந்துகிற் கதலிகை பரந்த போலுமே. |
|
உரை
|
|
|
|
|
954. | கணங்கெழு கவரிகள் கலந்து காழகில் அணங்கிவர் நாவிகா லளைந்து நாறலால் இணங்கிய கடற்படைப் பரவை யிவ்வழி மணங்கம ழிமகிரி வருவ தொக்குமே. |
|
உரை
|
|
|
|
|
955. | காமரு பூங்குழைக் காம வல்லிகட் டாமரி யனையவர் தயங்கி யுண்மையாற் காமரு பூங்குழைக் காம வல்லிகட் டாமரி யனையதத் தானை வண்ணமே. |
|
உரை
|
|
|
|
|
956. | மணிமருங் குடையன வயிரக் கோட்டின அணிமருங் கருவிய வரைக ளன்னவான் மணிமருங் குடையன வயிரக் கோட்டின அணிமருங் கருவிய வரச வேழமே. |
|
உரை
|
|
|
|
|
957. | மஞ்சிவர் மணிவரை மகளிர் சீறடி விஞ்சையந் தொழிலிய விடுத்த மெல்லியற் பஞ்சின்மேன் மிதிப்பினும் பதைத்துப் பையவே அஞ்சிமே லிவர்வதற் கார்வஞ் செய்யுமே. |
|
உரை
|
|
|
|
|
மன்னர் இருவரும் சந்தித்தல் | |
958. | மணிவரை யரசனு மகர மால்கடல் அணிவரை நிலமுடை யாணை வேந்தனும் கணிவரை பொழுதினாற் கண்ணுற் றாரரோ பணிவரை யிலாத்தொழிற் பரவைத் தானையார். |
|
உரை
|
|
|
|
|
959. | அம்மல ரலங்கலான் றடக்கை யென்னுமம் பொய்ம்மலர்த் தாமரை முகிழ்க்கு மெல்லையுண் மைம்மலர் நெடுவரை மன்னன் மற்றவன் செம்மல ரங்கையிற் செறியப் புல்லினான். |
|
உரை
|
|
|
|
|
960. | வலம்புரி வண்ணனு மகர மால்கடல் நலம்புரி நல்லொளி நம்பி தானுமவ் வுலம்புரி தோளினா னொளிகொள் பைங்கழல் கலம்புரி தடக்கையாற் கதழக் கூப்பினார். |
|
உரை
|
|
|
|
|
961. | காமரு கவினொளிக் காளை மார்களைத் தாமரைச் செங்கணாற் றழுவிப் பின்னவர் பூமரு பொன்வரை யகலம் புல்லினான் சாமரை நன்னுதற் றடக்கை யானையான். |
|
உரை
|
|
|
|
|
962. | எழில்விரி நெடுவரை யிறைவன் றன்மகன் அழல்விரி சுடரொளி யருக்க கீர்த்தியும் பொழிலணி போதனத் திறைவன் பொன்னணிக் கழலவ னடியிணை கையிற் கூப்பினான். |
|
உரை
|
|
|
|
|
963. | ஆங்கவ னழகுகண் பருக மற்றவன் றாங்கெழு வனையதோ டழுவித் தன்னொடும் ஓங்கிய மழகளி றெருத்த மேற்றினான் வீங்கிய கனைகழல் வேந்தர் வேந்தனே. |
|
உரை
|
|
|
|
|
964. | மன்னிய விஞ்சை வேந்தன் றம்பியு மருகன் றானுந் துன்னிய சுரமை நாடன் றொடுகழ றொழுத லோடும் பின்னிய காதல் வெள்ளம் பெருகிய விரிவிற் றாகிப் பொன்னியல் கழலி னாற்கோர் பொங்கொளி புணர்ந்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
965. | வெஞ்சுட ராழி யாளும் விறலவற் கிளைய தாதை மஞ்சுடை விஞ்சை நாடன் மலரடி வணங்கி மற்ற வஞ்சமில் புகழி னான்றன் மனத்தையும் வணக்கி யிட்டான் செஞ்சுட ரிலங்கு பூணான் றிறற் சிறீ பால னென்பான். |
|
உரை
|
|
|
|
|
966. | ஆய்ந்தசீ ரரச ராங்குக் கலந்தபின் னமிழ்த வெள்ளம் பாய்ந்தது பரவை நன்னீர்ப் பாற்கடல் பரந்த தேபோல் ஏந்திய காதல் கூர வெழினகர் பெயர்ந்து புக்கார் காந்திய கனகப் பைம்பூட் கருவரை யனைய தோளார். |
|
உரை
|
|
|
|
|
967. | எழில்கொள்கந் தனைய திண்டோ ளிளைய ரோடரசரீண்டிப் பொழிலகந் தழீஇய சோலைப் பொன்னர்க் கோயில் புக்குத் தழுமலர்க் கோதை நல்லார் பலாண்டிசை ததும்ப வாழ்த்தச் செழுமலர்த் திரள்க டாழுஞ் சித்திர கூடஞ் சேர்ந்தார். |
|
உரை
|
|
|
|
|
இருவேந்தரும் குமரரோடு ஆசனத்தில் அமர்தல் | |
968. | வெள்ளொளி யெயிற்றுப் பேழ்வாய் விரியுளை யரச சீயம் ஒள்ளொளி தவழ வேந்து மொளிமணி யணையின் மேலோர் கள்ளொளி கமழுங் கோதை மகளிர்கள் கவரி வீசத் தெள்ளொளிக் குமர ரோடு மிருந்தனர் திருந்து வேலோர். |
|
உரை
|
|
|
|
|
சடிமன்னன் வந்த காரியத்தைப் பயாபதி வினவல் | |
969. | காமரு மகளிர் வீசுங் கனமணிப் பவழத் திண்காற் சாமரை பயந்த தென்ற கைமுடித் தாது சிந்தப் பூமரு பொறிவண் டார்ப்பப் பொலிந்தவ ரிருந்த போழ்தின் ஏமரு கடலந் தானை யிருநிலக் கிழவன் சொன்னான். |
|
உரை
|
|
|
|
|
970. | விண்ணிடை யிழிந்து வந்த விண்ணவர் கிழவ னொப்பாய் மண்ணிடை யென்னை யிங்கோர் பொருளென மதித்து வந்த தெண்ணிடை யுணரு மாந்தர்க் கிடைதெரி வரிய தொன்றாற் கண்ணிடை யுமிழுஞ் செந்தீக் கடாக்களிற் றுழவ வென்றான். |
|
உரை
|
|
|
|
|
971. | ஏங்குநீர் வளாகங் காக்கு மிக்குவா மன்ன ரேறே தூங்குநீர் மருத வேலிச் சுரமைநா டுடைய தோன்றால் ஏங்குநீ ரமிழ்தின் றீர்த்தஞ் சென்றனர் தெளித்த லன்றே. ஓங்குநீ ருலகந் தன்னு ளுயர்ந்தவர்க் குரிய தென்றான். |
|
உரை
|
|
|
|
|
972. | வருதற்கு முதலு முன்பே மருசிவந் துணர்த்தக் கேட்டேன் பொருதற்கண் ணரிய வேலோய் புராணநூற் புலவர் யாரும் கருதற்கண் ணரிய கண்ணி கடல்வண்ணற் குரிய ளென்னத் தருதற்கு மகிழ்ந்து வந்தேன் றாழமீங் கொழிக வென்றான். |
|
உரை
|
|
|
|
|
விசயதிவிட்டர் அருக்ககீர்த்தியுடன் புறப்படல் | |
973. | அன்னண மரசர் பேசி யிருந்தபின் னருக்க னோடும் பொன்னணி புரிசை வேலிப் புதுநகர் புகுக வென்று மன்னவ குமரர் தம்மை மணிவரை யரச னேவப் பின்னவர் வேழ மேறிப் பெயர்ந்தனர் போது கின்றார். |
|
உரை
|
|
|
|
|
சயம்பவை திவிட்டனைக் காணல் | |
974. | ஆயிடை யரச சீய மனையவர் பெயரும் போழ்தின் வேயுடை யருவிச் சாரல் வெள்ளிவேய் விலங்க னாடன் தீயுடை யிலங்கு வேலான் றிருமக ளமிர்தின் சாயல் வீயுடை யலங்கன் ஞான்ற மிடைமணி விமானஞ் சேர்ந்தான். |
|
உரை
|
|
|
|
|
975. | பொலங்கலம் புலம்ப வாயம் புடைநின்று போற்றுக் கூவ அலங்கலுங் குழலுந் தாழ வணிஞிமி றரவஞ் செய்ய இலங்கலங் கனக மாடத் தெழுனிலை யேறி னாளே, விலங்கலின் குவடு சேரு மெல்லியற் றோகை போல்வாள். |
|
உரை
|
|
|
|
|
