தொடக்கம் |
|
|
1131. | நாவியே கமழுந் தொங்க னகைமணி வயிரப் பூணான் ஆவியி னகத்து ளாளு மருவரை யகலத் தாளுந் தேவியே யாக வன்ன திருவொடு மிருவ ராவான் பூவினுண் மடந்தை வந்து புகுந்தவா றுரைக்க லுற்றேன். |
|
உரை
|
|
|
|
|
1132. | கண்மிசை கனிந்த ஒற்றன்கூற்று காதற் களிப்படு செல்வ முந்நீர் உண்மிசை யுக்கோர் நச்சுத் துள்ளிவந் துறைப்ப தேபோல் விண்மிசை யிழிந்து வந்த வொற்றனோர் வெஞ்சொன் மாற்ற மண்மிசை யிருந்த விஞ்சை மன்னனை வணங்கிச் சொன்னான். |
|
உரை
|
|
|
|
|
1133. | விரைசெல லிவுளித் தேரோய் விஞ்சைய ருலக மாளும் அரைசர்க டிகிரி யாளும் அச்சுவ கண்ட னோடும் திரைசெல வுரறி ஞாலந் தின்னிய கடல்க ளேழுங் கரைசெல வருவ போனம் மேல்வரக் கருது கின்றார். |
|
உரை
|
|
|
|
|
1134. | அரைசர்கள் வருக போக வதுபண்டே யறிந்து தன்றே வரைசெறி சிங்க வேறு மணிவண்ண னழித்த ஞான்றே விரைசெறி பொழில்கொள் சோலை விஞ்சைய ருலகிற் பட்ட துரைசிறி தென்ன லோடு மொற்றனு முரைக்க லுற்றான். |
|
உரை
|
|
|
|
|
1135. | அருளுமா றடிகள் கேண்மோ வரியர சதனை யாரு மருளுமா றிளைய காளை வாய்பிளந் திட்ட வார்த்தை தெருளுமா றொருவன் சொல்லக் கேட்டலுஞ் சேணில் வாழ்வார் வெருளுமா றுள்ள மெல்லாம் வெருண்டுமெய் விதலை கொண்டார். |
|
உரை
|
|
|
|
|
1136. | விஞ்சைய ருலக மெல்லாம் வெய்துற விரிந்த மாற்றம் அஞ்சினன் மறைத்துச் சின்னா ளமைச்சரி மஞ்சு வென்பான் வஞ்சனைச் சீய மாய வார்கழ லவனைக் கூவி எஞ்சலில் புகழி னானுக் கின்னண மிசைப்பித் தானே. |
|
உரை
|
|
|
|
|
1137. | சொரிகதிர் வயிரப் பைம்பூ ணரசர்கள் பலருஞ் சூழ எரிகதி ராழி யாள்வா னினிதினங் கிருந்த போழ்தின் அரியது கேட்க வென்ன வரிகேது வென்பா னாங்குப் பெரியதோர் வியப்புச் சென்று பட்டது பேசி னானால். |
|
உரை
|
|
|
|
|
அச்சுவகண்டன் சினங்கொள்ளல் | |
1138. | கரியவன் வளைந்த வெள்ளை யெயிற்றவன் காள மேகம் பெரியதொன் றிரண்டு கொம்மைப் பிறைகல்வி யிருந்த தொப்பான் அரியதங் கென்னை யென்னை யெனவரி கேது சொன்ன உரையெதிர் கபில வட்டக் கண்ணெரி யுமிழ்வித் திட்டான். |
|
உரை
|
|
|
|
|
1139. | மடித்தவா யெயிறு கவ்வி மருங்கினோர் வயிரக் கற்றூண் அடித்தலி னசனி வீழ வருவரை நெரிவ தேபோற் படித்தலை நடுங்க மற்றப் பரூஉத்திரள் வயிரத் தம்பந் தொடித்தலை சிதைந்து நுங்கத் துகளெழுந் தொழிந்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
அரிகேதுவை அச்சுவகண்டன் இகழ்தல் | |
1140. | விஞ்சைய ரதனைக் கண்டு மெய்பொதி ரெறிந்து விம்ம வெஞ்சினங் கனன்று மீட்டும் விஞ்சைய னவனை நோக்கி வஞ்சனை மனத்த ராய மனிசரை வலிய ரென்பாய் அஞ்சினை பெரிது மேடா வென்றன னசனி யொப்பான். |
|
உரை
|
|
|
|
|
1141. | நிலத்திடை மக்க ளாற்ற னின்னைப்போ லஞ்சு வார்க்கு மலைத்துணை பெருகிக் காட்டு மற்றதிங் கெம்ம னோர்க்கோர் இலைத்தது மில்லை மன்னோ வென்றன் னிரண்டு திங்கள் பிலத்திடை பொடித்த போலும் பிறழ்ந்திலங் கெயிற்றி னானே. |
|
உரை
|
|
|
|
|
1142. | கனைகதிர்க் கடகக் கையாற் கற்றிர ளுதிர வெற்றிச் சினவழ லெறிப்ப நோக்கிச் சிவந்தனன் றெழித்த லோடு மனநனி மயங்கி மற்ற விஞ்சைய ரஞ்ச நின்ற நனைமல ரலங்கற் கேது நகைகொண்ட மனத்த னானான். |
|
உரை
|
|
|
|
|
1143. | அடுகுர லரச சீய மதனையோ ராம்பற் றாள்போல் நொடிவரை யளவிற் கீறி நுனித்தது வியத்தல் செய்யாக் கடிவரை யலங்கன் மார்பிற் காளையே பெரிய னென்று தடவரை யனைய தோளான் றன்னுளே வியந்து நின்றான். |
|
உரை
|
|
|
|
|
1144. | இன்றிவ னனலும் போழ்தி னெதிர்நின்று கனற்றி யென்னை சென்றவ னாற்ற றானே கண்டபின் றேறு மன்னறே என்றுதன் மனத்தி லெண்ணி யியைந்தவா முகமன் சொல்லிக் குன்றுடை யரசன் முன்னைக் கூப்பிய கைய னானான். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டனைக் கட்டிக் கொணருங்கள் என்ற அச்சுவக்கிரீவன் கட்டளையிடுமளவில்ஒருவன் வந்து சயம்பவையின் திருமணச் செய்தியைக் கூறியது | |
1145. | அமர்நனி தொடங்கு மேனும் ஆர்த்துநீர் கொணர்மி னென்று குமரனைக் குறித்த வெஞ்சொற் குறைசென்று முடியுமெல்லைத் தமருளங் கொருவன் வந்து சக்கிர வாளந் தன்னுள் நமரது நிலையு நங்கை போந்தது நடுங்கச் சொன்னான். |
|
உரை
|
|
|
|
|
அச்சுவகண்டன் மேன்மேலும் சினங்கொள்ளல் | |
1146. | அடிகளிவ் வவனி தன்மே லிழிந்தது மணங்கோ டொப்பாள் கடிவினை நிலையு மன்றே கண்டுவந் தொருவன் கூறச் சுடுசொலிஃ தொழிக வென்று துணைச்செவி புதைத்து வல்லே முடிமுத றுளங்கத் தூக்கி முனிவினை முடிவு கொண்டான். |
|
உரை
|
|
|
|
|
1147. | பெருகினான் வெகுளி கண்ணுட் பிறந்தது பிறங்கு செந்தீ உருகினான் போன்று தோன்ற மயிர்த்துளை யுகுத்த தெண்ணீர் திருகினா னெயிறு செவ்வாய் கறித்தனன் றிசைக ளோடும் அருகினோர் நடுங்க நோக்கி யழனகை டுத்து நின்றான். |
|
உரை
|
|
|
|
|
1148. | மலைகளை மறித்து மற்றோர் மறிகட னடுவ ணிட்டவ் வலைதிரை மகர முந்நீ ரதுவிது வாக்கு வேன்கொல் உலகினை யுள்ளங் கைக்கொண் டுருளையா வுருட்டி யிட்டென் பலபுனை மடந்தை தன்கீழ்ப் பதித்திடு வேன்கொ லென்றான். |
|
உரை
|
|
|
|
|
அச்சுவக்கிரீவன் அரசர் பலரை வருவித்தல் | |
1149. | அனன்றனன் றவைகள் பேசி யமையுமவ் வரசர் தீமை மனங்கொளப் படுவதாயின் மணிவரை யுலகின் வாழுஞ் சனங்களைத் திரட்டிப் பின்னைத் தக்கதொன் றறிவ னென்றான் சினங்கெழு காலன் மற்றோர் காலன்மேற் சிவந்த தொப்பான். |
|
உரை
|
|
|
|
|
1150. | சிறந்தெரி யனலோ டொப்பான் பணிகொண்டு திசைக ளோடி அறைந்தனர் முரசிற் சாற்றி யறைதலு மரச ரெல்லாம் மறைந்தன வுலக மென்ன மாய்ந்தன திசைக ளென்னப் பறந்தனர் விசும்பு போர்ப்பக் கடற்படை பரப்பி வந்தார். |
|
உரை
|
|
|
|
|
1151. | மற்றவ ரடைந்து வெய்யோன் மலரடி வணங்கி நின்று செற்றவ னிருந்த வாறுஞ் செங்கண்டீ யுமிழ்ந்த வாறும் எற்றிய வயிரத் திண்டூ ணெரிந்திடை கிடந்த வாறும் உற்றன பிறவு நோக்கி யுள்ளங்க ணடுங்கி யிட்டார். |
|
உரை
|
|
|
|
|
1152. | சுரியுளைத் துளைக ளாவி விடுகின்ற சுழலுஞ் செங்கண் கருமுகி னுடங்கு மின்போற் புருவங்கண் முரிந்து நீங்கான் பெரியதோர் முனிவு கொண்டான் பிறையெயிற் றரியோ டொப்பான் எரியினுள் விளிய லுற்றார் யார்கொலோ வளிய ரென்பார். |
|
உரை
|
|
|
|
|
1153. | ஞாலமேற் றிரிந்து நாளு முயிர்களை நடுங்கப் பார்க்குங் காலனைக் கதம்பட் டான்கொ லன்றெனிற் கற்ப மாள்வார் மேலெனக் கிருப்பார் போலு மெனவெகுண் டனல்கின் றான்கொல் வேலைநீ ருலகின் மற்றிவ் வெகுளிக்கு முதலென் னென்பார். |
|
உரை
|
|
|
|
|
1154. | ஊழிகள் பெயர்க்க லுற்றிவ் வுலகினைப் பிறிதொன் றாக்கி் வாழுயி ரொருங்கு வாரி மறிகட னடுவட் பெய்வான் சூழிய தொடங்கு கின்ற தாங்கொலோ சொல்லி னீடொன் றாழியான் வெகுளிக் குண்டோ யாரிரை யாவ தென்பார். |
|
உரை
|
|
|
|
|
1155. | தானவ ரரக்கர் பண்டே தஞ்சமா மிவற்கு மண்மேல் ஊனவர் மனித்த ரேக வுவனுக்கோர் துகளு மாகார் வானவ ரிவற்கு மாறாய் வருபவர் மதிப்பி னில்லை ஏனவர் முனிவு செய்வார் யார்பிற ருரைமி னென்பார். |
|
உரை
|
|
|
|
|
1156. | இற்றதிவ் வுலக மென்பா ரெரிந்தன திசைக ளென்பார் அற்றன மகர முந்நீ ரகம்புலர்ந் தொழியு மென்பார் மற்றினி மொழியல் வேண்டா வருவன வறிய லாகா உற்றபி னறிது மென்றாங் குரையொழி வாரு மானார். |
|
உரை
|
|
|
|
|
1157. | அச்சமோ டுலக மின்றே யவிந்தன போன்று மென்பார் நச்செரி நகையி னாலே நடுங்கின திசைக ளென்பார் இச்சைகள் பிறந்த வாற்றா லினையன நினையும் போழ்தி்ற் கச்சையங் களிநல் யானைக் காவலன் கனன்று சொன்னான். |
|
உரை
|
|
|
|
|
1158. | இரதநூ புரத்தை யாள்வான் புதல்வியை யெனைவஞ் சித்துப் புரிமனு சர்க்கீ வாக்கே புகன்றனன் போலு மென்ற உரைதனக் குரைத்த வாறே யுரைத்தன னுலக மெல்லாம் இரைதனக் கென்று மாற்றா வெரிபடு வெகுளித் தீயான். |
|
உரை
|
|
|
|
|
1159. | முரைசொலி முழையி னுள்ளான் முழங்குகின் றதனோ டொப்ப விரையொலி விளங்கு தாரான் விளம்பிய வெகுளி மாற்றம் அரைசர்க ளதனைக் கேட்டே யிதனுக்கோ வடிக ளிவ்வா றுரைசெல முனிவ தென்றோ ரொல்லொலி யெழுந்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
1160. | செழுமல ரலங்கன் மார்பன் செங்கண்டீ யுமிழக் கண்டும் எழுமலர்ந் தனைய திண்டோ ளிவைசுமந் திருப்ப தென்னே கழுகுபோற் களத்து வென்று கதலிகை நடுது மன்றேல் விழவயர் விசும்பி னார்க்கு விருந்தின மாது மென்பார். |
|
உரை
|
|
|
|
|
1161. | ஏவது செய்து வாழும் யாமுள மாக வெங்கோ நோவது செய்து வேந்தர் நுனித்துயிர் வாழ்ப வாயிற் சாவது போக வாழ்க்கை தவந்தலை நிற்ற லொன்றோ வீவது செய்த லொன்றோ நமக்கினி விளைவ தென்பார். |
|
உரை
|
|
|
|
|
1162. | நாண்டொழின் மகளிர் முன்னும் நகைக்கிளை யாயத் துள்ளும் வீண்டொழில் விளம்பி யென்னை வீரங்கள் வெறிய வாக ஆண்டொழில் புகுந்த தம்மா வதோவினி தாயிற் றென்று தூண்டொழில் வளரத் தத்தந் தோள்களை நோக்கு கிற்பார் |
|
உரை
|
|
|
|
|
1163. | நாள்வடுப் படாமை நம்மைப் புறந்தந்தாற் குதவி நங்கள் டோள்வடுப் படாமை மன்னன் புகழ்வடுப் படுத லுண்டோ வாள்வடுப் பிளவு போலுங் கண்ணியை மகிழ்ந்த காளை கேள்வடுப் படரும் பூசல் கேட்டிரா நாளை யென்பார். |
|
உரை
|
|
|
|
|
1164. | இனியிருந் தென்னை பாவ மெழுமின் போய்ப் பொருது மென்பார் முனிவன செய்த வேந்தன் முடித்தலை கொணர்து மென்பார் கனிவளர் கிளவி யாளைக் கைப்பற்றித் தருது மென்பார் பனிவரை யரசர் மாற்றம் பற்பல பரிதி வேலோய். |
|
உரை
|
|
|
|
|
கனகசித்திரன் அச்சுவ கண்டனுக்கு கூறிய உறுதி | |
1165. | சினமெனப் பட்ட தீயுட் பிறந்தது செருக்கு நன்னீர் மனவுண வுண்டு மானப் பூநின்ற வயிர வொள்வாள் அனலதொன் றகத்த தாக வாரமர் குருதி வேட்டுக் கனல்வதோர் கால வொள்வாள் கடைக்கணித் தொருவன் சொன்னான். |
|
உரை
|
|
|
|
|
1166. | தோள்களைத் தகர்த்து வீக்கித் துணைக்கரங் கொட்டி யார்த்து வாள்களைத் துடைத்து நோக்கி வகைசெய்வ தெளிதி யார்க்கும் நீள்கதி ரிமைக்கு மொள்வாண் முகம்பெற நெருப்புச் சிந்தித் தாள்களை வெதுப்பும் வெம்போர் தாங்குவ தரிய தென்றான். |
|
உரை
|
|
|
|
|
1167. | தானவ ரெனினு மிப்போ ரிழந்து போய்த் தரணி வாழும் ஊனம ருலக மாளு மூழியொன் றிதுவன் றாயில் வானவ ருலகு மண்ணும் வந்துநின் வாயில் பற்றி ஈனமொ டுறங்கக் காட்டி யிடுவன்யான் றெளியிய தென்றான். |
|
உரை
|
|
|
|
|
1168. | வாளினாற் செருவுண் டேனு மாயமற் றாகு மேனுந் தோளினா லாகு மேனுஞ் சொல்லெலா மொழிக மற்றக் காளைதன் னுயிரி னோடுங் கன்னியைக் கொணர்ந்து தந்து தாளிலே யிட்ட பின்றைத் தவிர்கநின் சீற்ற மென்றான். |
|
உரை
|
|
|
|
|
1169. | ஆளிகட் கரச னாங்கோர் குறுநரி யறிவில் லாத மீளிமை பொறாது வெம்பி வெகுண்டெழு கின்ற தென்றால் நாளினு நங்கள் போல்வார் நகைசெயப் படுவ தன்றே வாளொளி வயிர மின்னு மணிமுடி மன்னர் கோவே. |
|
உரை
|
|
|
|
|
1170. | ஆதலா லெங்க ளாலங் காவதொன் றில்லை யாயிற் போதுலா மலங்கன் மார்ப பொருவது பொருந்திற் றென்னும் காதலான் கனக சித்திரன் கட்டுரை யதனைக் கேட்டே கோதிலா மாரி பெய்த கோடையங் குன்ற மொத்தான். |
|
உரை
|
|
|
|
|
1171. | மற்றவ னுரைத்த போழ்தின் வச்சிர கண்ட னென்பான் கொற்றவற் கிளைய காளை கோத்தொழிற் பாகம் பூண்டான் இற்றதா லெங்க ளாண்மை யாங்களு மிழிந்து நிற்பச் செற்றதோர் படையுண் டாயிற் றென்றுகண் சிவந்திட்டானே. |
|
உரை
|
|
|
|
|
1172. | மகரமால் கடலை யல்லாற் சிறுகய மதலை சேரா சிகரமால் யானை வேந்தே தானவர் செருவன் றாயின் நிகரலா நீசர் தம்மேல் நீசெலற் பால தென்று புகரெரி யவிக்க லுற்றான் பொழிமழை பொழிவ தொத்தான். |
|
உரை
|
|
|
|
|
அச்சுவகண்டன் கோபந் தணிந்தமை | |
1173. | வேறுவே றாகி நின்று வெஞ்சினஞ் செருக்கி விஞ்சைக் கேறனான் றம்பி மாரு மக்களு மின்ன போல்வ கூறினார் கூற லோடுங் குரையழ லவிவ தேபோல் ஆறினா னென்னை செய்யு மாயபண் பதுவ தானால். |
|
உரை
|
|
|
|
|
1174. | அரசர்க ணெறியிற் கண்டீர் யாம்பிழைப் பிலாமை யென்று முரசென வதிரும் பேழ்வாய் முழங்கிசை மொழியிற் சாற்றி வரைசெறிந் தனைய தோளான் மந்திர சாலை சேர்ந்தான் உரைசெறிந் தங்குப் பட்ட சூழ்ச்சியு முணர்ந்து போந்தேன். |
|
உரை
|
|
|
|
|
1175. | கன்னிதன் றிறத்துச் சீறிக் காவலன் கனலக் கண்டீர் என்னினிக் கருது கின்ற தென்றன னெரியு மாழி மன்னவற் குணர்வுங் கண்ணு மாற்றலும் வலியுந் தோளும் அன்னவ னமைச்சர்க் கேறா மவனரி மஞ்சு வென்பான். |
|
உரை
|
|
|
|
|
1176. | அணிநகர் மேக கூட மதனையாண் டரிய செய்கை துணிபவன் றூம கேது சொல்லுவா னென்ன சொன்னான் மணிவரைப் பிறந்து மாண்ட வருங்கல மன்னர் கோமான் பணிவரை யன்றி யாரே பெறுபவர் பகர்மி னென்றான். |
|
உரை
|
|
|
|
|
1177. | வரைதன்மேற் றழலின் பேரார் வளநக ரதனை யாளும் அரசனங் கார வேக னதனைக்கேட் டழன்று சொல்வான் இரதநூ புரத்தை யாள்வா னிகழ்ந்தனன் பெரிது நம்மைப் பொருதவன் கிளையை முந்நீர்ப் புறங்கரைப் படுத்து மென்றான். |
