10.சுயம்வரச் சருக்கம்
கவிக்கூற்று
 
1555. தேவரு மனிதர் தாமுஞ்
     செறிகழல் விஞ்சை யாரு
மேவருந் தகைய செல்வம்
     விருந்துபட் டனக டோற்ற
மாவர சழித்த செங்கண்
     மணிவண்ணன் மகிழ்ந்த காலைத்
தாவருஞ் செல்வ மொன்று
     தலைவந்த துரைக்க லுற்றேன்.
உரை
   
திவிட்டன் மகளிர் வலைப்படுதல்
 
1556. பானிலா நிறைவெண் டிங்கள்
     பனிக்கதிர் பரப்பி யாங்கு
மேனிலா விரியும் வெள்ளி
     வெண்குடை விசும்பு காப்பக்
கோனுலா வுலக மோம்ப
     நிறீஇயபின் குவளை வண்ணன்
மானுலா மடக்க ணோக்கின்
     மகளிர்தம் வலையிற் பட்டான்.
உரை
   
திவிட்டன் உயர்ந்து விளங்குதல்
 
1557. திருமணி நிழற்றுஞ் செம்பொ
     னெடுமுடி முகட்டோர் தெய்வக்
குருமணி யுமிழுஞ் சோதி
     குலவிய வொளிகொள் வட்டம்
புரிமணி யோத வேலிப்
     புதையிரு ளிரியல் செய்யக்
கருமணி வண்ணன் றானே
     கதிரவன் றொழிலும் பூண்டான்.
உரை
   
1558. தேங்கமழ் தெய்வச் செம்பொற்
     றாமரை சுரிவெண் சங்கம்
ஈங்கிவை நெதிக ளாக
     வேழர தனங்க ளெய்தி
ஆங்கமர் செல்வந் தன்னா
     லற்றைக்கன் றமர்ந்த மாதோ
ஓங்கின னுருவத் தாலும்
     வில்லெண்ப துயர்ந்த தோளான்.
உரை
   
1559. தெய்வங்கள் செப்பி னீரெண் ணாயிரந் திசைநின் றோம்ப
மையறு மன்னரீரெண் ணாயிரர் வணங்க வான்மேல்
னொய்தியல் விஞ்சை வேந்தர் நூற்றொரு பதின்மர் தாழக்
கையமை திகிரி யானைக் காமனே கலவிக் கின்றான்.
உரை
   
1560. மன்னவர் மகளிரீரெண் ணாயிரர் மயிலொ டொப்பார்
அன்னவ ரமிழ்தச் செப்பே ரணிமுலைக் குவடு பாயப்
பின்னிய தாது மல்கப் பில்கிய தேம்பெய் மாரி
துன்னிய சுரும்பொ டேங்கத் துணருடை கின்ற வன்றே.
உரை
   
பாரிசாதத்துக்கு மணஞ்செய்விக்க எண்ணல்
 
1561. அன்னண மியலு நாளு ளக்கிரத் தேவி தங்கோன்
பொன்னணி யுலகின் வந்த பூவிரி பாரி சாத
மன்னிய லரும்பு வைப்ப மற்றத னோடு சேர்த்திக்
கன்னிய காம வல்லிக் கடிவினை காண லுற்றாள்.
உரை
   
திவிட்டனுக்கு அறிவித்தல்
 
1562. சுரும்பிவர் சோலை வேலித்
     துணர்விரி பாரி சாதம்
அரும்பிய பருவச் செல்வ
     மடிகளுக் கறிவி யென்று
பெரும்பிணா வொருத்தி தன்னைப்
     பெய்வளை விடுத்த லோடும்
விரும்பினள் சென்று வேந்தற்
     கிறைஞ்சிவிண் ணப்பஞ் செய்தாள்.
உரை
   
1563. அடிகண்முன் னடித்தி யாரா
     லங்கைநீர் குளிர வூட்டி
வடிவுகொ டளிர்கண் முற்றி
     மகனென வளர்க்கப் பட்ட
கடிகமழ் பாரி சாத
     மதனோடொர் காம வல்லிக்
கொடிமணம் புணர்க்க லுற்ற
     குறிப்பறி நீசென் றென்றார்.
உரை
   
விண்ணப்பத்துக்குத் திவிட்டன் இசைதல்
 
1564. என்றவண் மொழிந்த போழ்தி
     னிலங்கொளி முறுவ றோற்றி
நன்றது பெரிதி யாமு
     நங்கைதன் மகனைக் காண்டும்
என்றவ னருளக் கேட்டே
     யிளையவள் பெயர்ந்து போக
மின்றவழ் வேலி னாற்கு
     விதூடக னுழைய னானான்.
உரை
   
விதூடகன் தோற்றம்
 
1565. காதுபெய் குழையுஞ் செம்பொற்
     சுருளையுங் கலந்து மின்னப்
போதலர் குஞ்சி யாங்கோர்
     பூந்துணர் வடத்தின் வீக்கி
ஓதிய மருங்கு றன்மே
     லொருகைவைத் தொருகை தன்னால்
மீதியல் வடகம் பற்றி
     வெண்ணகை நக்கு நின்றான்.
உரை
   
அவன் செயல்
 
1566. மூடிய புகழி னாற்கு முகிழ்நகை பயந்து காட்டுங்
கோடிய நிலையின் முன்னாற் குஞ்சித்த வடிவ னாகிப்
பாடிய சாதிப் பாடல் பாணியோ டிலயங் கொள்ள
ஆடிய லெடுத்துக் கொண்டாங் கந்தணனாடு கின்றான்.
உரை
   
விதூடகன் கூத்தாடல்

வேறு
 
1567. பாடு பாணியி லயம்பல தோற்றி
ஆடி யாடிய சதித்தொழில் செய்ய
நாடி நாடிநனி நன்றென நக்கான்
நீடு நீடுமுடி யானெடி யானே.
உரை
   
1568. காது கொண்டன கனபொற் குழைசோர
மீது கொண்ட வடகம் புடைசூழ
ஊதி யூதிமு ழுகும்வயி றென்னாப்
பூதி மீதுபு ரளாநரல் கின்றான்.
உரை
   
1569. மாத வன்வயி றுபற்றி நரன்றாற்
கேத மென்னையென வேந்தல் வினாவ
ஊதி யூதிவயி றுள்ளள வெல்லா
மோத கங்கண்மு ழுகும்பல வென்றான்.
உரை
   
மன்னனும் விதூடகனும் உரையாடல்
 
1570. என்று தின்றனைபன் மோதக மென்ன
என்று தின்றனவு மல்ல வினிப்போய்ச்
சென்று தேவிகடி காவின் விழாவில்
நின்று தின்னலுறு கின்றன வென்றான்.
உரை
   
1571. மாதவன் மொழிய மன்னவ னக்காங்
கேத மென்னைபெரி தெய்தினை யென்றே
வேத நாவின்விறல் வேதியர்க் கல்லால்
ஈத லில்லையினி யென்செய்தி யென்றான்.
உரை
   
1572. வேதம் வல்லவரை வென்றிடு கிற்கும்
வாதம் வல்லன தனாற்பெறு கிற்பன்
வாதம் வெல்லும் வகையும்மென் மாண்பு
மாதர் பண்டுமறி யும்மற வேலோய்.
உரை
   
1573. வாதம் வெல்லும்வகை யாதது வென்னில்
ஓதி வெல்லலுறு வார்களை யென்கை
கோதில் கொண்டவடி விற்றடி யாலே
மோதி வெல்வனுரை முற்றுற வென்றான்.
உரை
   
திவிட்டன் பொழிலினுட் புகுதல்
 
1574. நன்று வாதமிது காண்டு மெனப்போய்ச்
சென்று சோலைமதில் வாயில தெய்தி
ஒன்று காவலுழை யாரொடு கூடிப்
பொன்றி லாதபுக ழான்பொழில் புக்கான்.
உரை
   
விதூடகன் கனி காண்டல்
 
1575. நீடு செம்பொன்முடி யாற் கெதிர் நிந்தா
வேட மேவிய விதூடக னோடி
ஓடி யாடி வருவா னுயர்காவிற்
கூடி வீழ்வன கொழுங்கனி கண்டான்.
உரை
   
அவன் உரை
 
1576. கண்டு கண்டுதன கண்கனி தம்மேன்
மண்டி மண்டிவர வாயெயி றூறக்
கொண்டு கொண்டுகுவி யாவிவை காணாய்
உண்டு முண்டுமென வோடி யுரைத்தான்.
உரை
   
மன்னன் விடை
 
1577. நல்ல வல்லகனி முன்னைய நாமிவ்
வெல்லை செல்லவுறு மென்னலு மாயின்
வல்லை வல்லைவரு வாயென முன்னால்
ஒல்லை யொல்லையொலி பாடி நடந்தான்.
உரை
   
பொழில் வருணனை
 
1578. சந்து மாவொடு தடாயிட மெல்லாங்
கொந்து தேனொடு குலாயிணர் கூடி
வந்து தாழ்ந்து மதுமாரி தயங்கித்
தந்து தாதுபொழி யும்பொழி றானே.
உரை
   
1579. மாவின் மேல்வளர மாதவி வைத்த
தாவி லாததழை தழைவன நோக்கிக்
காவு காமர்கனி கண்டது கையாறிற்
கூவு மோடியவை கொள்குவ மென்றான்.
உரை
   
கனி சிந்தியது கண்டு முனிவடைதல்
 
1580. கூடி வண்டு குடையுங் குளிர்காவில்
ஓடி மண்டிவரு வானொரு பாலாற்
சேடு கொண்ட கனி சிந்தின கண்டு
மூடு கொண்ட மதியன் முனிவுற்றான்.
உரை
   
விதூடகன் வினா
 
1581. ஏவ லின்றியெரி வெங்கதி ரோணும்
போவ லென்று நினையாப் புனைகோயில்
ஓவ லின்றி யுடையாய் சிறிதேனுங்
காவ லின்றுகடி காவிது வென்றான்.
உரை
   
1582. பொன்னி னாய புரிசைத் தளமேலும்
மன்னு வாளர் மறவோர் பலர்காப்பர்
என்னை காவலிஃ தில்வகை யென்றான்
மின்னு வார்ந்து மிளிருஞ் சுடர் வேலோன்.
உரை
   
திவிட்டன் கூற்று
 
1583. அருமுகத் தகனி யாயின வெல்லாம்
ஒருமுகத் தனக ளன்றி யுதிர்த்துத்
தருமுகத் தர்வரு வார்தறு கண்ணார்
கருமுகத் தருளர் காவல்களி லென்றான்.
உரை
   
விதூடகன் செயல்
 
1584. யாவர் யாவரவ ரெங்குள ரென்னக்
காவு மேவுமுசு வின்கலை காட்ட
வாவர் கள்வரத னாலெழு நாம்போய்த்
தேவி காவுநனி சேர்குவ மென்றான்.
உரை
   
1585. கள்வர் தாம்பல ரெனக்கடல் வண்ணன்
உள்வி ராவுநகை சேருரை கேட்டே
வெள்கி வேந்தனரு கேயிரு பாலும்
பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான்.
உரை
   
தமாலிய வீதியைக்கண்டு விதூடகன் மருளல்
 
1586. தாழ்தளிர் பொளிய தமால வீதிய
ஏழகண் டிருளென வெருள யாவஞ்
சூழிரு ளன்றி "சால காணென
வீழிணர்க் கண்ணியான் வெருவு நீக்கினான்.
உரை
   
விதூடகன் மேலும் மருண்டு வினாதல்
 
1587. வாலிதழ் வீழ்தரு மகிழ்தன் றாண்முதல்
சாலிகை புக்கது தயங்கு தாரினாய்
சோலையு மமர்த்தொழி றொடங்கு மோவென
வேலைநீர் வண்ணனை வெருண்டு நோக்கினான்.
உரை
   
1588. அஞ்சலிங் கமர்த்தொழி லில்லை யாவதும்
மஞ்சிவர் மகிழந்தன் வயவு நோய்கெடூஉப்
பஞ்சிவ ரல்குலார் பவழ வாயினால்
அஞ்சுவை நறவமீங் குமிழ ஆனதே.
உரை
   
திவிட்டன் தன் நண்பன் மருட்சியை நீக்கல்
 
1589. ஆங்கத னாவியா லரவத் தேனெழா
ஈங்கிதன் றாண்முத லிருள மொய்த்தன
ஓங்கிய கேள்வியா யுணர்ந்து கொள்கென
வீங்கிய கழலவன் விளங்கச் சொல்லினான்.
உரை
   
பின்னும் விதூடகன் கேட்டலும் மன்னன் விடையிறுத்தலும்
 
1590. முள்ளரை முருக்கினோ டெழுந்த மல்லிகை
வள்ளிதழ் குருதியின் வடிவி லூழ்த்தன
கள்ளவிழ் கண்ணியாய் விரியு நாளெனத்
தெள்ளிதி னவற்றையுந் தெளியச் செப்பினான்.
உரை
   
1591. கடிமிசை விரிதருங் காமர் கொம்பரின்
முடிமிசை யெழுதரு முறிகொ ளீர்ந்தளிர்
அடிமிசை யீன்றதிவ் வசோக மென்கொலோ
கொடிமிசை யெழுதிய குவவுத் தோளினாய்.
உரை
   
1592. இலைத்தலை யீர்ந்தளி ரல்ல வீங்கிதன்
மலைத்தகு வயவு நோய் தீர வைத்தன
கலைத்தலை மகளிர்தங் காமர் சீறடி
அலத்தகச் சுவடென வறியக் காட்டினான்.
உரை
   
விதூடகன் கூற்று
 
1593. காவிவாய் விலங்கிய கருங்கண் வெம்முலைத்
தேவியார் சீறடி சென்னி சேர்த்தலும்
மேவியாங் கலர்ந்திடு நின்னை வென்றதால்
ஆவியா ரசோகின தமைதி வண்ணமே.
உரை
   
மன்னன் விதூடகனுடன் விளையாடினான்
 
1594. மாதவன் மொழிதலு மன்ன னாங்கொரு
போதினாற் புடைத்தனன் புடைத்த லோடுமிங்
கேதிலா ளொருத்திக்கா வென்னைச் செய்தவித்
தீதலொந் தேவிக்குத் தெரியச் செப்புவேன்.
உரை
   
