12.முத்திச் சருக்கம்
வீடுபேற்றுக்குரிய நெறி
 
2069. இருவகை வினைகளு மில்ல திவ்வழி
வருவகை யிலாதது மறுவின் மாதவர்
பெருவழி யாச்செலும் பெயர்வில் சூளிகைக்
கொருவழி யல்லதிங் குரைப்ப தில்லையே.
உரை
   
பிறப்பின் பெற்றி
 
2070. பிறந்தவன் பொறிப்புலக் கிவரு மப்புலம்
சிறந்தபின் விழைவொடு செற்றஞ் செய்திடும்
மறைந்தவை வாயிலா வினைக ளீட்டினால்
இறந்தவன் பின்னுமவ் வியற்கை யெய்துமே.
உரை
   
தூயோர் மாட்சி
 
2071. பிறவிச்சக் கரமிது பெரிது மஞ்சினான்
துறவிக்கட் டுணிகுவன் றுணிந்து தூயனாய்
உறவிக்க ணருளுடை யொழுக்க மோம்பினான்
மறவிக்க ணிலாததோர் மாட்சி யெய்துமே.
உரை
   
வீடடையும் வீரர்
 
2072. காட்சியு ஞானமுங் கதிர்த்துத் தன்பொறி்
மாட்சியை வெலீஇமனந் தூய னாயபின்
நாட்செய்து நவிற்றிய தியான வீதியான்
மீட்சியில் வீட்டுல கெய்தும் வீரனே.
உரை
   
வீட்டின் இயல்பு
 
2073. கடையிலெண் குணத்தது காம ராகர்கள்
இடைநனி யிலாத தில் லியற்கை யில்லது
மிடையொடு விழைவுவே ரறுத்த வீரர்கள்
அடைவதோர் நிலைபிறர்க் கறிய லாகுமோ.
உரை
   
2074. மணிமலர்ந் துமிழ்தரு மொளியுஞ் சந்தனத்
துணிமலர்ந் துமிழ்தருந் தண்மைத் தோற்றமும்
நணிமலர் நாற்றமு மென்ன வன்னதால்
அணிவரு சிவகதி யடைய தின்பமே.
உரை
   
பயாபதியின் மனவுறுதி
 
2075. வடுவறு மாதவ னுரைப்ப மாண்புடை
அடிகள தறவமிழ் துண்ட வாற்றலான்
முடிவுகொ ளுலகெய்த முயல்வ னென்றனன்
விடுகதிர் மணிமுடி வென்றி வேந்தனே.
உரை
   
2076. மிக்கெழு போதிகை விலக்க றக்கதன்
றொக்கநன் றுடன்பட லுலக மேன்றெனத்
தக்கவாய் மொழிந்தவத் தரச னேர்ந்திலன்
தொக்கவான் புகழவற் கமைச்சர் சொல்லினார்.
உரை
   
2077. இருட்பிலத் தரும்பட ரெய்திப் பல்புகழ்
வருட்டதை யிலனலிந் துண்ண வாழ்பவன்
பொருட்டகு வாயில்பெற் றுய்ந்து போம்வழி
உருட்டுவா னொருவனை யுவந்து நாடுமோ.
உரை
   
அமைச்சர் கூற்று
 
2078. அருஞ்சிறைப் பிணியுழந் தலைப்புண் டஞ்சுவான்
பெருஞ்சிறை தனைப்பிழைத் துய்ந்து போயபின்
கருஞ்சிறைக் கயவர்கைப் பட்டு வெந்துயர்
தருஞ்சிறைக் களமது சென்று சாருமோ.
உரை
   
2079. பிணிபடு பிறவிநோய் பெயர்க்கு மாதவம்
துணிபவன் றன்னொடு தொடர்ச்சி நோக்குமோ
அணிமுடி துறமினெம் மடிக ளென்றனர்
மணிமுடி மன்னவற் கமைச்ச ரென்பவே.
உரை
   
புத்திமதி
 
2080. எனவவர் மொழிதலு மெழுந்து போதியின்
சினைமல ரிலங்குவேற் சிறுவர் தங்களை
வனமலர்க் கண்ணியான் கூவி மற்றவர்க்
கினலிலா னிவ்வுரை யெடுத்துச் செப்பினான்.
உரை
   