|
உரை
|
|
|
|
|
1178. | மல்லினான் மலர்ந்த மார்பீர் மறைந்துநா மிருந்து வல்ல சொல்லினால் வெல்ல லாமேற் சொல்லுமி னின்னு மன்றி வில்லினால் விரவு தானைச் செருவினுள் வீரந் தன்னால் வெல்லலா மென்னி னென்னை விடுமின்போய்ப் பொருவ லென்றான். |
|
உரை
|
|
|
|
|
1179. | பூவினும் பொருதல் வேண்டா சூழ்ச்சியே பொருந்த நோக்கி யாவது காண்ட லாகு மரசர்க்கு நீதி யென்று சாவதை யஞ்சு வார்க்குந் தகைமையில் லவர்க்கு மன்றே ஓவுத லின்றி யோதி வைத்ததங் கொருவ னென்றான். |
|
உரை
|
|
|
|
|
1180. | அழலவி ரலங்கல் வேலோ னவ்வரி சேன னென்பான் கழலவன் காதற் றோழன் கனன்றவன் கருதிச் சொன்ன மொழியெதி ருலக மாள்வா னுவந்தவன் முகத்தை நோக்கிப். பழிபெரி தொழியச் சொன்னான் படைத்திற லாள னென்றான். |
|
உரை
|
|
|
|
|
1181. | பொருவதோ வெளிதி யாங்கள் பொருந்திற முரைமி னென்னை மருவிய மனிதப் போரோ வான்கெழு தெய்வப் போரோ இருமையி னியன்ற போரோ யாதுநாந் துணிவ தென்றான் விரிசிறை யுவணஞ் சேர்ந்த வென்றிநற் கொடியி னானே. |
|
உரை
|
|
|
|
|
1182. | செப்பிய மாற்றங் கேட்டே திறற்சிரீ சேன னென்பான் திப்பியர் புகழுஞ் செல்வத் திருநிலை யகம தாள்வான் அப்படித் தாயிற் கேண்மி னறிந்தவ ரறைந்த வாறென் றிப்படை நிலைமை யோரா னெடுத்தெடுத் தியம்பு கின்றான். |
|
உரை
|
|
|
|
|
1183. | பொருப்படைத் தொகையோர் மூன்று போர்த்தொழி றானு மூன்றே மருவுடை மனுடந் தெய்வ மிருமையு மென்ன மற்ற வெருவுடைப் படையின் குப்பை மேலது நான்கு வீற்ற திருபடை யொழிந்து நின்ற விவையும்பாங் குடைய வென்றான். |
|
உரை
|
|
|
|
|
1184. | அத்திர மாதி யாக வோதிய நான்கு விஞ்சை தொத்தெரி சுடரு மொள்வா ளெனவிரண் டாகு முன்னாம் வைத்தவுட் கடைய தேனை யொழிந்தது பரம மாயை இத்திறத் தினைய வென்றா னெரிமணி யிமைக்கும் பூணான். |
|
உரை
|
|
|
|
|
1185. | படைக்கல விகற்பும் போரின் பகுதியும் பரப்பி னாங்கண் இடைப்புகுந் துரைப்பிற் சாலப் பெருகுமஃ திருக்க வென்று நடப்பது மக்க ளோடு மக்கட்போர் நல்ல வேனும் புடைப்பில புகுது மாயிற் புறனுரை புணர்க்கு மென்றான். |
|
உரை
|
|
|
|
|
1186. | விஞ்சையர் பொருவ ராயில் விஞ்சையிற் பொருது மன்றி் வஞ்சனை யின்றி மக்கள் பொருபவேன் மக்கட் போரே எஞ்சுத லின்றி யேற்ற பொருதுமென் றின்ன சூழ்ந்து நஞ்சனாற் குரைப்பக் கேட்டு நன்றது துணிமி னென்றான். |
|
உரை
|
|
|
|
|
1187. | ஆய்ந்தவ ரோடு போதந் தாழியா னருவிக் குன்றிற் காய்ந்துவந் திறுத்த பின்றைக் கடிநகர் நமது தன்மேற் சேந்தெரித் திடுது மென்று தென்மலை யரசர் சென்றார் வாய்ந்துமற் றொழிந்த மன்னர் மேல்வர வலித்து நின்றார். |
|
உரை
|
|
|
|
|
சடிமன்னன் ஒற்றன் மொழிகளை மற்றவருக்கு அறிவித்தல் | |
1188. | ஒற்றனாங் குரைப்பக் கேட்டே யொளியவன் பெயர னோடு்ஞ் சுற்றமா யவருஞ் சூழ்நீர்ச் சுரமைநா டுடைய கோவும் மற்றவன் புதல்வர் தாமும் வருகென வந்தார் மாற்றம் உற்றவா றறியச் சொன்னா னொளிவரை யரசர் கோவே. |
|
உரை
|
|
|
|
|
பயாபதியைச் சார்ந்தவர் சிந்தனை | |
1189. | விச்சையின் செருக்கி னாலும் வீங்குதோட் டருக்கி னாலு கச்சையங் களிற்றோ டேனைக் கவனமா வலத்தி னாலுங் அச்சுவக் கிரீவ னாதி அரசர்க ளழன்று வெம்போர் நச்சிமேல் வருப வாயி னன்றது போல்வ துண்டோ. |
|
உரை
|
|
|
|
|
1190. | எரியெனச் சுரிந்த கேசத் திருளெனத் திரண்ட மேனிப் பெரியன வளைந்த வெள்ளை யெயிற்றினர் பிலங்கொள் வாயர் அரியன செய்ப வன்றே யசுரரென் றுருவு கண்டே இரிவன ரோடு வாரு ணம்மையு மெண்ணிற் றென்பார். |
|
உரை
|
|
|
|
|
1191. | எரிபொங்க வெழுந்த வெள்ளை யெயிற்றிடை யிலங்க நக்குப் புருவங்க ணெறிய வேற்றிப் புகுந்துநாம் வெருட்டும் போழ்தில் உருவங்கள் பெரிய வாறு முள்ளங்கள் சிறிய வாறுஞ் செருவங்கண் விளைந்த போழ்திற் காட்டுதுந் தெருட்டி யென்பார். |
|
உரை
|
|
|
|
|
1192. | இமையவ ரரசன் றானு மிகல்செயக் கருதி வந்தால் அமையுமஃ தஞ்ச லாமோ யாண்கட னதுவ தானால் நவையின ருளரென் றஞ்சி நடுங்கினர் தமக்கு நாளுஞ் சுவைபெறு தோளும் வாளுஞ் சொல்லுமின் சுருங்க வென்பார். |
|
உரை
|
|
|
|
|
1193. | மானமர் நெடுங்க ணார்தம் மனமென வெஃகி மைந்தர் ஊனமி லகல மூழ்கி யுள்ளுறச் சிவந்த வொள்வாள் ஈனமா மருங்கி னாரா திரைக்கிடந் தனல்ப வின்று தானவர் குருதி மாந்தித் தம்பசி தணியு மென்பார். |
|
உரை
|
|
|
|
|
1194. | ஆள்வரை யனைய தானை யச்சுவக் கிரீவ னென்னு நீள்வரை மருங்கிற் றாழ்ந்த திருவெனு மருவி நீத்தந் தாள்வரை யிழிந்து வந்து தகைமணி நீல வண்ணன் வாள்வரை யகல மென்னுங் கருங்கடன் மடுக்கு மன்றே. |
|
உரை
|
|
|
|
|
1195. | ஆதலா லதனு ணாமு மயிற்படைப் புணைகள் பற்றி யேதிலா மன்ன ரென்னு மிருமரக் கடப்பு வாரி மீதுலாம் வெகுளி யென்னும் வெவ்வழன் முழங்க மாட்டிக் காதலார் கண்கள் பூப்பக் காய்த்துதுங் கைகோ ளென்பார். |
|
உரை
|
|
|
|
|
1196. | உயிரினு மதிக்கற் பால துள்ளப்பே ருறையி னுள்ள தயிறரும் பனிக்குந் திண்மை யானநா ணதனை யேற்றி வயிரவின் மனத்த தாகக் கையது வையங் காக்குஞ் செயிரில்வில் லதனை நோக்கிச் செங்கதிர்ப் பெயரன் சொன்னான். |
|
உரை
|
|
|
|
|
1197. | அடுந்திறல் வெகுளிக் காற்றோ டருக்கப்பே ருடைய மேகங் கொடுஞ்சிலை குலவக் கோலிக் குருதிநீர் வெள்ள மோடக் கடுங்கணை யென்னுந் தாரை கலந்துமேற் பொழிய வேந்தர் நடுங்கினர் பனிக்கும் போழ்தி னம்மையு மறிவ தென்றான். |
|
உரை
|
|
|
|
|
1198. | அலைகடல் வண்ணன் றம்மு னலர்குழை புரளுங் காதிற் சிலைபடு வயிரத் தோளான் செங்கதிர் முறுவ றோன்றி் இலைபடு வயிரப் பைம்பூ ணிமையவ ரல்ல ராயின் மலைபடு கிருமி யோநம் மாறுநிற் பனக ளென்றான். |
|
உரை
|
|
|
|
|
1199. | வானவர் மருள நாஞ்சின் மற்றிது மடுத்து மாற்றார் தேனம ரகல மென்னுஞ் செறுவுசெஞ் சால்கள் போக்கி ஊனமர் குழம்பு பொங்க வுழுதிட்டு வென்றி வித்தி் ஏனவர் செவிக ளார விரும்புகழ் விளைப்ப னென்றான். |
|
உரை
|
|
|
|
|
1200. | இன்னன பிறவு மேனை யிருநிலத் தரசர் பேச மன்னவ குமரன் மாமன் மலரடி வணங்கி வாழ்த்தி மின்னொடு விளங்கு வேலோ யுளங்கொடு விளம்பி யென்னை என்னொடு படுவ தன்றே யினியிப்பால் வருவ தென்றான். |
|
உரை
|
|
|
|
|
சடிமன்னன் திவிட்டனுக்கு மந்திரம் கொடுத்தது | |
1201. | ஆங்கவன் மொழிந்த போழ்தி னமையுமிஃ தறிவ தன்றே தேங்கம ழலங்கன் மார்ப வினிச்சிறி துண்டு நின்ற தோங்கிய விஞ்சை நின்னா லுள்ளத்துக் கொள்ளற் பால ஈங்கிவை யென்ன லோடு மிறைவனைத் தொழுது கொண்டான். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் மந்திர தேவதைகளுக்கு இட்டபணி | |
1202. | மந்திர வெழுத்து வள்ள லுள்ளத்துப் பொறித்த போழ்தே அந்தர விசும்பிற் றெய்வ மணுகின பணியென் னென்னா வெந்திறல் விஞ்சைக் கேற்ற வியன்சிறப் பியற்றி வேலோன் நுந்தொழில் புகுந்த போழ்தி னோக்குமி னெம்மை யென்றான். |
|
உரை
|
|
|
|
|
அச்சுவகண்டன் விடுத்த தூதுவர் வருகை | |
1203. | ஓதிய விஞ்சை வாய்ப்ப வுலகடிப் படாது நின்ற வாதிசா லமர கற்ப மாமென வமருங் காலைத் தூதுவ ருருவக் காளை செவிசுடு சரம்பெய் தூணி மாதிரத் தொசிந்த வேபோல் வந்தொருங் கிருவர் நின்றார். |
|
உரை
|
|
|
|
|
1204. | பொன்னவிர் திகிரி யாளும் புரவல னுருவப் பைந்தார் மன்னவன் றமரம் யாமே வாய்மொழி கேண்மின் மன்னீர் கன்னியைத் தருதி ரோவக் கன்னியை மகிழ்ந்த காளை இன்னுயிர் தருதி ரோவிவ் விரண்டிலொன் றுரைமி னென்றார். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் கோபங் கொள்ளுதல் வேறு | |
1205. | கடுத்தவர் கன்னிபே ருரைக்கக் கண்களுட் பொடித்தன புகைத்திரள் பொழிந்த தீப்பொறி அடுத்தெழு கின்றதோ ராவி யாரழன் மடுத்தது மனத்திடை மைந்தற் கென்பவே. |
|
உரை
|
|
|
|
|
1206. | கண்கன லுமிழ்ந்துதம் புலமுங் காணல வெண்கதிர் மணிமுத்தம் விதிர்க்கும் மேனியன் புண்களு ளெஃகெறிந் தனைய புன்சொலால் விண்களை வெதுப்பினன் வீர னென்பவே. |
|
உரை
|
|
|
|
|
1207. | நகுதொறு மழற்கொடி நடுங்கு நுண்டுளி உகுதொறு மயிர்த்துளை யுயிர்க்கும் வெம்புகை புகுதொறுஞ் செவிசுடு புன்சொ லாரழன் மிகுதொறும் விசும்புற நிமிர்ந்து காட்டினான். |
|
உரை
|
|
|
|
|
1208. | தோற்றமுஞ் சுடரொளி வடிவு முன்னிலா வேற்றுமை யுடையவாய் விரிந்து தோன்றின மாற்றமஃ தொழிந்தனன் மனித்த னன்மையைத் தேற்றினன் றிருமகிழ் தெய்வக் காளையே. |
|
உரை
|
|
|
|
|
1209. | மாண்டன மாற்றலர் நாள்கள் பூமகள் ஈண்டுவந் திவனொடு திளைக்க லுற்றனள் காண்டுமிக் காளைதன் கன்னிப் போரெனா ஈண்டினர் விண்ணிடை யமர ரென்பவே. |
|
உரை
|
|
|
|
|
1210. | தூதுவர் முறைப்படுந் தொன்மை யாலிவண் தீதுரை கொணர்ந்துநஞ் செவிகள் சுட்டவிப் பேதையர் பிழைத்தது பொறுக்கல் வேண்டுமாற் போதலே பொருளிவர் போக போகவே. |
|
உரை
|
|
|
|
|
1211. | வில்லவன் மொழிதலும் வீர வேந்தர்கள் ஒல்லென வொலித்தெழுந் துடன்று சொல்லுவார் கல்லுயர் கருவரை கருதி யாமிவை சொல்லிய தனெச்சிலர் சுருங்கச் சொல்லினார். |
|
உரை
|
|
|
|
|
1212. | ஆழியு மகலத்த திருவும் வாங்கியிப் பாழியந் தோளினான் பால வாக்கினால் ஏழையு மெம்மையு மறியு மென்றனர் வாழைமேல் வயிரங்கூர்த் தனைய மாண்பினார். |
|
உரை
|
|
|
|
|
1213. | வாணிலா மணிநகை முறுவ லாடிறத் தேணிலா ரியம்புவ தியம்பி னல்லது காணலா மெல்லையுட் புகுந்து கட்டுரை பேணலாம் பிறபிற பீடு காண்பதே. |
|
உரை
|
|
|
|
|
1214. | கலைமிசை யினியசொற் கன்னி காளைதன் இலைமிசை யலங்கன்மார் பிசையக் கேட்டுமோர் மலைமிசை மறைந்துவா யுரைக்கும் வல்லதிற் சிலைமிசைத் தோளினான் சேவ கங்களே. |
|
உரை
|
|
|
|
|
1215. | துன்னிவந் திவனடி தொழுவ னேலுயிர் தன்னதா மன்றெனிற் றனதன் றாதலான் மன்னுயி ருவக்குமோ மானம் வேண்டுமோ வென்னவ னுவப்பதென் றெண்ணி வம்மினே. |
|
உரை
|
|
|
|
|
தூதுவர் செல்ல அசரீரி கூறியது | |
1216. | என்றவர் மொழிதலு மெழுந்து தூதுவர் சென்றன ராயிடைத் தெய்வ வாய்மொழி வென்றுவீற் றிருக்குமிவ் விடலை யேயென நின்றது நிலமகள் பரிவு நீங்கினாள். |
|
உரை
|
|
|
|
|
1217. | வரிவளை முரன்றன வான துந்துபி திரிவன வறைந்தன செங்கண் டீப்பட முரிவன வீரர்தம் புருவ மூரிவிற் பரிவிறை யின்றிவன் பாடி வட்டமே. |
|
உரை
|
|
|
|
|
1218. | ஆளியே றனையவ னணிபொன் மேனிமே னீளொளி தவழ்ந்தது நெடுங்க ணேழையர் தோளுமங் கிடவயிற் றுடித்த வீரர்கை வாளும்பூ நின்றன மலர்ந்த துள்ளமே. |
|
உரை
|
|
|
|
|
1219. | அரசிளங் குமரனை யனற்று மாற்றலர் முரசினுண் மணியர வுறைந்த முத்தணி நிரைசுடர் நெடுங்குடை யகடு நெய்கனி பிரசங்கள் புரைபுரை விலங்கப் பெய்தவே. |
|
உரை
|
|
|
|
|
1220. | கதிர்மணித் தேர்க்கொடிஞ் சேறிக் காக்கைகள் எதிரெதிர் சிலம்பின வெரிந்த மாதிரம் உதிரநீர்ப் புதுமழை சொரிந்த துச்சியின் அதிர்தரு கவந்தங்க ளாடி யிட்டவே. |
|
உரை
|
|
|
|
|
1221. | விடவரு மியல்புக டிரிந் மெல்லியன்
மடவர லவரொடு மாறு பட்டனர்
படவர வல்குலார் காதிற் பயெனச்
சுடர்தரு குழகடா மழிந் "சார்ந்த"வ. |
|
உரை
|
|
|
|
|
1222. | தூவொளி மணிமுடி முகத்த கிம்புரி நாவளைக் கொண்டன நாம வென்றிவேல் பூவொளி மழுங்கின போர்செ யாடவர் ஏவிளை கொடுஞ்சிலை யிற்று வீழ்ந்தவே. |
|
உரை
|
|
|
|
|
1223. | உள்ளடி யுமைத்துமைத் தழன்ற மேனியுங் கள்ளவிழ் கண்ணியுங் கரிந்த கண்களும் எள்ளுநர்க் கிடவயிற் றுடித்த வேழையர் வள்ளிதழ்க் கடுங்கணும் வலந்து டித்தவே. |
|
உரை
|
|
|
|
|
1224. | வானமீ னுச்சியு ணின்ற மாற்றலர் தானையு ணடுவுவீழ்ந் ததிரத் தங்களுக் கூனமுண் டென்பதை யுணர்ந்து முள்ளிடை மானமஃ தொழிந்திலர் மறங்கொண் மன்னரே. |
|
உரை
|
|
|
|
|
வேறு தூதுவர் உரைகேட்ட அச்சுவகண்டன் செயல் | |
1225. | போகிய தூதுவர் பொன்னவி ராழியொ டேகிய நாளுடை யாற்கிது வாலென ஆகிய வாய்மொழி கூறலு மாயிடை நாகம ழன்றெறி நச்சென நக்கான். |
|
உரை
|
|
|
|
|
1226. | மண்டிணி மாநில மன்னரை மால்வரை ஒண்டொடி தாதையொ டூழுயிர் வௌவித் திண்டிறல் பேசிய வச்சிறி யானையுங் கொண்டனிர் கூடுதி ரோகடி தென்றான். |
|
உரை
|
|
|
|
|
1227. | ஆழியி னானது கூறலு மாயிடை வாழிய ரோவென மால்வரை வாழ்பவர் சூழிய வானைகள் மாவொடு தேர்பல தாழலர் பண்ணினர் தாமு மெழுந்தார். |
|
உரை
|
|
|
|
|
1228. | காரணி கண்முர சார்த்த கறங்கின நீரணி சங்க நிரைந்தன வெம்பறை தாரணி தானை சிலம்பின தாழ்ந்தனர் போரணி விஞ்சையர் பூமியின் மேலே. |
|
உரை
|
|
|
|
|
1229. | குடையுங் கொடியுங் குளிர்சா மரையும் படையும் முடியும் பலசின் னமுமே இடையும் புடையும் மிருபா லகமும் அடையும் படையும் மறிதற் கரிதே. |
|
உரை
|
|
|
|
|
1230. | பொன்றவழ் தேர்கலி மாவொடு போதகம் என்றிவை யெங்கு மிடம்பி வின்றி நின்றன நின்றது வாட்படை யப்படை சென்று பெருந்திசை யார்த்திசை யார்த்தார். |
|
உரை
|
|
|
|
|
1231. | கொண்டல் கிளர்ந்து பரந்து பெருங்கடல் மண்டுவ போன்மண மாநகர் முன்னி விண்டவழ் மின்னிடு வாளினர் வில்லினர் எண்டிசை யும்மிருள் கூர விழிந்தார். |