திவிட்டன் ஒரு சிலாவட்டத்தின் மீது ஏறினான்
 
1595. என்றலு மெரிமணிக் கடகக் கையினால்
அன்றவன் கைத்தலம் பிடித்தங் கியாவதும்
இன்றிற லினிச் செய்த லில்லெனச் சொலிச்
சென்றொரு மணிச்சிலா வட்ட மேறினான்.
உரை
   
விதூடகன் செயல்
 
1596. சொரிகதிர் மணிச்சிலா வட்டஞ் சேர்ந்தனன்
அருகுநின் றந்தண னமர்ந்து நோக்கியே
வெருவிய மனத்தினன் விதலை மேனியன்
பெருகிய தலையினன் பெயர்ந்து பின்றினான்.
உரை
   
விதூடகன் பூதங் காண்டலும் திவிட்டன் அவன் மயக்கம் தீர்த்தலும்
 
1597. யாதுகண் டனையென விதனுள் வாழ்வதோர்
பூதமுண் டதுபுடைத் துண்ணு மாதலால்
ஏதமுண் டிங்கினி யிருப்பின் வல்லையே
போதவென் றந்தணன் புலம்பிக் கூறினான்.
உரை
   
1598. யாதத னுருவென வலர்பொன் னோலையுஞ்
சோதிசூழ் சுடர்மணிக் குழையுந் துன்னிய
காதொடு கண்பிறழ்ந் துளது கைகுறி
தூதிய வயிற்றதென் றுருவ மோதினான்.
உரை
   
1599. மின்னிழற் பூணவன் மெல்ல நக்கது
நின்னிழற் காணது நிற்க நின்னுரை
என்னிழ லென்னொடு மியங்கி னல்லது
கன்னிழ லுள்புகிற் காண்ட லாகுமோ.
உரை
   
1600. நின்னிழ லாவது தெளிய நின்றொழில்
இந்நிழற் காணென விறைஞ்சி நோக்குபு
தன்னிழ றான்செய்வ செய்யத் தான்றெளிந்
தின்னிழ லிருந்தன னிலங்கு நூலினான்.
உரை
   
1601. திருந்திய மணிநகைத் தேவி யிவ்வழி
வருந்துணைப் பொழுதுமிம் மணிச்சி லாதலம்
பொருந்தின பொழினலங் காண்டு மென்றரோ
இருந்தன ரிருவரு மினிதி னென்பவே.
உரை
   
சயம்பிரபை சோலைக்கு வருதல்

வேறு
 
1602. மின்னவிர் விளங்குமணி மேகலை மிழற்றப்
பொன்னவிர் சிலம்பொலி போந்துபுடை சாற்றக்
கன்னியர் நிரந்துபலர் காவலொடு சூழ
வன்னமென வந்தரசி யார்பொழி லடைந்தாள்.
உரை
   
அவள் தன்னை மறைத்துக் கொண்டு நிற்றல்
 
1603. மாலையமர் சிந்தையொடு வார்பொழின் மருங்கின்
வேலையமர் கண்ணிவிளை யாடுதல் விரும்பி
மேலையமர் விஞ்சையின் மறைந்துவிரை நாறுஞ்
சோலையமர் தோகையென வேதொழுது நின்றாள்.
உரை
   
திவிட்டன் இருக்கை
 
1604. மாதவன் மருட்டமழை வண்ணன்மணி வட்டம்
சோதிவிடு சூழ்சுடர் வளாவ வதன்மேலாற்
தாதுபடு போதுதவி சாமென வடுத்த
மீதுபடு பொங்கணையின் மெல்லென விருந்தான்.
உரை
   
கவிக்கூற்று
 
1605. பந்தணையு மெல்விரலி பாடக மொடுக்கி
வந்தணையு மெல்லையுண் மயங்கியொரு மாற்றம்
அந்தணன்வி னாவவமிழ் தூரமொழி கின்றான்
கந்தணைவி லாதகளி யானைபல வல்லான்.
உரை
   
விதூடகன் வினா
 
1606. நிலத்தவள்கொ லன்றிநெடு மால்வரையு ளாள்கொல்
அலத்தக வடிச்சுவ டசோகின்மிசை வைத்தாள்
உலத்தகைய தோளணிகொண் மார்பவுரை யென்ன
வலத்தகைய னாயமணி வண்ணன் மொழிகின்றான்.
உரை
   
திவிட்டன் விடை
 
1607. செய்யன செறிந்தன திரண்டவிரல் சால
வையதசை யார்ந்தவடி யின்னழகி னாலே
மெய்யுமறி வன்வினவில் விஞ்சையன் மடந்தை
வையமுடை யாற்குரிய மாதரவ ளென்றான்.
உரை
   
சயம்பிரபையின் செயல்
 
1608. என்றலு மிரண்டுகரு நீலமலர்க் கண்ணுஞ்
சென்றுகடை சேந்துசிறு வாணுதல் வியர்த்தாள்
அன்றரச னாவியுரு கும்படி யனன்று
மின்றவழு மேனியொடு தேவிவெளிப் பட்டாள்.
உரை
   
அரசியைக் கண்ட அந்தணன் செயல்
 
1609. தாதிவர் கருங்குழலி தன்னைமுக நோக்கி
மாதவ னடுங்கிவளர் பூம்பொழின் மறைந்தான்
காதலனு மங்குரிய கட்டுரை மறந்திட்
டேதமினி யென்கொல்விளை கின்றதனெ நின்றான்.
உரை
   
மன்னன் வேண்டுகோள்
 
1610. மன்னன்மக ளேமகர வார்குழன் மடந்தாய்
அன்னமனை யாயமிழ்தின் மேலுமமிழ் தொப்பாய்
என்னையிவ ணுற்றதனெ வென்னுமிலை யென்னா
முன்னுபுரு வக்கொடி முரிந்துமுனி வுற்றாள்.
உரை
   
தேவியின் கூற்று

அரசன் அவளடி தாழ்தல்
 
1611. ஆங்கவெளா டீங்குவிளை யாடுநனி நீயான்
பூங்கமழு மாடமென தேபுகுவ னென்றாள்
தாங்கல னெழுந்துதகை நீலமணி வண்ணன்
ஒங்குமுடி சீறடியின் மேலொளிர வைத்தான்.
உரை
   
அரசி குற்றஞ்சாட்டுதலும் அரசன் இரங்கலும்
 
1612. மற்றநெடு மான்மகர மாமுடி வணங்கக்
கற்றனை யினிப்பெரிது கைதவமு மென்ன
உற்றதொர் பிழைப்புடைய னாய்விடி னுணர்ந்து
முற்றமுறை செய்தருளு மொய்குழலி யென்றான்.
உரை
   
விதூடகனை இழுத்துவரச் செய்தல்
 
1613. மன்னனொர் பிழைப்புமிலன் மாதவனை நாடி
இன்னினி யிவண்கொணர்மி னென்னவுழை யோர்கள்
முன்னவன் மறைந்தமுரு கார்பொழிலி னுள்ளே
துன்னுபு தொடர்ந்துதுகில் பற்றுபு கொணர்ந்தார்.
உரை
   
தேவிசினம்தீர்தல்
 
1614. பேதைமை கலந்துபிறழ் கண்ணினொ டொடுங்கு
மாதவனை நோக்கிமணி வாய்முறுவ றோற்றிக்
கோதைகளில் யாத்திவனை நீர்கொணர்மி னென்றாள்
போதுவிரி தேங்குழலி பூம்பொழி லணைந்தாள்.
உரை
   
1615. மன்னவன் மருட்டமணி யாழ்மழலை மாதர்
முன்னிய முகத்துமுறு வற்கதிர் முகிழ்ப்ப
இன்னவருள் பெற்றன னினிப்பெரிது மென்னா
அன்னமனை யாளையணி மார்பினி லணைத்தான்.
உரை
   
விதூடகன் விடுதலை பெறுதல்
 
1616. போதிவ ரலங்கலொடு பூண்முலை ஞெமுங்கக்
காதலன் முயங்குபு கலந்தினி திருந்து
மாதவனு மேதமில னாதலின் மடந்தாய்
தீதுபடு சீற்றமொழி யென்றுதெளி வித்தான்.
உரை
   
அவன் செயல்
 
1617. இட்டதளை தம்மொடிரு தோளுமிடை வீக்கிக்
கட்டிவிடு பூம்பிணையல் கைவிடலு மெய்யுள்
ஒட்டிவிடு காதலொடு வந்துருவு கொண்டு
பட்டபல பாடலினொ டாடல்பல செய்தான்.
உரை
   
கனிகளைக் கண்டு அவன் பாடுதல்

வேறு
 
1618. ஓடு மேமன மோடுமே
கூடு மோதணி கோதையாய்
காடு சேர்கனி காண்டொறு
மோடு மேமன மோடுமே.
உரை
   
1619. ஊறு மேயெயி றூறுமே
வீறு சேர்விரி கோதையாய்
சேறு சேர்கனி காண்டொறு
மூறு மேயெயி றூறுமே.
உரை
   
1620. வேண்டு மேமனம் வேண்டுமே
பூண்ட பொன்னணி மார்பினாய்
நீண்ட மாங்கனி காண்டொறும்
வேண்டு மேமனம் வேண்டுமே.
உரை
   
பாரிசாத காமவல்லி திருமணத் தொடக்கம்

வேறு
 
1621. இன்னன பாடி யாட வீர்ங்கனி பலவுங் கூவி
முன்னவ னார வூட்டி முறுவலோ டமர்ந்த பின்னை
மன்னிய பாரி சாத மணமக னாக நாட்டிக்
கன்னியங் காம வல்லி கடிவினை தொடங்க லுற்றார்.
உரை
   
1622. திருமணி நிழற்றுஞ் செம்பொற் றிலதமா முடியி னானுங்
குருமணிக் கொம்ப ரன்ன கொழுங்கய னெடுங்கணாளும்
பருமணி பதித்த பைம்பொன் வேதிகைப்பாரி சாதம்
அருமணி யரும்பித் தாழ்ந்த வந்தளிர்ப் பொதும்பர் சார்ந்தார்.
உரை
   
தேவியர் யாவரும் அருகே வருதல்
 
1623. வரிவளை வயிரொ டேங்க வாரணி முரச மார்ப்பக்
கருவளர் கனபொற் சோலைக் கறங்கிசை பரந்தபோழ்தில்
திருவள ரலங்கன் மார்பிற் செங்கணான் றேவி மார்கள்
உருவளர் கொம்ப ரன்னா ளருளறிந் துழைய ரானார்.
உரை
   
அவர்களினிடையே நின்ற திவிட்டன் நிலை
 
1624. செங்கய லுருவ வாட்கட்
     டேவிதன் குறிப்பிற் சேர்ந்த
மங்கையர் வனப்பு நோக்கி
     மணிவண்ணன் மகிழ்ந்து மற்றப்
பொங்கிய விளமென் கொங்கை
     மகளிர்தம் புருவ வில்லால்
அங்கய னெடுங்க ணென்னும்
     பகழியா லழுத்தப் பட்டான்.
உரை
   
1625. குடங்கையி னகன்று நீண்டு குவளையின் பிணையல் செற்று
மடங்களி மதர்வைச் செங்கண் மான்பிணை மருட்டி மையாற்
புடங்கலந் திருள்பட் டுள்ளாற் செவ்வரி பரந்த வாட்கண்
இடங்கழி மகளிர் சூழ விந்திர னிருந்த தொத்தான்.
உரை
   
பாரிசதத்திற்குக் கோலம் செய்யக் கட்டளையிடுதல்
 
1626. ஆங்கவ ரோடு மற்ற வணிபொழிற் கரச னாய
பாங்கமை பாரி சாதம் பருவஞ்செய் பொலிவு நோக்கி
ஈங்கிவற் கிசைந்த கோல மினிதினி னியற்று கென்றான்
ஓங்கிய வுருவத் தார்மே லொளிநிலா வுமிழும் பூணான்.
உரை
   
பாரிசாதத்தை அலங்கரித்தல்
 
1627. எந்திர மிழிந்த தாரை
     யருவிநீ ரினிதி னாட்டிக்
கந்தனெத் திரண்ட திண்டோட்
     கனகசா லங்கள் காட்டிப்
பைந்தழைப் பொழிலுக் கெல்லா
     மரசெனப் பட்டஞ் சேர்த்தி
அந்தளிர்க் கொம்பர் தோறு
     மணிபல வணிந்தா ரன்றே.
உரை
   
காமவல்லிக்கு மணக்கோலம் செய்து அதன் மணமகனோடு சேர்த்தல்
 
1628. கன்னியங் காம வல்லிக்
     கனங்குழை மடந்தை தன்னை
மன்னவன் றேவி மார்கண்
     மணவினைக் கோலஞ் செய்து
பின்னத னோடு சேர்த்திப்
     பெருகிய களிய ரானார்
இன்னகைப் புதல்வர் செல்வம்
     யாவரே யினிதென் னாதார்.
உரை
   
திவிட்டன் சயம்பிரபை ஆகிய இருவர் மனத்துள் காமம் செறிதல்
 
1629. மாதரார் மனத்தி னுள்ளும்
     மணிவண்ண னினைப்பி னுள்ளுங்
காதலுஞ் செறிந்த தாகக்
     காமனு முழைய னாகப்
போதலர் பருவச் சோலைப்
     பொழினல நுகரும் போழ்தில்
ஓதநீர் வண்ண னங்கோ
     ருபாயத்தா லொளிக்க லுற்றான்.
உரை
   
திவிட்டன் தன்னை மறைத்துக் கொள்ளல்
 
1630. பொன்னவிர் குழையி னாரைப்
     பொழில்விளை யாட லேவி
மன்னவன் மதலை மாட
     வளநக ரணுகு வான்போற்
றன்னைமெய் மறைத்தோர் விஞ்சை
     தாழிரு ளெழினி யாகப்
பின்னைமா தவனுந் தானும்
     பிணையவ ருழைய னானான்.
உரை
   
தேவியர் பொழில் விளையாடல்
 
1631. மன்னவன் மறைந்த தெண்ணி்
     மாபெருந் தேவி மற்றப்
பொன்னவிர் கொடியன் னாரைப்
     பொழில்விளை யாட லேவக்
கன்னியங் கோலஞ் செய்து
     கதிர்மணிக் கலங்க டாங்கி
இன்னகை மழலை தோற்றி
     யிளையவ ரினைய ரானார்.
உரை
   