திருமகள் இயல்பு
 
2081. பொருளிலார்க் கிவ்வழிப் பொறியின் போகமும்
அருளிலார்க் கறத்தினாம் பயனு நூல்வழி
உருள்விலா மனத்தவர்க் குணர்வும் போன்மனம்
தெருளிலார்க் கிசைவில டிருவின் செல்வியே.
உரை
   
2082. திருமக ணிலைமையுஞ் செல்வர் கேட்டிரேல்
மருவிய மனிதரை யிகந்து மற்றவள்
பொருவறு புகழினிர் புதிய காமுறும்
ஒருவர்கண் ணுறவில ளுணர்ந்து கொண்மினே.
உரை
   
2083. புண்ணிய முலந்தபின் பொருளி லார்களைக்
கண்ணிலர் துறந்திடுங் கணிகை மார்கள்போல்
எண்ணில ளிகழ்ந்திடும் யாவர் தம்மையும்
நண்ணிய நண்பில ணங்கை வண்ணமே.
உரை
   
2084. உற்றுநின் றொருவர்கண் ணிற்கு மாய்விடின்
மற்றவர் குணங்களை மறைத்து மாண்பிலாச்
செற்றமுஞ் சினங்களுஞ் செருக்குஞ் செய்திடும்
கற்றவர் தம்மையுங் கழற நோக்குமே.
உரை
   
2085. அம்பென நெடியகட் கணிகை யார்தமை
நம்பிய விளையவர் பொருளு நையுமால்
வம்பின மணிவண்டு வருடுந் தாமரைக்
கொம்பினை மகிழ்ந்தவர் குணங்க ளென்பவே.
உரை
   
2086. ஆதலா லவடிறத் தன்பு செய்யன்மின்
ஏதிலா ரெனவிகழ்ந் தொழியும் யாரையும்
காதலா ராபவர் கற்ற மாந்தரே
போதுலா மலங்கலீர் புரிந்து கேண்மினே.
உரை
   
பூமகளியல்பு
 
2087. நிலமக ணிலைமையு நெறியிற் கேட்டிரேல்
குலமிலர் குணமில ரென்னுங் கோளிலள்
வலமிகு சூழ்ச்சியார் வழியண் மற்றவள்
உலமிகு வயிரத்தோ ளுருவத் தாரினீர்.
உரை
   
2088. தன்னுயர் மணலினும் பலர்க டன்னலம்
முன்னுகர்ந் திகந்தவர் மூரித் தானையீர்
பின்னும்வந் தவரொடுஞ் சென்று பேர்ந்திலள்
இன்னுமஃ தவடன தியற்கை வண்ணமே.
உரை
   
2089. வெற்றிவேன் மணிமுடி வேந்தர் தம்மொடும்
உற்றதோ ருரிமைக ளில்லள் யாரொடும்
பற்றிலள் பற்றினர் பால ளன்னதால்
முற்றுநீர்த் துகிலிடை முதுபெண் ணீர்மையே.
உரை
   
2090. அடிமிசை யரசர்கள் பணிய வாண்டவன்
பொடிமிசை யப்புறம் புரள விப்புறம்
இடிமுர சதிரவொ ரிளவ றன்னொடு
கடிபுகு மவளது கற்பின் வண்ணமே.
உரை
   
2091. இன்னன விவடன தியற்கை யாதலால்
அன்னவள் பொருளென வார்வஞ் செய்யன்மின்
மன்னுயிர் காவனும் மக்க டாங்கினால்
பின்னைநுங் கருமமே பேணற் பாலிரே.
உரை
   
பயாபதி துறவு
 
2092. மீனிவர் விரிதிரை வேலி காவன்மேல்
ஊனிவர் வேலினீ ருங்கள் பாலதால்
யானினி யெனக்கர சாக்க லுற்றனன்
தேனிவ ரலங்கலீர் செவ்வி காண்மினே.
உரை
   
2093. உற்றநாள் சிலநுமக் கென்னொ டல்லது
மற்றநாள் பலவவை வருவ வாதலால்
கற்றமாண் சிந்தையீர் கவற்சி நீங்குமின்
இற்றையான் றுணிந்ததென் றிறைவன் செப்பினான்.
உரை
   