|
உரை
|
|
|
|
|
1232. | படையென் றலுமே படைபா ரதுவும் இடையின் றியெழுந் ததிரண் டுகடல் விடையின் றிவெகுண் டெழுகின் றனபோற் புடையின் றிநிரந் தனபோர்த் தொழிலே. |
|
உரை
|
|
|
|
|
1233. | காரொடு கார்கட லோடு கருங்கடல் சீரொடு சென்று திளைப்பது போலத் தேரொடு தேர்கலி மாவொடு மாபல போரொடு வந்து புகுந்தன வன்றே. |
|
உரை
|
|
|
|
|
1234. | இலையே ரயில்வா ளியொடெண் டிசையுஞ் சிலையே யெனவுண் டுசிலைத் தொழுதி் மலையே மலையோ டுமலைந் தனபோற் கொலைவே ழமொடேற் றனகுஞ் சரமே. |
|
உரை
|
|
|
|
|
1235. | கொடிமே லுடையா னைகள்கும் பமுதைத் தடிமே லனவா கவெழுந் தரசர் முடிமே லனவாய் முகின்மே லனவாய்ப் படிமே லனவா யினபாய் பரியே. |
|
உரை
|
|
|
|
|
1236. | ஒருபான் முடிமே லுருளா ழியுதைத் திருபா லுமெழுந் தெறிபா றுசெலப் பொருபா லவர்கண் சுழலப் பொருதேர் வருபா லறியா மைமயங் கினவே. |
|
உரை
|
|
|
|
|
1237. | நெறியார் நிரைமா வொடுதேர் களெடுத் தெறியா வகையா நுதலே றுகரம் பறியா முறியாப் படையோர் படையுட் செறியா மதயா னைதிரிந் தனவே. |
|
உரை
|
|
|
|
|
1238. | கடுநீ ரவர்கண் ணெரிகொண் டுகனன் றிடிநீ ருருமின் னெதிரே யெறிய வடிநீ ரனவா ளிடையே முரியாப் படுமீ னெனவீழ்ந் துபதைத் தனவே. |
|
உரை
|
|
|
|
|
1239. | வடிநூ னுதிகவ் வியவா ளையொடும் விடுமீ னெறிதூண் டில்விசைத் தனபோல் அடுநா ணிடையே றியவம் பினொடு நெடுநா ணறவிற் கணிமிர்ந் தனவே. |
|
உரை
|
|
|
|
|
வேறு அருக்ககீர்த்தியின் போர் | |
1240. | ஆரழ லான்பெய ரானணி வெஞ்சிலை போரழல் வார்கணை மாரி பொழிந்தது சீர்கெழு விஞ்சையர் செந்தடி நுந்துபு நீர்கெழு வெள்ள நிரந்ததை யன்றே. |
|
உரை
|
|
|
|
|
1241. | தென்மலை யாரிள மன்னவன் மன்னிய வின்மலை வார்தனி யின்மையின் விஞ்சைய பொன்மலை யொன்றொடு போர்செய மேவிய மன்மலை போல வெழுந்து மலைந்தார். |
|
உரை
|
|
|
|
|
1242. | கோளென நாளென மின்னுபு குன்றெறி வேளனை யான்மிசை விஞ்சையர் வெஞ்சுடர் வாளினர் வில்லினர் மால்வரை போல்வன தோளினர் தாளினர் தோன்றின ரன்றே. |
|
உரை
|
|
|
|
|
1243. | தோன்றிய விஞ்சையர் மேல்விடு வெங்கணை கான்றது திண்சிலை கான்றலு மேதிசை மான்றது மங்குல் பரந்தது காரிருள் நான்றது நண்ணலர் நண்ணல ரானார். |
|
உரை
|
|
|
|
|
1244. | தூணி முகத்தது கைத்தல மற்றையோர் பாணி முகத்தது வெஞ்சிலை நின்றது வேணு முகத்தது மண்டலம் வெங்கணை காணு முகத்தள வேயுள வாமே. |
|
உரை
|
|
|
|
|
1245. | ஒன்று தொடுத்ததோ ராயிர மாம்பல என்று தொடுத்தன வெண்ணில வாஞ்சரம் அன்று தொடுத்தவ னெய்தன வையகம் நின்று தொடுத்து நிரந்தன வன்றே. |
|
உரை
|
|
|
|
|
1246. | விண்மிசை யேறிய வெஞ்சரம் விஞ்சையர் கண்மிசை யேறின மேகடி மேதிசை எண்மிசை யின்றி யிருண்டன வோவென மண்மிசை வீழ்ந்து மயங்கின ரன்றே. |
|
உரை
|
|
|
|
|
1247. | இருள்பா யினவா லிதுவென் னெனவே மருள்வார் வெருள்வார் மறைவார் மறிவார் தெருள்வார் திரிவார் செருவார் கணையால் உருள்வார் களுமா கியுடைந் தனரே. |
|
உரை
|
|
|
|
|
1248. | உடைந்திடு படையிடை யொலிகொண் மால்வரை இடைந்திடும் படியெழுந் திடறி யேகினார் படந்தொடி னுடன்றெழு மரவு போற்பகை கடைந்திடுங் கடுந்திறற் கால வீரரே. |
|
உரை
|
|
|
|
|
1249. | இடுதவி சொடுதொடர் பரிய வெந்தகத் தடுசரம் படுதொறு மலறி வாலதி நெடிதனெ நிறுத்திநீ ருகுத்து நீள்செவி மடிதர முடுகின மான யானையே. |
|
உரை
|
|
|
|
|
1250. | முரசுக ளுடைந்தன முடிகண் மூழ்கின வரசுக ளவிந்தன வரவத் தேர்க்குழாம் விரைசெல விவுளிக ளிடறி வெந்தடி நிரைசெல விழிந்தது குருதி நீத்தமே. |
|
உரை
|
|
|
|
|
அச்சுவக்கிரீவனுக்கு ஒரு தூதன் போரழிந்த செய்தியைத் தெரிவித்தல் | |
1251. | காலெதிர் கடலுடைந் திட்ட தொப்பநம் பாலது படையுடைந் திட்ட தின்றென மாலெதிர் கடற்படை மான வேந்தனைக் கோலெதிர் கையவன் றொழுது கூறினான். |
|
உரை
|
|
|
|
|
1252. | நூற்பயம் பலவொடு நுணங்கு கேள்வியே போற்பயம் பலவொடு புகழ்க ளேதரும் வேற்பயங் கொண்டனர் தெவ்வர் நந்தமர் காற்பயங் கொண்டனர் கால வேலினாய். |
|
உரை
|
|
|
|
|
பூமியரசர் விஞ்சை வீரரை இகழ்ந்தமை | |
1253. | பெரியவாய் வளையெயி றிலங்க நக்குநக் குரியவா ளெரியெழ முறுக்கி நம்மொடு பொரியவந் தார்களும் புறந்தந் தாரினி அரியதென் னெனநக்கா ரவனி மன்னரே. |
|
உரை
|
|
|
|
|
1254. | கலையினைக் கடந்தசொற் கன்னி காதலன் அலையினுக் குடைந்தில ரருக்கன் கையதோர் சிலையினுக் குடைந்துதஞ் சிறுமை நாணிநம் மலையினுக் கடைந்திலர் மான மன்னரே. |
|
உரை
|
|
|
|
|
1255. | ஒன்றுவில் லிரண்டுதோ ளொருவ னெய்யவே இன்றுநம் படையுடைந் திட்ட தாய்விடின் நன்றுபோர் நமர்கள தென்று நக்கனன் குன்றுபோற் பெருகிய குவவுத் தோளினான். |
|
உரை
|
|
|
|
|
1256. | இரதநூ புரத்தின்மே லெழுந்த வேந்தரும் பொருதுதா மழிந்தமர் புறக்கிட் டோடினார் அரிதினின் விளைவதை யன்றி யாவருங் கருதிய முடிப்பவ ரில்லை காண்மினே. |
|
உரை
|
|
|
|
|
1257. | பாழிப்போ ருடைந்தனர் பகைவர்க் கின்றென ஆழிப்போர்த் தடக்கையாற் கவர்க ணீர்மையைத் தாழிப்போர் விலன்றம னொருவன் கூறினான் ஊழிப்பே ரெரியுணெய் சொரிந்த தொப்பவே. |
|
உரை
|
|
|
|
|
அச்சுவக்கிரீவனது வருத்தமும் கட்டளையும் | |
1258. | விண்மிசை சென்றவர் மெலிவும் வேற்றவர் மண்மிசை சென்றவர் மறிந்த மாற்றமும் புண்மிசை யெஃகம்புக் கொளிப்ப போன்மனத் துண்மிசை யொழிபடை யாகி யூன்றவே. |
|
உரை
|
|
|
|
|
1259. | இருந்தினி யென்னையீங் கெழுக வென்றுபோய்ப் பெருந்தகை யருங்கலப் பெயர்கொள் குன்றின்மேற் பரந்தன படையொடு பாடி விட்டனன் கருந்திரண் முகில்புரை காள மேனியான். |
|
உரை
|
|
|
|
|
1260. | அச்சுவக் கிரீவனுக் கிளைய காளையர் கச்சையங் கருங்களி யானை வல்லவர் விச்சையர் கடற்படை பரப்பி விண்மிசை நச்செரி யுமிழ்தரு நகையர் தோன்றினார். |
|
உரை
|
|
|
|
|
1261. | இளையருட் பெரியவன் சொல்லு மெம்மிறைக் குளைவன செய்தவ ருயிரை மற்றவர் கிளையொடுங் கீண்டரசாடு மன்றெனில் வளையொடுந் தலைமுடித் திருந்து வாழ்துமே. |
|
உரை
|
|
|
|
|
1262. | மாலுமாங் குடையர்கொன் மனிதர் நம்மொடு போலுமாற் பொரலுறு கின்ற தென்றுதன் கோலவால் வளையெயி றிலங்க நக்கனன் நீலமா மணிக்கண்ட னென்னுங் காளையே. |
|
உரை
|
|
|
|
|
1263. | முளைந்தவா ளெயிற்றவர் முலைகள் பாய்ந்துதேன் விளைந்ததார் வெறிகொள வைகும் வேற்றவர் உளைந்தபோர் நிலத்தினுள் ளுருள்ப வென்றனன் வளைந்தவா ளெயிற்றவன் வயிர கண்டனே. |
|
உரை
|
|
|
|
|
1264. | ஒத்திலங் கொண்சிறை யுவணன் றன்னொடு பைத்திலங் கரவுகள் பகைப்ப போன்மெனக் கைத்தலங் கையொடு புடைத்து நக்கனன் தொத்திலங் கலங்கலான் சுகண்ட னென்பவே. |
|
உரை
|
|
|
|
|
1265. | தம்பியர் மொழியெனுந் தயங்கு மாரியால் வெம்பிய கொடுமனங் குளிர்ந்து வெய்யவன் நம்பெயர் முனிந்தவர் நயந்த மண்மிசை நும்பெயர் நிறுத்துமி னென்று நோக்கினான். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் வந்த படையினை எதிர்த்தல் | |
1266. | நஞ்சினை நஞ்சுசென் றெரிக்க லுற்றபோல் விஞ்சையர் வெஞ்சினம் பெருக்கி மேல்வர வஞ்சமின் மணியொளி வண்ணன் றானையும் எஞ்சலின் றெழுந்தெதி ரூன்றி யேற்றதே. |
|
உரை
|
|
|
|
|
இருபடைகளும் பொரும் வருணனை | |
1267. | விண்ணின தளவுமேல் வந்த வேற்படை மண்ணின தளவுமா றேற்ற வாட்படை கண்ணிய கடற்படை யிரண்டு தம்மையும் எண்ணிணி நமக்கெளி தாவ தில்லையே. |
|
உரை
|
|
|
|
|
1268. | கடலிரண் டுளவெனிற் கடுக்கு மக்கடல் இடைநில முடையன ணென்னு மொப்பில அடலரும் படையவை யிரண்டு மவ்வழி யடலரும் படையவை யிரண்டு மொக்குமே. |
|
உரை
|
|
|
|
|
1269. | திண்டிறற் றேர்களே செறிந்த வென்னவும் கொண்டபோர் வேழமே குழீஇய வென்னவும் விண்டவழ் புரவியே மிடைந்த வென்னவும் கண்டவர் கண்டுழிக் கலந்து தோன்றுமே. |
|
உரை
|
|
|
|
|
1270. | கைவலப் படையினர் கழலர் கச்சையர் செவ்வலர்க் கண்ணியர் செங்க ணாடவர் இவ்வுல கிவர்க்கிட மில்லை முன்னிவர் எவ்வுல குடையவ ரென்னத் தோன்றினார். |
|
உரை
|
|
|
|
|
1271. | அன்றுபோர் மலைந்தது தானை யாயிடைச் சென்றுபோர் படுமிடந் திசைக ளின்மையா னின்றுபோ ராடவர் நேரொப் பார்கேளா டொன்றுபோ ருலகினை யூழி யொத்ததே. |
|
உரை
|
|
|
|
|
1272. | பேரினும் பெருகிய சின்னந் தன்னினுந் தாரினு மாறுமா றெறிந்து தம்முளே தேரினுந் தேரினுந் திளைக்கின் றார்சிலர் காரினும் பெரிதவர் கணைபெய் மாரியே. |
|
உரை
|
|
|
|
|
1273. | தாளிடை மிடைந்தன தாள்க டம்முளே தோளிடை மிடைந்தன தோள்க டோளிடை வாளிடை மிடைந்தன வாள்கண் மற்றிவை நாளிடைப் படுங்கொலோ நாங்கள் சொல்லினே. |
|
உரை
|
|
|
|
|
1274. | குடைநில மறைப்பவுங் கொடிகள் போர்ப்பவு் மிடைநில மிருண்மெழுக் கிட்ட தாயிடைப் படைநில விலங்கவும் பணிகண் மின்னவும் இடைநில மிடையிடை யிலங்கித் தோன்றுமே. |
|
உரை
|
|
|
|
|
1275. | கருப்புடைக் கைகளாற் புடைத்துக் கண்களு் ணெருப்பொடு நெருப்பெதி ரெறிப்ப யானைகண் மருப்பொடு மருப்பிடை மிடைந்து மான்றரேர் பொருப்பொடு பொருப்பவை பொருவ போன்றவே. |
|
உரை
|
|
|
|
|
1276. | கறங்கெனக் காலசக் கரங்க டாமென் மறங்கிளர் மன்னவர்தம் மகுட நெற்றியும் உறங்கலில் கடாக்களிற் றுச்சி மேலுமாய்த் திறங்கிளர் புரவிக டிரிதர் கின்றவே. |
|
உரை
|
|
|
|
|
1277. | செம்பியல் கிடுகின செம்பொற் றட்டின் அம்புபெய் தூணிய வரவத் தேர்க்குழாம் வெம்பிய கணைமழை விரவி வில்லொடு் வம்புபெய் மழைமுகில் பொருவ போன்றவே. |
|
உரை
|
|
|
|
|
1278. | இன்னவ ரின்னுழி யின்ன செய்பவென் றென்னவ ரறிவுமங் கிடைபு காவகை மின்னவி ரெஃகினு மிடைந்த வாளினும் மன்னவர் செருத்தொழின் மயங்கி யிட்டவே. |
|
உரை
|
|
|
|
|
1279. | அச்சமுடை யாரகல்க வாற்றுபவ ரேற்க் எச்சமில் குடித்தலைவர் போகவென வெங்குங் கச்சையர் கருங்கழலர் காலனையு நோனார் வெச்சென விழித்துவிறல் வீரர்திரி கின்றார். |
|
உரை
|
|
|
|
|
1280. | ஏற்றவ ரிமைப்பினு மிகழ்ந்தெறிதல் செய்யார் தோற்றவர் புறக்கெடையு நாணிமிக நோக்கார் வேற்றவரை வீரநெறி காண்மினிது வென்று் தேற்றுவனர் போலவுணர் சென்றுதிரி கின்றார். |
|
உரை
|
|
|
|
|
1281. | தாருடைய மார்புபக வார்கணை குளிப்ப் வேரொடுப றித்தன ரெழுத்துவரி நோக்கிப் பேரொடுறு காளையவ னாரெனவி னாவி் நேர்படுது மென்றுசிலர் நேடுபு திரிந்தார். |
|
உரை
|
|
|
|
|
1282. | கேடக மிடத்தது வலத்ததயி லொள்வாள் ஆடக மடுத்தவணி பூணனலர் தாரான் றோடக மடுத்ததுதை கண்ணியொடு துன்னார் ஊடக மடுத்தொருவ னுந்திநனி வந்தான். |
|
உரை
|
|
|
|
|
1283. | வெறிமின்விரி கின்றவிற லாழியிறை தோழன் அறிமின்பெயர் யானவ்வரி சேனனென நின்றே னெறிமினெதி ரென்னொடிகல் வல்லிருளி ராயின் மறிமினது வன்றியுயிர் வாழலுறி னென்றான். |
|
உரை
|
|
|
|
|
வியாக்கிரரதன் அவனை எதிர்த்தல் | |
1284. | அங்கவன் மொழிந்தமொழி கேட்டலு மருக்கன் வெங்கணை தெரிந்தது விலக்கிவிறல் வெய்யோய் இங்கிவ னினக்குநிக ரோவென விசைத்தே பொங்குபுலித் தேர்ப்பெயரன் போந்துபொர லுற்றான். |
|
உரை
|
|
|
|
|
1285. | பொன்னையணி கொண்டபுனை கேடக மெடுத்து் மின்னையுமிழ் கின்றசுடர் வாண்மிளிர வீசி் நின்னையறி யாதவர்க ணின்றிரிய வந்தாய் என்னையறி யாயறியி னித்தவிர்தி யென்றான். |
|
உரை
|
|
|
|
|
1286. | நின்னையறி வன்பெரிது நின்முறைய ளாய் கன்னியையொர் காளைபிற னெய்துவது கண்டும் மன்னுமண வில்லுள்வயி றாரவயில் கின்றாய்க் கின்னுமுள வோபுதிய வென்றுமிக நக்கான். |
|
உரை
|
|
|
|
|
1287. | கன்னியர்தம் பான்மைவழி செல்பவது கண்டாய் முன்னிய மொழிப்புலவர் நூன்முறைமை யேடர் அன்னதறி யாதவ னயக்கிரிவ னன்றே என்னையறி யாமைநினக் கின்னுமுள தென்றான். |
|
உரை
|
|
|
|
|
1288. | வாயுரை யிருக்கநம் வாளினொளி வாயாற் றீயுரை செகுத்துமலை கென்றுசெயிர் கொண்டு் காயெரி விழித்தனர் களித்தனர் தெளிர்த்தார் மாயிரு விசும்பிடை மடுத்துமலை குற்றார். |
|
உரை
|
|
|
|
|
1289. | தங்கொளி தயங்குமணி கேடகமு மேனைச் செங்களி மயிர்ப்புளக சேடகமு மேந்தித் திங்கெளாடு ஞாயிறு திளைத்திரு விசும்பின் அங்கண்மலை கின்றவுள வேலவையு மொத்தார். |
|
உரை
|
|
|
|
|
1290. | போரிகலி யாரமொடு பூண்மணிகண் மின்ன் நேரிகலும் வாள்கெளாடு கேடக நிழற்றச் சாரிகை கறங்கென மலைந்துசுழல் கின்றார் நீரக வளாகமடு சக்கர நிகர்த்தார். |
|
உரை
|
|
|
|
|
1291. | ஓவிலயில் விசுமொரு வன்னது விலக்குங் காவலொடு மீளுமொரு வன்னவர் கருத்தின் ஆவதது வன்றியய னின்றவர்கள் காணும் பாவனைய ரல்லர்பல பாடியினி யென்னோ. |
|
உரை
|
|
|
|
|
1292. | கொந்தெரி யிரும்பெறிஞர் கொற்செய்கள னொத்தும் வந்துவன வேங்கைமலர் கால்சிதர்வ போன்று் நுந்தியவர் வீசுமொளி வாணுதிக டாக்கிச் சிந்தின தழற்பொறி சிதர்ந்ததிசை யெல்லாம். |
|
உரை
|
|
|
|
|