அவர்கள் செய்து கொண்ட ஒப்பனைகள்
 
1632. அம்பொன்செய் கலாப வல்கு
     லந்தழை புனைந்த வஞ்சிக்
கொம்பஞ்சு மருங்கு னோவக்
     குவிமுலை முறிகொண் டப்பிச்
செம்பொன்செய் சுருளை மின்னச்
     செவிமிசைத் தளிர்கள் சேர்த்திக்
கம்பஞ்செய் களிற்றி னான்றன்
     கண்களைக் களிப்பித் திட்டார்.
உரை
   
1633. விரவம்பூந் தளிரும் போது
     மிடைந்தன மிலைச்சு வாரும்
அரவம்பூஞ் சிலம்பு செய்ய
     வந்தளிர் முறிகொய் வாரும்
மரவம்பூம் கவரி யேந்தி
     மணிவண்டு மருங்கு சேர்த்திக்
குரவம்பூங் பாவை கொண்டு
     குழவியோ லுறுத்து வாரும்.
உரை
   
மாலை சூடுதல்
 
1634. பாவையும் விலங்கு சாதிப்
     படிமமும் பறப்பை தாமுங்
கோவையு முகத்து மாக்கிக்
     குலவிய விதழ தாக
ஓவியர் புனைந்த போலு
     மொளிமலர்ப் பிணையன் மாலை
தேவியர் மருளச் செய்து
     சிகழிகை சேர்த்து வாரும்.
உரை
   
தேவியர் சயம்பிரபையைக் கொண்டாடுதல்
 
1635. சிகரமா யிலங்கு சென்னித் தென்மலைச் சாந்து மூழ்கிப்
பகருமா மணிவண் டோவாப் பணைமுலைப் பாரந் தாங்கித்
தகரவார் குழல்பின் றாழத் தாழ்குழை திருவில் வீச
மகரயா ழெழுவி மன்னன் வண்புகழ் பாடு வாரும்.
உரை
   
அரசனைப்பாடுதல்
 
1636. அருமலர்த் தழையும் போது
     மடியுறை யாக வேந்தித்
திருமலர்ப் பாவை யன்ன
     தேவியைச் செவ்வி காண்பார்
உருமல ரிழைத்த பாவை
     யொளிமண நயந்து மாதோ
குருமலர்க் கொம்பி னொல்கிக்
     குரவையின் மயங்கு வாரும்.
உரை
   
வட்டிகைத் தொழில்
 
1637. வட்டிகைப் பலகை தன்மேன்
     மணிவண்ணன் வடிவு தீட்டி
ஒட்டிய வடிவிற் றம்மை
     யூடலோ டிருப்பக் கீறித்
திட்டமிட் டுருவ நுண்ணூற்
     றுகிலிகை தெளிர்ப்ப வாங்கிப்
பட்டமுங் குழையுந் தோடும்
     பையவே கனிவிப் பாரும்.
உரை
   
செய்யுளின்பம் ஊட்டல்
 
1638. மாம்பொழின் மருங்கு சூழ்ந்த
     மணிச்சிலா தலத்து மேலாற்
காம்பழி பணைமென் றோண்மேற்
     கருங்குழ றுவண்டு வீழப்
பூம்பொழில் விளங்கத் தோன்றும்
     பொன்னிதழ் மறிந்து நோக்கித்
தேம்பொழி செய்யு ளின்பஞ்
     செவிமுதற் சேர்த்து வாரும்.
உரை
   
ஊசலாடல்
 
1639. கோதையுங் குழைவின் பட்டின்
     கொய்சகத் தலையுந் தாழ
மாதர்வண் டொருங்கு பேர
     மழையிடை நுடங்கு மின்போற்
போதலர் பொதும்பிற் றாழ்ந்த
     பொன்னெழி லூச றன்மேல்
ஓதநீர் வண்ணற் பாடி
     நூழிலூ ழியங்கு வாரும்.
உரை
   
வாழைக்குருத்தில் உகிரால் உருவம் கிள்ளல்
 
1640. கள்ளுமிழ்ந் துயிர்க்குஞ் சோலைக்
     கனமடற் குமரி வாழை
உள்ளெழு சுருளை வாங்கி
     யொளியுகிர் நுதியி னூன்றிப்
புள்ளெழு தடமும் போர்மான்
     றொழுதியு மிதுன மாய
ஒள்ளெழி லுருவுங் கிள்ளி்
     யுழையவர்க் கருளு வாரும்.
உரை
   
பிற விளையாடல்கள்
 
1641. மயிலுடை யாடல் கண்டு
     மகிழ்ந்துமெய்ம் மயங்கி நிற்பார்
குயிலொடு மாறு கொள்வார்
     குழைமுகஞ் சுடரக் கோட்டிக்
கயிலொடு குழல்பின் றாழக்
     கண்டுநீர் கொண்மி னென்றாங்
கயிலுடைப் பகழி வாட்க
     ணங்கையின் மறைத்து நிற்பார்.
உரை
   
1642. செழுமலர்த் தாது கொய்து
     மெல்விரல் சிவந்த வென்பார்
விழுமலர்த் துகள்வந் தூன்ற
     மெல்லடி மெலிந்த வென்பார்
கொழுமலர்ப் பிணைய றாங்கிக்
     கொடியிடை யொசிந்த வென்பார்
எழுமலர்த் தனைய தோளான்
     றேவிய ரினைய ரானார்.
உரை
   
மகளிரும் சோலையும்

«’ஊ
 
1643. கொடிமருங் குறாமே கொடியாய் நுடங்க
வடிநெடுங் கண்ணோக்க மணிவண்டா யோட
அடிமலருங் கைத்தலமு மந்தளிராய்த் தோன்றக்
கடிநறும்பூஞ் சோலையைக் காரிகையார் வென்றார்.
உரை
   
1644. மணங்கமழும் பூமேனி வாசங் கமழ
வணங்கி வருஞ்சோலை யலர்நாற்ற மெய்திக்
கணங்குழையீர் யாமுமக்குக் கைமாறி லேமென்
றிணங்கிண ரும்போது மெதிரேந்தித் தாழ்ந்த.
உரை
   
1645. அந்தா ரசோக மசோக மவர்க்கீந்த
செந்தார்த் திலகந் திலகமாய்ச் சேர்ந்தன
வந்தார்க்கு மாவாது மென்பனபோன் மாதழைந்த
கொந்தார்பூஞ் சோலைக் குலகறிவோ கூடின்றே.
உரை
   
தேவியர் ஒரு செய்குன்றம் சேர்தல்
 
1646. வெள்ளித் திரண்மேற் பசும்பொன் மடற்பொதிந்
தள்ளுறு தேங்கனிய தாம்பொற் றிரளசைந்து
புள்ளுறு பொன்வாழைக் கானம் புடையணிந்த
தெள்ளு மணியருவிச் செய்குன்றஞ் சேர்ந்தார்.
உரை
   
1647. கஞ்சுகி மாந்தருங் காவல் முதியாரும்
மஞ்சிவர் சாரல் மணியறையும் வார்பொதும்பும்
துஞ்சு மழைதவழுஞ் சோலைகளுஞ் சோதித்துச்
செஞ்சொ லவர்போய்த் திசைகாவல் கொண்டாரே.
உரை
   
1648. தோகை மடமஞ்ஞை சோலைப் பரப்பின்போன்
மாக மழைவண்ணன் காதன் மடந்தையர்கள்
ஆக மணி சூழ்சார றைவிரும் பொழில்வாய்ப்
போகமணி புரளக் கலைபுலம்பப் புக்கார்.
உரை
   
செய்குன்றிற் செயல்
 
1649. அரையிலங்கு மேகலை யார்ப்பி னயல
வரையிலங்கு மேகலை மாறேநின் றார்க்கும்
புரையிலங்கு பொற்சிலம்பு தான்சிலம்பும் போழ்தில்
நிரையிலங்கு பொற்சிலம்பு நேரே சிலம்பும்.
உரை
   
1650. கொங்குண் குழலார் குழலோர் மணிமழலை
தங்கினவை கொண்டு தானுமெதிர் மிழற்றும்
அங்கணவர் செய்வசெய் தசதியா டின்றே
செங்க ணெடியான் கடிகாவிற் செய்குன்றே.
உரை
   
நகரும் சிற்றிலும் இழைத்தல்
 
1651. மருவி மழைதவழு மையோங்கு சாரல்
அருவி கொழித்த வருமணிகள் வாரித்
தெருவுபடத் திருத்திச் சீலம் புனைவார்
உருவ நகரிழைப்பா ரொண்ணுதலா ரானார்.
உரை
   
1652. மரகத வீர்ங்கதிரை வார்புற் றளிரென்
றுரைதரு காரிகையா ரூன்றி மிதித்துத்
திரைதவழச் சீறடிக ணோவ நடந்து
விரைதரு பூம்படைமேன் மெல்ல வசைந்தார்.
உரை
   
அருவியாடல்
 
1653. வெம்பரிய தண்சாரல் வேரூரி யக்கொழுந்து
தம்பருவச் சோலை தழைத்த தகைநோக்கி
எம்பெருமான் போலு மெழில விவையென்று
வம்புருவந் தோன்ற மணியருவி யாடுவார்.
உரை
   
சந்திரகாந்தக் கல் துளித்தலும் மகளிர் மழையென மருளலும்
 
1654. செங்களிதோய்ந் துள்சிவந்த சீறடியார் வாண்முகத்தின்
றங்கொளிபாய்ந் துள்ளெறித்த தண்காந்த மாமணி
திங்க ளொளிகருதித் தெண்ணீர்த் துளிசிதற
மங்குன் மழையயிர்த்து வார்பொழிலின் வாய்மறைவார்.
உரை
   
மாணிக்கக் கதிரை அசோகந்தளிரென்று அயிர்த்தல்
 
1655. வம்பத் திரளுருவின் மாணிக்கச் செங்கதிரை
அம்பொற் சிலம்பி னசோகந் தளிரென்று
தம்பொற் சுடராழி மெல்விரலாற் றைவந்து
கொம்பிற் குழைந்து குறுமுறுவல் கொண்டகல்வார்.
உரை
   
மாணிக்கத்தைக் காயா என்று மயங்குதல்
 
1656. விண்டு சுடர்தயங்கு மேதகுமா மாணிக்கம்
கண்டு கவின்விரிந்த காயாந் துணரிவை
கொண்டு குழற்கணிது மென்று கொளலுறுவார்
வண்டு வழிபடர வாட்கண் புதைத்தியல்வார்.
உரை
   
ஆயோ என்று கூவிக் கிளிகளை மகிழ்வித்தல்
 
1657. வேயோங்கு சாரல் விளைபுனங் காவல்கொண்
டாயோ வெனமொழியு மம்மழலை யின்னிசையால்
போயோங்கு பூஞ்சோலை வாழும் புனக்கிளிக
மாயோன் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார்.
உரை
   
சிலர் மாணிக்கப்பாறை மீதேறுதல்
 
1658. பூந்தளிர் தாழ்ந்த பொழிறயங்கு பொன்வரைவாய்
ஈர்ந்தளிர் மேனியா ரிவ்வா றினிதியலக்
காந்தளங் குன்றின் கனபொன் மணியறைமேல்
ஏந்திளங் கொங்கை மகளிர் சிலரியைந்தார்.
உரை
   
வள்ளி பாடுதல்
 
1659. பைம்பொ னறைமேற் பவழ முரலாக
வம்ப மணிபெய்து வான்கேழ் மருப்போச்சி
அம்பொன் மலைசிலம்ப வம்மனை வள்ளையுடன்
கம்பஞ்செய் யானைக் கரியவனைப் பாடினார்.
உரை
   
வேறு
 
1660. கோடி சிலையெடுத்தான் கோளரிமா வாய்போழ்ந்தான்
ஆடியல் யானை யயக்கிரீவ னையடித்தான்
வீடின் மணியருவி வெண்மலையுங் கைப்பிடித்தான்
வாடலில் பூங்கண்ணி மாமேக வண்ணனே.
உரை
   
1661. வலம்புரி வாய்வைத்தான் வார்சிலை கைக்கொண்டான்
சலம்புரி சண்டை தலைபனிப் புக்கண்டான்
பொலம்புரி தாமரையாள் பொன்னாகந் தோய்ந்தான்
கலம்புரி வண்டடக்கை கார்மேக வண்ணனே.
உரை
   
1662. செம்பொன்செய் யாழியான் சேதாம்ப னீண்முடியான்
அம்பொ னிதியு மருங்கலமுங் கைப்படுத்தான்
நம்பு மணிமேனி நங்கை நலநுகர்ந்தான்
கம்பஞ்செய் யானைக் கருமேக வண்ணனே.
உரை
   
திவிட்டன் தெய்வமொன்றினை வேழமாகி வரச் செய்தல்

வேறு
 
1663. மடந்தையர் பாட வாங்கு
     மாபெருந் தேவி நிற்ப
அடைந்தவ ரோடு மாடு
     மார்வநீர் வெள்ளம் வாங்க
உடைந்தழி மனத்தன் வேந்த
     னுழையதோர் தெய்வங் கூவிப்
படந்தவா முகத்தோர் வேழ
     மாகெனப் பணித்து விட்டான்.
உரை
   
1664. மைவரை யொன்று கோல
     மணிதயங் கருவி தாழ
ஐவனங் கலந்த சார
     லருகுவந் தணைவ தேபோற்
றெய்வமோர் வேழ மாகிச்
     செய்கடாந் திரண்டு வீழ
மைவரு நெடுங்க ணல்லார்
     நடுங்கவந் தணைந்த தன்றே.
உரை
   
மடந்தையர் நடுக்கம்
 
1665. கயில்கலந் திருண்டு தாழ்ந்த
     கருங்குழன் மருங்கு சோர
வெயில்கலந் திலங்குஞ் செம்பொன்
     மிடைமணிக் குழைவில் வீச
அயில்கலந் திலங்கு வேற்க
     ணையரி பிறழ வேட்டி
மயில்கலந் திரிந்த போல
     மடந்தையர் நடுங்கி னாரே.
உரை
   