மக்கள் கூற்று
 
2094. என்றலு மிளையவ ரிறைஞ்சிக் கைதொழு
தின்றியா மடிகளைப் பிழைத்த தென்னென
ஒன்றுநீ ரிலீரென வுரையொ ழிந்தரோ
அன்றவர்க் கயலவ னாகிச் செப்பினான்.
உரை
   
2095. ஆவியா யரும்பெற லமிழ்த மாகிய
தேவிமார் தங்களைக் கூவிச் செவ்வனே
காவியாய் நெடுங்கணீர் கருதிற் றென்னென
மேவினார் தவமவர் வேந்தன் முன்னரே.
உரை
   
அமைச்சர் துறத்தல்
 
2096. இமைப்பதும் பெருமிகை யினியி ருந்தனெ
நமைப்புறு பிறவிநோய் நடுங்க நோற்கிய
அமைச்சரு மரசர்கோ னருளி னாற்றம
சுமைப்பெரும் பாரத்தின் றொழுதி நீக்கினார்.
உரை
   
2097. அணிமுடி யமரர்தந் தாற்றப் பாற்கடல்
மணிமுடி யமிழ்தநீ ராடி மாதவர்
பணியொடு பன்மணிக் கலங்க ணீக்கினான்
துணிவொடு சுரமைநா டுடைய தோன்றலே.
உரை
   
முடியைக் கடலில் எறிதல்
 
2098. அருமுடி துறந்தன னரச னாயிடைத்
திருமுடி மணித்துணர் தேவர் கொண்டுபோய்ப்
பருமுடி நிரையனப் பரவைப் பாற்கடல்
பெருமுடி யமைகெனப் பெய்யப் பட்டதே.
உரை
   
2099. முரைசதிர் முழங்கொலி மூரித் தானையும்
திரைசெறி வளாகமுஞ் சிறுவர்க் கீந்துபோய்
அரைசரு மாயிர ரரைசர் கோனொடு
விரைசெறி மணிமுடி விலங்க நீக்கினார்.
உரை
   
2100. முடிகளுங் கடகமு முத்தி னாரமும்
சுடர்விடு குழைகளுந் துளும்பு பூண்களும்
விடுசுடர்க் கலங்களும் விட்டெ றிந்தவை
படுசுடர் தாமெனப் பரந்தி மைத்தவே.
உரை
   
2101. வரிவளை வண்ணனு மறங்கொ ணேமியத்
திருவளர் மார்பனுஞ் செல்வன் சென்னிமேல்
எரிவளர் மணிமுடி யிழியு மாயிடைப்
புரிவளைக் கடலெனப் புலம்பு கொண்டனர்.
உரை
   
விசய திவிட்டர் துயரம்
 
2102. காதல ராயினுங் காதல் கையிகந்
தேதில ராயின மடிகட் கின்றென
ஊதுலை மெழுகினின் றுருகி னாரவர்
போதலர் கண்களும் புனல்ப டைத்தவே.
உரை
   
2103. முடிகெழு மன்னர்முன் னிறைஞ்ச நம்மைத்தம்
கடிகம ழகலத்துக் கொண்ட காதலெம்
அடிகளு மயலவர் போல வாயினார்
கொடிதிது பெரிதனெக் குழைந்து போயினார்.
உரை
   
2104. தாதுக வகலத்துத் தாமம் வாங்கியும்
மீதுவந் தேறியு மேவல் செய்யுநம்
கோதுக மியாவர்கொண் டாடு வாரெனப்
போதுக முடியினர் புலம்பொ டேகினார்.
உரை
   
முனிவர் சமாதானங் கூறல்
 
2105. நின்றிலா நிலைமையி னீங்கி நின்றதோர்
வென்றியா லுலகுடன் வணக்கும் வீரியம்
இன்றுகோன் புரிந்ததற் கிரங்கல் வேண்டுமோ
என்றுதா னிளையரை முனிவர் தேற்றினார்.
உரை
   
2106. அணங்குசா லடிகள தருள தாய்விடில்
பிணங்கிநாம் பிதற்றிய பேதை வாய்மொழி
குணங்கடா மல்லகோன் குறிப்பு மன்றென
வணங்கினார் மணிமுடி மான வீரரே.
உரை
   