1293. | ஆளடு மடற்றகைய னாயவரி சேனன் தோளொடு துதைந்தெறியும் வாளதனை நோக்கிக் கோளொடு மடுத்தகுளிர் மாமதிய மொப்ப் வாளொடு மடுத்துமணி கேடக மறைத்தான். |
|
உரை
|
|
|
|
|
1294. | ஆங்குமுன் னெறிந்துபெயர் கின்றவரி சேனன் பூங்கம ழலங்கலுடை மார்பமிரு போழாய் நீங்கவெறிந் தானெடிய மாற்கிளைய காளை ஓங்கிய விசும்பினவர் கொண்டன ரொளித்தார். |
|
உரை
|
|
|
|
|
1295. | அழலான்பெய ரவன்மைத்துன னரிசேனனை யெறியக் கழலான்கட லொளியான்றமர் கலந்தார்த்தனர் கரிய நிழலான்றமர் கரிந்தார்சில ரிரிந்தார்பலர் நெரிந்தார் தழலாரயில் வலனேந்துபு சார்ந்தார்தலை சரிந்தார். |
|
உரை
|
|
|
|
|
1296. | அரிசேனனங் கழிவாதல்கண் டயில்வாளொளி மிளிரர் விரிசீர்வட்ட மணிகேடகஞ் சுழலாநகு வருவான் பரிசேரணி யுயர்தேர்மிகு பலயானையு மெறியாத் திரிசாரிகை நிகரானவ ருளரோதிறல் வினவும். |
|
உரை
|
|
|
|
|
1297. | சிகரிம்முடி திருமாமணி செறிகுண்டல மிலங்கத் திகிரிப்படை யரசன்றிறல் சிறக்கவெனப் புகழ்ந்து் பகருந்நல குணசேனனும் பருவம்முகி லிடிபோற் புகரும்மத களிறென்னவும் புலியென்னவுந் திரிவான். |
|
உரை
|
|
|
|
|
1298. | அருக்க கீர்த்திதன், பெருக்கம் வாழ்த்தியே திருக்கை வேலினா, னெரிக்கு மாற்றலான். |
|
உரை
|
|
|
|
|
1299. | பொன்னங் குன்றவன், மின்னும் வாளினன் மன்னன் றோழனாழ், முன்னி வந்தனன். |
|
உரை
|
|
|
|
|
1300. | வந்த வன்பெய, ரிந்தி ரன்னெனுங் கந்து கொல்களி, றுந்து காமனே. |
|
உரை
|
|
|
|
|
1301. | இருவ ரும்மெதிர், பொருதும் வேலையின் அருகு நின்றவர், வெருவி யோடினார். |
|
உரை
|
|
|
|
|
1302. | வாளி னாலொரு, தோளை வீழ்த்தவோர் தோளி னாலவன், வாளை யிட்டனன். |
|
உரை
|
|
|
|
|
1303. | இட்ட வாள்கர, மொட்டித் தட்டிப்பி் னட்ட மாகென, வெட்டி வீழ்த்தினான். |
|
உரை
|
|
|
|
|
1304. | குணசேனன் வீழக் கண்டு கூற்றினுங் கொடிய நீரான் இணைசேனை தன்னு ளுள்ளோ னியம்பிய களிப்பின் மிக்கான் கணைசேர்ந்த தூணித் தோளான் கைச்சிலை பிடித்துக் கொண்டு் திணைசேர வருக வென்று வரசேனன் றிகழ்ந்து நின்றான். |
|
உரை
|
|
|
|
|
1305. | மற்றவ னிற்ப தோர்ந்து மதகளி றனைய காளை கொற்றவ னருக்க கீர்த்தி குணம்புகழ்ந் தாடிப் பாடிக் கற்றவன் கலைக ளெல்லாங் காமுக னென்னும் பேரான் பற்றிய வில்லு மம்பும் பாங்குடன் பரித்து வந்தான். |
|
உரை
|
|
|
|
|
1306. | வில்லொரு கையி னேந்தி வெங்கணை குழைய வாங்கிச் சொல்லரு மாரி போலத் தொடுத்தவன் விடுத்த லோடும் மல்லுறு காளை தன்மேல் வராமலே விலக்கி யிட்டுக் கல்லெனக் கலங்கி வீழக் கைச்சிலை கணையே றிட்டான். |
|
உரை
|
|
|
|
|
1307. | கார்செயன் முழங்கி யார்ப்பக் காளையுங் கனன்று மிக்க வார்சிலை வணங்க வாங்கி வாய்புக விடுத்த லோடும் போர்செயுங் களத்து வீழ்ந்தான் புகழ்வர சேன னென்னத் தார்செய்தா னவர்க டம்முட் டானவ னொருவன் வந்தான். |
|
உரை
|
|
|
|
|
1308. | குடர்மாலைக டலைசூடின குழவித்தலை குழையாப் படர்காதினுள் ளவைபெய்தன பகுவாயது குருதித் தொடர்மாமழை மதயானைகை துணியாவவை யிடையே சுடர்மாலைகள் விடுசூலமொ டொருவன்றிரி கின்றான். |
|
உரை
|
|
|
|
|
1309. | கள்ளாவது குருதிப்புனல் கலனாவது கையே நள்ளாதவ ருடலம்பிற கறியாவது நமக்கென் றுள்ளாதவ ருளராங்கொலிவ் வுலகின்னென வுரையர் விள்ளாதவர் சிலர்பின்செல விரல்வீளைகள் விளியா. |
|
உரை
|
|
|
|
|
1310. | களியானையி னெயிறாயின பறியாவவை கறியர் அளியாதுபல் படையாளர்க ளடையார்களை யுடனே ஒளிவாளிடை யிடைவிட்டுட லுருவாவுயிர் பருகாத் தெளியாதெதிர் வருவாராயி லுருவாவவை செறியா. |
|
உரை
|
|
|
|
|
1311. | எரிபோல்வன சுரிபங்கியொ டிருள்போலிருண் மெய்யேர் டரிபோலதி ரகல்வானுற நிமிராவடி புடையாப் பரிபோல்வன பிடியாவுட லடியாவிடை மறிதேர் பொரிபோலெழ வுதையாவிவன் வருகின்றதொர் பொலிவே. |
|
உரை
|
|
|
|
|
1312. | ஆழிப்படை யுடையான்றம னரிகேதன னென்போன் பாழிப்படை பொருவாரொடு பொருவன்பல வறியேன் ஏழைப்படை யிதுவோவெனக் கெதிராகுவ தாயில் வாழிப்படை பொருதென்னென வையாநனி வந்தான். |
|
உரை
|
|
|
|
|
சார்த்தூலகன் அவனை எதிர்த்தல் | |
1313. | கள்ளாற்களி யிலனாலிகல் களமண்டிய செருவின் உள்ளாற்களி யுற்றானிவ னுயிருண்கென வுருவி் நள்ளாதவர் தலைவவ்விய நகைவாளது வீசித் தள்ளாதவ னெதிரேமிகு சார்த்தூலக னேற்றான். |
|
உரை
|
|
|
|
|
1314. | வரையாலென முகிலாலென விருளாலென மறியும் திரையார்கட லளவேசெல விரியுந்நனி சிறுகும் நிரையாமுகின் முடிதேய்தர நிமிருந்நில மிதனுட் புரையாரிட மறையும்மிது பொருகின்றதொர் பொலிவே. |
|
உரை
|
|
|
|
|
1315. | மாலைத்தலை வளர்மாமதி நிகரும்வளை யெயிறுஞ் சோலைத்தலை மலைபோல்வன தோளும்மிவை யுடையான் காலைத்தலை யிளஞாயிறு புரைவான்மிசை யெறியாச் சூலத்தலை நுதியாலவ னாகந்துளை யிட்டான். |
|
உரை
|
|
|
|
|
சார்த்தூலகன் அவனைக் கொல்லல் | |
1316. | இடுவானையவ் விடுசூலமொ டுடலும்மிரு துணியாப் படவீசின னயில்வாளது படலும்பல மாயன் அடவாமையி னுருவம்முத லதுவேதன தாகத் தடமால்வரை யெனவீழ்தலு முடைவார்தம ரானார். |
|
உரை
|
|
|
|
|
1317. | வாழுநா ளுலந்து மற்றவன் மண்மேல் மலையென மறிதலு மலைமேல் ஆழியான் றமர்க ளஞ்சினா ரஞ்சு மாயிடை யடுதிற லுடையான் ஊழிநா ளெரியுங் கூற்றமு முருமு மொப்பவன் கைப்படை நவின்றான் சூழிமா லியானைத் துளைமதஞ் செறிப்பத் தோன்றினான் றூமகே தனனே. |
|
உரை
|
|
|
|
|
1318. | மலையெ டுத்திடுகோ மாநிலம் பிளக்கோ மறிகட லறவிறைத் திடுகோ உலைமடுத் துலகம் பதலையா வூழித் தீமடுத் துயிர்களட் டுண்கோ சிலையிடத் துடையார் கணைவலத் துடையார் சிலர்நின்று செய்வதீங் கென்னோ நிலையிடத் தவரு ணிகரெனக் குளரே னேடுமின் சென்றென நின்றான். |
|
உரை
|
|
|
|
|
சுவலனரதன் தூமகேதனனை நெருங்குதல் | |
1319. | வண்டினம் பாடு மாலையன் வரித்த கச்சினன் வயிரப்பூ ணிரைத்த தண்டினன் கழலன் றமனியத் தாரான் சார்ந்தனன் சார்தலு மவனைக் கண்டன னன்றே கடலொளி மேனிக் காளைதன் மாமனுக் கிளையான் உண்டினி நமக்கோர் போரென வெதிரே யுவந்துசென் றவற்கிவை யுரைத்தான். |
|
உரை
|
|
|
|
|
1320. | மலையெடுத் திடுவாய் மாநிலம் பிளப்பாய் மறிகட லறவிறைத் திடுவாய் உலைமடுத் துலகம் பதலையா வூழித் தீமடுத் துயிர்களட் டுண்பாய் நிலையிடத் துளரோ நிகரெனக் கென்பாய் நின்றனை நிகருனக் காகித் தொலைவிடத் தல்லாற் சொல்லிவை நுங்கட் கொழியுமோ தூமகே தனனே. |
|
உரை
|
|
|
|
|
1321. | என்றலு மதுகேட் டெரியுடைத் தேரோ னென்பவ னாமிவ னென்றே நன்றுநன் றென்று நக்கன னக்கே நாணிலர் நம்மலை வாழ்வார் இன்றெனக் கெதிராய் நீகொலோ பொருவா யென்றன னினையன மொழியாக் குன்றினும் பெரியான் கூற்றினும் வெய்யோன் கொண்டனன் றண்டுகை வலித்தே. |
|
உரை
|
|
|
|
|
1322. | இன்றெனக் கெதிராய் நீகொலோ பொருவா யென்றிகழ்ந் துரைத்தனை யேடா நின்றெனக் கெதிரா நீர்மையர் நின்போ னிரம்பவாய் திறந்துரைப் பவரோ என்றன னெனலு மெதிர்தெழித் தவனு மெழுந்தன னெழுந்தன னிவனும் அன்றுபோர் மலைந்தா ரதிர்ந்ததிவ் வுலக மமரொழித் தரசரு நின்றார். |
|
உரை
|
|
|
|
|
1323. | ஆர்த்தன திசைக ளதிர்ந்ததிவ் வுலக மலைகடல் கலங்கின விருளாற் போர்த்தது விசும்பு புலம்பின விலங்கல் புரண்டன பொருவரைத் துறுகற் சார்த்தினர் புடைக்குந் தண்டின ரெதிரத் தாங்கியும் வாங்கியுந் தடுத்தும் வேர்த்தனர் மெய்யால் வெதும்பினர் மனத்தால் விசும்பினை மயங்கவே திரிந்தார். |
|
உரை
|
|
|
|
|
1324. | கண்டவர்க் கெல்லாங் கண்ணுளார் போல்வார் காண்டலுக் கரிதவ ருருவம் தண்டின தொளியர் தங்களார்ப் பிசையுந் தயங்குதா ராரமும் விரவி எண்டிசை மருங்கு மிடைநிலத் திடையு மிருள்கெழு விசும்பின தகமுங் கொண்டன சிலம்பு குலுங்கின விலங்கல் கூற்றமுந் தலைபனித் ததுவே. |
|
உரை
|
|
|
|
|
தூமகேதுவீழ அவனைச் சார்ந்தார் நடுங்குதல் | |
1325. | தட்டுப்போ ரதனுட் டமனியக் கடிப்புந் தாரினோ டாரமுஞ் சரியப் பட்டுப்போ யுருண்டா னவருளங் கொருத்தன் பருவரை கரியதொன் றனையான் துட்டப்போ ரியானைத் தூமகே தனனுந் தோற்குமோ வொருவனுக் கென்று மட்டுப்போ ரணிந்த மணிமுடி மன்னர் மயங்கினார் மானமு மிழந்தார். |
|
உரை
|
|
|
|
|
வேறு அங்காரவேகன் திவிட்டனது சேனையின் மேல் வருதல் | |
1326. | பொருதாங் கழிந்து புகைகேது வீழ வரிகேது முன்ன முடிய எரிதாங்கு வேலொ டினியீங்கு நின்று பெறுகின்ற தென்னை யெழுகென் றரிதாங்க ணாவ தெளிதாகு மாறொ ரமர்செய்கை கொண்டு பிறர்முன் கரிதாங்க ளான கழன்மன்ன ரேறு வருமங்கொர் காளை கடிதே. |
|
உரை
|
|
|
|
|
1327. | கணிகொண் டலர்ந்த நறவேங்கை யோடு கமழ்கின்ற காந்த ளிதழால் அணிகொண் டலர்ந்த வனமாலை சூடி யகிலாவி குஞ்சி கமழ மணிகுண்ட லங்க ளிருபாலும் வந்து வரையாக மீது திவளத் துணிகொண் டிலங்கு சுடர்வேலி னோடு வருவா னிததென்கொ றுணிவே. |
|
உரை
|
|
|
|
|
தேவசேனன் அவனை எதிர்க்கச் செல்லுதல் | |
1328. | அருமாலை வேல்வல் லழல்வேக னாகு மவனாயி லாக வமைக எரிமலை வேல்வ லிளையார்க ணிற்க விவனென்னொ டேற்க வெனவே பொருமாலை வாள்கை பொலிகே டகத்த னணிபோ திலங்கு முடியன் செருமாலை மன்ன ரிறைதேவ சேன னெதிரே சிவந்து செலவே. |
|
உரை
|
|
|
|
|
1329. | மலைமேலு மென்னை மதியாது வாழ்தி மனிசர்க் குவந்து படையாய் நிலமேலு நின்று பொருவா னினைந்து வருவாய் நினக்கி துறுமே சலமேலு மின்ன வுடையாயை வென்று தலைகொண்ட பின்னை நுமரைக் குலம்வேர் களைந்து குடிபொன்று விப்ப னிதுயான் மகிழ்ந்த குணனே. |
|
உரை
|
|
|
|
|
தேவசேனனுடைய மறுமொழியும் இருவரும் பொருதலும் | |
1330. | மலைமேலு நின்னை மதியாது வாழ்வன் மனிதர்க் குவந்து படையாய் நிலமேலு நின்று பொருவான் புகுந்த நிலைகண்டு நின்று மிஙனே சலமே யுரைத்தி யிதுவோவு னாண்மை தழல்வேக வென்ன வெதிரே உலமேசு தோளி னொளிவேலி னோடு மொருவா னெதிர்ந்து பொருவான். |
|
உரை
|
|
|
|
|
1331. | வாள்வீசு மாறும் வடிவேலின் வந்த வடிவேல் விலங்கும் வகையுந் தோள்வீசு மாறு மவைமீளு மாறு மிடைசொல்லும் வீர மொழியுந் தாள்வீசு போழ்து கழலோங்கு மாறு மெதிர்தாங்க ளார்க்கு மொலியுந் நாள்வீய லன்றி யுரைவீய யாவர் நவில்வார் நமக்கு மரிதே. |
|
உரை
|
|
|
|
|
1332. | மாலா லெதிர்ந்து மலைவாயை நீடு பொரவைப்ப தென்னை யினியென் வேலா லழிப்ப னெனவே லெறிந்து விறல்வேக னார்ப்ப மறவோன் மேலா லிலங்கு மணிகேட கத்தி னொருபால் விலங்கி யொருபாற் றோலாத வாளி னெறியத் துணிந்து சுடர்கான்று வீழ்ந்த ததுவே. |
|
உரை
|
|
|
|
|
1333. | எய்வே லறுத்து வறியானை நோக்கி யெறியாது நிற்ப வவனோர் நெய்வேல் பெயர்த்து நிருமித்த தேந்தி யுருமொத்து நேர்ந்து பொருதான் வெவ்வே றெருட்டி யொருதோ ணிமிர்த்தி விரலொன்று சுட்டி வரவே வைவேலி னோடு நிமிர்கின்ற தோளை யறவீசி னானம் மறவோன். |
|
உரை
|
|
|
|
|
1334. | நெய்யுற்ற வேலு மொருதோளும் வீழ வொருதோளி னீடு செருவைச் செய்யுற்ற போழ்தி னெதிரே விலங்கி யிதுதேவ சேனன் மொழியும் கையுற்ற தொன்று கவலே னுனக்கி துறுமாறு போக வெனவும் மையுற்ற காளை வருவானை வாளி னுயிர்வவ்வி னானம் மறவோன். |
|
உரை
|
|
|
|
|
1335. | தாம மார்ந்த மணியைம்பாற் றைய றாதை மைத்துனனாஞ் சேம மார்ந்த தனிச்செங்கோற் றேவ சேனன் கைவாளாற் சாம வண்ணன் றழல்வேகன் சாய்ந்தான் சாய்ந்த பொழுதத்தே தூம மாரங் கமழ்குஞ்சிச் சுவண கேது தோன்றினனால். |
|
உரை
|
|
|
|
|
1336. | அஃதே யஃதே யங்கார வேக னாங்கோ ரயில்வாளால் வெய்தாங் குற்று வீடினனா னன்றே நன்றே மறுமாற்றம் மைதோய் மலையும் மண்ணகமு நமதாச் செய்வென் செய்யேனேற் செய்தா ரமர ருலகாள்வ னிரண்டி லொன்று திண்ணமிதே. |
|
உரை
|
|
|
|
|
1337. | என்னா விரண்டு மருங்கினுமற் றிளநல் யானைக் குழாஞ்சூழப் பொன்னார் தேரும் புரவிகளு மிடைந்து பூமி பொறைகூர முன்னாற் செல்ல வருவானை முந்நீர் வண்ணன் றன்மாமன் மின்னார் விளங்கு விறல்வேலான் கண்டே வெகுண்டு மேற்சென்றான். |
|
உரை
|
|
|
|
|
1338. | கானற் புரவி கலிமாவோ டெதிர்ந்த கருங்கை மதவேழ மான யானை தம்மோடே மலைந்த தேரு மாறேற்ற ஈன மில்லா விளையாரோ டிளையார் திளைத்தா ரிவ்வகையே தானை தம்முட் டாக்கலுறத் தாமுந் தம்முட் டலைப்பெய்தார். |
|
உரை
|
|
|
|
|
1339. | அருவி யிலங்கு மதயானை யனல வூன்றி யணைபோழ்திற் குருவ ரோடு படைபொருதல் கூடிற் றன்று குலவேந்தே பொருவ ரென்னப் படுவாரங் கொருவர் போந்து பொரவொருவர் ஒருவி நிற்ற லுரங்கொல்லோ வென்றா னுவண மேந்தினான். |
|
உரை
|
|
|
|
|
1340. | குரவ ரென்னு முபசார மிருக்கக் கோதை மிளிர்வேலாய் பொருவ ராயின் யாரோடும் பொருவர் பூமி வேண்டுபவர் ஒருவி நிற்ப துரங்கொல்லோ வென்னு முரையு முணர்தியிவண் இருவே முள்ளும் யார்பாலஃ துறுவ தென்றா னொளிமுடியான். |
|
உரை
|
|
|
|
|
1341. | ஆக வமைக வதுவேயவ் வரச நீதி யாகிவிடிற் போக பொருவ னெனப்புகைந்து பொருவெஞ் சிலையொன் றிடனேந்தி் வேக யானை செலவுந்திச் சிறுநா ணெறிந்து வெஞ்சரங்கண் மாக மெல்லா முடனடுங்கத் தொடங்கி னானம் மழைபோல்வான். |
|
உரை
|
|
|
|
|