திவிட்டன் சுயம் பிரபையின் அச்சம் தீர்த்தல்
 
1666. நாண்டனா னிறைந்த நங்கை
     நடுங்குபு நுடங்கி நோக்கி
யாண்டையா ரடிக ளென்னு
     மாயிடை யஞ்சல் பொன்னே
ஈண்டையே னென்னை பட்ட
     தென்றுசென் றணுகி னானால்
வேண்டிய விளைத்துக் கொள்ளும்
     விழுத்தவம் விளைத்து வந்தான்.
உரை
   
திவிட்டன் தேவியைத் தேற்றல்
 
1667. மலைமுக மதநல் யானை
     மற்றது மறித்து நங்கை
முலைமுக நெருங்கப் புல்லி
     முருகுவேய் கோதை சூட்டிக்
கலைமுகந் திருத்திக் காதிற்
     கனபொன்செய் சுருளை நீவி
இலைமுகங் கலந்த செம்பொற்
     கலங்களை யிலங்க வைத்தான்.
உரை
   
கதிரவன் உச்சியை அடைதல்
 
1668. மங்கையர் தம்மை யெல்லா
     மணிவண்ணன் மருட்டி மற்றிக்
கொங்கவிழ் குளிர்கொள் சோலைக்
     குன்றினின் றிழிந்த போது
வெங்கதிர் விரிந்த வெய்யோன்
     விசும்பிடை வெதும்ப வெம்பிச்
செங்கதிர்க் கூடங் குத்திச்
     செந்நடு வாக நின்றான்.
உரை
   
அவர்கள் வாவி சார்தல்
 
1669. அணங்கனார் நுதலின் மேலி்
     லரும்பிய வாரத் தெண்ணீர்
மணங்கம ழலங்கன் மார்பன்
     மனத்தினை வாங்க மற்றக்
கணங்குழை மடந்தை மாரைக்
     கடிபுன லாடல் காண்பான்
மணங்கொள்பூந் துணர்கொள் சோலை
     மண்டுநீர் வாவி சார்ந்தான்.
உரை
   
வாவிகளின் வருணனை
 
1670. சாந்துநீர் நிறைந்த வாவி
     தயங்குசெங் குவளை வாவி
பூந்துக ளவிழ்ந்த பொற்றா
     மரைமலர் புதைந்த வாவி
தேந்துண ரகன்ற தெண்ணீர்த்
     திருமணி யுருவ வாவி
வாய்ந்தவை போலக்காட்டி காட்டி
     யுழையவர் வணங்கி நின்றார்.
உரை
   
மன்னவன் தன் தேவியரோடு வாவியுட்புகுதல்
 
1671. அன்னவா றமைந்த தெண்ணீ
     ரலைபுன லாடும் போழ்தில்
இன்னவா றியற்று கென்றாங்
     குழையரை மறைய வேவிப்
பொன்னவாஞ் சுணங்கு போர்த்த
     புணர்முலை மகளி ரோடு
மன்னவாம் வயிரத் தோளான்
     வலஞ்சுழி வாவி புக்கான்.
உரை
   
வாவியின் தன்மை
 
1672. மலங்குபாய் தயங்கு பொய்கை
     மணக்கல்வா யடுத்த செம்பொற்
கலங்கினா றிழிந்து கீழே
     கலந்துவந் தெழுந்த தெண்ணீர்
அலங்கலான் மடந்தை மார்த
     னரும்புணை யாக வீங்கி
வலங்குலாய்ச் சுழித்து வாய்த்த
     வாவி வாய் மடுத்த தன்றே.
உரை
   
நீர் விளையாடல்
 
1673. அலைபுனல் பெருக லோடு
     மலைகடல் வண்ணன் றன்னை
மலைபுனை கொடியிற் புல்லி
     மடந்தையர் மயங்கு வாரும்
மிலைபுனை கோதை சோர
     விடுபுணை தழுவு வாரும்
கலைபுனை துகிலுந் தோடு
     மொழியப்போய்க் கரைகொள் வாரும்.
உரை
   
1674. ஆர்புனல் சுழித்து வாங்க
     வனையரா யணிபொன் வாவி
நீர்புனை தடத்தி னுள்ளா
     னிலைகொண்டு நெடுங்கண் சேப்பத்
தார்புனை மார்பன் றன்மேற்
     றரங்கநீர் தயங்கத் தூவி
வார்புனை முலையி னல்லார்
     மயங்கமர் தொடங்கி னாரே.
உரை
   
1675. திரளிருஞ் சிவிறி வீக்கிச்
     செழுமழைத் தாரை பெய்வார்
மருளிரும் பிணையன் மாலைப்
     படைபல வழங்கிச் சூழ்வார்
சுருளிருந் தோடு வாங்கித்
     தோண்மிசை துளங்கி வீழ்ப்பார்
இருளிருங் குழலி னார்க
     ளிறைவன்மே லினைய ரானார்.
உரை
   
மன்னன் தோற்று நிற்றல்
 
1676. சாந்தெழு சிவிறித் தாரை
     சதுர்முக மாக வீக்கிப்
பாய்ந்தன பவழச் செங்கே
     ழங்கையான் முகந்த தெண்ணீர்
வேய்ந்தன திவலை யாகி
     விழுந்தன வேரி மாலை
நாந்தகக் கிழவன் பொய்யே
     நங்கைமார்க் குடைந்து நின்றான்.
உரை
   
1677. காரையார் வண்ணன் மாலைக்
     காற்படை யுடைந்த போழ்தி்ல்
தரையாய்க் குறளுஞ் சிந்து
     மிதந்தன சில்ல சிந்தி
வேரியார் குவளை வேய்ந்த
     மெல்லிய லவர்க்குத் தோற்ற
ஒரையாய் முதலை யாகிக்
     கூன்மடை யொளித்த வன்றே.
உரை
   
வாலி வற்றி விடுதல்
 
1678. வென்றனம் வீரன் றன்னை
     வீக்குமின் சிவிறித் தாரை
சென்றெனச் சிறந்த காதற்
     றேவியர் திளைக்கும் போழ்தில்
ஒன்றிய வுழையர் கீழ்நீ
     ரோப்பறித் திடுத லோடு
நின்றகஞ் சுழிந்த தெண்ணீர்
     நெரேலென விழிந்த தன்றே.
உரை
   
மகளிர் நாணமுறல்
 
1679. மாலையுந் துகிலும் வார்
     வார்புன லொழுகும் போழ்தின்
ஆலையின் கரும்பி னின்சொ
     லணங்கனா ரவிழத் தத்தம்
கோலமென் றுகில்க டாங்கிக்
     குழைமுகஞ் சுடரக் கோட்டி
வேலைநீர் வண்ணன் முன்னர்
     நாணினான் மெலிவு சென்றார்.
உரை
   
1680. அருமணிக் கலாப வல்கு
     லவிழ்துகி லசைத்து மீட்டும்
திருமணி வண்ண னோடுந்
     தேவியர் திளைத்துத் தெண்ணீர்ப்
புரிமணிப் பொன்செய் வாவிப்
     புணைபுறந் தழுவிப் புக்கார்
கருமணி வண்டுந் தேனுங்
     கையுறக் கலந்த தன்றே.
உரை
   
வேறு விளையாடல்

வேறு
 
1681. கொங்கைக டுளும்பநீர் குடைந்துங் கொய்தளிர்
அங்கையி னோன்புணை தழுவி யாடியுஞ்
செங்கயற் கண்மலர் சிவப்ப மூழ்கியு
மங்கையர் புனற்றொழின் மயங்கிற் றென்பவே.
உரை
   
புனல் இருள் பட்டது
 
1682. அடித்தலத் தலத்தகங் கழுமிக் குங்குமப்
பொடிக்கலந் தந்திவான் படைத்த பூம்புனல்
வடிக்கலந் திலங்குவா ணெடுங்கண் மைக்குழம்
பிடிக்கலந் திருளுமங் கியற்றப் பட்டதே.
உரை
   
புனல் அளறுபடல்
 
1683. கொங்கைவாய்க் குங்குமக் குழம்புங் கோதைவாய்
மங்கைமார் சிதர்ந்தன வாசச் சுண்ணமும்
செங்கண்மா லகலத்து விரையுந் தேர்த்தரோ
அங்கண்மா லிரும்புன லளறு பட்டதே.
உரை
   
திரைகள் இளைத்துத் தோன்றின
 
1684. அணங்கனா ரகலல்கு லலைத்து மாங்கவர்
சுணங்குசூ ழிளமுலை துளும்பத் தாக்கியும்
வணங்குபூங் கொடியிடை வளைத்தும் வாவிவாய்
இணங்குநீர்த் திரையவை யிணைப்ப வொத்தவே.
உரை
   
தாமரையின் செயல்
 
1685. வடந்தவ ழிளமுலை விம்ம மங்கையர்
குடைந்திட வெழுந்தநீர் குளித்த தாமரை
மடந்தையர் குளித்தெழும் போழ்தின் வாண்முகம்
அடைந்ததோர் பொலிவினை யறிவித் திட்டவே.
உரை
   
புனல் கரையேறி மீண்டது
 
1686. வளைத்தகை யொண்பணைத் தோளி மாரொடு
திளைத்தகங் கழுமிய தரங்கத் தெண்புனல்
இளைத்தவர் மணிக்கரை யேறச் சீறடி
திளைத்துமுன் சிறிதிடஞ் சென்று மீண்டதே.
உரை
   
அரசன் முதலியோர் ஒரு மண்டபமடைதல்
 
1687. பொழுதுசென் னாழிகை யெல்லை பூங்கழல்
தொழுதுவந் திளையவ ருணர்த்தத் தொண்டைவாய்
எழுதிய கொடியனார் சூழ வீர்ம்பொழில்
பழுதுழை யிலாப்பகற் கோயி லெய்தினான்.
உரை
   
தேவியின் செயல்
 
1688. தேவியர் திருமணி மேனி நீர்துடைத்
தாவியம் புனைதுகி லல்குன் மேலுடீஇக்
காவியங் கண்ணினார் காக துண்டத்தின்
ஆவியா லீர்ங்குழ லாவி யூட்டினார்.
உரை
   
1689. தண்ணிறத் தண்கழு நீரி னெய்தலின்
கண்ணிறக் கருங்கடை யிதழும் பெய்திடை
தண்ணறுந் தமனகக் கொழுந்துஞ் சார்த்திய
ஒண்ணிறப் பிணையலன் றுவக்கப் பட்டதே.
உரை
   
1690. பொன்மலைக் காவியற் றிமிர்ந்து பூங்கமழ்
தென்மலைச் சந்தன மெழுதித் தாமரை
நன்மலர்த் தாதுமீ தப்பி நங்கைமார்
மென்முலைத் தடங்களும் விருந்து பட்டவே.
உரை
   
1691. கண்ணகங் குளிர்ப்பக் கல்லாரக் கற்றையும்
தண்ணறுங் குவளைதா மெறித்த தாமமும்
ஒண்ணிறத் தாமரை யொலிய லுந்தழீஇ
எண்ணரும் பெருங்கவி னிளைய ரெய்தினார்.
உரை
   
1692. காமரு நிறத்தகல் லாரக் கற்றைகள்
சாமரை யெனத்தம ரசைப்பத் தாமரை
தேமரு குடையிலை கவிப்பத் தேவியர்
பூமரு மடந்தையர் போன்று தோன்றினார்.
உரை
   
1693. தேவர்க டிசைமுகங் காப்பத் தீஞ்சுவை
ஆவியா ரமிழ்தயின் றிருந்த வாயிடைப்
பாவையர் கருங்கணாற் பருகு வார்கள்போன்
மாவர சழித்தவன் மருங்கு சுற்றினார்.
உரை
   
ஆங்கோர் விஞ்சையன் தோன்றல்

வேறு
 
1694. வஞ்சியங் கொம்ப னாரு மன்னனு மிருந்த போழ்தின்
விஞ்சைய னொருவன் றோன்றி விசும்பினா றிழிந்து வந்து
மஞ்சிவர் சோலை வாயில் வாயிலோன் வாயி லாக
அஞ்சன வண்ணன் செந்தா மரையடி வணங்கி னானே.
உரை
   
வந்தவனை உபசரித்தல்
 
1695. வந்தவன் வணங்க லோடு
     மாமனை நுவலி யென்னை
கந்தணை யானை வேந்தன்
     கழலடி செவ்வி யோவென்
றந்தமி லாழி யாள்வான்
     வினவலி னருளு மாறென்
றிந்திர னனைய நீராற்
     கிறைஞ்சலு மிருக்க வென்றான்.
உரை
   
விஞ்சையன் கொண்டுவந்த நிருபம்
 
1696. உரிமையோ டிருந்த போழ்தி
     னுணர்த்துதற் குரித்தென் றெண்ணித்
திருமுகந் தொழுது காட்டத்
     தேவிதன் மருங்கு நின்ற
உரிமைகொ ளுழைய ருள்ளா
     ளொருத்திவா சித்து ணர்த்த
அருமுடி யொழிய வெல்லா
     வணிகளு மவனுக் கீந்தான்.
உரை
   
விஞ்சையின் செய்தி கூறல்
 
1697. கனிவளர் கிளவி யாருங்
     கதிர்மணிக் கலங்கள் வாங்கிப்
பனிமதி விசும்பின் வந்தான்
     பால்வரப் பணித்த பின்னை
இனியிது பெயர்த்து நீயே
     யுரையென வெடுத்துக் கொண்டு
துனிவள ரிலங்கு வேலான்
     கழலடி தொழுது சொன்னான்.
உரை
   
1698. சுடர்மலைத் திருண்ட சோலைச்
     சுரேந்திர காந்த மென்னும்
வடமலை நகர மாளு
     மன்னவன் றேவி பெற்ற
தடமலர்ப் பெரிய வாட்கட்
     டையன்மற் றவளை யெங்கோன்
விடமலைத் திலங்கு செவ்வேல்
     வெய்யவன் பெயரன் வேட்டான்.
உரை
   
அதனைக் கேட்டுத் திவிட்டன் மகிழ்தல் ; சூரியாத்தமனம்
 
1699. என்றவன் பெயர்த்துஞ் சொல்ல
     வின்பநீர் வெள்ள மூழ்கி
மின்றவ ழிலங்கும் வேலான்
     விஞ்சைய னவனைப் போக்கிச்
சென்றுதன் கோயில் சேர்ந்தான்
     செங்கதிர்த் திகிரி யானு
மன்றழல் சுருங்க முந்நீ
     ரலைகட லழுவம் பாய்ந்தான்.
உரை
   