976. | ஆயத்து ளலர்கொம் பன்னா ளமிர்தமா பிரபை யென்ற வேயொத்த பணைமென் றோளி மிடைமணிக் கபாட நீக்கி வாயிற்கண் வருக நங்கை வளநகர் காண்க வென்று கோயிற்க ணருகு செல்லுங் குமரரைக் காட்டினாளே. |
|
உரை
|
|
|
|
|
977. | விண்ணதிர்த் தனைய வாகித் திசைமுகஞ் சிலம்ப வீங்கிக் கண்ணதிர் முரசுஞ் சங்கும் கடற்பெயர் முழக்க மாக மண்ணதிர் கொள்ளச் செல்லு மைந்தர்கள் யார்கொ லென்னும் எண்ணதிர் மனத்தி னாட்குத் தோழிமற் றிதனைச் சொன்னாள். |
|
உரை
|
|
|
|
|
978. | முன்னவ னம்பி வெய்யோன் பெயரவன் முழவுத் தோளான் பின்னவன் சுரமை வேந்தன் பெருமக னவற்குத் தம்பி கன்னவில் வயிரத் தோளான் கருமுகி லுருவக் காளை இன்னவ னென்ன லோடு மிலங்கொளி முறுவல் கொண்டாள். |
|
உரை
|
|
|
|
|
979. | நீலமா மணிக்குன் றேய்ப்ப நிழலெழுந் திலங்கு மேனிக் கோலவா யரச காளை குங்குமக் குவவுத் தோளான் மேலவா நெடுங்க ணோட மீட்டவை விலக்க மாட்டாள் மாலைவாய்க் குழலி சால மம்மர்கொண் மனத்த ளானாள். |
|
உரை
|
|
|
|
|
980. | தாமரை யனைய கண்ணுந் தடக்கையும் பவழ வாயும் பூமரு பூவைக் கண்ணிப் புதுமல ரொளியுங் காட்டித் தூமரு நீல மென்னு மணிதுணர்ந் தனைய குஞ்சிக் காமரு காளை கன்னி கண்களைச் சிறைகொண் டிட்டான். |
|
உரை
|
|
|
|
|
981. | சிறையென்ப தில்லைச் செவ்வே செம்புனல் சிறக்கு மாயி்ன் நிறையென்ப தில்லைக் காம நேர்நின்று பெருகு மாயின் நிறைநின்ற துளதென் பார்க்கின் றரும்பெற லிவள துள்ள நறைநின்று கமழுங் குஞ்சி நம்பிபாற் பட்ட தன்றே. |
|
உரை
|
|
|
|
|
982. | கோணின்ற மதியம் போலக் குழைமுகஞ் சுடரக் கோட்டித் தாணின்ற குவளைப் போதிற் றாதகங் குழைய மோந்து வாணின்ற நெடுங்கண் காளை வடிவினுக் கிவர மற்றை நாணின்று விலக்க நங்கை நடுவுநின் றுருகு கின்றாள். |
|
உரை
|
|
|
|
|
983. | அவ்வழி யமுதம் பூத்த அருங்கலக் கொம்பைத் தன்கோன் இவ்வழி வருக வென்ற தவடம ரிசைப்பக் கேட்டு் மைவழி நெடுங்க ணாளு மனம்புக்க குரிசி றன்னைச் செவ்வழி மழலை நாணே யெழினியா மறைத்துச் சென்றாள். |
|
உரை
|
|
|
|
|
சடிமன்னன் சயம்பவையைப் பயாபதிக்குக் காட்டலும் அவன் பாராட்டலும் | |
984. | ஆயிரங் கண்ணி லாதார்க் கழகுகாண் பரிய நங்கை வேயிரும் பணைமென் றோளார் மெல்லடி பரவச் சென்று மாயிருஞ் செல்வத் தாதை மலரடி வணங்கி நின்றாள் சேயிருங் குன்ற மீன்ற செழுமணிச் சலாகை போல்வாள். |
|
உரை
|
|
|
|
|
985. | மங்கையை வலத்துக் கொண்டு மாலையுங் குழலுந் தோடும் அங்கையாற் றிருத்தி மாம னடிகளைப் பணிக வென்று செங்கயற் கண்ணி தாதை செவ்விரல் குவியப் பற்றிப் பங்கயப் பழன நாடன் பாதமூ லத்து வைத்தான். |
|
உரை
|
|
|
|
|
986. | மருமகள் வணங்க முன்னே வலப்புடைக் குறங்கி னேற்றிக் கருமைகொள் குவளைக் கண்ணி கழிநலக் கதிர்ப்பு நோக்கித் திருமக ளிவளைச் சேருஞ் செய்தவ முடைய காளை அருமைகொ டிகிரி யாள்தற் கையமொன் றில்லை யென்றான். |
|
உரை
|
|
|
|
|
987. | அருங்கல மகளிர்க் கேற்ற வழகெலாந் தொகுத்து மற்றோர் இருங்கலி யுலகங் காணப் படைத்தவ னியற்றி னான்கொல ஒருங்கல துலகின் மிக்க மகளிர துருவ மெல்லாம் பெருங்கல வல்கு றன்பாற் புகுந்துகொல் பெயர்ந்த தென்றான். |
|
உரை
|
|
|
|
|
988. | அருந்தவ முடையன் யானு மன்றெனி லணங்கு போலும் பெருந்தகை நங்கை தன்னைப் பெற்றவன் றாதை யென்னும் திருந்திய மொழியுந் தெய்வச் செல்வமுந் தெய்வ மன்னீர் பொருந்திய தொடர்பு மெய்தப் புணருமோ புவியி னென்றான். |
|
உரை
|
|
|
|
|
சயம்பவை தன் இருப்பிடம் சேறல | |
989. | ஆங்கமர்ந் தரசர் பேசி யலர்மிசை யணங்கன் னாளைப் பூங்கமழ் சோலை வேலிப் பொன்னகர் புகுக வென்னத் தேங்கமழ் குழலி னாருந் தாயருஞ் செவ்வி காப்ப வீங்கொளி விமானத் துச்சி வெண்ணிலா முற்றஞ் சேர்ந்தாள். |
|
உரை
|
|
|
|
|
990. | மதுநனைந் தலர்ந்த தாரான் திறத்தையான் மறப்ப னென்னின் விதிநனி துரப்ப மீட்டு நினைப்பதே விளைக்கு முள்ளம் இதுநனி யறியு மோவிவ் வுலகமென் றிதயத் தோடும் புதுநனை விரிந்த கோதைப் பொன்னனாள் புலம்ப கொண்டாள். |
|
உரை
|
|
|
|
|
991. | காதலார் திறத்துக் காத லாக்கிய காத லாரை ஏதிலார் போல நோக்கி னிருமடங் காக வெய்தும் போதுலாஞ் சிலையி னான்றன் பொருகணைக் கிலக்கஞ் செய்யும் ஆதலாற் காம நோய்க்கோ ரருமருந் தில்லை யன்றே. |
|
உரை
|
|
|
|
|
992. | தேமிடை கானல் வேலிச் செழுமணற் குவாலுங் குன்றும் பூமிடை தடமுங் காவும் புக்கவர்க் கரண மாகா தாமுடை மனமுங் கண்ணு நிறைவுந்தம் பால வாகா காமுடை மனத்தி னார்கட் கியாருளர் களைக ணாவார். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டனைச் சேர்ந்தோர் சயம்பவையைக் காணவருதல் | |
993. | அனையவ ளரச கன்னி யாகிய பொழுதி னிப்பாற் புனைமல ரலங்கன் மார்பிற் பூமியங் கிழவன் றேவி் வனமல ருருவக் கண்ணி மணிவண்ணன் மார்பு தோயும் கனமணிப் பூணி னாளைக் காண்கென விடுக்கப் பட்டார். |
|
உரை
|
|
|
|
|
994. | மதுகரி வயந்த சேனை யெனவிவ ராதி யாகப் புதுமலர்க் கொடியும் பூவுந் துணர்களும் புணர்ந்த பேரார் கதிரன கலங்க டாங்கிக் காப்புமங் கலங்க ளேந்தி எதிர்தரு மிளமை யாரோ ராயிரத் தெண்மர் சூழ்ந்தார். |
|
உரை
|
|
|
|
|
995. | மாதவக் குலத்து ளார்கண் மாதவ சேனை யுள்ளிட் டோதியபெயரின் மிக்கா ருலகறி கலையின் வல்லார் கோதையுங் குழையுந் தோடுங் குளிர்முத்த வடமுந் தாங்கிப் போதிவர் குழலி தாதை பொன்னகர் முன்னி னாரே. |
|
உரை
|
|
|
|
|