1342. | தொடங்கு கின்ற சுடுசரங்கள் சுருங்கி யொருகை செவிகாறும் முடங்கு மொருகை சிலைவளையா நிமிருங் கண்ட தித்துணையே இடங்க ளின்றி விசும்பெல்லா மிருள வீர்க்கோ டீர்க்குதையத் தடங்க லின்றி யடுசரமே மிடைந்த தவனி வட்டமே. |
|
உரை
|
|
|
|
|
1343. | சொல்லான் மலிந்த புகழினான் சுவண கேது சொரிகின்ற கல்லார் கொண்டற் பெயல்போலுங் கணையின் மாரி கழல்வேந்தன் வில்லாற் செய்த விசாலவட்ட மேலு நாலு மருங்கினுமாய்க் கொல்லாற் செய்த வேலாற்குக் குடையாய் நின்று கவித்ததே. |
|
உரை
|
|
|
|
|
1344. | வில்லாற் செய்த விசாலவட்டந் தன்னா லந்தில் விலக்கப்பட் டெல்லாத் திசையுஞ் சரஞ்சிந்தி யிருள வீழு மெல்லைதன்னுட் சொல்லாற் புகழ்தற் கரியான்பாற் றூணி வறிய வாதலுந்திண் மல்லாற் செய்த தோளான்மேன் மாய வெம்போர் செய்குற்றான். |
|
உரை
|
|
|
|
|
1345. | செய்ய லுற்ற மாயமதுஞ் சிலையு நிலையுஞ் சுருங்கியவைத். தெய்ய லுற்ற பகழியையு மெண்ணி வேந்த னென்செய்தான் மைய லுற்ற மதயானை மலைப்ப வுந்தி மாற்றானை நைய லுற்றா யெனவுரையா நாம வாளி சிந்தித்தான். |
|
உரை
|
|
|
|
|
1346. | தொடுத்த வாளி யதுபொழுதே சுவண கேது கையகத்து மடுத்த சிலையும் பகழியும்வெம் மனத்துக் கொண்ட மாயமதும் அடுத்துத் துணிசெய் தப்புறம்போ யரசர் குழாங்க ளிரியப்பாய்ந் துடுத்த தூவி தோன்றாமை நிலத்தி னுள்புக் கொளித்ததே. |
|
உரை
|
|
|
|
|
1347. | அம்புஞ் சிலையுங் கைம்மறிய வகத்த விஞ்சை துணிப்புண்டு வம்புகின்ற மனத்தினனாய் வெய்யோன் மீட்டு விறலோன்மேல் வம்பு கொண்ட வளையங்கள் கணையம் விட்டு விட்டேறு செம்பொன் னாழி யிவையெல்லாஞ் சென்று பாயச் சிந்தித்தான். |
|
உரை
|
|
|
|
|
1348. | இப்பா லிவர்கள் பொரும்பொழுதி னியானை யிரண்டு மெதிர்தாக்கிக் கைப்பா லெடுத்துக் கறைமருப்பு மிடைந்து கண்க ளெரிசிந்தி மெய்ப்பா லெடுத்துக் குத்தியுமெய் விலங்கிப் பாய்ந்து மொன்றொன்றைப் பொய்ப்பா லின்றி யெடுத்திட்டுப் புடைத்தும் பெயர்த்தும் பொருதனவே. |
|
உரை
|
|
|
|
|
1349. | துண்ட வேகப் புள்ளுயர்த்தான் துளைக்கை யானைச் சுடர்முடியான் புண்டரீகக் கொலையானைக் குடைந்து போகும் பொழுதகத்துக் கொண்ட வாளன் கேடகத்தன் குதிகொள் வான்போ லெழுந்தெதிரே மண்டு வானை வயவேந்தன் கண்டு வாளி சிந்தினான். |
|
உரை
|
|
|
|
|
1350. | மடுத்த வாளுங் கேடகமுங் கவசக் கண்ணு மார்பகமு மடுத்துக் குத்தி னாற்போலக் கழிந்த தம்பு கழிதலுமே எடுத்து மறிக்கப் பட்டான்போ லிலங்கு பூணு மாரமுந்தேந் தொடுத்த தாம மாலையுமுன் சொரிய வீழ்ந்தான் சுடர்வேலான். |
|
உரை
|
|
|
|
|
வேறு அவன் படை சிதறிப்போதல் | |
1351. | தூவி யார்சுவ ணக்கொடி மேவி னான்பட வேமிகை மாவி னார்கடற் றானைபோர் ஓவி யாங்குடை வுற்றதே. |
|
உரை
|
|
|
|
|
சிரீசேனன் போர் மீது செல்லல் | |
1352. | வென்று வேற்றவர் நின்றனர் என்ற மாற்ற மிசைத்தலும் நன்று நன்றென நக்குமேற் சென்ற னன்சிரீ சேனனே. |
|
உரை
|
|
|
|
|
1353. | கடைந்த கார்க்கடல் போற்கலந் துடைந்த வாட்படை வெள்ளநீர்க் கடைந்த வான்சிறை யாயினான் மிடைந்த வேற்படை வீரனே. |
|
உரை
|
|
|
|
|
ஓடும் தம்மினத்தார்க்கு அவன் கூறியது | |
1354. | விஞ்சை வேந்தர்க ளேமிகை அஞ்சு வாரென வாயிடை நஞ்ச னார்களை நக்கிவை கொஞ்சி லான்சில கூறினான். |
|
உரை
|
|
|
|
|
1355. | வாளர் வார்கழல் வீக்கிய தாளர் தாமுடைந் தோடினால் நாளை நாணுடை நங்கைமார் தோளை நாணிலர் தோயவே. |
|
உரை
|
|
|
|
|
1356. | பொன்று மிவ்வுட லின்பொருட் டென்று நிற்கு மிரும்புகழ் இன்று நீரிகந் தீர்களாற் குன்றின் மேற்குடை வேந்திர்காள். |
|
உரை
|
|
|
|
|
1357. | மான மாமணி வீழ்த்துயிர்க் கூன மாமென வோடுவீர் ஈன வார்மயிர்க் கேதமாங் கான மாவது கானுமே. |
|
உரை
|
|
|
|
|
சிரீசேனன் ஆயுதத்தைப் பிரயோகித்தல் | |
1358. | ஈண்ட வின்னன சொல்லலு மீண்டு விஞ்சைய ரேற்றனர் ஆண்ட கைச்சுட ராயிடைத் தூண்டி னான்சுடர் வேலினான். |
|
உரை
|
|
|
|
|
1359. | கொண்ட வாளினர் விஞ்சையர் மண்டி னாரெதிர் மண்டலுங் கண்டகள் கண்டங்க ளாயினார் விண்ட வாட்படை வீரரே. |
|
உரை
|
|
|
|
|
1360. | கருவிப் புட்டிலின் கண்டமும் இருமிப் பக்கரைப் போழ்களும் விரவிப் போர்க்கள வாயெலாம் புரவித் துண்டங்கள் போர்த்தவே. |
|
உரை
|
|
|
|
|
1361. | உருப்பு நீரவொள் வாள்களா னெருப்பு நீரவர் வீசலும் பொருப்பு வீழ்வன போன்றன மருப்பு நீண்மத யானையே. |
|
உரை
|
|
|
|
|
1362. | சீர்மு கந்தசெஞ் சேற்றினுள் ளார்மு கம்புக வாழ்ந்தரோ நீர்மு கந்நில முற்றபொற் றேர்மு கஞ்சிதை வுற்றதே. |
|
உரை
|
|
|
|
|
சிரீசேனன் முன்னணிக்கு வருதல் | |
1363. | மாலும் வாட்படைப் போரினுள் ஆலு மாமிசை யானவன் கால னாமென வந்தனன் சீல மானசிரீ சேனனே. |
|
உரை
|
|
|
|
|
1364. | மண்ணின் மேலுறை வாரொடு மண்ணின் மேற்செரு வல்லனே விண்ணின் மேலுறை வாரொடு விண்ணின் மேற்செரு வல்லனே. |
|
உரை
|
|
|
|
|
சிரீபாலன் சிரீசேனனொடு போர்செய வருதல் | |
1365. | வாய்ந்த போரிவை வல்லிரேல் ஏந்து மின்படை போந்தனெக் காய்ந்த கட்டுரை கேட்டலுஞ் சேர்ந்த னன்சிரீ பாலனே. |
|
உரை
|
|
|
|
|
«’ஊ சிரீபாலன் ஒரு குதிரை மேற்கொள்ளல் | |
1366. | உவரி யோங்கு திரையெனக் கவரி வேய்ந்த கலினமா இவர வேறி னானரோ எவரு மஞ்சு மீட்டினான். |
|
உரை
|
|
|
|
|
1367. | திரிவில் சாரி கைச்செயல் புரவி சேர்ந்து பொங்கின வரிவில் வாளி மன்னரும் மருவு போர்ம யங்கினார். |
|
உரை
|
|
|
|
|
1368. | வில்லும் வாளும் குந்தமும் சொல்லி னாற்றொ ழிற்கொளீஇ எல்லை யின்று பொருதலொந் தொல்ல மர்தொ டங்கினார். |
|
உரை
|
|
|
|
|
1369. | வெல்லு நீர விஞ்சையன் வில்லும் வீசு குந்தமும் வல்லி தின்ம டித்தனன் மல்ல மலர்ந்த மார்பினான். |
|
உரை
|
|
|
|
|
1370. | அற்ற குந்த மாண்டவச் செற்ற லன்றெ ழித்துமேற் கொற்ற வன்றன் கோகின்மேல் வெற்றி வாளின் வீசினான். |
|
உரை
|
|
|
|
|
1371. | ஒளித யங்கு தோளின்மேல் தெளித மாவெ றிந்தவாள் உளித மாக நீட்டினான் பளித நாறு மேனியான். |
|
உரை
|
|
|
|
|
1372. | தளித யங்கு தண்மதுக் களித யங்கு கண்ணியாற் குளித வாளி னுற்றபுண் ணெளித மாயி லங்குமே. |
|
உரை
|
|
|
|
|
1373. | இட்ட வாள றுத்தபின் விட்ட மாவின் மேற்செலாத் துட்ட மாத்து ரந்தனன் மட்டு வார்த்த மாலையான். |
|
உரை
|
|
|
|
|
1374. | மாதி போகு மானமா மீது போக விட்டவன் சோதி கூடு சுடர்முடிக் கேத மாக வெண்ணினான். |
|
உரை
|
|
|
|
|
1375. | எண்ணி னன்னெ டுப்பலுங் கண்ணி யஃது கருதிமா மண்ணில் வாவி யாங்குமேல் விண்ணின் மேலு மிக்கதே. |
|
உரை
|
|
|
|
|
1376. | கொண்ட தன்கு சைக்குறி கண்டு மன்னு கதியினால் விண்ட லத்தின் மீதுபோய். அண்ட யத்த டுத்ததே. |
|
உரை
|
|
|
|
|
1377. | வானின் வாவு விஞ்சையன் மான மாம ணிம்முடி ஏனை மன்ன னேதியான் மீனின் வந்து வீழ்ந்ததே. |
|
உரை
|
|
|
|
|
வேறு அவன் சேனை பின்னிட்டோடல் | |
1378. | திருநிலை யகமுடைச் செல்வன் செங்கதிர் விரிநிலை மணிமுடி மிளிர்ந்து வீழ்தலும் பொருநிலை யழிந்துபிற் புறக்கொ டுத்தது பருநிலை மலையவர் பரவைத் தானையே. |
|
உரை
|
|
|
|
|
1379. | வேயுடை வெள்ளிசேர் விலங்கல் வேந்தர்கள் ஆயிடை யுடைதலு மாழி யான்மகன் காய்வுடை மனத்தவன் கனக சித்திரன் சேயிடை புகுந்தன னின்று செப்பினான். |
|
உரை
|
|
|
|
|
1380. | உருவிய வாளின னுடுத்த கச்சினன் வெருவர விழித்தனன் வீர வேகமோ டொருவனை யொருவனங் கஞ்சி யோடுமேல் அருவருப் புடையதவ் வாண்மை யாகுமே. |
|
உரை
|
|
|
|
|
1381. | மதிதொடு நெடுவரை மான விஞ்சையர் விதிபடு மனிசரை வெருவி மீண்டனர் அதிசய மிதுவென வலர நக்கனன் கதிர்விடு வளையெயி றுடைய காளையே. |
|
உரை
|
|
|
|
|
1382. | உடைந்தவர் மனங்களை யுருவ வீழ்த்திடு மடந்தையர் வடிக்கணம் பல்ல வாய்விடின் மிடைந்தவர் தொடங்கிய வீரக் கோட்டியுள் அடைந்தவ ரடுபடைக் கஞ்சல் வேண்டுமோ. |
|
உரை
|
|
|
|
|
1383. | தானுடம் பிறந்ததற் பின்னுந் தன்றிறல் வானுடன் புகழ்தர நிற்கு மண்மிசை மானுட ருயிர்கொள மானமில் லிர்காள் ஊனுடம் பிதன்பொருட் டுடையல் வேண்டுமோ. |
|
உரை
|
|
|
|
|
1384. | நெய்யினா னிழன்றுநீர் நின்ற நீளொளி வெய்யவா ளமரிடை வெருவி யிட்டதங் கையினாற் கருனையின் கவளங் கொள்ளிய ஐயன்மார் போந்ததென் றசதி யாடினான். |
|
உரை
|
|
|
|
|
1385. | இன்னண மொழிந்தெதிர் தெழித்து மாற்றலர் மன்னிய கடற்படை மண்டி வாளினாற் கன்னவி றோளினான் கண்டங் கண்டமாத் துன்னிய துணிபல தொடரத் தோன்றினான். |
|
உரை
|
|
|
|
|
1386. | விலங்குவேல் கொண்டையை யுந்தி வேற்றவர் மலங்கமேற் செல்வது மான மாமெனப் பொலங்கலங் கழலொடு புலம்பப் பூமிமேல் அலங்கலா னடந்தம ரழுவந் தாங்கினான். |
|
உரை
|
|
|
|
|
1387. | பத்திரக் கடிப்பினன் பைம்பொற் றாரினன் சித்திர மணித்தொடர் திளைக்குந் தானையன் கத்திகைக் கண்ணியன் காணும் பாலெலாந் தொத்திணர்க் குஞ்சியான் காளை தோன்றினான். |
|
உரை
|
|
|
|
|
1388. | வம்பமா விருதுணி பட்ட மாவொடு செம்பொனா லியன்றதேர் சிந்தி வீழ்ந்தன கம்பமா வொழிந்தன களிறு காளைவாள் வெம்புலால் விரையினும் வெறுத்த தில்லையே. |
|
உரை
|
|
|
|
|
1389. | வார்குலாங் கருங்குழன் மன்ன ரேற்றவர் நீர்குலாங் குருதியுட் குளிப்ப நேரினி ஆர்கொலேற் பவரென வஞ்ச வெஞ்சினக் கார்குலா முருமெனக் காளை தோன்றினான். |
|
உரை
|
|
|
|
|
1390. | காளைநங் கனைகழற் கனக சித்திரன் வாளம ரழுவத்து மண்டி னானெனக் கேளவர் மொழிதலுங் கிரீவன் றம்பிமார் ஆளிவர் கடற்படை யனன்றெ ழுந்ததே. |
|
உரை
|
|
|
|
|
அச்சுவக்கிரீவன் தம்பிமார் போரிடுதல் | |
1391. | வெருவிமுன் னுடைந்துபோய்ப் பெயர்ந்து வேற்றவர் ஒருவில்வா ளழுவம்வந் துந்து மற்படை உரவுநீ ரிருங்கட லோதம் போந்தபின் அரவநீர் வேலைமீ தலைப்ப தொத்ததே. |
|
உரை
|
|
|
|
|
1392. | மன்னவற் கிளையவர் வயிர மால்வரை அன்னவ ரயிற்படை யரச வீரர்க டுன்னலர்க் கரும்படர் தோன்றத் தோன்றுபு முன்னினர் கனன்றுபோர் முறுக முட்டினார். |
|
உரை
|
|
|
|
|
1393. | கண்ணிடை சிவந்துகை சுட்டிக் காய்ந்துதம் பண்ணுடை மழகளி றுந்தி னார்படை எண்ணிடை யிடுமிட மின்றி யெங்கணு மண்ணிடை யவரொடு மயங்கி நின்றதே. |
|
உரை
|
|
|
|
|
1394. | இலைதடு மாறின பகழி யெங்கணுஞ் சிலைதடு மாறின சிலைத்த தேர்க்குழாம் மலைதடு மாறின போல மான்றரோ தலைதடு மாறின தடக்கை வேழமே. |
|
உரை
|
|
|
|
|
1395. | முரிந்தன ,மணிநெடுந் தோள்கண் முத்துக நெரிந்தன களிறுடை மருப்பு நேர்முகஞ் சரிந்தன தலைபல தறுக ணில்லவர் இரிந்தன ரிழிந்தது குருதி நீத்தமே. |
|
உரை
|
|
|
|
|
1396. | மரைமயி ரணிந்தன மான மாப்பல திரையென வுருண்டன திலக வெண்குடை நுரையென நிவந்தன நுந்து மப்புனற் கரையெனக் கிடந்தன களிற்றின் கூவையே. |
|
உரை
|
|
|
|
|
1397. | பெருகிய குருதியுட் பிறக்கு செந்தடி அருகுடை யளற்றினு ளழுந்திப் பாகமே சொரிகதிர்க் கோடக முடிக டோன்றலாற் பொருகளம் புற்றெடுக் கின்ற தொக்குமே. |
|
உரை
|
|
|
|
|
1398. | மாடடைந் தெதிர்ந்துதம் வயிரத் தண்டினாற் பீடடைந் தவர்பிடர் புடைப்ப வானையின் கோடுடைந் துதிர்ந்தன கொடுமுட் கேதகைத் தோடுடைந் தொருவழித் தொகுத்த லொத்தவே. |
|
உரை
|
|
|
|
|
1399. | குழைசுடர்ந் திலங்குதா ரரசர் கோலமாண் இழைசுடர் தோள்களா லெறிய யானையின் தழைசெவி மதமுகத் தொளிக்குஞ் சக்கர மழைசொரி முகில்புகு மதிய மொத்தவே. |
|
உரை
|
|
|
|
|
1400. | செருவரை யனையதோண் மன்னர் சேனையுள் அருவரை புகுமயி லனைய வாயின கருவரை யனையன களிநல் யானையின் பெருவரை முகம்புகும் பிண்டி பாலமே. |
|
உரை
|
|
|
|
|
1401. | மண்ணியன் மன்னர்கை முறுக்கி விட்டிடக் கண்ணியன் யானைமேற் கணையம் பாய்வன திண்ணிய நெடுவரைச் சென்னி மீமிசை விண்ணியல் விளங்குமீன் வீழ்வ போன்றவே. |
|
உரை
|
|
|
|
|
1402. | கடுத்துவீழ் கடாக்களிற் றுழவர் தந்தலை அடுத்தகீ சகந்தமோ டற்று வீழ்வன தொடுத்ததேன் றொடர்ந்த வீப் பிறங்க லோடுடன் உடுத்தமால் வரைமருங் குருவ மொத்தவே. |
|
உரை
|
|
|
|
|
1403. | அணியமு மாரமுங் கொடிஞ்சுங் கோலுமாத் துணிவினைக் கவனமாத் துரக்கும் பாகரா மணியவிர் தேரெனு மதலை நாயகர் பணிவருங் குருதிநீர்ப் பவ்வத் தோட்டினார். |
|
உரை
|
|
|
|
|
1404. | நுதலிய செருநிலக் குருதி நீரினுண் முதலையின் முதுகென நிவந்த தோற்பரங் கதலிகை காம்பொடு கடுகித் தாமரை மதலையந் தாளணை வாளை போன்றவே. |
|
உரை
|
|
|
|
|
1405. | கைவரை யொழுகிய கணையம் பாய்ந்துதம் மெய்வரை நிரைத்திட விழுந்த யானைகள் நெய்வரை நீணிலத் தலத்து மேற்பல மொய்வரை முனையடிப் புண்ட வொத்தவே. |
|
உரை
|
|
|
|
|
1406. | ஊடக மெரிமணி நாகங் கவ்விய நாடக விரிமதி நடுங்கி வீழ்வபோல் ஆடக மணிநகைக் கடகக் கையொடு கேடகந் திசைதிசை கிளர்ந்து வீழ்ந்தவே. |
|
உரை
|
|
|
|
|
1407. | துளைப்படு புண்ணுமிழ் சோரி பாய்ந்தழெக் களிப்படு சிலம்பின கவந்த மாடுவ முளைப்புடை முடைத்திடை சுடர மூட்டிய விளக்கிடு குற்றியின் விரிந்து தோன்றுமே. |