மாலை
 
1700. அழலவன் குளித்த பின்னை
     யணங்கிவ ரந்தி யென்னும்
மழலையங் கிளவிச் செவ்வாய்
     மடந்தையு மடைந்த போழ்தில்
குழலமர் கிளவி யார்தங்
     கூந்தலுட் குளித்து விம்மி
எழிலகி லாவி போர்ப்ப
     விருவிசும் பிருண்ட தன்றே.
உரை
   
இரவு
 
1701. விரவின பரவைப் பன்மிமீன்
     மிடைமணிக் கலாப மாக
மருவின பரவை யல்குன்
     மயங்கிருட் டுகிலை வாங்கிப்
புரிவணன் மதிய மென்பான்
     பொழிகதிர்த் தடக்கை நீட்டி
இரவெனு மடந்தை செல்வ
     நுகரிய வெழுந்து போந்தான்.
உரை
   
திவிட்டன் இன்பம் நுகர்தல்
 
1702. ஏரணி விசும்பி னங்கே
     ழெழுநிலா விரிந்த போழ்தில்
சீரணி மணிவண் டார்க்குஞ்
     சிகழிகைப் பவழ வாயார்
காரணி வண்ண னென்னுங்
     கருங்களி வேழந் தன்னை
வாரணி யிளமென் கொங்கை
     வாரியுள் வளைத்துக் கொண்டார்.
உரை
   
1703. பங்கய முகத்து நல்லார்
     பவழவாய்க் கவளங் கொண்டு
பொங்கிய களிய தாகி்
     மயங்கிய பொருவில் வேழம்
குங்குமப் பொடிநின் றாடிக்
     குவட்டிளங் கொங்கை யென்னும்
தங்கொளி மணிமுத் தேந்துந்
     தடத்திடை யிறைஞ்சிற் றன்றே.
உரை
   
1704. வேய்மரு ளுருவத் தோளார்
     வெம்முலைத் தடங்க ளென்னும்
பூமரு தடத்துட் டாழ்ந்து
     பொற்பொடி புதைய வாடிக்
காமரு காம மென்னுங்
     கருங்கயம் படிந்து சென்று
தேமரு குழலஞ் சாயற்
     றேவிகைப் பட்ட தன்றே.
உரை
   
1705. காதலா லுரிமை பாங்கிற்
     கடிகமழ் காம வல்லித்
தாதலொந் ததர்ந்து சிந்தத்
     திளைத்தவத் தடக்கை வேழம்
மாதரா ளமிழ்தின் சாயற்
     றோட்டியால் வணக்கப் பட்டுப்
போதுலாம் புணர்மென் கொங்கைக்
     குவட்டிடைப் பூண்ட தன்றே.
உரை
   
சுயம்பிரபையின் வாயினுள் மதி புகுதல்
 
1706. செங்கயற் கண்ணி னாளுஞ்
     செல்வனுந் திளைத்துத் தீந்தேன்
பொங்கிய வமளி மேலாற்
     புணர்முலை நெருங்கப் புல்லித்
தங்கிய பொழுதிற் றாழ்ந்து
     தண்கதிர் மதியந் தானே
மங்கைதன் பவழச் செவ்வாய்
     மடுத்தக மடைந்த தன்றே.
உரை
   
தேவி அஞ்சியலறல்
 
1707. அடைந்தது மதிய மாக
     வாயிடை யரசன் றிண்டோள்
மிடைந்ததோ ணெகிழ விம்மி
     மெல்லியல் வெருவ லோடு்
மடங்கலை யலைக்கு நீரான்
     மருட்டினன் வினவ மாதோ
வடந்தவ ழிளமென் கொங்கை
     மெல்லவே மிழற்றி னாளே.
உரை
   
மன்னன் அவளைத் தேற்றல்
 
1708. வணங்கியிவ் வுலக மெல்லா
     மகிழ்ந்துகண் பருகு நீர்மை
அணங்கிவர் சிறுவன் வந்துன்
     அணிவயிற் றகத்துப் பட்டான்
கணங்குழை யஞ்ச லென்று
     கருமணி வண்ணன் றேற்றப்
பணங்குலாம் பரவை யல்குற்
     பாவையும் பரிவு தீர்ந்தாள்.
உரை
   
சூரியோதயம்
 
1709. கங்குல்வாய் மடந்தை கண்ட
     கனவுமெய் யாகல் வேண்டி
மங்குல்வா னகட்டுச் சென்று
     மதியவன் மறைந்த பின்னை
அங்குலா யிருளை நீக்கு
     மாயிரங் கதிரி னானும்
கொங்குலாங் குழலி காணுங்
     குழவிய துருவங் கொண்டான்.
உரை
   
சுயம்பிரபையின் கருப்பப் பொலிவு
 
1710. குலம்புரி சிறுவனைத் தரித்துக் கோலமா
நிலம்புரி நிழலொளி நிரந்து தோன்றலால்
வலம்புரி மணிக்கரு விருந்த தன்னதோர்
நலம்புரி திருவின ணங்கை யாயினாள்.
உரை
   
1711. மின்னிலங் கவிரொளி மேனி மெல்லவே
தொன்னலம் பெயர்ந்துபொன் சுடர்ந்து தோன்றலான்
மன்னிலங் கருமணி வளர வாளுமிழ்
பொன்னிலம் புரைவதோர் பொலிவு மெய்தினாள்.
உரை
   
புதல்வற் பேறு
 
1712. கோணலம் பொலிந்துவிண் குளிரக் குங்குமத்
தோணலம் பொலிந்ததோர் தோன்ற லோடுதன்
கேணலம் பொலிதரக் கிளருஞ் சோதிய
நாணலம் பொலிதர நம்பி தோன்றினான்.
உரை
   
நகரமாந்தர் மகிழ்ச்சி
 
1713. பொலிகெனு மொலிகளும் பொன்செய் மாமணி
ஒலிகல வொலிகளும் விரவி யூழிநீர்
கலிகெழு கனைகடல் கலங்கி யன்னதோர்
பலிகெழு முரசொலி பரந்தொ லித்ததே.
உரை
   
1714. துளைபடு குழலிசை துடியொ டார்ப்பவும்
வளைபடு கறங்கிசை வயிரொ டேங்கவும்
தளைபடு தகைமலர் மாலை தாதுகக்
கிளைபடு வளநகர் கிலுகி லுத்ததே.
உரை
   
1715. தொத்திளங் கடிமலர் துதைந்த கோதையார்
மொய்த்திளங் குமரரோ டாடு முன்கடை
மத்தளப் பாணியு மதன கீதமும்
கைத்தலத் தாளமுங் கலந்தி சைத்தவே.
உரை
   
1716. சிறைநகர் சீத்தன திலத முக்குடை
இறைநகர் விழவணி யியன்ற நீண்டுநீர்த்
துறைநகர் சுண்ணநெய் நாவி தூங்கின
நிறைநக ரவர்தொழி னினைப்பி கந்தவே.
உரை
   
சினகரத்திற் செய்தவை
 
1717. சுண்ணநெய் யெழுபக லாடித் தொன்னகர்
நண்ணிய நானநீ ராடி நம்பியைப்
புண்ணியா வாசனை செய்து புங்கவன்
திண்ணிய வடிமலர்ச் சேடஞ் சேர்த்தினார்.
உரை
   
சுற்றத்தார் வருதல்
 
1718. வழுவலி னாஞ்சிலான் வண்பொ னாழியான்
தழுமல ரலங்கலான் றாதை தானெனச்
செழுமல ரணிகுழற் றேவி மாரென
எழுபெருங் கிளைகளு மினிதி னீண்டினார்.
உரை
   
அவர்கள் குழவியைத் தழுவி மோந்து மகிழ்தல்
 
1719. எழுதரு பரிதியங் குழவி யேய்ப்பதோர்
தொழுதகை வடிவொடு நம்பி தோன்றலும்
தழுவினர் முயங்கினர் முயங்கித் தம்முளே
ஒழிவிலா வுவகைநீர்க் கடலுண் மூழ்கினார்.
உரை
   
அந்தணர் முதலியோர் வாழ்த்துதல்
 
1720. அறத்தகை யந்தணர் குழுவு மாடல்வேன்
மறத்தகை மன்னவர் குழுவு மாநகர்த்
திறத்தகு முதியரு மீண்டிச் செல்வனைப்
பொறுத்தவர் பொலிவுரை புடைபொ ழிந்ததே.
உரை
   
திவிட்டன் அந்தணர் முதலியோருக்கு அரதன முதலியவை அளித்தல்
 
1721. குருமணிக் கோவையுங் குளிர்பொற் குன்றமும்
அருமணிக் கலங்களு மரத்த வாடையும்
புரிமணி வளநகர் புகுந்து கொள்கெனக்
கருமணி யொளியவன் கவரக் காட்டினான்.
உரை
   
நாமகரணம்
 
1722. திருவொடு திசைமுகந் தெளிர்ப்பத் தோன்றினான்
திருவொடு வென்றியிற் சேரு மாதலால்
திருவொடு திகழ்தர விசய னென்றரோ
திருவுடை மார்பனை நாமஞ் சேர்த்தினார்.
உரை
   
விமானம் வருகை
 
1723. விஞ்சைய ருலகிற்கும் விடுத்து மோகையென்
றஞ்சன வண்ணனங் கருளு மாயிடை
மஞ்சுடை விசும்பினின் றிழிந்து வந்தது
செஞ்சுட ருமிழ்வதோர் செம்பொன் மானமே.
உரை
   
1724. மணிநகு விமானமொன் றிழிந்து வந்துநம்
அணிநக ரணுகின தடிக ளென்றலும்
பணிவரை கொணர்மினீர் பாங்கி னென்றனன்
துணிநகு சுடரொளி துளும்பும் வேலினான்.
உரை
   
1725. மஞ்சுசூழ் மழைநுழை மானந் தன்னுளோர்
விஞ்சையர் மடந்தையர் விளங்கு மேனியர்
கஞ்சுகி யவரொடு மிழிந்து காவலன்
இஞ்சிசூழ் நகரணி யிருக்கை யெய்தினார்.
உரை
   
1726. பொலிகெனப் புரவலன் பொன்செய் நீண்முடி
மலிதரு நறுநெயம் மகளிர் பெய்தலுங்
கலிதரு கனைகட லன்ன காதலோ
டொலிதரு நகையொலி யுவந்தெ ழுந்ததே.
உரை
   
1727. நாவிகா றழுவிமன் னறுநெய் யாடிய
பாவைமார் தங்களைப் பாவை கோயிலுக்
கேவியாங் கிருந்தபி னிறைவற் கின்னணம்
தேவிகோன் றமன்றொழு தொருவன் செப்பினான்.
உரை
   
தூதன் கூறிய செய்தி
 
1728. எங்கள்கோ னெறிகதிர்ப் பெயர னீர்மலர்க்
கொங்குசே ரலங்கலான் குளிரத் தங்கினாள்
மங்குறோய் மணிவரை மன்னன் றன்மகள்
தொங்கல்சூழ் சுரிகுழற் சோதி மாலையே.
உரை
   
1729. மங்குல்வான் மழைகெழு மின்னின் மன்னவன்
தொங்கல்வாய் மடந்தைகண் டுயிலு மாயிடைக்
கங்குல்வாய்க் கதிர்மதி கவானின் மேலிருந்
தங்கண்மால் விசும்பக மலர்வித் திட்டதே.
உரை
   
1730. தெண்கதிர்த் திருமணி கனவிற் சேர்ந்தபின்
கண்கதிர்த் திளமுலை கால்ப ணைத்தன
தண்கதிர்த் தமனியப் பாவை போல்வதோர்
ஒண்கதிர்த் திருமக ளுருவ மெய்தினாள்.
உரை
   
வயா
 
1731. வானிவர் மணிநகை விமான மேறவும்
கானிவர் கற்பகச் சோலை காணவும்
மானிவர் நோக்கினாள் வயாவி னாளது
தேனிவ ரலங்கலாய் தீர்க்கப் பட்டதே.
உரை
   
அமிதசேனன் பிறப்பு
 
1732. மாணிக்க மரும்பிய வண்பொன் மாநிலத்
தாணிப்பொன் னனையவ ளனைய ளாயபின்
கோணிற்கும் விசும்பிடைக் குழகித் திங்களும்
நாணிப்போ முருவொடு நம்பி தோன்றினான்.
உரை
   
1733. தேமரு செங்கழு நீரின் செவ்விதழ்
காமரு பவழவாய் கமழுங் கண்மலர்
தாமரை யகவிதழ் புரையுந் தானுமோர்
பூமரு தமனியக் குழவி போலுமே.
உரை
   
1734. வானிடை மணிவிளக் கெரிந்த வண்டொடு
தேனுடை மலர்மழை சிதர்ந்த தவ்வழி
மீனுடை விரிதிரை வெண்சங் கார்த்தன
தானுடை யொளிதிசை தவழ்ந்தெ ழுந்ததே.
உரை
   
பெயரிடுதல்
 
1735. அளப்பருந் திறலுடை யரசர் தொல்குடை
அளப்பருந் திறலினோ டலரத் தோன்றினான்
அளப்பருந் திறலின னமித தேசனென்
றளப்பருந் திறற்பெய ரமரக் கூறினார்.
உரை
   
1736. ஐயன தழகுகண் பருக வவ்வழி் மையணி மழைமுகில் வண்ணன்
மாமனார்
வையக முடையவற் குணர்த்தி வாவென
நெய்யொடு வந்தன னிலைமை யின்னதே.
உரை
   
தூதனை யுபசரித்தல்
 
1737. என்றவன் மொழிதலு மிலங்கு நேமியான்
நின்றகஞ் சுடர்தரு நிதியி னீத்தமங்
கன்றவற் கருளின னரச செல்வமோ
டொன்றின னுவந்துதன் னுலக மெய்தினான்.
உரை
   