996. | நன்னுத லவரு நம்பி தாயரு நடக்க வல்ல பொன்னுதற் பிடியுந் தேரும் வையமு மிழிந்து புக்கு மன்னனை வணங்கி யன்னோன் பணிகொண்டு மடந்தை கோயில் இன்னிசை மகளிர் முன்சென் றெதிர்கொள வெய்தி னாரே. |
|
உரை
|
|
|
|
|
997. | பொன்னிய லமளி மேலாள் பூவணை மருங்கு தீண்டக் கன்னியர் கவரிக் கற்றை கைவல னசைப்பக் காய்பொன் னின்னிசைக் குழைவில் வீச வினிதினங் கிருந்த நங்கை துன்னிய மகளிர் தம்மைத் தமர்தொழு துணர்த்தக் கண்டாள். |
|
உரை
|
|
|
|
|
998. | வலங்கொண்டு தொழுது வாழ்த்தி மற்றவ ரடைந்த போதின் உலங்கொண்ட வயிரத் தோளா னுழைக்கல மகளி ரென்று நலங்கொண்டோ ரார்வங் கூர நகைமுக முறுவ றோன்றிப் புலங்கொண்ட ததனைக் காப்பான் பூவொன்று நெரித்து மோந்தாள். |
|
உரை
|
|
|
|
|
999. | விண்விளக் குறுக்குந் திங்கட் சுடர்நுதல் விளக்கி னாலும் பெண்விளக் குறுக்கு மேனி பெருகிய வொளியி னாலும் பண்விளக் குறுக்கு மின்சொற் பாவையைப் பாவை மாரைக் கண்விளக் குறுக்கு மாற்றாற் காண்டலுக் கரிய ளானாள். |
|
உரை
|
|
|
|
|
1000. | செஞ்சிலம் பொலிக்குஞ் செல்வச் சீறடித் தெய்வப் பாவை பஞ்சிலங் கணையின் மேலாள் பரந்தொளி திருவில் வீச மஞ்சிலங் குருவ வானின் மழையிடை நுடங்கு மின்போல் அஞ்சிலம் படியி னார்த மறிவினை யயர்வித் திட்டாள். |
|
உரை
|
|
|
|
|
மாதவ சேனை சயம்பவையின் உருவத்தைத் தீட்டல் | |
1001. | மற்றவர் காணும் போழ்தின் மாதவ சேனை யென்பாள் சுற்றிய பளிங்கிற் சோதிச் சுவர்மிசை யெரித்துத் தோன்ற இற்றிவ ளுருவ மென்றாங் கிதயத்து ளெழுதி வைத்துப் பிற்றையோர் பலகை தன்மேற் பெய்வளை யெழுத லுற்றாள். |
|
உரை
|
|
|
|
|
1002. | பண்களை மருட்டு மின்சொற் பாவையைப் பருக லுற்ற கண்களை மருள நீருங் கண்களெங் கண்க ளாகப் பெண்களை மருட்டுஞ் சாயற் பேதையைக் காண்மி னென்று மண்களை மருட்டுஞ் சீர்நும் மாமியா ரடிகள் சொன்னார். |
|
உரை
|
|
|
|
|
1003. | ஆதலா லவர்க்குச் சொல்லு மாற்றமொன் றருளிச் செய்மின் மாதுலாஞ் சாய லென்ன மாதவ சேனை யென்பாள் ஏதமாங் கில்லை யன்றே யெங்கண்முன் மொழிய வென்றாள் கோதிலாக் குணக்கொம் பன்னாள் குறுநகை முறுவல் கொண்டாள். |
|
உரை
|
|
|
|
|
அமிர்தமா பிரபையின் கூற்று | |
1004. | அங்கவள் குறிப்பு நோக்கி யமிமுதமா பிரபை யென்னு மங்கலத் தோழி கூறு மாமியா ரடிக டம்மை எங்களின் செய்கை யதாக விணையடி பணிமி னென்றாள் செங்கனி கனிந்த செவ்வாய்ச் சிறுநுதற் பெரிய கண்ணாள். |
|
உரை
|
|
|
|
|
1005. | ஆங்கவண் மொழிந்த போழ்தி னணங்கினை வணங்கி மற்றத் தீங்கனி யமிர்த மன்ன திருமொழிப் பண்ணி காரம் வாங்குநீ ருலகங் காக்கு மன்னவன் பட்டத் தேவி ஓங்கிருங் கற்பி னாளுக் குய்ப்பளென் றுணர்த்திப் போந்தாள். |
|
உரை
|
|
|
|
|
1006. | பளிங்கியல் பலகை தன்மேற் பாவைய துருவந் தான்முன் றெளிந்தவா றெழுதிக் கொண்டு செந்துகி லுறையின் மூடி வளந்தரு கோயின் முன்னி மணிவண்ணற் பயந்த தேவி் அளந்தறி வரிய கற்பி னமிர்தனா ளருகு சேர்ந்தாள். |
|
உரை
|
|
|
|
|
மாதவசேனை தான் வரைந்த ஓவியத்தைக் காட்டலும் திவிட்டன்தாயின் மகிழ்ச்சியும் | |
1007. | மையகத் தலர்ந்த வாட்கண் மாதவ சேனை சென்று வையகத் தரசன் றேவி மலரடி வணங்க லோடும் மெய்யகத் துவகை கூர விரும்பித்தன் னருகு கூவிக் கையகத் திதுவென் னென்னக் கன்னிய துருவ மென்றாள். |
|
உரை
|
|
|
|
|
1008. | அணிகலம் பரிந்து நங்கை யணிமரு ளுருவந் தந்த மணிமருண் முறுவற் செவ்வாய் மாதவ சேனைக் கீந்து பணிவரும் பலகை தன்மேற் பாவையைக் காண்டு மென்றாள் துணிவரும் பவழத் துண்டந் துடிக்கின்ற தனைய வாயாள். |
|
உரை
|
|
|
|
|
1009. | மணிதெளித் தமைக்கப் பட்ட வண்ணமே வண்ண மாகத் துணியமுன் கலந்து செய்த துகிலிகைத் தொழில்க ணோக்கி அணியின தொளிக ளோவிவ் வணங்கின துருவ மோவிக் கணிநலங் கருத லாகாக் கண்கவர் சோதி யென்றாள். |
|
உரை
|
|
|
|
|
1010. | பழுதிய லிலாத பாவை யுருவமோர் படியி னாலும் எழுதுதற் கரிதி யார்க்கு மிலங்கொளி யுருவ மேனி மொழிதலுக் கரிதா லத்தை முருகுவேய் குழலி மற்றுன் றொழுதகை யருளி னன்றே துணிந்தியா னெழுதிற் றென்றாள். |
|
உரை
|
|
|
|
|
சயம்பவையின் குறிப்பை மாதவசேனை தெரிவிக்கத் திவிட்டன் தாய் மகிழ்தல் | |
1011. | அல்லது மடந்தை தோழி யவளது முகத்தி னாலோர் சில்லணி மழலைச் செவ்வாய்த் திருமொழி பிறந்த துண்டு வல்லிதன் மொழிபோய் நீரெம் மாமியா ரடிகட் கெம்வாய் எல்லையில் கிழமை தன்னா லிறைஞ்சுக வென்ப தென்றாள். |
|
உரை
|
|
|
|
|
1012. | என்றவண் மொழிந்த போழ்தி னிலங்கொளிப் பலகை தன்மேல் மின்றவழ் மேனி யாளை மென்பணைத் தோளிற் புல்லி இன்றினி தாகு மன்றே யிருந்தவப் பயங்க ணம்பால் ஒன்றின விளைந்த வென்றாங் கொளியினாற் புதிய ளானாள். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் தாய் அவ்வோவியத்தைத் தன்மகனுக்குக் காட்டும்படி மாதவசேனையை ஏவலும் அவள் செயலும் | |
1013. | போதவி ழலரி நாறும் புரிகுழ லுருவப் பாவை சோதிசூழ் வடிவு நம்பி சுடர்மணி வண்ணண் காண மாதவ சேனை காட்ட வல்லையோ வென்ன வையற் கோதுவ திவணை யன்றே யடிகள்யா முணரி னென்றாள். |
|
உரை
|
|
|
|
|
1014. | மற்றவ டொழுது போகி மணிவண்ணன் மகிழ்ந்த கோயிற் சுற்றிநின் றெரியுஞ் செம்பொற் சுடர்மணி வாயி னண்ணி இற்றென விசைத்துப் புக்காங் கிளையவன் கழல்கை கூப்ப எற்றுநீ வந்த தென்றாற் கிதுவெனா வெடுத்துச் சொன்னாள். |
|
உரை
|
|
|
|
|