|
உரை
|
|
|
|
|
1408. | அஞ்சல ரமர்க்கள மென்னு மார்வயல் விஞ்சையர் குருதிநீர் வெள்ளந் தேர்த்தழெ வெஞ்சின நாஞ்சிலா லுழுது வெள்ளியான் தஞ்சமார் தன்புகழ் தயங்க வித்தினான். |
|
உரை
|
|
|
|
|
அச்சுவக்கிரீவனின் இளையோர் வினவுதல் | |
1409. | வெளியவன் மிளிர்மரை புரையுஞ் செங்கணான் அளியில னமர்க்களங் கடாக்கொள் கின்றவவ் விளையவன் யாரென வினவிக் கேட்டனர் கிளையமர் கிரீவனுக் கிளைய வீரரே. |
|
உரை
|
|
|
|
|
1410. | சுரமைய ரதிபதி சிறுவன் மார்களுட் பெரியவ னிவனெனப் பிறந்த செற்றமோ டெரியவிர் வெகுளியா ரிளைய காளைய ரொருவன்மே னால்வரும் யானை யோட்டினார். |
|
உரை
|
|
|
|
|
1411. | இரத்தின கண்டனு மேனை வீரரும் வரைத்தனர் வருபடை வீதி வாயெலாம் எரித்தனர் நால்வரு மிளைய காளையை முரித்திடு முனிவின ராகி முற்றினார். |
|
உரை
|
|
|
|
|
விசயன் அடங்கினன் என்று ஒலி எழுந்தது | |
1412. | அடங்கின னரசிளங் குமர னோவென உடங்கலந் தொல்லொலி யெழுந்த தாயிடை மடங்கலில் கருங்கடன் மலங்கிற் றொத்தது தடங்கமழ் சுரமைநாட் டரசன் றானையே. |
|
உரை
|
|
|
|
|
புதிய உதவி விசயனுக்குக் கிடைத்தலும் அவன் போரிடுதலும் | |
1413. | எரிபுரை யுளைகேளா டிலங்கு வெண்பிறை விரிவன வெனவிளங் கெயிற்றொ டாயிடை அரியர சடைந்ததொன் தவனை யேறினான் புரிவகை நாஞ்சிலும் புதிய தெய்தினான். |
|
உரை
|
|
|
|
|
1414. | செய்யவாய் நாஞ்சிலுஞ் செங்கட் சீயமும் ஐயனாங் கெய்தலு மதிர வார்த்தது வையமா ளிளையவன் றானை மற்றவர் மையன்மா யானைகண் மயங்கி யிட்டவே. |
|
உரை
|
|
|
|
|
1415. | பொருபடை புகைந்தவர் வழங்கு மாயிடைச் செருவுடை யவரகன் செல்வ மார்பகம் உருவுடை நாஞ்சிலா லுழுதிட் டானரோ மருவுடை யவரையும் மயக்கு மைந்தனே. |
|
உரை
|
|
|
|
|
கனகசித்திரன் போர்க்கு வருதல் | |
1416. | ஒருவனோர் நாஞ்சிலா லூழித் தீப்புரை இருவரோ டிருவரை யானை நான்கொடு செருவினு ளமர்வெலக் கேட்டுச் சேர்ந்தனன் கருவரை யனையதோட் கனக நாமனே. |
|
உரை
|
|
|
|
|
1417. | காளையக் கனகசித் திரனுங் காய்ந்துதன் வாளைவாய் துடைத்தெதிர் மடுப்ப மற்றவன் தோளையுஞ் சுடர்கெழு நாஞ்சில் வாயினால் ஆளியே றனையவ னழுந்த வூன்றினான். |
|
உரை
|
|
|
|
|
1418. | வனைகதி ரிலங்குதோள் வயிர கண்டனோ டனைவரு மலாயுதற் கமர்தொ லைந்ததுங் கனகசித் திரனது பாடுங் கேட்டரோ அனல்படு மனத்தனங் கொருவ னாயினான். |
|
உரை
|
|
|
|
|
1419. | பொடித்தலை நிலத்தவர் போரு மாண்மையு முடித்திடு கெனமுனிந் தெழுந்து மூரிவான் மடுத்ததோர் வரைதனை வயிரக் கைகளால் எடுத்தன னிரத்தினக் கிரீவ னென்பவே. |
|
உரை
|
|
|
|
|
1420. | வரிந்துவீழ் கச்சையன் வனைந்த தாடியன் முரிந்தெழு புருவத்தன் முழங்கு தீயென எரிந்தன னிறுவரை யெடுத்து மேற்செல இரிந்தது சுரமைய ரிறைவன் றானையே. |
|
உரை
|
|
|
|
|
அருக்ககீர்த்தி அம்புவிடல் | |
1421. | ஆங்கவ னடைதலு மருக்க கீர்த்திகை வாங்குவிற் புகுந்தது வாளி யொன்றவன் ஓங்கிருந் தூணியிற் சுடர்ந்த தொல்லெனத் தாங்கருந் திறலவன் சந்தித் தோட்டினான். |
|
உரை
|
|
|
|
|
1422. | தொடுத்ததுந் துரந்ததும் விடலை தோளிடை மடுத்ததுங் கிழித்தது மண்ணினுட்புகக் கடுத்ததும் கண்டுநின் றவர்க டம்மையும் படுத்தது பகலவன் பகழி யென்பவே. |
|
உரை
|
|
|
|
|
1423. | வரையொடு வரையென மறிந்து மண்ணின்மேல் விரையுடை யலங்கலான் வீழு மாயிடைத் திரையொடு கனைகடல் கலங்கிச் சிந்தின புரையுடை விலங்கலும் புலம்பு கொண்டவே. |
|
உரை
|
|
|
|
|
வேறு அச்சுவகண்டனுக்கு அறிவித்தல் | |
1424. | தம்பியர் பாடு மக்க ளிறந்ததுந் தனக்குப் பாங்காய் வெம்பிய வீரர் போருள் விளிந்ததும் விரைவி னோடிச் செம்பினை யுருக்கி வெய்தாய்ச் செவிமுதற் சொரிந்ததேபோ லம்பொன்செ யாழியானுக் குரைத்தன ரரக்குண் கோலோர். |
|
உரை
|
|
|
|
|
1425. | ஆங்கவர் மொழிந்த போழ்தி னருவரை கரிய தொப்பான் ஈங்கிவர் மாற்ற மாயி னிருந்தினி யென்னை யென்னா வாங்குநீ ருலகில் வாழு முயிர்களை வாரிக் கொண்டு வீங்குநீர்க் கடலுட் பெய்யும் விஞ்சையை விடுக்க நேர்ந்தான். |
|
உரை
|
|
|
|
|
1426. | ஓர்ந்தவன் மனத்து விஞ்சை யொருபுடை யெய்த லோடுஞ் சார்ந்தது சண்ட வேகை பணிபணி யென்று சார வார்ந்தநீ ருலகின் வாழு மனிதரை வல்லை யாகில் தேர்ந்துகொண் டொருவ ரின்றித் தெய்வமே செகுத்தி டென்றான். |
|
உரை
|
|
|
|
|
சண்டவேகை கூற்றுவனிடம் கூறுதல் | |
1427. | கொடியவன் விடுத்த போழ்திற் கூற்றுவன் றன்னைக் கூவி வடியெயி றிலங்க நக்கு வாழிய தோள்க ளின்று விடுகதி ராழி வெய்யோன் வேண்டவென் வாயுட் பட்டு முடியுமிவ் வுலக நீயு முறைத்தொழின் முடித்தி யென்ன. |
|
உரை
|
|
|
|
|
1428. | அணங்குகள் குழுமி யாமும் பெருவயி றார்து மென்று துணங்கைகோத் தாடி நக்குச் சுடரிலைச் சூல மேந்தி வணங்குபு சூழ மற்ற மாபெருந் தெய்வம் வந்து மணங்கமழ் சுரமை நாடன் றானைமேன் மடுத்த தம்மா. |
|
உரை
|
|
|
|
|
1429. | பட்டடி நெடிய வீங்கு பரட்டின நொடிக்குங் கால ஒட்டிய வயிற்ற வற்ற லுகிரிடை மயிர முன்கை கட்டிய கண்ணி பீலித் தலையின கழற்காய் போல வட்டமா யுருளுங் கண்ண கணங்கள்வந் திரைத்த வன்றே. |
|
உரை
|
|
|
|
|
1430. | வரைகளை யுருள வுந்தி வந்ததோர் சண்ட வாயு நிரைகிளர் சுடர தாகி நிமிர்ந்ததோ ருருவச் செந்தீ திரைகளை மறிய வீசிச் சிறந்ததோ ரழுவ முந்நீர் விரைகிள ருருவத் தெய்வ மிதுபடை விடுத்த வாறே. |
|
உரை
|
|
|
|
|
1431. | வரைகளு மரனு மண்ணு மறித்திடும் வாயுச் செந்தீப் புரைகிளர் பொடிக ளாரப் புணர்த்திடும் புணர்ந்த போழ்திற் றிரைகிளர் பரவை முந்நீ்ர் திரைத்துக்கொண் டொழுகு மிஃதால் உரைகிள ருலகைத் தெய்வ முண்ணிய வுடன்ற வாறே. |
|
உரை
|
|
|
|
|
1432. | மருங்கவை புணர்த்த பின்னை வானக வளாக மெல்லாங் கருங்கலொன் றகன்ற மேலாற் கவித்தது கவித்த லோடும் இருங்கலி யுலக மெல்லா மிருள்கொள வெருவி நோக்கிப் பொருங்கலி யரசர் தானை போக்கிட மற்ற தன்றே. |
|
உரை
|
|
|
|
|
1433. | வாளொடு வாள்கள் வீழா மைந்தரை மைந்த ருந்தித் தாளொடு தாள்க டாக்கித் தலையொடு தலைகண் முட்டித் தோளொடு தோள்க டேய்ப்பச் சுடரணி சுடர்ந்து சிந்த ஆளுடை யரசன் றானை யரவமோ டுடைந்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
1434. | அன்னண முடைந்த போழ்தி னருக்கனை முகத்து நோக்கி என்னிது விளைந்த வாறென் றிருங்கடல் வண்ணன் கேட்பக் கன்னவில் வயிரத் தோளாய் காய்ந்தவன் விடுக்கப் பட்டு மன்னுயி ருண்ணுஞ் சண்ட வேகையாம் வருவ தென்றான். |
|
உரை
|
|
|
|
|
1435. | செற்றலன் விடுத்த பின்றைச் செகுத்துயிர் பருகி னல்லான் மற்றிது மறித லில்லை மறிப்பவர் பிறரு மில்லை இற்றிதன் நிலைமை யென்ன விருங்கடல் வண்ண னக்காங் கற்றமி லலங்கல் வேலோ யஞ்சினை போறி யென்றான். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் பேருருக் கொள்ளல் | |
1436. | பேயெரி யுமிழ்ந்து நம்மேல் வருமெனப் பேசு கின்றாய் நீபெரி தினியை யென்னா நெடியவன் றன்னை நோக்கிக் காயெரி சுடர்விட் டாங்குக் கனன்றனன் கனலலோடு மாயிரு விசும்பு மஞ்சும் வடிவினன் வள்ள லானான். |
|
உரை
|
|
|
|
|
1437. | நலம்புரி செய்கை மேனாட் பெற்றநற் றோழ னேபோல் உலம்புரி யுருவத் தோளாற் குற்றபோழ் துதவ லுற்று வலம்புரி வலத்த தாக விடத்ததோர் வயிர வல்விற் கலம்புரி கனபொற் பூணான் கைவந்து புகுந்த வன்றே. |
|
உரை
|
|
|
|
|
1438. | நெதிசொரி சங்க மேந்தி நெடுஞ்சிலை யிடங்கைக் கொண்டு விதிதரு நீல மேனி விரிந்தொளி துளும்ப நின்றான் மதியொரு பால தாக வானவின் மருங்கு கோலிப் புதியதோர் பருவ மேகம் போந்தெழு கின்ற தொத்தான். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் உரப்பலும் சண்டவேகை தாழ்தலும் | |
1439. | வலம்புரி சிலம்ப வாய்வைத் திருஞ்சிலை வளைய வேற்றிக் கலம்புரி கனபொன் னாழிக் கைவிரல் கதிர்ப்பச் சூட்டி உலம்புரி வயிரத் தோளா னுரப்பினா னுரப்ப லோடுஞ் சலம்புரி தெய்வ மஞ்சித் தன்னுரு வடைந்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
1440. | நிலத்திடை நின்று வான முடியுற நிமிர்ந்து கண்ணின் புலத்தின தளவு நீங்கிப் பொம்மென வுயிர்த்து விம்மிப் பிலத்தின தளவிற் பேழ்வாய் பிறழ்ந்திலங் கெயிற்ற தாகிச் சலத்தினைப் புரிந்த தெய்வந் தலைபனித் துடைந்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
அச்சுவகண்டன் போர்க்கெழுதல் | |
1441. | தெய்வமாங் குடைந்து தன்பாற் படையினைத் திரைத்துக் கொண்டு மையிரு விசும்பி னேறக் கண்டபின் மாற்று வேந்தன் கையினைப் புடைத்துக் கண்கள் சிவந்துவா யெயிறு கவ்வி வையக நடுங்க நோக்கி மழகளி றணைக வென்றான். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் அச்சுவகண்டனுடன் போரிடல் | |
1442. | மாலுமால் களிறு நுந்தி மற்றவன் வருத லோடு மாலுமால் புரவித் திண்டே ரரசர தரவத் தானை வேலினா னுடங்கு நில்லா துடைந்திட வெகுண்டு நோக்கி நீலமா மணிக்குன் றொப்பா னெடுஞ்சிலை யிடங்கைக் கொண்டான். |
|
உரை
|
|
|
|
|
1443. | வாய்ந்தநல் வயிரத் துண்டம் வளைந்தொளி துளும்ப வள்ளாற் சேந்தன சிறுக ணோடு திசைமுகஞ் சிறகு தம்மால் வேய்ந்தனெ விரித்து வீசி விசும்பிடை யிழிந்து வந்து காய்ந்தெரி கணையி னாற்குக் கருடனு முழைய னானான். |
|
உரை
|
|
|
|
|
1444. | கருடனை வலங்கொண் டேறிக் கார்முகங் கையி னேந்தி் மருடரு விசும்பி னேறி மணிவண்ண னெதிர்ந்த போழ்தின் இருடனக் கெய்திற் றோரா னெரிகதி ராழி வேந்தன் பொருடனக் கினியி லாத புகழ்ச்சிகள் புகல லுற்றான். |
|
உரை
|
|
|
|
|
1445. | தானவர் நின்னைப் போலத் தந்திற லறிவி லாதார் ஈனவ ரிரங்கி வீழ்ந்தா ரேனையர் தொழுது வாழ்ந்தார் வானவ ரென்னை யஞ்சி வானிடை மறைந்து செல்வார் ஊனவர் தம்மு ணீயே யுயிரெனக் கிழக்க லுற்றாய். |
|
உரை
|
|
|
|
|
1446. | மண்ணுள்வாழ் சிதலைச் சாதி மற்றவை வாழு நாள்கள் எண்ணியாங் கிகந்த பின்னை யிறகுபெய் தெழுங்கள் போலாம் கண்ணினா லதனை நீயுங் கருடப்புள் ளதனை யேறி விண்ணினா றெதிர்ந்து வந்தாய் வேற்கிரை யாகி யென்றான். |
|
உரை
|
|
|
|
|
1447. | மாறலா மனிதர் தம்மேல் வண்சுட ராழி யானுஞ் சீறினா னென்ற போழ்திற் சிறுசொலாய் நிற்கு மென்று தேறினார் மொழிகள் கொண்டு செவிசுடு சொற்கள் கேட்டு மாறினே னென்ப தோரா யளியற்றா யனல்விக் கின்றாய். |
|
உரை
|
|
|
|
|
1448. | என்றலு மதனைக் கேட்டே யிருங்கடல் வண்ண னக்கு நன்றுநன் றுரைத்தி மீட்டு நல்லையே பெரிது மேடா குன்றின்மே லிருந்து நீநின் குழுவினுண் மொழிவ தல்லால் இன்றுவந் தென்மு னின்று மிதுகொலோ கருதிற் றென்றான். |
|
உரை
|
|
|
|
|
அச்சுவகண்டன் சரமழை பொழிதல் | |
1449. | சிறியவ னுரைகள் வந்தென் செவிசுடும் பொறுக்க லாற்றேன் எறிகடல் வளாகந் தன்னு ளிவன்பெய ரொழிப்ப னென்று செறிமணிக் கடகக் கையாற் றிண்சிலை குழைய வாங்கிப் பொறிநுதல் யானை மேலான் சரமழை பொழிவிக் கின்றான். |
|
உரை
|
|
|
|
|
1450. | கடுத்தவ னெய்த போழ்திற் கருடன்றன் சிறகு தன்னாற் புடைத்திட நெரிந்துப் பொங்கிச் சரங்கள்போய்ப் புரள நோக்கி விடைத்திறல் விடலை தன்மேல் வெம்பிய மனத்த னாகிப் படைத்திற லாளன் றெய்வப் படைத்தொழில் பறைக்க லுற்றான். |
|
உரை
|
|
|
|
|
அச்சுவகண்டன் நாகாத்திரம் விடுதல் | |
1451. | காயிரும் பனைய வெய்யோன் கருமணி வண்ணன் றன்மேல் ஆயிரம் பணத்த தாய வருமணி யாடு நாக மாயிரும் புகழி னான்றன் வன்சிலை வாங்கி யெய்யச் சேயிருஞ் சுடர்கள் சிந்தித் தீயுமிழ்ந் தோடிற் றன்றே. |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் கருாடத்திரம் விடுதல் | |
1452. | கண்டன னதனை மற்றக் கருங்கடல் வண்ணன் கண்டே ஒண்டிற லுவணப் புள்ளி னுருவினோர் தெய்வ வம்பு கொண்டனன் றொடுத்த லோடுங் கொடுஞ்சிறை நுடங்க வீசித் துண்டமா நாகந் தன்னைத் துண்டத்தாற் றுணித்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
அச்சுவகண்டன் ஆக்னேயாஸ்திரம் விடுதல் | |
1453. | ஆயிடை யனன்று மீட்டு மழலுமி ழாழி வேந்தன் தீயொடு புணர்த்த போழ்தத் தெய்வவம் பெய்த லோடும் வேயுடை விலங்கல் சுட்டு விசும்பிடை வெம்ப வெம்பிச் சேயிடை யெரிந்து சிந்திச் செல்வன்மேற் சென்ற தன்றே. |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் வருணாத்திரம் விடுதல் | |
1454. | காரணி வண்ணன் கண்டே கதிர்மணிக் கடகக் கையால் வாருண மென்னு மம்பு வாங்கினன் றொடுத்த லோடுஞ் சீரணி விசும்பு மண்ணுந் திசைகளு மிருள வீழ்ந்து நீரணி புயலின் றாரை நிரந்துவீழ்ந் தவித்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
அச்சுவகண்டன் நித்திராபாணத்தை விடுதல் | |
1455. | விண்களை வெதுப்பு நீர்மை வெய்யவன் வெகுண்டு மீட்டுங் கண்களைத் துயிற்று மம்பு தொடுத்தனன் றொடுத்தலோடும் மண்களை மயக்கி மாக்க டுயில்கொள மரங்கள் சாயப் புண்களை யணையும் வேலான் படைமுகம் புக்க தன்றே. |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் அதற்கு மாறாக ஓர் அம்பு விடுதல் | |