மன்னர் நகருக்கு ஏகல்
 
2107. திருவுடை யடிகடஞ் சிந்தைக் கேதமாம்
பரிவொடு பன்னிநாம் பயிற்றி லென்றுதம்
எரிவிடு சுடர்முடி யிலங்கத் தாழ்ந்துபோய்
மருவுடை வளநகர் மன்னர் துன்னினார்.
உரை
   
வேற்படைப் பிரிவு
 
2108. பாற்படு செல்வமும் பரவை ஞாலமும்
காற்பொடி யாகவுங் கருதிற் றின்மையால்
ஏற்புடைத் தன்றுநம் மடிமை யீண்டென
வேற்படை வீரனைத் தொழுது மீண்டதே.
உரை
   
«’ஊ

பயாபதி தவம் மேற்கொள்ளல்
 
2109. வேற்படை விடுத்து வீரத்
     தவவர சதனை மேவி
நூற்படை முனிவர் கண்ணா
     னோக்கிய நயத்த னாகிப்
பாற்படு விரத நோன்மைப்
     படைப்பெருந் தலைவ ரைவர்
மேற்படை செய்யச் செல்லும்
     வினைவரை விலக்க வைத்தான்.
உரை
   
2110. குணப்படை யிலக்க மெண்பான்
     குலவுநான் காகுஞ் சீலக்
கணப்படை பதினெட் டாகு
     மாயிரங் கருவி யாகத்
துணைப்படை பிறர்க்குச் செய்யுந்
     துருநயத் தளவு நீக்கி
மணப்புடை சிந்தை யென்னு
      மடந்தையைச் செறிய வைத்தான்.
உரை
   
2111. செறிவெனப் படுவ மூன்று
     செழுமதில் செறியச் செய்து
பொறியெனும் வாயி லைந்து
     பொற்கத வடைத்து மாற்றி
அறிவமை சிந்தை யின்மாட்
     டகம்படி யுழைய ராக்கிக்
கறையிலீ ரறுவர் நிற்ப
     விறைவராக் காக்க வைத்தான்.
உரை
   
2112. படைகெழு புரிசை வெல்வார்
     புறநின்று பதின்மர் காக்க
விடையவர் தம்மு ளாரே
     யுழையரீ ரறுவ ராக
உடையதன் னுலக மூன்று
     மொருவழிப் படுக்க லுற்று
மிடைகெழு வினைவர் தானை
     மெலியமேற் சென்று விட்டான்.
உரை
   
2113. பின்னணி யோகு நான்மை
     யபரகாத் திரம்பெற் றேனைத்
தன்னவ யவங்கண் முற்றித்
     தயங்குநூன் மனங்க ளோவா
துன்னிய திசையி னுய்க்கு
     முணர்வெனும் வயிரத் தோட்டி
இன்னியன் ஞான வேழத்
      தெழிலெருத் தேறி னானே.
உரை
   
2114. தருக்கெயில் காப்பு வாங்கத்
     தடக்கைமால் பகடு நுந்தித்
திருக்கிளர் குணமேற் சேடிச்
     செழுமலைக் குவட்டி னோட்டி
முருக்கிய வுருவு வேட்கை
      முனைப்புல மகற்றி முற்றிச்
செருக்கிய வினைவர் வாழுந்
      திண்குறும் பழிக்க லுற்றான்.
உரை
   
2115. நிறையிலார் பொறுத்த லாற்றா
     நிலையிது நிறைந்த நோன்மைக்
கறையி லீராறுக் கொத்த
     கண்ணியர் கவரி வீச
முறையினாற் பெருகு முள்ளச்
     சமாதிநீர் முறுக வுண்ட
குறைவிலாத் தியான மென்னுங்
     கொற்றவா ளுருவிக் கொண்டான்.
உரை
   
2116. விண்கடாஞ் செய்யும் வெய்ய
     வினைவர்கட் கரண மாகிக்
கண்கடா மிறைக்கு மோரேழ்
     கடிவினை பொடிசெய் திட்டே
கொண்கடா நவின்ற வீரெண்
     கொடிமதிற் கோட்டை குட்டி
எண்கடா முடைய வெண்மர்
     குறும்பரை யெறிந்து வீழ்த்தார்.
உரை
   