1015. | அருங்கல முலகின் மிக்க வரசர்க்கே யுரிய வன்றிப் பெருங்கல முடைய ரேனும் பிறர்க்கவை பேச லாகா இருங்கலி முழவுத் தோளா யெரிமணிப் பலகை மேலோர் நெருங்கொளி யுருவங் கொண்டு நின்னையா னினைந்து வந்தேன். |
|
உரை
|
|
|
|
|
ஓவியத்தைக் கண்ணுற்ற திவிட்டன் செயல் | |
1016. | அப்படித் தாயிற் காண்பா மென்றன னரச நம்பி மைப்புடை நெடுங்க ணாளு மருங்குநின் றவரை நீக்கிக் கைப்புடைப் பலகை மேலாற் கன்னிய துருவங் காட்ட மெய்ப்புடை தெரிய மாட்டான் விருந்துகொண் மனத்த னானான். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் வினாவும் மாதவ சேனையின் மறுமொழியும் | |
1017. | வானவர் மகள்கொல் விஞ்சை மாதுகொள் மண்ணு ளாள்கொல் தேனிவர் குழலி மற்றித் திருநுதன் மடந்தை யென்ன மானிவர் நோக்கி யன்னோர் மகளல்லண் மற்று நின்ற ஊனிவ ரலங்கல் வேலோ யுய்த்துணர்ந் தருளு கென்றாள். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் சயம்பவை என அறிதல் | |
1018. | மண்மிசை மகளி ரின்ன வடிவுடை யவர்க் ளில்லை விண்மிசை மடந்தை யல்ல ளாய்விடின் விஞ்சை வேந்தன் கண்மிசை நவிலுங் காதற் கன்னிய துருவ மாமென் றெண்மிசை யிவரும் போழ்தி னிதுவென வவளுஞ் சொன்னாள். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் காதல் நோயுற்றமை | |
1019. | கன்னிய துருவங் காளை காண்டலுங் கேடில் காமன் பொன்னியல் கழலன் றாரன் பூட்டிய சிலைய னாகி மன்னிய விற்கை நோக்கி மலரணி கணையு நோக்கித் துன்னிய பொழுது நோக்கிச் சுடுசரந் தொடுக்க லுற்றான். |
|
உரை
|
|
|
|
|
1020. | மண்ணியல் வளாக மெல்லா மகிழ்ந்துடன் வணங்கும் போழ்தும் உண்ணனி மகிழ்தல் செல்லா வொளியுடை யுருவக் காளை கண்ணியற் காத லாடன் கண்ணின் னுருவங் கண்டே வெண்ணெயின் குன்றந் தீயால் வெதும்புகின் றதனோ டொத்தான். |
|
உரை
|
|
|
|
|
1021. | மாகத்து மதிய மன்ன வாணுதன் மடந்தை தன்னை ஆகத்து ளடக்கிப் பின்னு மணிநுத லழகு நோக்கி நாகத்தை நடுக்கு மல்கு னங்கைதன் றிறத்துக் காம வேகத்தை மெல்ல மெல்ல வில்வலான் பெருக்கி யிட்டான். |
|
உரை
|
|
|
|
|
1022. | குழலையான் றிருத்திக் கோதை சூட்டுவன் குறிப்புண் டாயின் மழலைவாய் திறந்தோர் மாற்ற மருளுக மடந்தை யென்னும் நிழலவாம் பகழி போலு நெடுங்கணோக் கென்னும் வெய்ய அழலினா லளிய னாவி யடுவதோ வழகி தென்னும். |
|
உரை
|
|
|
|
|
1023. | சீறடிப் பரடு தோயுஞ் சிலம்பிணை திருந்த வைப்பன் வீறுடை நங்கை யென்றன் கவான்மிசை யிருத்தி யென்னும் சேறுடைக் கோதை மேலாற் சிறந்துவார் கூந்தல் கையால் வேறிடத் துருவல் செய்ய விரும்பிய மனத்த னானான். |
|
உரை
|
|
|
|
|
1024. | அந்துகி லசைத்த தோர்கை யவிழ்ந்தசை கின்ற தென்னும் பைந்தளிர் மேனி தன்மேற் பன்மணிக் கலங்க டீண்டு்ம் செந்தளிர் புரையு மேனிச் சேயிழை திறத்திற் காம வெந்தழல் கனல மூட்டி வில்வலான் மெலிய லுற்றான். |
|
உரை
|
|
|
|
|
1025. | வாளையா நெடுங்க ணல்லாண் மணவினை தொடங்குங் கால நாளையா னமர்க ளோடு சூழ்ந்துவந் தறிவ லென்று காளைபாற் பட்டு வெய்யோன் குடதிசைக் கனபொற் குன்றிற் சூளிவா யருவி மாலைச் சுடர்முடிச் சென்னி சேர்ந்தான். |
|
உரை
|
|
|
|
|
1026. | விண்ணிய லுருவ வீதி மேனின்று மிழிந் வெய்யோன் கண்ணியல் விலங்க னெற்றி கதிரென்னுங் கையி னூன்றி மண்ணியன் மரத்தின் சாகை நுதிபிடித் தவையும் விட்டுப் பண்ணியல் பிறிதொன் றாகிப் பையவே மறைந்து போனான். |
|
உரை
|
|
|
|
|
1027. | வெய்யவ னென்னுஞ் செந்தீச் சுடரினால் வெதும்பப் பட்டு மையொளி பரந்த போன்று கருகின திசைகண் மற்று மொய்யழல் மேல விழ்ந்த தழன்மீள மூள்வ தேபோற் செய்யதோ ருருவ மேல்பாற் றிசைமுகஞ் சிறந்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
1028. | கள்ளுலாங் கழனி நீத்துக் கருங்கயல் கவுளுட் கொண்டு புள்ளெலாங் குடம்பை சேர்ந்து பார்ப்பினம் புறந்தந் தோம்பி உள்ளுலா வுவகை கூரத் துணைபுணர்ந் தொலித்து வைக வள்ளலார் மனத்துக் கெஃகாய் மாலைவந் திறுத்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
1029. | காதலா ரகன்ற போழ்திற் கற்புடை மகளிர் போலப் போதலொங் குவிந்த பொய்கைத் தாமரை பொலிவு நீங்க மீதுலாந் திகிரி வெய்யோன் மறைதலுஞ் சிறுவெள் ளாம்பல் தாதலொ மலர நக்குத் தம்மையே மிகுத்த வன்றே. |
|
உரை
|
|
|
|
|
1030. | செய்யொளிச் செக்க ரென்னுஞ் செம்புனல் பரந்து தேறி வெய்யொளி நிறைந்த நீல விசும்பென்னு மணிகொள் பொய்கை மையிரு ளென்னுஞ் சேற்றுள் வளர்திங்கட் கதிர்க ளென்னு மொய்யிளங் கமல நாள வளையங்கண் முளைத்த வன்றே. |
|
உரை
|
|
|
|
|
1031. | அங்கொளி விசும்பிற் றோன்றி யந்திவா னகட்டுக் கொண்ட திங்களங் குழவி பால்வாய்த் தீங்கதி ரமிழ்த மாந்தித் தங்கொளி விரிந்த வாம்ப றாமரை குவிந்த வாங்கே எங்குள ருலகுக்கெல்லாம் மொருவரா யினிய நீரார். |
|
உரை
|
|
|
|
|
1032. | மணவாய மல்லிகையின் மதுநனைந்து வண்கனிகண் மதர்ப்ப வீசி இணர்வாய வனமுல்லை யிதழ்வாரி யிளந்திங்கட் கதிர்கா லூன்றித் துணைவாய சுரும்பிரங்க வரவிந்த வனத்துதிர்ந்த துகளுஞ் சீத்துத் திணைவாய கருங்குவளை திளைத்தசைக்குந் தென்றலுமொன் றுடைத்தே மாலை. |
|
உரை
|
|
|
|
|
1033. | மைபருகு நெடுங்கண்ணார் மணிமாட மிசையிட்ட வளைவாய்ப் பாண்டில் நெய்பருகு கொழுஞ்சுடரி னகிலாவி யிடைநுழைந்து நிழல்கால் சீப்பப் பைபருகு மணியுமிழ்ந்து பணநாக மிரைதேரும் பருவ மாலை கைபெருகு காமநோ யுடையவர்க்கோர் கனல்போல வருமே காணில். |