1456. | அயிலுடை யனல்செய் வேலோ னதனையு மறிந்து மற்றுத் துயில்விடை செய்யு மம்பு தொடுத்தனன் றொடுத்த லோடும் வெயிலிடை விரிந்து விண்பால் விளங்கிவீ ழிருளை நீக்கப் பயிலுடை யுலகந் தேறிப் பட்டது முணர்ந்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
அச்சுவக்கிரீவன் ஆழிவிடுதல் | |
1457. | சீற்றமொ டிரியுஞ் செல்வத் தெய்வவம் பெய்த வெல்லா மாற்றின னறுப்ப நோக்கி மற்றவன் மாற்ற லான்பே ராற்றலை யறிந்து வெய்ய வாழிகை யேந்தி யின்னும் ஏற்றனை பொருதி யோவென் றிலங்கெயி றிலங்க நக்கான். |
|
உரை
|
|
|
|
|
1458. | தாழியா தெய்யுந் தெய்வப் படைமுத லறுத்துச் சாலப் பாழியான் மெலிந்தும் பண்டைப் பாவனை பயிற்றி யென்னை ஆழியால் வெருட்ட லுற்றா யலந்தனை பெரிது மென்றான் சூழிமால் யானை வல்ல சுரமைநாட் டிளைய கோவே. |
|
உரை
|
|
|
|
|
1459. | புனைகதி ரார மார்பன் புகைந்துகை முறுக்கி விட்ட கனைகதிர்த் திகிரி கான்ற கனசுடர் வளைக்கப் பட்டு முனைகதிர் கானச் செந்தீ முழங்கிமேன் மூடப்பட்ட வனைகதிர்க் குன்றம் போல மணிவண்ணன் மறைந்து போனான். |
|
உரை
|
|
|
|
|
1460. | உலங்கொண்ட வயிரத் தோளாற் குற்றதை யுணர மாட்டார் நிலங்கொண்டு மனித ராழ நிரந்தழ லுமிழ்ந்து நேமி் புலங்கொண்ட வயிரக் குன்றின் புடைவரும் பரிதி போல வலங்கொண்டு வந்து மைந்தன் வலப்புடை நின்ற தன்றே. |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் ஆழியைத் திருப்பிவிடல் | |
1461. | கன்னவில் கடகத் தோளான் கண்டுகை தொழுது கொண்டு மின்னவிர் விளங்கு நேமி விட்டனன் விடுத்த லோடும் மன்னனை மார்பு கீண்டு மணிமுடி யெறிந்து மற்றைப் பொன்னவி ரோடை யானைப் புகர்நுதற் புக்க தன்றே. |
|
உரை
|
|
|
|
|
1462. | கழலவன் கனன்று விட்ட கதிர்நகை நேமி போழ மழகளி யானை தன்மேன் மறிந்துவீழ் கின்ற மன்னன் நிழலவிர் விலங்க னெற்றி நிமிர்ந்ததோர் காள மேகம் அழலவன் றிகிரி பாய வற்றுவீழ் கின்ற தொத்தான். |
|
உரை
|
|
|
|
|
1463. | நெறிதலை திரிவி லான்மே னினைவிலான் மொழியப் பட்ட மறுதலை முடிக்கு மேது வாய்வழி யழிப்ப தேபோற் பொறிதலை மணந்த காளை மேல்வரப் புணர்த்த நேமி செறிதலை யிலாத மன்னன் றன்னையே செகுத்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
அச்சுவகண்டன் வீழ்ச்சியைக் கண்டோர் கூறுதல் வேறு | |
1464. | கொலையானை மேலோர் குளிர்வெண் குடைக்கீழ்ப் பலயானை மன்னர் பலர்போற்ற வந்தான் மலையாகம் போழாக மற்றிவனோ சாய்ந்தான் நிலையாமை சால நிலைபெற்ற தன்றே. |
|
உரை
|
|
|
|
|
1465. | நெருநல் நெடுங்குடைக்கீழ் நேமிமுன் செல்லப் பொருநல் வயவேந்தர் போற்றிசைப்ப வந்தான் செருநன் மறநேமி சென்றதுவே போழ எரிபொன் மணிமுடியா னின்றிவனோ சாய்ந்தான். |
|
உரை
|
|
|
|
|
1466. | தானெறிந்த நேமி தனக்கே பகையாகத் தேனெறிந்த தாரான் சிறுவரைக்கண் வீடினான் யானறிந்த வாற்றா லெளிய வுலகத்தில் வானறிந்த வாழ்க்கையு மாயமே போலுமால். |
|
உரை
|
|
|
|
|
1467. | வலியு மடுதிறனும் வாழ்வும் வனப்பும் பொலிவுங் கடைபோகா பூமிமேல் வாழ்வீர் கலியன்மி னென்றிதனைக் காட்டுவான் போல மலிபொன் மணிமுடியான் மற்றிவனோ மாய்ந்தான். |
|
உரை
|
|
|
|
|
1468. | மாக மழைவண்ணன் மாற்றான்மேல் விட்டெறிந்த வேக விறலாழி மீட்டே பெயர்ந்துதன் போக வரைமார்பம் போழ்படுப்பப் பொன்றினான் ஆகுவ தாமதனை யாவ ரறிகிற்பார். |
|
உரை
|
|
|
|
|
இறந்தவனை அவன் தேவியர் காணல் | |
1469. | இன்னன கண்டார் மொழிந்திரங்கு மாயிடை அன்ன மனையா ரயகண்டன் றேவிமார் பொன்னவிர் பூங்குழையார் பொங்கேந் திளமுலையார் மின்னவிர் நுண்ணிடையார் மேல்வந் தணுகினார். |
|
உரை
|
|
|
|
|
1470. | வண்டார் மணிமுடியான் மார்பு துணிகிடப்பக் கண்டாள் பெருந்தேவி கண்டேதன் கைசோர்ந்து வெண்டாரை வேனெடுங்க ணீர்மூழ்கி மேற்பிறழ விண்டா ளுயிர்பின்னும் வெற்றுடல மாயினாள். |
|
உரை
|
|
|
|
|
1471. | கோதை சரியக் கொடிமருங்கு லேரழிய மாதர் மடமஞ்ஞை மாநிலத்து வீழ்வனபோற் காதலன் மார்பகலங் கண்டேதங் கண்புடைத்துப் பேதை மடமகளிர் வீழ்ந்தார் பிணையன்னார். |
|
உரை
|
|
|
|
|
1472. | வாங்கு கொடிமுறுக்கி மாநிலத்து விட்டனபோல் தாங்கார் புரண்டுதலை தடுமாறாய்க் கிடந்தங் கேங்கினா ரெத்துணையோர் போழ்தங் கழிந்தெழுந்து நீங்காத வாருயிரார் நீரா யுருகினார். |
|
உரை
|
|
|
|
|
1473. | அரைச ரேறே யடலாழி வலவ வார்க்குந் தோலாதாய் புரிசை நகரநூற் றொருபதுடையாய் பூமி முழு தாண்டாய் உரைசெய் துலகம் பாராட்டு மொளியா யோடை யானையாய் வரைசெய் தனைய திரடோளாய் மறிதல் பொருளோ வயவேந்தே. |
|
உரை
|
|
|
|
|
1474. | வானு மண்ணு முடனஞ்சும் வகையாய் மன்னர் மணிமுடிமேல் தேனும் வண்டும் பலசென்று திளைக்குஞ் செம்பொற் செறிகழலாய் நான மண்ணி யகிறேக்கி நாவி கமழு மெழிலாகம் ஈன மண்ணி லிவர்காணக் கிடத்த லினிதோ விகல்வேந்தே. |
|
உரை
|
|
|
|
|
1475. | குழவி நாயிற் றெழிலேய்க்குங் குழம்பார் கோலக் குங்குமமே மெழுகி மீதோர் மணியாரம் வீசிக் கிடந்த விரையாகம் ஒழுகு குருதிச் சேறாடி யோடை யானை நுதன்மீது வழுவி வீழ்ந்த வகைநாடின் மாயம் போலு மறவேந்தே. |
|
உரை
|
|
|
|
|
1476. | பொன்னி னாய வமளிமேற் பூவி னாய வணைபொருந்தி அன்ன மனையா ரடிவருட வமரும் பள்ளி யமராதே மன்னு மிங்கோர் மதயானை நுதன்மேல் மறிந்து மணிமுடிசாய்த் தென்னு முரையாய் துயில்கோட லிசையோ வங்கள் பெருமானே. |
|
உரை
|
|
|
|
|
1477. | மகரப் பைம்பூண் மடவார்கள் வயிரக் குழையும் பொற்றோடுந் தகரக் குழலு மளகமுந் திருத்திப் பயின்ற தாழ்தடக்கை சிகர மனைய மதயானைச் செவிமேற் சரிந்து செங்குருதி பகரக் கழுகு பாராட்டக் கிடத்த றகுமோ படைவேந்தே. |
|
உரை
|
|
|
|
|
1478. | வெய்ய சுடரோன் றண்கதிரோ னெனவீங் கிவர்கண் மதிலியங்கார் பைய வந்து தாமரையின் பரவைத் தடத்து மாளிகைமேல் ஐய தலத்து மெலவிரிந்த தலராச் செல்லு மாணையாய் செய்ய குருதிச் சேறாடிச் சிறுமா னிடர்க்கே தோற்றாயே. |
|
உரை
|
|
|
|
|
1479. | பணங்கொ ணாகம் பலசூழ்ந்து பகல்செய் மணியின் சுடரேந்தி அணங்கி யகலா துழைநிற்கு மாணை யுடைய வடல்வேந்தே வணங்கி வந்து பலதெய்வம் வழிபா டாற்று மறநேமிக் குணங்கொள் படையாய் கூடாரு முளரோ நினக்குக் கோமானே. |
|
உரை
|
|
|
|
|
1480. | பெருமா மழைக்கண் மாதேவி பிணையின் மாழ்கி யிவணழிய வருமா முரசம் பிறர்பேர்கொண் டறைய வாழி யயனீங்கத் திருமா நகருஞ் செல்வமுற்றுஞ் சிதையக் கண்டுஞ் சீறாயால் உருமா லென்னுந் திறலினா யுலகம் வேண்டா தொழிந்தாயோ. |
|
உரை
|
|
|
|
|
1481. | மூரி முந்நீ ருலகங்கண் முழுதுங் காவன் முனிந்தாயோ யாரு மில்லா வடியோங்கள் வழிபா டாற்ற மாட்டாயோ சீரின் மன்னும் வளநாடுந் தெய்வப் படையுஞ் செல்வமுநீ பாரின் மன்னர் பிறர்கொள்ளப் பணித்த தென்னோ படைவேந்தே. |
|
உரை
|
|
|
|
|
1482. | தொழுதுஞ் சூழ்ந்து மடிபற்றித் தொடர்ந்துஞ் சுரும்புண் கோதையும் வழுவ மயங்கி மாழாந்து மருண்டுந் தெருண்டு மடவார்கள் அழுத கண்ணீ ரகன்ஞாலத் தரச ருருக வருவியாய் ஒழுக நெடுமான் முனிவென்னு மூழித் தீயு மவிந்ததே. |
|
உரை
|
|
|
|
|
அச்சுவக்கிரீவனைத் தகனம் செய்தல் | |
1483. | மஞ்சு தோயும் வரையார்தம் மன்னன் றன்னை மதயானை மஞ்சு தோன்ற நுதலினிழித் தந்த ணாளார் மெய்தீண்டிப் பஞ்சுந் துகிலும் பூம்பட்டும் பாயப்பள்ளி படுத்ததன்மேல் வஞ்ச மில்லாப் புகழானை வயங்கு செந்தீ வாய்ப்பெய்தார். |
|
உரை
|
|
|
|
|
தம்பியர் முதலியோர்களைத் தகனம் செய்தல் | |
1484. | மன்னன் றம்பி மார்களையு மக்க டமையு மற்றொழிந்த பொன்னம் புனைதார் வேந்தரையும் பொருது பட்ட போர்க்களமீ தென்னுஞ் சாடு மெரிவாய்ப்பெய் திரங்கி யழுதாங் கேகினரால் உன்னி வந்த முடிக்ககிலா துடைந்த வேந்த னுழையாரே. |
|
உரை
|
|
|
|
|
உரிமை மகளிர் தாபத நிலை எய்தல் | |
1485. | ஆவி யாய வயக்கிரீவற் கமிழ்தம் பூத்த வஞ்சாயற் றேவி மார்கள் கலனழித்துச் சேணி யுலகஞ் சென்றெய்தி வீவில் காமன் வருவீதி கற்பு வேலி யால்விலக்கித் தாவி னிறையின் றாழதனாற் பொறியின் வாயி றாழ்ப்பெய்தார். |
|
உரை
|
|
|
|
|
வேறு திவிட்டனைத் தேவரும் பிறரும் கொண்டாடுதல் | |
1486. | எரிவள ரொளிதரு நேமி யெய்திய திருவளர் படரொளிச் செங்கண் மாலவன் கரிவளர் குஞ்சிமேற் சொரிந்த பூமழை வரிவளை முரசொடு மயங்கி யார்த்தவே. |
|
உரை
|
|
|
|
|
1487. | அரிதினி னவனெய்த தெய்வ வம்புகள் உரிதினி னறுத்தொளிர் நேமி கொண்டது பெரிதிது சித்திர மென்று பேரொலி விரிதரு விசும்பிடை விரவி நின்றதே. |
|
உரை
|
|
|
|
|
எஞ்சிய விஞ்சையரின் வேண்டுகோள் | |
1488. | வெஞ்சினஞ் செருக்கொடு வீய மானமும் விஞ்சைய ரொழிந்தன ரொழிந்து வீரனை மஞ்சிவர் மணிவரை வண்ண வாழிய அஞ்சினம் பெரிதனெ வடிவ ணங்கினார். |
|
உரை
|
|
|
|
|
1489. | அஞ்சிய மன்னர்கட் கருளி யாயிடைத் துஞ்சிய மன்னவன் றமரந் தோமில்சீர் விஞ்சைய ருலகினின் மீண்டு வாழ்கென எஞ்சலில் கடிமுரசு அறைய ஏயினான் |
|
உரை
|
|
|
|
|
1490. | கருமுகில் வண்ணனுங் கருடன் மேலிழிந் துருமென வதிர்தரு மோடை யானைமேற் பொருமிகல் வேந்தர்போற் றிசைப்பப் போந்தரோ பரிமிகு படைவிடு பாடி நண்ணினான். |
|
உரை
|
|
|
|
|
விசயனும் திவிட்டனும் தந்தையை வணங்கல் | |
1491. | விரிதரு திங்களின் விளங்கு மேனியன் பெரியவன் றன்னொடும் பெயர்ந்து தாதைதன் றிருவமர் சேவடி சென்று தாழ்ந்தனன் கருவரை யனையதோட் கனபொற் றாரினான். |
|
உரை
|
|
|
|
|
பாயபதி அருகில் நின்ற அரசரிடம் கூறுதல் | |
1492. | மக்கள தாற்றலான் மலர்ந்த கண்ணினன் மிக்குமேல் விரிந்தொளி துளும்பு மேனியன் தொக்கநீர்ச் சுரமைநா டுடைய கோனிவை பக்கநின் றரசர்கள் பணியச் சொல்லினான். |
|
உரை
|
|
|
|
|
அரசன் மக்களுக்கு முடிகூட்டக் கருதல் | |
1493. | தீதறு மணிமுடிச் செல்வக் காளையர் தாதையென் றியலுரை தவத்தி னெய்தினேன் ஆதலா லிவர்தம தரச கோலமெங் காதலங் கண்ணிவை காண லாகுமே. |
|
உரை
|
|
|
|
|
1494. | என்றவன் மொழிதலு மிலங்கு நீண்முடி மின்றவ ழவிரொளி விஞ்சை வேந்தனோ டொன்றிய வரசர்க ளுவந்து சூட்டினார் அன்றவர்க் கரசியன் முரச மார்த்தவே. |
|
உரை
|
|
|
|
|
அரசர்கள் அபிஷேகம் செய்தல் | |
1495. | கங்கையுஞ் சிந்துவு மென்னு மாநதி தங்குநீ ரெனையவுந் தந்து தாமரை பொங்கிய முகத்தபொற் குடங்க ளாற்பல மங்கல மரபினான் மன்ன ராட்டினார். |
|
உரை
|
|
|
|
|
1496. | திருமணி நிழலொளித் தெய்வ வான்படை பருமணிப் பாற்கடற் பரவை நீர்முகந் தெரிமணிக் குடங்களி னேந்தி யேந்தறன் சுரிமணிக் குஞ்சிமேற் சொரிந்த தென்பவே. |
|
உரை
|
|
|
|
|
வித்தியாதரர் அபிஷகம் செய்தல் | |
1497. | வெந்திறல் விறலொளி விஞ்சை வேந்தரு மந்தர மணிமலை மலரு மம்மலை அந்தர வருவியும் விரவி யாட்டினார் இந்திர னனையவற் கிறைஞ்சி யென்பவே. |
|
உரை
|
|
|
|
|
1498. | திருமகள் பரிவொடு சென்று சார்தரு முருவினு மொளியினு முலகந் தன்னின்மேன் மருவிய நூலது மரபி னானுமக் கருமுகில் வண்ணனைக் காவ னாட்டினார். |
|
உரை
|
|
|
|
|
1499. | விட்டெரி மணிவரை நேமி வேந்தனை அட்டிவ னெய்தினா னாழி யாதலான் மட்டிவ ரலங்கலான் வாசு தேவனென் றொட்டிய வொளிமுடி யொன்று சூட்டினார். |
|
உரை
|
|
|
|
|
விசயனுக்கு முடி சூட்டுதல் | |
1500. | பெருகிய மிகுதிறற் பெரிய நம்பி்யை மருவிய புகழ்பல தேவ நீண்முடி கருவிய மரபினாற் கவித்துக் காவலன் றிருவமர் சேவடி சிலம்ப வாழ்த்தினார். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டனிடம் ஆழியொழிந்த படைகளும் வந்து சேர்ந்தன | |
1501. | இருங்கலி விழவினோ டரசி யற்றலும் பெருங்கலி விழவின தெய்வம் பேணுவ சுருங்கலில் சுடரொளி துளும்பத் தோன்றல்பால் அருங்கல மொழிந்தவு மடைந்த வென்பவே. |
|
உரை
|
|
|
|
|
1502. | சக்கரந் தண்டுவாள் சங்கு விற்குடை மிக்கெரி மணியிவை யெய்தி வீரியன் மக்களு ளரசர்கள் வணங்குந் தெய்வமாத் தொக்கெரி சுடரொளி துளும்பத் தோன்றினான். |
|
உரை
|
|
|
|
|
1503. | சென்றுயர் வலம்புரி செம்பொற் றாமரை என்றியல் பெயரின விரண்டு மாநிதி ஒன்றல மணிகளு மொளிபொன் மாழையு நின்றிவை சொரிந்தொளி நிழற்று கின்றவே. |
|
உரை
|
|
|
|
|
சக்கராயுதம் கோயிலைச் சார்தல் | |
1504. | மிக்கெரி சுடர்முடி சூடி வேந்தர்க டொக்கவ ரடிதொழத் தோன்றுந் தோன்றலால் அக்கிரப் பெருஞ்சிறப் பெய்தி யாயிடைச் சக்கரப் பெருஞ்செல்வச் சாலை சார்ந்தவே. |
|
உரை
|
|
|
|
|
பிறவும் கோயில்களைச் சார்தல் | |
1505. | அருங்கலப் பெருந்தெய்வ மவையுந் தத்தமக் கொருங்குசெய் வளநக ரடைந்த வொண்சிறை சுருங்கலில் கருடற்குச் சுடருந் தோன்றலாற் பெருங்கலி மாளிகை பேணப் பட்டதே. |
|
உரை
|
|
|
|
|
புலவர் திவிட்டனது வரலாறு கூறுதல் | |
1506. | முரசுவீற் றிருந்ததிர் மூரித் தானையன் அரசுவீற் றிருந்தனன் பின்னை யாயிடைக் கரைசெய்நீர்க் கருங்கடல் வேலி காவலற் குரைசெய்நூற் சரிதைகள் புலவ ரோதினார். |
|
உரை
|