வேறு
 
1738. விண்டா ரில்லா வெந்திற லோன்பொற் சுடராழித்
தண்டார் மார்பன் றன்மக னன்மா மணியேபோல்
கண்டார் கண்களி கூருஞ் செல்வக் கவினெய்தி்
வண்டா ரைம்பான் மங்கையர் காப்ப வளர்கின்றான்.
உரை
   
1739. கண்கவர் சோதிக் காமரு தெய்வம் பலகாப்பத்
தண்கமழ் போதிற் றாமரை யாளுந் தகைவாழ்த்த
விண்கவர் சோதித் தண்கதி ரோன்போல் விரிவெய்தி
மண்கவர் சோதித் தண்கதிர் வண்ணன் வளர்கின்றான்.
உரை
   
தவழ்தல்
 
1740. செம்பொற் கோவைக் கிண்கிணி யேங்கத் திலகஞ்சேர்
அம்பொற் கோவைப் பன்மணி மின்னிட் டரைசூழப்
பைம்பொற் கோவைப் பாடக மென்சீ றடிநல்லார்
தம்பொற் கோவைப் பூண்முலை முன்றிற் றவழ்கின்றான்.
உரை
   
1741. போதார் பொய்கைப் போதவிழ் பொற்றா மரைகாட்டி
மாதார் சாயன் மங்கையர் கூவ மகிழ்வெய்திக்
காதார் செம்பொற் றாழ்குழை மின்னின் கதிர்வீசத்
தாதார் பூவின் றண்டவி சேறித் தவழ்கின்றான்.
உரை
   
1742. கண்ணின் செல்வங் கண்டவர் கண்டே மனம்விம்ம
மண்ணின் செல்வம் வைகலும் வைகன் மகிழ்வெய்தி
விண்ணின் செல்வச் செங்கதி ரோன்போல் விளையாடித்
தண்ணென் செல்கைப் பொன்னுருள் வாங்கித் தளர்கின்றான்.
உரை
   
கல்வி கற்பித்தல்
 
1743. ஐயாண் டெல்லை யையன ணைந்தா னவனோடு
மையா ரின்பக் காதலி நாவின் மகளாகப்
பொய்யாக் கல்விச் செல்வர்க டம்மாற் புணர்வித்தான்
நெய்யார் செவ்வே னீளொளி நேமிப் படையானே.
உரை
   
மகள் பிறப்பு
 
1744. காமச் செல்வ னென்றுல கெல்லாங் களிதூங்கும்
ஏமச் செல்வ நம்பியொ டின்னு மிளையாகச்
சேமச் செல்வன் றேவி பயந்தா டிசையெல்லாம்
ஓமச் செல்வங் கொண்டினி தேத்து மொளியாளே.
உரை
   
பெயரிடுதல்
 
1745. பாரார் செல்கைப் பல்கிளை யெல்லா முடனீண்டிப்
பேரா வென்றிக் கொன்றிய வாறு பெயரிட்டுச்
சீரா ரோகை விஞ்சையர் சேணி செலவிட்டுக்
காரார் வண்ணன் காதலொ டின்பக் கடலாழ்ந்தான்.
உரை
   
1746. ஐயன் றானு மவ்வகை யாலே வளர் வெய்த
மையுண் கண்ணி மாபெருந்தேவி மகிழ் தூங்கத்
தெய்வம் பேணிப் பெற்றனர் பேணுந் திருவேபோல்
மெய்யின் சோதி சூழொளி மின்னின் பெயராளும்.
உரை
   
1747. தேதா வென்றே தேனொடு வண்டு திசைபாடும்
போதார் சாயற் பூங்கொடி போலப் பொலிவெய்தித்
தாதார் கோதைத் தாயரொ டாயம் புடைசூழ
மாதார் சாயன் மாமயி லன்னாள் வளர்கின்றாள்.
உரை
   
வேறு
 
1748. மழலைக் கனிவாய் மணிவண்டு
     வருடி மருங்கு பாராட்ட
அழனக் கலர்ந்த வரவிந்த
     வமளி சேர்ந்த விளவன்னம்
கழனிச் செந்நெற் கதிரென்னுங்
     கவரி வீசக் கண்படுக்கும்
பழனக் குவளை நீர்நாடன்
     பாவை வார்த்தை பகருற்றேன்.
உரை
   
1749. செம்பொற் சிலம்புங் கிண்கிணியுஞ்
     செல்வச் செஞ்சீ றடிபோற்ற
வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்த
     வல்குன் மணிமே கலை மருட்ட
அம்பொற் சுருளை யிருபாலு
     மளக வல்லி யருகிலங்கப்
பைம்பொற் சுடிகை நிழறுளங்கப்
     படர்ந்தா டாயம் படிந்தாளே.
உரை
   
பந்தாடல்
 
1750. நங்கை நல்லார் பாராட்ட
     நகையாட் டாயம் புகலோடு
மங்கை மடவார் பந்தாடன்
     மயங்கி யாடன் மணிநிலத்துக்
கொங்கை சேர்ந்த குங்குமத்தின்
     குழம்புங் கோதை கொய்தாதும்
அங்க ராகத் துகளும்பாய்ந்
     தந்தி வான மடைந்ததுவே.
உரை
   
1751. காவி நாணுங் கண்ணார்தங்
     கையி னேந்துங் கந்துகங்கள்
ஆவி தாமு முடையனபோ
     லடிக்குந் தோறு மடங்காது
பூவி னார்ந்த மணிநிலத்துப்
     பொங்கி யெழுந்து பொன்னேந்தி
நாவி நாறு மிளங்கொங்கைத்
     தடங்கள் சென்று நணுகியவே.
உரை
   
1752. கரிய குழலும் பொற்றோடுஞ்
     செய்ய வாயுங் கதிர்முறுவல்
மரிய திசையு மதிமயங்கு
     மம்பொன் முகத்து மடவார்கள்
திரியத் தம்மைப் புடைத்தாலுஞ்
     சென்று சேர்ந்து திளைக்குமால்
அரிய செய்யுங் காமுகர்போ
     லளிய வந்தோ வடங்காவே.
உரை
   
1753. செம்பொற் சுருளை மெல்விரலாற்
     றிருத்திச் செறிந்த தேரல்குல்
வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்து
     மணிமே கலையுந் தானேற்றி
அம்பொற் குரும்பை மென்முலைமே
     லணிந்த பொன்ஞா ணருகொடுக்கிப்
பைம்பொற் றிலத நுதலொதுக்கிப்
     பாவை பந்து கைக்கொண்டாள்.
உரை
   
வேறு
 
1754. கந்தாடு மாலியானைக் கார்வண்ணன் பாவை
     கருமேகக் குழன்மடவார் கைசோர்ந்து நிற்பக்
கொந்தாடும் பூங்குழலுங் கோதைகளு மாடக்
     கொய்பொலந் துகிலசைத்த கொய்சகந் தாழ்ந்தாட
வந்தாடுந் தேனுமுரல் வரிவண்டு மாடமணி
     வடமும் பொன்ஞாணும் வார்முலைமே லாடப்
பந்தாடு மாடேதன் படைநெடுங்க ணாடப்
     பணைமென்றோ ணின்றாடப் பந்தாடு கின்றாள்.
உரை
   
1755. கந்துகங்கள் கைத்தலத்தா லேறுண்டு பொங்கிக்
     கருங்கண்ணுந் தாமுமுறக் கலந்தெழுந்த போழ்தின்
வந்தனவுஞ் சென்றனவும் வானத்தின் மேலு
     மணிநிலத்து மீதுநெறி மறிகுவன வாகி
அந்துகிலி னிடைத்தோயு மகலல்கு றீண்டு
     மணிமருங்கு சூழுமணியார் வடமுந் தாக்கும்
கொந்தவிழும் பூங்குழ்லுங் கோதைகளு மூழ்குங்
     குவளை வாட் கண்ணிவருங் குறிப்பறிய மாட்டாள்.
உரை
   
1756. நறுமாலை வந்தலைப்ப நன்மேனி நோமா
     னங்காயிப் பந்தாட னன்றன்றா மென்பார்
இறுமாலிம் மின்மருங்கு லென்பாவ மென்பார்
     இளமுலைமே லேர்வடம்வந் தூன்றுமா லென்பார்
செறுமாலிங் கிவைகாணிற் றேவிதா னென்பார்
     செங்கண்மால் காணுமேற் சீறானோ வென்பார்
பெறுமாறு தாயருந் தோழியரு நின்று
     பிணையனா டன்மேற் பன்மொழி மிழற்றுகின்றார்.
உரை
   
1757. நீராலிக் கட்டி நிரந்தெழுந்து பொங்கி
     நிழறயங்கும் பொன்னறைமே னின்றாடுகின்ற
காராலி மஞ்ஞை களிசிறந்தாற் போலக்
     கருங்குழலி பந்தாடல் காதலித்த போழ்தில்
சீராலி மால்வண்ணன் றேவியுந் தானும்
     செவ்வரத்த நுண்ணெழினி சேர்ந்தொருங்கு நோக்கி்
வாராலி மென்கொங்கை மையரிக்கண் மாதர்
     வருந்தினா ணங்கையினி வருகவீங் கென்றார்.
உரை
   
வேறு
 
1758. அருமணி முடியவ னருளி தென்றலும்
பருமணிப் பந்துகை விட்டுப் பாவைதன்
புரிமணிக் குழல்புறந் தாழப் போந்தரோ
கருமணி யொளியவன் கழல்சென் றெய்தினாள்.
உரை
   
1759. மங்கையை வலப்புடைக் குறங்கின் மேலிரீஇ
அங்கையா லணிநுத லரும்பு நீர்துடைத்
தெங்குமி லுவகையோ டினிதி ருந்தபின்
நங்கைத னலங்கிளர் மேனி நோக்கினான்.
உரை
   
1760. இளமையா லெழுதரு மிணைமென் கொங்கையின்
வளமையாற் பொலிதரும் வனப்பின் மாட்சியால்
குளமையா னறவிரி குவளைக் கண்ணியான்
உளமயா வுயிர்ப்பதோ ருவகை யெய்தினான்.
உரை
   
1761. செல்வியைத் திருக்குழ றிருத்தித் தேவிதன்
அல்குன்மே லினிதினங் கிருவி யாயிடை
மல்குபூ மந்திர சாலை மண்டபம்
பில்குபூந் தெரியலான் பெயர்ந்து போயினான்
உரை
   
1762. அருத்தநூ லவரொடு மாய்ந்து மற்றவர்
கருத்தொடு பொருந்திய கருமச் சூழ்ச்சியான்
திருத்தகு சயம்வர முரசந் திண்களிற்
றெருத்தின்மே லறைகென விறைவ னேயினான்.
உரை
   
1763. வாலிய சந்தமென் சேறு மட்டித்துப்
பீலியந் தழையொடு பிணையல் வேய்ந்தன
பாலியல் பலிபெறு முரசம் பன்மையில்
ஆலியங் கதிர்கொள வதிர்ந்த றைந்தவே.
உரை
   
1764. வாழ்கநம் மன்னவன் வாழ்க வையகம்
ஆழ்கநம் மரும்பகை யலர்க நல்லறம்
வீழ்கதண் புனல்பயிர் விளைக மாநிலம்
தாழ்கமற் றருந்துயர் சாற்றக் கேண்மினே.
உரை
   
1765. புள்ளணி வார்பொழிற் பொன்செய் மாநகர்
உள்ளணி பரப்புமி னுயர்மின் றோரணம்
வெள்ளணி விரும்புமின் விருந்து போற்றுமின்
கள்ளணி மலரொடு கலங்கள் பெய்ம்மினே.
உரை
   
1766. இன்றைநா ளுள்ளுறுத் தீரைஞ் ஞாள்களும்
மன்றலஞ் சயமரம் வரைந்த தாதலால்
ஒன்றிவா ழரசரோ டுலக மீண்டுக
வென்றுதா னிடிமுர சறைந்த தென்பவே.
உரை
   
1767. கொடிபடு நெடுநகர்க் கோயில் வீதிவாய்
இடிபடு மழைமுகி லென்ன வின்னணம்
கடிபடு முரசுகண் ணதிர்ந்த காரென
மடிபடு மாடவாய் மயில்கண் மான்றவே.
உரை
   
1768. முர்சொடு வரிவளை மூரித் தானையோ
டரசரு மரசரல் லாரு மாயிடைத்
திரைசெறி கனைகடல் சென்று தேர்த்தனெப்
புரைசெறி புரிசையின் புறணி முற்றினார்.
உரை
   
1769. வெண்மலைச் சென்னிமேல் விஞ்சை வேந்தரும்
கண்மலைத் திழிதருங் கடலந் தானையர்
விண்மலைத் திழிதரும் விளங்கு சோதியர்
எண்மலைச் சிலம்பிடை யிறைகொண் டீண்டினார்.
உரை
   
1770. அவ்வரை யரைசர்கோ னருக்கன் றன்மகன்
செவ்வரை யனையதோட் செல்வன் றன்னொடும்
மைவரை நெடுங்கணம் மடந்தை தன்னொடும்
இவ்வரை யரைசெதிர் கொள்ள வெய்தினான்.
உரை
   
1771. பொன்னகர்ப் புறத்ததோர் புரிசை வார்பொழி்ல்
தன்னகத் தியற்றிய தயங்கு பொன்னகர்
மன்னர்கட் கிறைவன்வந் திருப்ப மண்மிசை
இந்நகர்க் கிறைவனு மெதிர்கொண் டெய்தினான்.
உரை
   
1772. கண்சுட ரிலங்குவேற் காள வண்ணனும்
வெண்சுட ரொளியவன் றானும் விஞ்சையர்
தண்சுடர்த் தமனிய வண்ணன் றன்னொடும்
மண்சுட ருறுப்பதோர் வகைய ராயினார்.
உரை
   
1773. இருபுடைக் கிளைகளும் விரவி யின்னணம்
தெருவுடைத் திசைமுகந் தெளிப்பத் தேர்த்தரோ
மருவுடை மகரநீர் வளாகம் வானவர்
உருவுடை யுலகம்வந் திழிந்த தொத்ததே.
உரை
   
1774. சிகைமணி யழுத்திய செம்பொற் சென்னிய
நகைமணிக் கோபுர வாயி னான்கொடு
வகைமணித் தலத்ததோர் மதலை மாளிகை
தொகைமணித் தொழில்பல தொடரத் தோற்றினார்.
உரை
   