|
உரை
|
|
|
|
|
1034. | கணிமிடற்ற நறவேங்கை யவிர்சுணங்கின் மடவார்தங் கைமேற் கொண்டு பணிமிடற்று மொழிபயிற்றும் பைங்கிளியின் செவ்வழியி னிசைமேற் பாட மணிமிடற்ற செங்கண்ண பவழக்காற் கபோதங்கண் மதலை தோறு மணிமிடற்றி னாலகவ வனங்கனையு மனல்விக்கு மளிய மாலை. |
|
உரை
|
|
|
|
|
சயம்பவை சினாலயத்தை அடைதல் | |
1035. | வெஞ்சுடர்வே லிளையவனாங் கினையனவின் மெலிவெய்த விசும்பு செல்லும் விஞ்சையரை யன்மடமா மகணிலையா தனெவினவில் விளம்பக் கேண்மின் பஞ்சிலங்கு தேரல்குற் பாடகக்காற் பாவையர்கள் பலர்பா ராட்டச் செஞ்சுடரோன் மழைபொழுதிற் சினவரன்றன் றிருக்கோயில் சென்று சார்ந்தாள். |
|
உரை
|
|
|
|
|
1036. | திண்ணிலைய மணிக்கதவந் தாழ்திறந்து திருவிளக்குத் திகழ மாட்டி விண்ணியல நறும்புகையுங் காழகிலும் விசும்பிவர்ந்து விம்ம மூட்டிக் கண்ணியுடன் வெறிமலரு நறும்பொடியுங் கமழ்சாந்துங் கையி னேந்திப் பண்ணியல நரம்பிசைமேற் பரமனையே பணிமொழியாள் பரவா நின்றாள். |
|
உரை
|
|
|
|
|
1037. | மணங்கமழுந் தாமரையின் மதுத்திவலை கொப்பளித்து மதர்த்து வாமன் அணங்கிவர்சே வடியினழ கெழிலேரோ ரொளிபருகி யலரும் போலும் அணங்கிவர்சே வடியினழ கெழிலேரோ ரொளிபருகி யலரு மாயின் வணங்கினவ ரொளிவிரிந்து களிசிறந்து மதிமகிழன் மருளோ வன்றே. |
|
உரை
|
|
|
|
|
1038. | அரும்பிவரு மரவிந்த மறிவரன தடிநிழல தடைந்தோ மென்று சுரும்பிவரி யிசைபாடச் செம்மாந்து சுடருமிழ்ந்து துளும்பும் போலும் சுரும்பிவரி யிசைபாடச் செம்மாந்து சுடருமிழ்ந்து துளும்பு மாயின் விரும்பினராய்த் தொழுதெழுவார் மெய்ம்மறப்பு முண்மகிழ்வும் வியப்போ வன்றே. |
|
உரை
|
|
|
|
|
1039. | அழலணங்கு தாமரையா ரருளாழி யுடையகோ னடிக்கீழ்ச் சேர்ந்து நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்றும் போலும் நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்று மாயிற் றொழிலணங்கு மனமுடையார் சூழொளியும் வீழ்களிப்புஞ் சொல்லோ வன்றே. |
|
உரை
|
|
|
|
|
1040. | மணிமரு டிருமொழி வாமன் சேவடி அணிமரு ளுருவுடை யமிர்தின் சாயலாள் பணிமொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள் பிணிமொழி பிறவிநோய் பெயர்க வென்னவே. |
|
உரை
|
|
|
|
|
சயம்பவை நிலாமுற்றத்தை அடைல் | |
1041. | வென்றவன் றிருவடி வணங்கி மெல்லவே சென்றுதன் வளநகர்ச் செம்பொன் மாளிகை நின்றொளி விரிவதோர் நிலவு வேதிகை முன்றின்சென் றெய்தினாண் முகிழ்த்த வேட்கையாள். |
|
உரை
|
|
|
|
|
1042. | செய்யவன் செங்கதிர் சுருக்கச் செக்கர்வான் பையவே கருகலும் பரவை பாற்கதிர் ஐயவே யவிர்கதி ரரும்பு வந்தது வையமே தொழப்படும் வளர்வெண் டிங்களே. |
|
உரை
|
|
|
|
|
1043. | இருங்கயத் தெழின்மலர் நிரந்து மேலதோர் சுருங்கையங் கவிழ்ந்தனெத் தோன்று மீன்குழாம் அரும்பிய பசலைவா னகட்டுத் தாரகை ஒருங்கியன் றொளிநகை யுமிழ நோக்கினாள். |
|
உரை
|
|
|
|
|
1044. | திங்களங் கொழுநனைச் சேர்ந்து தாரகை அங்கொளி முகிழ்நகை யரும்பு மாதலான் மங்கல மணமகன் மணந்த போதலால் எங்குள திளையவர்க் கிளைமை யின்பமே. |
|
உரை
|
|
|
|
|
1045. | என்றுதன் னகம்புடை யியலக் காளையால் ஒன்றிய வுள்ளநோ யொளிக்க லுற்றனள் இன்றிவ ளகத்தது காம நோயெனப் பொன்றவழ் பசலைமெய் புகல லுற்றதே. |
|
உரை
|
|
|
|
|
சயம்பவை நாணும்படி தோழியர் தனித்தனியே கூறுதல் | |
1046. | ஆயின திருவனா ளாயத் தோழியர் வேயெனத் திரண்டதோள் விளங்கு மேனியாள் மேயின குறிப்பினை யறிந்து மெல்லவே பாயின பணிமொழி பலவுங் கூறினார். |
|
உரை
|
|
|
|
|
1047. | விஞ்சைய ருலகினு மினிது வீங்குநீர் மஞ்சிவர் பொழிலணி மண்ணென் றோதினாள் அஞ்சில மொழியவ ளொருத்தி யாங்கயர் பஞ்சிலங் ககலல்குற் பாவை பாங்கினே. |
|
உரை
|
|
|
|
|
1048. | பனிவரைப் பாங்கரும் பருவச் சோலையும் தனியவர்க் கினனனி பயக்குந் தன்மனக் கினியவ ரெவ்வழி யிசைவ ரவ்வழித் துனிவர வில்லென வொருத்தி சொல்லினாள். |
|
உரை
|
|
|
|
|
1049. | காதலார் காதன்மை கலந்து காதலர்க் கேதிலா ரயலரா யியல்ப வாய்விடிற் சாதலும் பிறத்தலு மிலாத தானமும் கோதனெக் கொண்மினென் றொருத்தி கூறினாள். |
|
உரை
|
|
|
|
|
1050. | திணைவிராய்ப் பொய்கையுந் திகிரிப் புள்ளினுக் கிணையிராப் பிரிந்தபி னெரியொ டொக்குமாற் றுணைவராற் றனியவர் திறத்துச் சொல்லினோர் புணைவராம் படியவ ரில்லைப் பொன்னனீர். |
|
உரை
|
|
|
|
|
1051. | முல்லையின் முருகுகொப் புளித்து மூரல்வாய் மல்லிகை யிணர்த்துணர் மயக்கு மாருதத் தெல்லியு மிளம்பிறைக் கதிரு மென்பவான் மெல்லிய லவர்களை மெலிவு செய்யவே. |
|
உரை
|
|
|
|
|
1052. | விரைசெறி புரிகுழல் வேற்க ணங்கைதன் புரைசெறி கடிவினை நாளைப் போழ்தனெ முரைசெறி யிமிழிசை முழங்கக் கேட்டனன் உரைசெறி மறுகிலென் றொருத்தி கூறினாள். |
|
உரை
|
|
|
|
|
1053. | நாளைநா ளென்பது நனித்துஞ் சேய்த்தனெ வாளையா நெடுங்கணீர் மயங்கி யென்னையிக் கோளையாம் விசும்பிடைக் குளிர்வெண் டிங்களார் தாளையாம் வணங்குபு தாழ்ந்து கேட்டுமே. |
|
உரை
|
|
|
|
|
1054. | காமனுங் கணைப்பயன் கொண்டு கண்களால் நாமுநன் னல்வினை நுகரு நாளவாய் யாமமிங் கொருங்குட னகல வென்று போய் வாமன்ற னகருழை வரங்கொள் வாங்கொலோ. |
|
உரை
|
|
|
|
|
1055. | இன்னன நகைமொழி யின்பக் கோட்டியோ டன்னமென் னடையவ ளமர வாயிடை மன்னவற் கேழிசைத் தெழுந்த தூரியம் கன்னியுங் கடிகம ழமளி யேறினாள். |
|