|
|
|
|
1507. | ஆதிநா ளரசிய னீதி யாங்கெடுத் தோதினார் புலவர்க ளோது மாயிடைத் தீதிலார் திகிரியஞ் செல்வர் செய்கைமேற் கோதிலாத் திறல்சில கூறப் பட்டவே. |
|
உரை
|
|
|
|
|
1508. | எழுவகை யருங்கல மிரண்டு மாநிதி தழுவின சனபத மீரெண் ணாயிரம் விழவணி நகர்களும் வேந்தர் கூட்டமும் எழுவின முரைப்பினிவ் வெண்ண வென்பவே. |
|
உரை
|
|
|
|
|
கோடிக்குன்ற வரலாறு கூறுதல் | |
1509. | வன்றிறன் மலிபல தேவர் தம்மொடு சென்றவர் செற்றலர்ச் செகுத்துப் பின்னரே குன்றமொன் றெடுத்தலுங் கொணர்ந்து கூறினார் பொன்றலில் புராணநூற் புலவ ரென்பவே. |
|
உரை
|
|
|
|
|
1510. | ஆங்கவர் மொழிதலு மருங்க லக்குழாம் ஈங்கிவை யென்னினு முன்ன மெய்தினார் வாங்குநீர் மணலினும் பலர்கொ லோவென வீங்கிய செருக்கிலன் வீர னாயினான். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் கோடிக்குன்றத்தைப் பெயர்த்து உயர்த்தல் | |
1511. | அறிபவ ரவையவை மொழியக் கேட்டலும் நெறிபடு நிதியமே நிறைந்த சிந்தையன் எறிகடற் படையினோ டெழுந்து சென்றரோ குறுகினன் கோடிமா சிலைவன் குன்றமே. |
|
உரை
|
|
|
|
|
1512. | எரிமணிக் கடகக்கை யிரண்டு மூன்றியப் பெருமணி நிலம்பில மாகக் கீழ்நுழைத் தருமணி நெடுவரை யதனை யேந்தினான் திருமணி நெடுமுடிச் செல்வ னென்பவே. |
|
உரை
|
|
|
|
|
1513. | கைந்நிலம் புகநுழைந் தெடுப்பக் கல்லென மைந்நில நெடுவரை மறிய மற்றதன் செந்நில முழைமுகஞ் சிலம்புஞ் சீரினால் அந்நிலம் வாய்திறந் தழைப்ப தொத்ததே. |
|
உரை
|
|
|
|
|
1514. | பிலங்களு ளுறைவன பெரிய நாகத்தின் புலங்கெழு தாட்சிய புச்சந் தாழ்வன அலங்கலா னெடுத்திட வகழ்ந்தெ ழுந்தவவ் விலங்கலின் விழுகதிர் வேர்க ளொத்தவே. |
|
உரை
|
|
|
|
|
1515. | குழுவிய குவளையங் குண்டு மாச்சுனை ஒழுகிய வருவிநீ ருக்கு வீழ்வன கழுமிய நிலம்விட வெடுப்பக் கார்வரை அழுவதன் கண்ணுணீ ரழிவ தொத்ததே. |
|
உரை
|
|
|
|
|
1516. | தழுவிய தடவரைத் தாழ்வர் வாயெலாங் குழுமிய கொழுமுகில் வழுவி வீழ்வன செழுவரை செறியமுன் னுடுத்த செந்துகில் அழிவன வருகுவந் தசைந்த தொத்தவே. |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் குன்றுடன் நின்ற கோலம் | |
1517. | ஒன்றுதன் செறிகுறங் கூன்றிக் கைத்தலம் ஒன்றினா னொளிவரை யுயர வேந்துபு நின்றன னெடியவ னீல மாமணிக் குன்றமோர் குன்றங்கொண் டெழுந்த தொப்பவே. |
|
உரை
|
|
|
|
|
1518. | பொருமாலை வேலரசர் போற்றிசைப்பப் பூவின் அருமா மழைபெய் தமருலக மார்ப்பக் கருமா னெடுவரையோர் கைத்தலத்தி னேந்தித் திருமா மணிவண்ணன் செம்மாந்து நின்றான். |
|
உரை
|
|
|
|
|
1519. | அடிமேல் பூங்கழல்க ளம்பொன் னிலங்கு முடிமேல் சூளா மணிமுளைத்த சோதி கடிமேல் விரிதாரோன் கைத்தலத்த தன்று படிமேன் மணியருவி பாரித்த குன்றமே. |
|
உரை
|
|
|
|
|
1520. | வரையெடுத்த மாணிக்க நீள்கடகக் கையால் உரையெடுப்பான் போனிமிர்ந்து நோக்காது நிற்ப விரையெடுத்த பூந்தார் விறல்வேந்த ரஞ்சிப் புரையெடுத்த மாமகரப் பொன்முடிகள் சாய்த்தார். |
|
உரை
|
|
|
|
|
வேறு திவிட்டன் கோடிக்குன்றை அது முன்னிருந்த இடத்தில் வைத்துத் தன் யானையின் மீது ஏறிக் கொள்ளல் | |
1521. | கோடிக் குன்றங் கோடியல் போலுங் குவவுத்தோள் கோடிக் குன்றங் கொண்டது மீட்டே கொளநாட்டிக் கோடிக் குன்றம் போந்தனெ நின்ற கொலைவேழங் கோடிக் குன்ற மன்னவ னேறிக் குளிர்வித்தான். |
|
உரை
|
|
|
|
|
1522. | தாமரை தங்குந் தண்புனல் வேலித் தடநீந்தித் தாமரை தங்குந் தண்புன னன்னாட் டகமெய்தித் தாமரை தங்குந் தண்சுட ரொண்பொற் கலைநல்லார் தாமரை தங்குந் தண்புகழ் பாடத் தகைபெற்றார். |
|
உரை
|
|
|
|
|
1523. | மாலைத் தண்கேழ் மாமதி போலும் வளர்சோதி மாலைத் தண்கேழ் மாமணி முத்தக் குடைநீழன் மாலைத் தண்கேழ் வண்புன னாடார் மகிழ்வெய்து மாலைத் தண்கேழ் மால்கடல் வட்டம் வளாயிற்றே. |
|
உரை
|
|
|
|
|
1524. | மையார் சென்னி மாளிகை முன்றின் மலர்மேயும் மையார் பொய்கைத் தண்புன னாடன் வரலோடும் மையார் கண்ணி னாம்பய மெல்லா மடவாரிம் மையா நின்றே யெய்தின மென்றே மகிழ்வுற்றார். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் முதலியோர் நகர்புக்கது | |
1525. | ஆம்பன் னாணுஞ் செந்துவர் வாயா ரமிழ்தூறி ஆம்பன் னாணுந் தேமொழி நல்லா ரலர்தூவி ஆம்பன் னாணும் விட்டன ரார்வக் களிகூர ஆம்பன் னாணும் பல்புக ழானந் நகர்புக்கான். |
|
உரை
|
|
|
|
|
1526. | தாமரை நாறுந் தண்பணை யெல்லா மகிழ் நாறச் சாமரை வீசத் தாழ்குழை செம்பொன் சுடர்வீசத் தேமரை யாளுஞ் சேயிழை யாளுந் திருமாலும் பூமரை வேலிப் போதன மென்னுந் நகர்புக்கார். |
|
உரை
|
|
|
|
|
1527. | சூழிணர்மென் மல்லிகையும் வளையமுமின் சூட்டுமெழி றுதையச் சூட்டி யாழகவி மணிவண்டு மணிஞிமிறு மதுகரமு மிசைப்பச் செய்ய காழகிலு நறுஞ்சாந்துங் கடிவாசப் பூம்பொடியுங் கமழ்ந்து கைபோய் ஏழுலகு மணங்கொடுப்ப வெழினகரா ரெதிர்கொள்ள விறைவன் புக்கான். |
|
உரை
|
|
|
|
|
1528. | சூழிணர்மென் மல்லிகையும் வளையமுமின் சூட்டுமெழி றுதையச் சூட்டி யாழகவி மணிவண்டு மணிஞிமிறு மதுகரமு மிசைப்பச் செய்ய காழகிலு நறுஞ்சாந்துங் கடிவாசப் பூம்பொடியுங் கமழ்ந்து கைபோய் ஏழுலகு மணங்கொடுப்ப வெழினகரா ரெதிர்கொள்ள விறைவன் புக்கான். |
|
உரை
|
|
|
|
|
1529. | கோபுரமுங் கழிந்துகுளிர் நகரைவலங் கொடுவீதி குடையோன் செல்ல நூபுரமு மேகலையுங் கலந்தொலிப்ப நுண்மருங்கு னுடங்க வோடி மாபுரத்து மாளிகைதம் மணிக்கதவந் தாழ்திறந்து மனத்தின் றாழும் வேய்புரையு மென்பணைத்தோண் மெல்லியலார் மெல்லவே திறந்தா ரன்றே. |
|
உரை
|
|
|
|
|
1530. | போர் மேக மன்னதிறற் பொருகளிற்று மேலரசர் போற்றிக் கூவச் சீர்மேக மெனச்செறிக ணிடி முரசங் கடிததிர்ந்து திசைமே லார்ப்ப நீர்மேக முத்தினெடுந் தண்குடைக்கீழ் நிழற்றுளும்பு நேமி தாங்குங் கார்மேக வண்ணனிவன் வருவானைக் காண்மினோ கண்க ளார. |
|
உரை
|
|
|
|
|
1531. | செந்தாஅ மரைபுரையுஞ் செழுங்கண்ணுந் தடக்கையும் பவள வாயும் அந்தாஅ மரைநாறு மடியிணையு மவையவையே காண்மின் காண்மின் நந்தாஅ மரைநாட னகையிலங்கு மணியார நவின்ற மார்பம் பைந்தாஅ மரை மடந்தை பாராட்டப் பொலிந்திலங்கும் படியுங் காண்மின். |
|
உரை
|
|
|
|
|
1532. | உரற்கால முறச்செவிய வோங்கெருத்தி னோடைமால் யானைமே லொளிசூழ் மாலை நிரற்கால மணிநிரைத்த நெடுங்குடைக்கீழ் முடிநிழற்ற நெடுமால் பின்னே சரற்கால சந்திரனோர் தடவரைமேல் வெண்முகிற்கீழ்த் தயங்கி யாங்கே யரக்காம்பல் வாயினிரிவ் வருநனலர் தாரா ன்மற் றவன்சீர் காண்மின். |
|
உரை
|
|
|
|
|
1533. | சேதாம்பல் வீழ்ந்தனைய செவ்வாயுஞ் செங்குவளை திளைத்த கண்ணு மீதார்ந்த வெண்ணிலாச் சுடரொளியும் வெள்ளிக்குன் றனைய தோளும் போதார்ந்த கருங்குஞ்சி மணிதொடர்ந்தாற் போற்புறந்தாழ்ந் திருண்ட வாறுங் காதார்ந்த குழைதாழக் கதிருமிழ்ந்த திருமுகத்தின் கதிர்ப்புங் காண்மின். |
|
உரை
|
|
|
|
|
1534. | வேய்காயு மென்பணைத் தோள் வெண்செந் தனமெழுகி முத்தந் தாங்கி ஏகாய மிட்ட வெண்டுகிலின் மகளி ருழைநின் றேத்த ஆகாய மியல்கின்ற வருமணிநல் ளிமானத்தி னகத்தாள் போலு மாகாய வரையாளு மன்னர்கோன் மடமகளை வம்மின் காண்பாம். |
|
உரை
|
|
|
|
|
1535. | அருமணி நீள்விமானத்தி னாகாயப் பளிங்கியன்ற விளிம்பி னாலுந் திருமணியி னொளிமேனி நிழலெறிப்பத் திக்ழ்ந்திலங்கு தெய்வப் பாவை கருமணியின் கதிர்குழற்றிக் கடைசுருட்டிக் கைசெய்து வளர்த்த போலும் புரிமணிபொண் குழறிகழப் பொன்னணைமே லினிதிருந்த பொலிவு காண்மின். |
|
உரை
|
|
|
|
|
1536. | மாநீல மிடைபதித்து வெண்பளிங்கிற் செவ்வரத்த விரேகை வாங்கிப் பானீர வேல்வடிவு படத்திருத்தித் தாமரையுட் பாரித் தன்ன தூநீல வாணெடுங்கண் குழைமுகத்தி னுள்ளி லங்கத் தோன்றுகின்ற வாய்நீல மணியைம்பா லிவ்வணங்கு வரையணங்கோ வன்றோ காண்மின். |
|
உரை
|
|
|
|
|
1537. | எழுதாது மையொளிரு மிருமருங்கு மெறித்திடையே செங்கே ழோடித் தொழுதார்க்கு வரங்கொடுக்குந் தடங்கண்ணி் துணைமுலையின் வளாகஞ் சூழ விழுதாய குங்குமத்தா லிலதையையுங் கொழுந்தினையு மிழைத்தார் பின்னு முழுதார முத்தணிந்தார் நுண்மருங்கு லுளதாக முயன்றா ரல்லர். |
|
உரை
|
|
|
|
|
1538. | போதாவி யேகமழ்ந்து புரைவட்டம் பொன்னிழையாற் பொலிந்து தோன்றி ஊதாவி யானுடங்கு மொள்ளரத்த நுண்கலிங்க மொன்று சேர்த்தி மீதாடி வில்லுமிழு மிடைமணியொண் கலாபங்கண் மிளிர வீக்கி யாதானு மிவரடக்க மிவளல்கு லகலாமை யறிந்து செய்தார். |
|
உரை
|
|
|
|
|
1539. | கந்தாரங் கொளவீக்கிக் கடிவிரிந்து பூம்பாளை கமழுங் காலை நந்தாஅ வனத்திளையா ரெழுவியாழ் நரம்பினுக்கு நலஞ்சா லின்சொன் மந்தார மலர்கமழு மணியைம்பான் மைமதர்த்த மழைக்கண் மாதர் செந்தாஅ மரையடியின் செவ்வியுமற் றிதுவாயிற் றெய்வ மேயாம். |
|
உரை
|
|
|
|
|
1540. | இன்னன பலவுங் காட்டி யிளையவர் காணும் போழ்தின் மன்னவ ரரசர் தன்மேல் மாலையு மலருஞ் சிந்தி மின்னவிர் சிவிறி தம்மால் விரைபொழி தாரை வீக்கித் தொன்னக ரார்வ மென்னுங் களித்தொழி றொடங்கிற் றன்றே. |
|
உரை
|
|
|
|
|
1541. | செம்பொன்செய் பொடியி னாலுஞ் சிவிறியின் றாரை யாலும் அம்பொன்செய் மலரி னாலு மகிற்புகை யாவி யாலும் பைம்பொன்செய் பதாகை யாலும் பரந்திருள் பட்ட வீதி கம்பஞ்செய் யானை யானைக் கண்விளக் குறுத்த வன்றே. |
|
உரை
|
|
|
|
|
1542. | மன்னிய புகழி னான்மேல் வாங்குவிற் புருவ மாக மின்னவிர் பகழி கண்ணாப் புரிசைவெண் மாட மாகத் துன்னிய சால வாயிற் றுளைகளே துளைக ளாகக் கன்னிய ரெய்து தத்தங் கடிநகர் காவல் கொண்டார். |
|
உரை
|
|
|
|
|
1543. | ஆடுவா ரணங்கு கொள்வா ரார்வஞ்செய் கருவி வீக்கிப் பாடுவார் கண்டு கூறிப் பரவுவார் பணிந்து முன்னாற் கூடுவார் கொற்றங் கொள்ளக் கூறுவா ராகி யெங்கும் ஊடுபோக் கரிய தாக வொளிநக ருழையர் சூழ்ந்தார். |
|
உரை
|
|
|
|
|
1544. | அங்குலாங் கொடியி னாலு மகிற்புகை யாலு மெங்கு மங்குலாய் விசும்பு மூட மழுங்கிய சுடர னாகி இங்குலா விளங்க மாட்டே னினியென வெண்ணி வெய்யோன் கொங்குலாங் குளிர்கொள் சோலைக் குடவரைக் குவடு சேர்ந்தான். |
|
உரை
|
|
|
|
|
உடன் வந்தவர் ஆங்காங்குச் சென்று உறைதல் | |
1545. | மணிவரை யரசன் மற்றை வாழ்நகர்க் கோயில் புக்கான் பணிவரை யுழைய ராகிப் பயாபதி பக்க நின்றார் தணிவரை யிலாத செய்கைத் தத்தமக் கியன்ற கோயில் அணிவரை யனைய திண்டோ ளருக்கனோ டரசர் சேர்ந்தார். |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் சயம்பிரபையின் கோயிலை அடைதல் | |
1546. | மஞ்சுடை மாடக் கோயில் வளைவண்ன் புக்க பின்னைச் செஞ்சுடர் மகரப் பூணான் றிருவெதிர் கொள்ளச் சென்று விஞ்சையம் பாவை மேய விடைமணி விமானஞ் சேர்ந்தான் எஞ்சலில் செல்வந் தன்னா லிந்திர னிரட்டி யுள்ளான். |
|
உரை
|
|
|
|
|
சயம்பிரபையைப் பட்டத்துத் தேவியாக்க முரசறைதல் | |
1547. | மாலையாங் கடைந்த போழ்தின் மங்கலத் தேவிப் பட்டங் காலையா மணிவ தென்று கண்ணதிர் முரசிற் சாற்றிப் பாலையாழ் மழலை யாளைக் காப்பணி பயின்ற செல்வம் வேலைசூ ழுலக மெல்லாம் விம்முற விளைந்த தன்றே. |
|
உரை
|
|
|
|
|
1548. | அங்கொளி விளக்கி னாலு மணிகலச் சுடரி னாலுந் திங்களை யனைய செல்வி திருநுத லொளியி னாலு மங்கல மரபிற் றல்லா மயங்கிருண் மறைந்து போகக் கங்குலு மெல்ல மெல்லக் கையகன் றிட்ட தன்றே. |
|
உரை
|
|
|
|
|
திவிட்டன் தேவியின் மாளிகையை அடைதல் | |
1549. | காரிரு ளகன்ற போழ்திற் கமலினி யென்னுஞ் செல்விக் கோருரு ளாழி வெய்யோ னருளிய வுதயஞ் சேர்ந்தான் ஆரிரு ளனைய கூந்தற் கருளிய மனத்த னாகிப் பேரரு ளாழி யானும் பெயர்ந்துபொன் மாடஞ் சேர்ந்தான். |
|
உரை
|
|
|
|
|
1550. | விஞ்சைய ருலகு மண்ணும் விண்ணுமொன் றாயதே போற் செஞ்சுடர் மணியும் பொன்னு மாலையும் விரையுஞ் சேர்த்தி அஞ்சுடர் வயிரப் பைம்பூ ணலைகடல் வண்ணன் றன்னாற் பஞ்சுடை யல்குல் பாக வரசொடு பட்டங் கொண்டாள். |
|
உரை
|
|
|
|
|
சுவலனசடி விடைபெற்றுப் போதல் | |
1551. | தேவிதன் றாதைக் கேற்ற பெருஞ்சிறப் பியற்றிச் செல்வன் வேய்விரி வெள்ளிக் குன்றின் விஞ்சைய ருலக மெல்லாம் ஓவில புகழி னானுக் குடன்கொடுத் துரிமை யோடும் பூவிரி யுருவத் தாரான் பின்சென்று விடுத்துப் போந்தான். |
|
உரை
|
|
|
|
|
1552. | தெவ்வரங் கின்மை யாலுந் திசையினில் வணக்கற் பால வவ்வழி யின்மை யாலு மருமணி வண்ண னாங்கு மௌவலங் குழலியாலு மணிநில மடந்தை யாலுஞ் செவ்வலர்த் திருவினாலுஞ் செருக்கிய களிய னானான். |
|
உரை
|
|
|
|
|
1553. | தேவர்க டிசைமுகங் காப்பா மாநிதி ஓவல விரண்டுநின் றொருங்கு வீழ்தர மேவிய வருங்கலம் விளங்க நோக்கிய காவலன் செல்வநீர்க் கடலுண் மூழ்கினான். |
|
உரை
|
|
|
|
|
1554. | திருவமர் தாமரைச் செம்பொ னாயிதழ் மருவிய திருவடி வாமன் பொன்னகர் விரவிய விழவொடு வேள்விக் கொத்தரோ கருவிய வளநகர் கண்கு ளிர்ந்ததே. |
|
உரை
|
|
|
|