1775. பளிங்கியல் பலகையும் பவழத் தூண்களும்
விளங்குபொற் கலங்களும் வெள்ளி வேயுளும்
இளங்கதிர் முத்தமு மியற்றி யின்னணம்
வளங்கவின் றனையதம் மதலை மாடமே.
உரை
   
1776. மீன்முக விசும்பிடை விரிந்த வெண்ணிலாப்
பான்முகந் தொகுப்பன பனிக்கும் வேதிகை
மேன்முகந் திருத்திய வெள்ளி முன்றிலான்
நான்முக மருங்கினு நகுவ தொக்குமே.
உரை
   
1777. அங்கதற் கைந்துகோ லளவி னாடரங்
கிங்குவந் திறுத்தன வென்னு மீட்டன
செங்கதிர்ப் பவழக்கா னிரைத்த செம்பொனான்
மங்கலச் செய்கைய மஞ்சு சூழ்ந்தவே.
உரை
   
1778. விளிம்பிடை மரகத வேதி கட்டிய
வளம்பெறு மணிநகை மஞ்ச மீமிசை
இளம்பெருஞ் சுரியுளை யரிநின் றேந்திய
உளம்பொலி யாசன முயர விட்டவே.
உரை
   
1779. மண்டங்கு மகரவா சனத்து மென்மயில்
கண்டங்கள் புரைவன கனபொற் கொட்டைய
அண்டங்கொ ளன்னமென் றூவி யார்த்தன
எண்டங்கு மணியன வியற்றப் பட்டவே.
உரை
   
1780. வாரித்தண் கதிர்மணி முத்த மாலையும்
பாரித்த பளிங்கெழிற் பழித்த கோவையும்
பூரித்த பொழிகதிர்ப் பொன்செய் தாமமும்
வேரித்தண் பிணையலு மிடையப் பட்டவே.
உரை
   
1781. மஞ்சுடை மாளிகை மிடைம ணித்தலம்
பஞ்சுடைத் தவிசுகள் பரப்பிப் பூவடுத்
தஞ்சுட ரிடுபுகை யடர்ந்தெ ழுந்தரோ
வெஞ்சுடர்க் கடவுளை விருந்து செய்தவே.
உரை
   
1782. சயமர மாளிகை யியற்றிச் சந்தனப்
பயமர நிழலொளி மஞ்சம் பாவின
வியமரத் தொழிலவர் வினைமுடிந் ததென்
றியமரத் தொழுதிக ளெழுந்தி சைத்தவே.
உரை
   
1783. மங்கல நாழிகை வந்த மன்னர்கள்
இங்குவந் தேறுக வென்று சாற்றலும்
சங்கொலி பரந்தன தயங்கு மாமுர(சு)
சங்கொலித் தெழுந்தன வரசர் தோன்றினார்.
உரை
   
வேற்றரசர்

வேறு
 
1784. எரிமணி வயிரப் பூணா
     னிக்குவா குலத்துட் டோன்றி
அருமணிப் புரிசை வேலி்
     யயோத்தியாள் கின்ற வேந்தன்
திருமணி நிழற்றுஞ் செம்பொன்
     னெடுமுடி திருவில் வீசப்
புரிமணி யாரந் தாழப்
     பொன்னகர் பொலியப் புக்கான்.
உரை
   
1785. குழவியம் பருகி போல்வான்
     குருகுலங் குளிரத் தோன்றி்
அழுவநீர்ப் புரிசை வேலி
     யத்தின புரம தாள்வான்
முழவங்க ளிரண்டு செம்பொன்
     முளைக்கதிர்க் கனக வல்லி
தழுவிய தனைய தோளான்
     றன்னொளி தயங்கச் சார்ந்தான்.
உரை
   
1786. நண்டுபொன் கிளைக்கு நாட
     னாதவன் குலத்துட் டோன்றிக்
குண்டல புரம தாளுங்
     குங்குமக் குவவுத் தோளான்
கண்டிகை தவழப் பூண்டு
     கதிர்மணி முடியின் மேலால்
வண்டுகள் பரவச் சென்று
     வளநகர் மருளப் புக்கான்.
உரை
   
1787. ஊழிகாண் பரிய தோன்ற லுக்கிர குலத்து வேந்தன்
வாழைதாழ் சோலை வேலி வாரண வாசி மன்னன்
சூழிமா லியானை யுந்திச் சுடர்குழை திருவில் வீச
ஏழையர் கவரி வீச வெழினக ரிசைப்பச் சென்றான்.
உரை
   
1788. சொரிமது கலந்த சோலைச் சூரிய புரம தாளும்
அரிகுலத் தரசர் கோமா னவிர்மணி யாரந் தாங்கிப்
பொருமலைப் பகடு நுந்திப் புயலலைத் திருண்டு வீழ்ந்த
புரிமலர்க் குஞ்சி தாழப் பொன்னகர் புகழப் புக்கான்.
உரை
   
1789. சொன்மலர்ந் துலக மேத்துஞ்
     சுடரவன் மருகன் றோலா
மன்மலர்ந் திலங்கு செய்கை
     வளங்கெழு மதுரை யாள்வான்
தென்மலை வளர்ந்த தெய்வச்
     சந்தனந் திளைத்த மார்பன்
மின்மல ராரந் தாங்கி
     வியனகர் விரும்பப் புக்கான்.
உரை
   
1790. ஐம்பெருங் குலத்த ராய வரசரும் பிறரு மாங்கண்
கம்பெறி களிநல் யானைக் கடற்படை புறத்த தாக
வம்பெறி வளாகஞ் செம்பொன் மஞ்சங்கண் மலிர வேறி
வெம்பரி விளங்குந் தானை வேலவர் விளங்கு கின்றார்.
உரை
   
1791. திருந்திய திலதக் கண்ணித்
     தேவிளங் குமரன் போலும்
அருந்தகை யரச நம்பி
     யடுதிற லமித தேசன்
பரந்தபின் பசலை கூரப்
     பனிக்கதிர் வருவ தேபோல்
விரிந்தொளி சுடர வேந்தர்
     விளங்கொளி மழுங்கச் சென்றான்.
உரை
   
1792. மழைபுரை மதத்த தாய
     மழகளி யானை தன்மேல்
வழைவளர் சோலை சேர்ந்த
      மணிவண்டு மறிவ வேபோல்
எழுதெழி லழகன் றன்மே
     லிளையவர் கருங்கண் வீழ்ந்து
விழவயர் நகரின் வந்த
     வேந்தரை விட்ட வன்றே.
உரை
   
1793. வரைசெறிந் தனைய செம்பொன்
     மஞ்சங்கண் மலிரத் தோன்றி
அரைசர்க ளிருந்த போழ்தி
     னாழியந் தடக்கை வேந்தன்
விரைசெறி குழலங் கூந்தன்
     மெல்லியல் வருக வென்றான்
முரைசொலி கலந்த சங்கு
     வயிரொடு முரன்ற வன்றே.
உரை
   
இளவரசர் வருகை

வேறு
 
1794. மன்னவன் மடந்தை மணிமாட நிலையுள்ளால்
பொன்னமளி மேலடுத்த பொங்கணையின் மேலாட் (கு)
கன்னமனை யாரடிக ளாரருளி தென்றார்
இன்னகைய பூந்தவிசி னின்றினி திழிந்தாள்.
உரை
   
1795. வஞ்சியனை யார்மணிதொ டர்ந்தசுடர் ஞாணால்
அஞ்சில விருங்குழல சைத்தயில் பிடித்தார்
கஞ்சுக முகத்தமுலை கச்சுமிக வீக்கி
மஞ்சிவரு மாமயில னார்மருங்கு சூழ்ந்தார்.
உரை
   
1796. ஆயமொடு தாயரிடை யாளரசர் தங்கள்
ணேயமிகு நெஞ்சினிடை யாளுமட வாளாய்ப்
பாயமதி தாரகையொ டோரைபட வேகித்
தூயமணி நீர் நிலைக டோறிவர்வ தொத்தாள்.
உரை
   
1797. வண்டுவழி செல்லவய மன்னர்மதி செல்லக்
கண்டவர்கள் கண்கள்களி கொண்டருகு செல்ல
எண்டிசையு மேத்தொலியொ டின்னொலிகள் செல்ல
விண்டமல ரல்லிமிசை மெல்லநனி சென்றாள்.
உரை
   
1798. அம்மெலடி தாமரைச ராவியொடு நோவச்
செம்மெலிதழ் வாயொடவர் சிந்தனை துடிப்ப
வெம்முலைக ளோடவர்கள் காதன்மிக வீங்க
மைம்மலர் நிகர்க்குமணி மாளிகை யடைந்தாள்.
உரை
   
1799. பொன்னேநன் மணிக்கொம்பே பூமிமே
     லாரணங்கே போற்றி போற்றி
அன்னேயெம் மரசர்குலத் தவிர்விளக்கே
     யாரமிர்தே போற்றி யுன்றன்
மின்னேர்நுண் ணிடைநோமான் மென்மலர்மேன்
     மென்மெலவே யொதுங்கா யென்று
மன்னேர்சே யயினெடுங்கண் மங்கைமார்
     போற்றிசைப்ப மாடம் புக்காள்.
உரை
   
1800. அணிதயங்கு சோபான வீதிவா
     யணங்கனையா ரடியீ டேத்த
மணிதயங்கு மாளிகைமேல் வாணிலா
     வளர்முன்றின் மருங்கு சூழ்ந்து
கணிதயங்கு வினைநவின்ற கண்டத்
     திரைமகளிர் கையி னீக்கித்
துணிதயங்கு வேலரசர் மனந்துளங்கச்
     சுடர்ந்திலங்கித் தோன்றி னாளே.
உரை
   
1801. வடியரத்த மிடைவழித்துக் கருங்கண்ணுஞ்
     செம்பொன்னால் வளைத்த சூரல்
கொடியரத்த மெல்விரலாற் கொண்டரசர்
     குலவரவு கொழிக்கு நீராள்
முடியரக்குப் பூங்கண்ணி மூரித்தேர்
     வேந்தர்தமை முறையாக் காட்டிப்
படியரக்கும் பாவைக்குப் பைபையவே
     யினையமொழி பகரா நின்றான்.
உரை
   
இக்குவா குலத்தரசன்
 
1802. அங்கார வலர்கதிர மணிசுடரு
     மரியணைமே லமர்ந்து தோன்றித்
தங்கார மணிநிழற்றுந் தடவரையா
     ரகலத்தான் றகர நாறுங்
கொங்கார வார்குழலார் குவிமுலைகண்
     முகம்பொருத குவவுத் தோளான்
இங்காரு நிகரில்லா விக்குவா
     குலத்திறைவ னிருந்த கோவே.
உரை
   
1803. ஆதியா னருளாழி தாங்கினா
     னாயிரச்செங் கதிரோ னாணுஞ்
சோதியான் சுரர்வணங்கு திருவடியான்
     சுடுநீறா நினையப் பட்ட
காதியா னருளியபொற் கதிர்கொள்முடி
     கவித்தாண்டார் மருகன் கண்டாய்
ஓதியா மொழியினிவ னுறு வலிக்கு
     நிகராவா ருளரோ வேந்தர்.
உரை
   
1804. ஆழித்தே ரொன்றேறி யலைகடலி
     னடுவோட்டி யமரர் தந்த
மாழைத்தேர் மருங்கறா மணிமுடியு
     மணிகலமுந் திறையா வவ்வி
ஊழித்தே ரரசிறைஞ்ச வுலகெலா
     மொருகுடைக்கீ ழுறங்கக் காத்த
பாழித்தோட் பரதன்பி னிவனிவனா
     னிலமடந்தை பரிவு தீர்ந்தாள்.
உரை
   
1805. இன்னவன துயர்குலமு மிளமையுமிங்
     கிவன்வடிவுஞ் சொல்ல வேண்டா
மன்னவன்றன் மடமகளே மற்றிவனுக்
     கிடமருங்கின் மஞ்சஞ் சேர்ந்து
பொன்னவிரு மணியணைமேற் பொழிகதிரீண்
     டெழுந்ததுபோற் பொலிந்து தோன்றுங்
கொன்னவின்ற வேற்குமரன் குருகுலத்தார்
     கோனிவனே கூறக் கேளாய்.
உரை
   
1806. அருளாழி யறவரச னருளினா
     லகன்ஞாலம் பரிவு தீர்த்தான்
உருளாழி யுடையரிவ னடைவின்மிக்க
     கடைப்பணிகொண் டுழையோர் போல
இருளாழி நிழற்று ளும்பு மெரிபொன்மணி்
     நெடுமுடிசாய்த் திறைஞ்சப் பட்டான்
மருளாழுங் கழிவனப்பின் மற்றிவனே
     குலமுதற்கண் வயவோன் கண்டாய்.
உரை
   
1807. சூழிருங் கடற்றானை யுடன்றுளங்கச்
     சுரர்கொணர்ந்து சொரிந்த மாரித்
தாழிரும்பல் புயறாங்கிச் சரகூடஞ்
     சந்தித்த தகையோ னன்னோன்
யாழிரங்கு மணிவண்டு மிலங்கிழையார்
     கருங்கண்ணு மருங்கு நீங்கா
வீழிரும்பொற் சுடரார வரைமார்ப
     னிவன்சீர்யான் விளம்ப வேண்டா.
உரை
   
1808. இங்கிவன திடமருங்கி னெழில்றயங்கு
     மணிமஞ்ச மிலங்க வேறிச்
சங்கிவர்வெண் சாமரையுந் தாழ்குழையின்
     நீள்சுடருந் தயங்கி வீசக்
குங்குமஞ்சேர் கொழும்பொடியிற் புரண்டுதன்னி
     னிறஞ்சிவந்த குளிர்முத் தாரம்
செங்கதிரோ னொளிபருகுஞ் செவ்வரைநே
     ரகலத்தான் றிறமுங் கேளாய்.
உரை
   
1809. தகரநா றிருஞ்சோலைச் சயம்பூறான்
     றுறவரசாய் நின்ற காலை
மகரயாழ் நரம்பியக்கி வரங்கொண்டு
     வடமலைமே லுலக மாண்ட
சிகரமா லியானையான் வழிமருகன்
     செந்தாமந் தவழ்ந்து தீந்தேன்
பகருமா மணிமுடியா னமரருமே
     பாராட்டும் படியன்பாவாய்.
உரை
   