உரை
|
|
|
|
|
1056. | மல்லிகை மணங்கமழ் மாலை போகலும் பல்லிய மவிந்தன பரந்த பாற்கதிர் மெல்லவே மெல்லவே சுருங்கி வீங்குநீர் எல்லைசென் றொளித்ததவ் விளவெண் டிங்களே. |
|
உரை
|
|
|
|
|
1057. | நல்வினை கழிதலு நலியுந் தீவினை செல்வதே போலிருள் செறிந்து சூழ்ந்தது பல்வினை மடிந்தன படர்ந்த தாயிடை வல்வினைக் கயவரே வழங்குங் கங்குலே. |
|
உரை
|
|
|
|
|
1058. | மாடவாய்ச் சுடரொளி மழுங்கி மங்கையர் ஆடுவார் முழவங்கண் ணயர்ந்த யாழொடு பாடுவார் பாணியுஞ் சுருங்கி நன்னகர் ஆடுநீர்க் கடற்றிரை யவிந்த தொத்ததே. |
|
உரை
|
|
|
|
|
1059. | மடந்தையர் முலைமுக மடுத்த மார்பினர் அடைந்துதே னுறங்கிய வலங்கன் மாலையார் மிடைந்ததோ டழூஉப்பிணை நெகிழ மெல்லவே இடங்கழித் தொழிலொழிந் திளையர் துஞ்சினார். |
|
உரை
|
|
|
|
|
1060. | மதுக்கடை நறும்பிழித் திவலை நாவளைத் தொதுக்கமும் வெறியயர் களனு மூடுலாய்ச் செதுக்கமும் பலிபெறு தெருவுந் தேர்ந்துபோய்க் கதுப்புகுந் துறங்குபு கழுதுஞ் சோர்ந்தவே. |
|
உரை
|
|
|
|
|
1061. | இடஞ்சிறை யிளம்பெடைக் கீந்து பார்ப்பின்மேற் றடஞ்சிறை வலத்தது கோலித் தாந்தம தொடுங்குதாண் முடங்கவைத் துறங்கு கின்றன புடங்கொள்பூம் பொழிலிடைப் புள்ளின் சேவலே. |
|
உரை
|
|
|
|
|
1062. | கனைந்ததங் காதலி்ற் கனவிக் கண்டிறந் தினைந்தபோன் றிடையிடை நோக்கி யின்குரல் புனைந்தகம் புணர்பெடை புல்லி மெல்லவே அனந்தருண் முரன்றன வன்றிற் சேவலே. |
|
உரை
|
|
|
|
|
1063. | மன்னிய மணித்தடத் தாம்பல் வாய்குடைந் தின்னியன் மாருத மியங்குங் கங்குல்வாய்க் கன்னியுங் காளையு மொழியக் காரிரு டுன்னிய வுலகெலாந் துயில்கொண் டிட்டதே. |
|
உரை
|
|
|
|
|
1064. | நள்ளிரு ளிடையது நடப்ப வைகறை புள்ளிமி ழிசையொடு புகுந்து போம்வழித் தெள்ளிய மதியவன் செய்த தீமைபோன் மெள்ளவே கனையிருண் மெலிவு சென்றதே. |
|
உரை
|
|
|
|
|
1065. | கிளர்த்தன கிலுகிலுப் பரவப் புட்குழாம் வளர்த்தன மகரயாழ் மருளி யின்னிசை தளர்த்தன கருங்கடற் றரங்கத் தன்னமே விளர்த்தது குணதிசை வேலை வட்டமே. |
|
உரை
|
|
|
|
|
1066. | ஆணைசெய் தரசுவீற் றிருப்ப வாயிடைக் கோணைசெய் குறும்புகூர் மடங்கு மாறுபோற் சேணுயர் திகிரியான் கதிர்சென் றூன்றலும் பாணியாற் கரந்தன பரந்த சோதியே. |
|
உரை
|
|
|
|
|
1067. | விளித்தன புலரிவெண் சங்கம் வேரியாற் களித்தன கயமலர்த் தொழுதி யம்மலர் ஒளித்துமுன் னுறங்கிய வொலிவண் டார்த்தன தெளித்தது செறிபொழிற் றேம்பெய் மாரியே. |
|
உரை
|
|
|
|
|
1068. | தூண்டிய சுடர்விளக் கன்ன கன்னியோ டாண்டகை யழல்வலஞ் செய்யு மாரணி காண்டகை யுடைத்தது காண்டு நாமென ஈண்டிய கதிரவ னுதய மேறினான். |
|
உரை
|
|
|
|
|
1069. | உருகின பனிபொதி பாறை யுக்கநீர் பருகின பகலவன் பரவை வெங்கதிர் கருகின கயம்வள ராம்பல் கண்கொளப் பெருகின திசைமுகம் பெயர்ந்த தொத்தவே. |
|
உரை
|
|
|
|
|
1070. | நிறைந்தார் கடிநல் வினைநீ தியினால் அறைந்தாங் கதுசென் றதுசென் றவகை சிறந்தா ளொடுகா ளைதிறத் துரையா மறந்தா மதுவல் லவர்சொல் லுகவே. |
|
உரை
|
|
|
|
|
1071. | குருமா மணிவேய் குடைமும் மையுடைப் பெருமா னடிபே ணியபூ சனைநாள் கருமால் களியா னைகண்மேற் கனபொன் அருமா முரசார்ப் பவறைந் தனரே. |
|
உரை
|
|
|
|
|
1072. | முரசும் முழவின் குழுவும் முடிசேர் அரசன் னகரின் குழுவுங் கெழுமி விரையும் புகையும் மலரும் பலியின் இரையுந் நெடுவீ திநிறைத் தனவே. |
|
உரை
|
|
|
|
|
1073. | பிடியுங் களிறும் பிறவுந் நெரிவுற் றடியும் மிடலா மிடமின் றிலகும் கொடியுங் குடையுங் குளிர்சா மரமும் முடியின் சுடரும் மிசைமூ டினவே. |
|
உரை
|
|
|
|
|
1074. | வழுவின் னெறிவா மனமா நகர்வாய் விழவின் னணமா கவிதித் தனராய்க் கழுவும் மணிபோல் பவடன் கடிநாள் எழுவும் முரசெங் குமியம் பினவே. |
|
உரை
|
|
|
|
|
1075. | நடைமா லைநடந் ததுநந் திமுகம் புடைமா லைபுகுந் தனர்புண் ணியநீர் இடைமா லைநிகழ்ந் ததொரேத் தரவம் கடைமா லைநிகழ்ந் ததுகாப் பணியே. |
|
உரை
|
|
|
|
|
1076. | திரைசங் கொலியோ டுசிறந் தனபோன் முரைசங் கொலியோ டுமுழங் கியெழ உரைசங் கொலியோ டுணரா வகையால் அரைசங் கொலியோ டெழுவார்த் தனவே. |
|
உரை
|
|
|
|
|
1077. | துணிமுத் தநகைத் துவர்வா யிளையார் கணிமுத் தணிசிந் தியகண் விரவி மணிமுத் தமணற் றிடலா கிமறைத் தணிமுத் துமிழ்வீ தியடுக் குநவே. |
|
உரை
|
|
|
|
|
1078. | துகிலார் கொடிபொங் கினதொங் கனிமிர்ந் தகிலார் புகையா வியடுத் தமையாற் பகலா னொடுவந் திரவும் பகலே இகலா துடனா கியியைந் துளவே. |
|
உரை
|
|
|
|
|
1079. | பலர்மன் னியபா டலுமா டலுமே வலமன் னிமயங் கிமுயங் குதலால் நிலமன் னவருந் நெடுமால் வரைமேற் குலமன் னவருங் குளிர்தூங் கினரே. |
|
உரை
|
|
|
|
|
1080. | அகல்வா னிடையங் கிழிவா னவரும் முகிலா றிழிவிஞ் சையரும் முடுகி்ப் பகலா னொடுதா ரைபரந் தனபோற் புகலா ரொளிபோந் ததுபொன் னகரே. |
|
உரை
|
|
|
|
|
1081. | வடமே ருமுகட் டலரும் மலரும் புடமே ருகலத் தலரும் மலருந் தடமே ருளபொன் னவிழ்தா மரையும் திடமே வியவிஞ் சையர்சிந் தினரே. |
|
உரை
|
|
|
|
|
1082. | அணிவேண் டினர்கொள் ளவடுத் தனவும் மணிவேண் டினர்கொள் ளவகுத் தனவும் கணிவேண் டினநாள் கழியுந் துணையும் பணிவேண் டினர்வீ திபரந் தனவே. |
|
உரை
|
|
|
|
|
1083. | நறவுண் டொருபா னகுவா ரொருபாற் புறவுண் டகலா வமிர்தம் புணர்வார் உறவுண் டமரத் தொருபா லுறைவார் பிறவுண் டையுமின் னனபின் னினவே. |
|
உரை
|
|
|
|
|
1084. | இழிகின் றனர்விஞ் சையரெத் திசையும் பொழிகின் றதுபொன் மழையும் மழையுட் சுழிகின் றதுதொல் சனவெள் ளமதற் கொழிகின் றதுநா முரையா ததுவே. |
|
உரை
|
|
|
|
|
1085. | தாமரை முகத்தம னியக்குட மவற்றாற் சாமரை முகத்தன மதக்களிறு தம்மேற் பூமரை முகத்தெறி புனற்றிரை முகந்து தூமரை முகத்தரசர் சென்றுபலர் சூழ்ந்தார். |
|
உரை
|
|
|
|
|
1086. | வண்டுபடு மாலையர் மடப்பிடிக டம்மேன் கொண்டய லுழைக்கல மழைக்கண்மட வார்கள் எண்டிசையு மெங்குமிட மின்றிமிடை வுற்றார் கண்டவரை மேல்விரவு கார்மயிலொ டொத்தார். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் மணவறைக்கு வருகை | |
1087. | மாளிகை நிரைத்த மணி மாடநகர் முன்னால் ஆளியர சேந்துமணி யாசன மதன்மேற் காளைகழல் வேந்தர்பலர் சூழ்தர விருந்தான் நாளொடு பொலிந்தநகை மாமதிய மொத்தான். |
|
உரை
|
|
|
|
|
1088. | அங்கண யிராவண மிரண்டுட னெடுத்த மங்கல மணிக்கலச நீர்சொரிய வாடிப் பொங்குதிரை யொன்றிரு புயற்பொழிய வேந்தித் தங்குபுனல் பெய்ததட மால்வரையொ டொத்தான். |
|
உரை
|
|
|
|
|
1089. | மன்னர்கள் சொரிந்தமணி நீரருவி யாடிப் பின்னைமலர் மாரியகல் வானினவர் பெய்ய மின்னவிர் விளங்குசுடர் வேல்விடலை யாடிப் பொன்னணி புனைந்துபுது வேள்விநகர் புக்கான். |
|
உரை
|
|
|
|
|
1090. | மங்குன்மழை சூழுமணி மால்வரையின் மேலார் கங்கைமுத னீரருவி கொண்டுகலி வானம் எங்குமிட மின்றியெழில் விஞ்சைய ரிழிந்தார் நங்கைமண நீரணியை நாமொழிவ தென்னோ? |
|
உரை
|
|
|
|
|
1091. | ஆறுகுல மால்வரையின் மேலருவி நீரும் வீறுபெறு மெல்லியலை யாட்டியபின் மீட்டு நாறுமலர் நந்தன வனத்தனவொ டெல்லா வேறுபடு பூமழையு மாடவிளை வித்தார். |
|
உரை
|
|
|
|
|
1092. | சாந்துசொரி மாரிபொழி கின்றதகை யோடும் தேந்துவலை வீசியுளர் கின்றதொரு தென்றல் வேந்தருல கோபிறிதொ ரூழிகொலி தென்று மாந்தர்மருள் வாருமகிழ் வாருமுள ரானார். |
|
உரை
|
|
|
|
|
1093. | மங்கல வனப்பினதொர் கோடிமடி தாங்கி அங்கொலி விசும்பினவர் தந்தவணி சேர்த்திப் பங்கய முகத்தவர் பலாண்டிசை பராவச் செங்கய னெடுங்கணவள் வேள்விநகர் சேர்ந்தாள். |
|
உரை
|
|
|
|
|
1094. | நங்கைமண வேள்விநக ரெய்துவதன் முன்னைப் பொங்குபுரி நூலனலர் தாமரை புனைந்தான் மங்கல வுழைக்கல நிரைத்தமண மாடம் அங்கது புகுந்தழல் வளர்க்கிய வமைந்தார். |
|
உரை
|
|
|
|
|
1095. | சாந்துமெழு கிட்டதட மாமணி நிலத்தைச் சேர்ந்துதிகழ் பொன்னியல் சலாகைநுதி தீட்டிப் பேர்ந்துமொரு கால் விரையி னான்மெழுகு வித்தான் ஆய்ந்தமறை யோதியத னாரிட மறிந்தான். |
|
உரை
|
|
|
|
|
1096. | பருத்தமணி முத்தமண லாற்சதுர மாகத் திருத்தியொரு பால்பணிய வைத்ததிடர் சூழத் தருப்பையி னுனித்தலை வடக்கொடு கிழக்காய்ப் பரப்பின னதற்குமொரு பாவனை பயின்றான். |
|
உரை
|
|
|
|
|
1097. | நான்முகன் வலத்தவ னிடத்துமொரு காவல் மேன்முக மிருந்துகுண பால்வெறுவி தாகப் பான்முறை பயின்றபரு திக்கடிகை பாய்த்தித் தான்முறையி னோதுசமி தைத்தொழுதி சார்ந்தான். |
|
உரை
|
|
|
|
|
முகூர்த்தகாலத்தில் பலரும் வருதல் | |
1098. | ஆயிடை நடுக்கட லுளானமர ராசான் ஏயுடைய னாயசுர மந்திரி யெழுந்தான் போயுடை விசும்பின்மதி யும்புகுது கின்றான் மேயுடை யணிந்தகணி வேலையிது வென்றான். |
|
உரை
|
|
|
|
|
1099. | அங்குமுன் வளர்த்தவழ லேகடவு ளாக மங்கையை மணக்குழுவின் முன்னைவரை வேந்தன் கொங்குவிரி தாரவற்கு நீரொடு கொடுத்தான் நங்கையொடு நாண்மலரு ளாளையு மடுத்தான். |
|
உரை
|
|
|
|
|
1100. | மன்னியழல் வேள்வியி லவற்குவல மாகப் பின்னிய தருப்பைகள் பிடித்தவை விடுத்தாங் கன்னமனை யாளொடயில் வேலவ னிருந்தான் கன்னியொ டியைந்தகதிர் மாமதிய மொத்தான். |
|
உரை
|
|
|
|
|
1101. | கந்துளுமி ழுங்கரிய சூழ்புகைகள் விம்ம வந்துசுட ரேந்திவல னேசுழல மாட்டி அந்தணனு மங்கழ லமைத்துமிக வேட்டான் மைந்தனு மடந்தையை மனத்தின்மிக வேட்டான். |
|
உரை
|
|
|
|
|
1102. | பொங்கழல்செய் வேள்விமுறை போற்றலு மெழுந்தான் அங்கையி னணங்கினணி மெல்விரல் பிடித்து மங்கையொடு காளைவல னாகவரு கின்றான் கங்கையொடி யைந்துவருகார்க் கடலொடொத்தான். |
|
உரை
|
|
|
|
|
1103. | கைம்மலரின் வீரனவள் கைமுகிழ் பிடிப்ப மெய்ம்மயி ரெறிந்துமணி வேர்நுத லரும்பிச் செய்யதன சீறடிகள் செவ்வனிட மாட்டா அம்மயிலி னாணதனை யாவரறை கிற்பார். |
|
உரை
|
|
|
|
|
1104. | பின்னுமுள வேள்விமுறை சென்றபல பேசி என்னையவை நிற்கவெரி யோம்புதொழி லார்க்குப் பொன்னொடு மணிக்குவியல் போந்துபொழி கின்றார் கன்னிதமர் காளைதம ரென்றிவர் கலந்தே. |
|
உரை
|
|
|
|
|
1105. | அங்கமிரு மூன்றுமறை நான்கலகில் கற்பம் இங்குமுடி விஞ்சையென வின்னகரை கண்ட பொங்கெரிய வேள்விவல்பு ரோகித னவற்குச் சங்கநிதி யென்னநெதி மாரிதரு வித்தார். |
|
உரை
|
|
|
|
|
1106. | வானநெறி யெங்கும்வளர் சோதிவட மீனைக் கானமயி லன்னவடன் முன்னைநனி காட்ட யானுமிவள் போலுலகு காணவியல் வேனோ ஈனமொடு நாணமில னோவென விகழ்ந்தாள். |
|
உரை
|
|
|
|
|
வேறு வந்தவர் பாராட்டிச் செல்லல் | |
1107. | எனமண வினைகள் செல்ல வின்னண மெய்து கென்று புனவரை கான முன்னி மாதவம் போகு வாரும் இனமலி செல்வ மற்று மிப்படி வருவ துண்டோ கனவினு மென்ன மாந்தர் கண்டுமீள் வாரு மானார். |
|
உரை
|
|
|
|
|