1810. சக்கரர்தாம் பிறந்துவரித் தரங்கநீர்
     வளாகமெல்லாந் தங்கீழ்க் கொண்ட
உக்கிரமெய்க் குலத்தரச னொளிவேலிவ்
     விளையவன துருவே கண்டாய்
அக்கிரநற் பெருந்தேவி மடமகளே
     யரசணங்கு மணங்கே யின்னும்
விக்கிரமக் கடற்றானை விறல்வேந்த
     ரிவர்சிலரை விளம்பக் கேளாய்.
உரை
   
குண்டலபுரத்தார் கோமான்
 
1811. ஏலஞ்செய் பைங்கொடியி னிணர்ததைந்து
     பொன்னறைமேற் கொழுந்தீன் றேறிக்
கோலஞ்சேர் வரைவேலிக் குண்டலத்தார்
     கோமானிக் கொலைவேற் காளை
ஞாலங்க ளுடன் பரவு நாதவன்றன்
     குலவிளக்கு நகையே னம்பி
போலிங்க ணரசில்லை பொன்னார
     வரைமார்பன் பொலிவுங் காணாய்.
உரை
   
சூரியத்தார் கோமான்
 
1812. சொரிமலர்த்தண் மலரணிந்த சோலைசூழ்
     சூரியத்தார் கோமான் றோலா
அரிகுலத்தார் போரேறிவ் வரியேறு
     போலிருந்த வரச காளை
வரிமலர்த்து மணிவண்டு புடைவருடு
     மாலையார் மகளிர் வட்கண்
புரிமலர்த்தண் வரையகலம் புராதார்
     புண்ணியங்கள் புணரா தாரே.
உரை
   
பாண்டியன்
 
1813. வேலைவாய்க் கருங்கடலுள் வெண்சங்கு
     மணிமுத்தும் விரவி யெங்கும்
மாலைவாய்க் கரும்பறா வகன்பண்ணை
     தழீஇயருகே யருவி தூங்கும்
சோலைவாய் மலரணிந்த சூழ்குழலா
     ரியாழிசையாற் றுளைக்கை வேழம்
மாலைவாய் நின்றுறங்கும் மதுரைசூழ்
     வளநாடன் வடிவுங் காணாய்.
உரை
   
1814. கண்சுடர்கள் விடவனன்று
     கார்மேக மெனவதிருங் களிநல்யானை
விண்சுடரு நெடுங்குடைக்கீழ் விறல்வேந்தன்
     றிறமிதனை விளம்பக் கேளாய்
தண்சுடரோன் வழிமருகன் றென்மலைமேற்
     சந்தனமுஞ் செம்பொன் னாரத்
தொண்சுடரும் விரவியநல் வரைமார்ப
     னுலகிற்கோர் திலதங் கண்டாய்.
உரை
   
கரபுரத்தரசன்
 
1815. மழைக்கரும்புங் கொடிமுல்லை மருங்கேற
     வரம்பணைந்து தடாவி நீண்ட
கழைக்கரும்பு கண்ணீனுங் கரபுரத்தார்
     கோமானிக் கதிர்வேற் காளை
இழைக்கரும்பு மிளமுலையா யெரிகதிரோன்
     வழிமருக னிவனீரீர்ந்தண்
தழைக்கரும்பின் முருகுயிர்க்குந் தாரகலஞ்
     சார்ந்தவர்க டவஞ்செய் தாரே.
உரை
   
உறந்தைக்கோன்
 
1816. வண்டறையு மரவிந்த வனத்துழாய்
     மதர்த்தெழுந்த மழலை யன்னம்
உண்டுறைமுன் விளையாடி யிளையவர்க
     ணடைபயிலு முறந்தைக் கோமான்
கொண்டறையு மிடிமுரசுங் கொடிமதிலுங்
     குளிர்புனலும் பொறியும் பூவும்
ஒண்டுறையு மும்மூன்று முடையகோ
     வேயிவன தெழிலுங் காணாய்.
உரை
   
ஏமாங்கத நாடன்
 
1817. தழலவாந் தாமரையி னீரிதழுஞ்
     செங்குவளைத் தாதும் வாரி
அழலவாஞ் செந்தோகை யலங்குபொலங்
     கதிர்ச்செந்நெ லலைத்த வாடை
பழனவாய்ப் பைங்கரும்பின் வெண்போது
     பவழக்காற் செம்பொன் மாடத்
தெழினிவாய்க் கொணர்ந் தசைக்கு
     மியலேமாங் கதநாட னிவனேகண்டாய்.
உரை
   
மகதைகோ
 
1818. காந்தளங்கட் கமழ்குலையாற் களிவண்டு
     களிறகற்றுங் கலிங்க நாடன்
பூந்தளவங் கமழ்சாரற் பொன்னறைசூழ்
     தண்சிலம்ப னன்றே பொன்னே
ஏந்திளஞ்சிங் காதனத்தி னினிதிருந்த
     விளவரச னிப்பா லானோன்
மாந்தளிர்கண் மருங்கணிந்த மணியருவிக்
     குன்றுடைய மகதைக் கோவே.
உரை
   
1819. அங்கநா டுடையவர்கோ னவ்விருந்தா
     னிவ்விருந்தா னவந்திக் கோமான்
கொங்குவார் பொழிலணிந்த கோசலத்தார்
     கோமானிக் குவளை வண்ணன்
கங்கைதா னிருகரையுங் கதிர்மணியும்
     பசும்பொன்னுங் கலந்து சிந்தி
வங்கவாய்த் திரையலைக்கும் வளநாட
     னிவன்போலும் வைவேற் காளை.
உரை
   
1820. வஞ்சியின்மெல் லிடையவளை வானிலா
     வளர்முன்றில் வலமாய்ச் சூழ்ந்து
பஞ்சியின்மெல் லடிநோவ நடைபயிற்றிப்
     படைவேந்தர் பலரைக் காட்டி
மஞ்சிவரு மாளிகையின் வடமருங்கின்
     மணிமஞ்ச மலிரத் தோன்றும்
விஞ்சையர்த முலகாளும் விறல்வேந்தர்
     குழாங்காட்டி விரித்துச் சொன்னாள்.
உரை
   
வித்தியாதர அரசர்
 
1821. மாடிலங்கு மழைதவழ்ந்து மணியருவி
      பொன்னறைமேல் வரன்றி வம் பூந்
தோடிலங்கு கற்பகமுஞ் சுரபுன்னை
     வனங்களுமே துதைந்து வெள்ளிக்
கோடிலங்கு நெடுவரைமேற் குடைவேந்த
     ரிவர்குணங்கள் கூறக் கேட்பின்
ஏடிலங்கு பூங்கோதா யிமையவரின்
     வேறாய திமைப்பே கண்டாய்.
உரை
   
1822. அங்கவவர் வளநகருங் குலவரவு
     மவையவற்றோடறையும் போழ்தின்
வெங்கதிரோன் பெயரவனுக் கிளவரசிவ்
     வேந்தனெனொ முன்னந் தானே
கொங்கிவருங் கருங்குழலி பெருந் தடங்கண்
     இருங்குவளை பிணையல் போலச்
செங்கதிரோ னெனவிருந்த திருந்துவே
     லிளையவன்மேற் றிளைத்த வன்றே.
உரை
   
வேறு
 
1823. கடாமிகு களிநல் யானைக்
     கவுளிழி கான வீதி
விடாமிகை சுழன்று வீழும்
     விரைகவர் மணிவண் டேபோல்
படாமுகக் களிற்றி னான்றன்
     பவழக்குன் றனைய மார்பில்
தடாமுகை யலங்க றன்மேற்
     றையல்கண் சரிந்த வன்றே.
உரை
   
1824. ஏட்டினார் குழலி னாளுக்
     குழையவ ளின்ன னென்று
காட்டினா ளாவ தல்லாற்
     காரிகை தன்னின் முன்னம்
ஓட்டினா ணிறையுங் கண்ணு
     முள்ளமுங் களித்த தங்கே
பாட்டினா லென்னை போக
     பான்மையே பலித்த தன்றே.
உரை
   
1825. விண்டழி நிறைய ளாகி
     மெல்லவே நடுங்கி நாணி
வண்டிவர் மாலை நோக்கி
     மாதராள் மறைத லோடும்
கொண்டதோர் குமரன் போலக்
     குங்குமக் குவவுத் தோண்மேல்
ஒண்டொடி மாலை வீழ்த்தா
     ளுலகொலி படைத்த தன்றே.
உரை
   
1826. ஆர்த்ததங் கரவத் தானை
     யாலித்த முரசுஞ் சங்கும்
தேர்த்தன மலருஞ் செம்பொற்
     சுண்ணமுந் திசைக ளெல்லாம்
போர்த்தன பதாகை பொங்கிப்
     பூமியங் கிழவ ருள்ளம்
வேர்த்தன வேர்த்துத் தாமே
     வெய்துயிர்த் தொழிந்த வன்றே.
உரை
   
1827. புனைவுதா னிகந்த கோதைப்
     பொன்னனாள் பூமி பாலர்
நினைவுதா னிகந்து காளை
     வடிவெனு நிகளஞ் சேர
வினைகடாம் விளையு மாறியாம்
     வேண்டிய வாறு வாரா
வினையதால் வினையின் றன்மை
     யெனநினைந் தாறி னாரே.
உரை
   
1828. நெய்த்தலைப் பாலுக் காங்கு
     நெடுவரை யுலகின் வந்த
மைத்துன குமரன் றன்னை
     மடமொழி மாலை சூட்ட
இத்தலை யென்ன செய்தா
     னெரிகதி ராழி வேந்தன்
கைத்தலை வேலி னாற்குக்
     கடிவினை முடிவித் தானே.
உரை
   
1829. விண்ணகம் புகழு நீர்மை
     விழுக்கலம் பரப்பி யார
மண்ணக வளாகத் துள்ள
     மன்னரான் மண்ணு நீர்தந்
தெண்ணகன் புகழி னாரை
     யெழிலொளி துளும்ப வாட்டிப்
புண்ணகங் கமழும் வேலான்
     பொன்மழை பொழிவித் தானே.
உரை
   
1830. தருமணன் மணிமுத் தாகத்
     தண்டுல மியற்றிக் கான்யாற்
றருமணற் றருப்பை சூழ்ந்தாங்
     கதன்மிசை பரிதி பாய்த்திப்
பெருமண மன்னற் கேற்ற
     சமிதையாற் பெருக்கப் பட்ட
திருமணி யுருவிற் செந்தீச்
     செல்வத்திற் சிறந்த தன்றே.
உரை
   
1831. தங்கழல் வேள்வி முற்றித்
     தையலக் காளை யோடும்
பொங்கழல் வலஞ்செய் போழ்திற்
     குழைமுகம் பொறித்த தெண்ணீர்
பைங்கழ லமரர் பண்டு
     படைத்தநீ ரமிழ்தப் புள்ளி
அங்கெழு மதியந் தன்மே
     லரும்பியாங் கணிந்த வன்றே.
உரை
   
1832. மன்னவ குமர னாங்கு
     மடந்தையைப் புணர்ந்து மாடத்
தின்னகி லமளி மேலா
     லிளமுலைத் தடத்து மூழ்க
அன்னவன் றாதை செங்கோ
     லாணைவே லருக்க கீர்த்தி
தன்னமர் மடந்தைக் கேற்ற
     சயமர மறைவித் தானே.
உரை
   
1833. சயமர மறைந்த நன்னாட்
     டமனிய மஞ்சம் பாவி
இயமரந் துவைப்ப வேறி
     யிகன்மன்ன ரிருந்த போழ்தில்
பயமலை மன்னன் பாவைக்
     கவரவர் பண்பு கூறிக்
கயமலர் நெடுங்க ணாளோர்
     காரிகை காட்டி னாளே.
உரை
   
1834. வரிகழன் மன்ன ரென்னு
     மணிநெடுங் குன்ற மெல்லாம்
சுரிகுழன் மடந்தை யென்னுந்
     தோகையம் மஞ்ஞை நோக்கி
எரிகதி ராழி வேந்தன்
     றிருமக னென்னுஞ் செம்பொன்
விரிகதிர் விலங்கற் றிண்டோட்
     குவட்டினை விரும்பிற் றன்றே.
உரை
   
1835. மாதராள் சுதாரை வாட்கண்
     மலரொடு மணிவண் டார்க்கும்
போதுலாம் பிணையல் வீரன்
     பொன்வரை யகலஞ் சூழ
ஏதிலா மன்னர் வாட
     விருபுடைக் கிளைஞ ரெல்லாம்
காதலாற் களித்துச் செல்வக்
     கடிவினை முடிவித் தாரே.
உரை
   
1836. கழல்வலம் புரிந்த நோன்றாட்
     கடல்வண்ணன் புதல்வன் காமர்
குழல்வலம் புரிந்த கோதை
     குழைமுகம் வியர்ப்ப வேட்டான்
அழல்வலம் புரிந்து சூழ்ந்தாங்
     கத்தொழின் முடித்த பின்னைத்
தழல்வலம் புரிந்த வேலான்
     றடமுலை வாரி சார்ந்தான்.
உரை
   
1837. மாதரஞ் சாய லாளு
     மணிவண்ணன் சிறுவன் றானும்
ஓதநீ ரின்ப மென்னு
     மொலிகடற் றரங்க மூழ்கச்
சோதியம் பெயரி னாளுஞ்
     சுடரவன் புதல்வன் றானுங்
காதலிற் களித்துத் தங்கள்
     கனவரை யுலகஞ் சார்ந்தார்.
உரை
   
வேறு
 
1838. எரிவிசயங் கோவேந்தி மன்னரென்னும்
அரிவிசயங் கெடநின்ற வாணை வேலான்
திருவிசயன் றிருவன்ன செல்வி யோடும்
மருவிசயங் கெழுகோயின் மலர்ந்து புக்கான்.
உரை
   
1839. இனையனவா மிகுசெல்வ மிங்கு மாக்கிப்
புனைமலர்வா னவர்போகம் புணர்க்கும் பெற்றி.
வினையதனின் விளைவின்ன தென்று நாளும்
நினைமின்மோ நெறிநின்று நீர்மை மிக்கீர்.
உரை