1108. | இடிபடு முரசிற் சாற்றி யேற்பவ ராசை தீரச் சுடர்விடு மணியின் மாரி பொன்னொடு சொரிய வேவிக் கடிபடு நெடிய மாடங் கன்னியோ டேறி னானால் முடிவுகொ ளுலக மெய்து மின்பமா மூர்த்தி யென்பான். |
|
உரை
|
|
|
|
|
1109. | கழுமிய காக துண்டங் கமழ்தொறுங் காள மேகம் குழுமிய தனைய மாடக் குவட்டிடை யமளி சேர்வார் விழுமலர்ப் பிணைய லாளும் விடலையு மேரு நெற்றிச் செழுமணிச் சிலைசென் றேறுந் தெய்வமா மிதுன மொத்தார். |
|
உரை
|
|
|
|
|
1110. | பொன்னியல் கொடியி னொல்கிப் பூவணைப் பொருந்தும் பாவை கன்னிநா ணொடுக்கங் காளை கண்களி கொள்ள நோக்கிப் பின்னவ ளொடுங்க வாங்கி்ப் பெருவரை யகலஞ் சேர்த்தி இன்னகை மழலை கேட்பா னென்கொலோ வென்று சொன்னான். |
|
உரை
|
|
|
|
|
1111. | நின்றநா ணென்னுங் கன்னிச் சிறைவிண்டு காளை திண்டோட் குன்றினாற் செறிக்கப் பட்ட குமரிநீ ரமிர்த யாறு சென்றுதேன் பகர்ந்து செம்பொற் கலஞ்சிந்தித் திளைத்து விம்மி அன்றவ னார்வ வெள்ளக் கடலிடை யழுந்திற் றன்றே. |
|
உரை
|
|
|
|
|
1112. | பருவத்தா லரும்பிப் போதாய்ப் பையவே யலர்ந்து முற்றி மருவித்தேங் கனிகொண் டுள்ளான் மனங்கொள வளிந்த காமத் திருவொத்த களியின் றீஞ்சா றாரவுண் டார மாட்டார் உருவத்தா லிருவ ராகி யுள்ளத்தா லொருவ ரானார். |
|
உரை
|
|
|
|
|
1113. | உலவிய வலங்கன் மாலை யொளிமல ருடைய மார்பிற் குலவிய மணிமுத் தோடுங் குவிமுலைக் குவடு பாயக் கலவியுங் களிப்புங் காமப் புலவியுங் கலந்து சால நிலவிய மதுவுண் டார்போ னெஞ்சுண மயங்கி யிட்டார். |
|
உரை
|
|
|
|
|
1114. | அடிக்கலந் திருத்தி யம்மென் புரிகுழற் சுருளை நீவி முடிக்கல ரணிந்து காதன் முகிழ்நகை முகிழ்ப்பப் புல்லிக் கடிக்கணி யாய காளை கவான்மிசை யிருத்திக் காமர் குடிக்கணி யாய கொம்பு கேட்கமற் றிதனைச் சொன்னான். |
|
உரை
|
|
|
|
|
வேறு திவிட்டன் சயம்பவையின் நலம்பாராட்டல் | |
1115. | செங்குவளை நாறுந் திருமேனி செவ்வாயும் அங்குவளை யீரிதழு மாம்பலுமே நாறுமால் இங்கிவளை முன்படைத்த தேவனென் னின்னுயிரைப் பைங்குவளை மாலையாட் காளாய்ப் படைத்தானே. |
|
உரை
|
|
|
|
|
1116. | அன்புருகு காமத் தீமாட்டி யளியவென் என்புருக வேவ விணைநெடுங்கட் பூம்பாவை முன்பெருகு முந்நீ ரமுதாய் விளைத்தினிய மின்பருகு நுண்ணிடையார் மெல்லுருவங்கொண்டதே. |
|
உரை
|
|
|
|
|
1117. | பான னெடுங்க ணிவையே பகழியா வேனலுடை வேந்தன் வென்றிக்கு நோற்றானே யானு மளியற்றே னித்துணையோர் காலமும் தேனார் நறுமேனி தீண்டுதற்கு நோற்றேனே. |
|
உரை
|
|
|
|
|
1118. | காவியா கின்ற கருமா மழைக்கண்ணி மேவியா னுண்ணு மமிர்தாய் விருந்தாகி ஆவியா கின்றா ளருமருந்து மாகின்றாள் பாவியேன் பாவைக்கோ ராளேயா கின்றேனே. |
|
உரை
|
|
|
|
|
1119. | செம்பவழ மேய்ப்பத் திகழ்ந்திலங்கு சீறடியின் வம்பழகு நோக்கி வழிபடுவ தேசாலும் அம்பவழ வாயு மளகஞ்சேர் வாணுதலும் எம்பவமோ நுங்க யாமெம்மை யறியேமே. |
|
உரை
|
|
|
|
|
1120. | வண்டே மடந்தை மணியைம்பான் மேவியிருந் துண்டே யெனநுடங்கு நுண்மருங்கு நோவியீர் தண்டேன் காணீருந் தளிர்மேனி நாற்றத்தாற் பண்டேபோல் வந்து பயிலாது போமினே. |
|
உரை
|
|
|
|
|
1121. | கள்ள மடநோக்கி தன்னைக் கரந்தனெ துள்ளத்தின் வைப்பி னுருவ மதுகாணேன் மெள்ளவென் றோளணைவா ளென்னும் விருப்பாரா தெள்ளு மனத்தினுக் கெய்திற் றறியேனே. |
|
உரை
|
|
|
|
|
1122. | காதலால் வந்தென் கவான்மே லிருப்பினும் ஏதிலாள் போலு மிமைப்பி னிமையாதே போதுலாம் வாண்முகமே நோக்கிப் பொலிவேனென் மாதரா ணாணும்யான் வாழுமா றோரேனே. |
|
உரை
|
|
|
|
|
1123. | உலம்பா ராட்டுந் தோளவ னொண்பூங் குழலாளை நலம்பா ராட்டி நாகிள முல்லை நகுவிக்கும் வலம்பா ராட்டி வந்ததொர்மா ரிப்புய லொத்தான் குலம்பா ராட்டுங் கொம்புமொர் முல்லைக் கொடி யொத்தாள். |
|
உரை
|
|
|
|
|
1124. | தேனார் கோதைச் செங்கயல் வாட்கண் சிறைகொள்ள ஊனார் வேலா னுள்ள மிழந்தா னுழையாரை மேனாள் போல மெய்ப்பட மாட்டான் விளையாடும் கானார் சோலைக் காவகப் புக்கான் கமழ் தாரான். |
|
உரை
|
|
|
|
|
1125. | தண்டாரீன்று செந்தளி ரேந்தித் தழல்பூத்த வண்டார் பிண்டி வார்தளிர் நீழன் மணிவட்டங் கண்டாங் கேறிக் காரிகையோடு விளையாடிப் பண்டான் கொண்ட பாவையார் பாடலிசை கேட்டான். |
|
உரை
|
|
|
|
|
1126. | வரைவேந்தன் மடமகளை மணியேர் மேனிநிறங் கொண்டு விரையேந்து தளிரீனல் விழையாய் வாழி தேமாவே விரையேந்து தளிரீனில் வேனிற் றென்ற லலர்தூற்ற நிரையேந்து வடுநீயே படுதி வாழி தேமாவே. |
|
உரை
|
|
|
|
|
1127. | அடிமருங்கி னரசிறைஞ்ச வாழியாள்வான் பெருந்தேவி கொடிமருங்கி னெழில்கொண்டுகு ழையல்வாழி குருக்கத்தி கொடிமருங்கி னெழில்கொண்டு குழைவா யாயிற் பலர்பறிப்பக் கடிமருங்கிற் புக்கலரே காண்டி வாழி குருக்கத்தி. |
|
உரை
|
|
|
|
|
1128. | வணங்கி வையந் தொழநின்ற மன்னன் காதன் மடமகள்போல் மணங்க ணாறும் பூம்பாவை வளரல் வாழி நறுங்குரவே மணங்க ணாறும் பூம்பாவை வளர்த்தி யாயி லிளையராற் கணங்க ளோடு பறிப்புண்டி கண்டாய் வாழி நறுங்குரவே. |
|
உரை
|
|
|
|
|
1129. | இன்னண மிளையவர் பாடக் கேட்டலும் மன்னவன் மடமகண் முகத்து வாணிலா மின்னியோ ரணிநகை முகிழ்த்து மீள்வது கன்னவி றோளவன் கண்கொண் டிட்டவே. |
|
உரை
|
|
|
|
|
1130. | உழையவ ரடிமுதல் பரவ வொண்சுடர்க் குழையவ ளொளிமனங் கவரக் கோடுயர் மழைதவழ் மதலைய மாட மேறினான் முழையம ரரியர சனைய மொய்ம்பினான். |
|
உரை
|
|
|
|