2117. ஈடிலர் வெகுளி யுள்ளிட்
     டெண்மரை யெறியத் தீயுட்
பேடுவந் தொன்று பாய்ந்து
     முடிந்தது முடிந்த பின்னை
ஓடிவந் தொருத்தி வீழ்ந்தா
     ளுழையவ ரறுவர் பட்டார்
ஆடவன் றானும் போழ்து
     கழித்துவந் தொருவ னாழ்ந்தான்.
உரை
   
2118. பின்னுமோர் நால்வர் தெவ்வர்
     முறைமுறை பிணங்கி வீழ்ந்தார்
அன்னவர் தம்மு ளானே
     குறைப்பிண மொருவ னாகித்
தன்னைமெய் பதைப்ப நோக்கி
     யவனையுந் தபுப்ப நோனார்
துன்னிய துயிலு மேனைத்
     துளக்கஞ்செய் திருவர் பட்டார்.
உரை
   
2119. ஆங்கவ ரழிந்த பின்னை
     யரசரை யிருவரோடும்
தாங்கியீ ரிருவர் தாக்கித்
     தலைதுணிப் புண்ட பின்னை
வீங்கிய வனந்த ஞான்மை
     விழுநிதி முழுதுங் கைக்கொண்
டோங்கிய வுலகிற் கெல்லா
     மொருபெருங் கிழவ னானான்.
உரை
   
பயாபதி கேவலமடந்தையை மணத்தல்
 
2120. நெடிதுட னாய தெவ்வர்
     நால்வரை நீறு செய்திட்
டடிகள்பின் முடிவென் பாளை
      யகப்படுத் தனைய ராக
இடிமுர சதிருந் தானை
     யரசரோ டிங்க ணீண்டிக்
கடிகம ழமரர் வீரன்
     கடிவினை முடிவித் தாரே.
உரை
   
2121. கொடிகளுங் குடையுங் கோலக்
     கவரியு மமரர் தங்கள்
முடிகளு மடந்தை மாரு
     முகிழ் நகைக் கலங்க ளுஞ்செற்
றடியிடு மிடமின் றாகி
     மூடியா காய மெல்லாம்
கடிகமழ் மலருஞ் சாந்துஞ்
     சுண்ணமுங் கலந்த வன்றே.
உரை
   
2122. பொன்னரி மாலை பூவின்
     பொழிமதுப் பிணையன் முத்தின்
மின்னிவர் விளங்குந் தாம
     மெனவிவை விரவி வீசித்
துன்னிய வினைவர் கூட்டந்
     துணித்துவீற் றிருந்த கோனைப்
பன்னிய துதிய ராகி
     யமரர்கள் பரவு கின்றார்.
உரை
   
பயாபதியை அமரர் பரவுதல்

வேறு
 
2123. கருமால் வினையரசு காறளர நூறிப்து
பெருமான் முடிவென்னும் பெண்ணரசி தன்னை
ஒருவாமை வேட்டெய்தி யூழி பெயர்ந்தாலும்
வருமா றிலாத வளநகரம் புக்கானே.
உரை
   
2124. சிந்தை மடவா டொடுத்த தியானவாள்
வெந்து வினைவேந்தர் வீடியபின் விட்டெறிந்து
முந்து முடிவென்னுங் கன்னி முலைமுயங்கி
வந்து பெயரா வளநகரம் புக்கானே.
உரை
   
2125. அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் ங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான்.
உரை
   
வேறு
 
2126. இனையன பலபரவி யிறைஞ்சி யேத்தி யிமையவர்கள்
கனையெரி மிகுவேள்வி கலந்து செய்து களிப்பெய்தி
அனையவ ரறவாழி யமிழ்த நீங்கா தகத்தாடிப்
புனையவிர் சுடரொளியார் புகழ்ந்து தத்த மிடம்புக்கார்.
உரை
   
பயாபதி சூளாமணியாய்த் திகழ்தல்
 
2127. களங்காண் வகையுடைந்து
     காலர் காமர் கையகல
விளங்காத் திசையின்றி
     விளங்க வீரன் மெய்ப்பொருளை
உளங்காண் கேவலப்பே
     ரொளியா லிம்ப ருலகெல்லாம்
துளங்கா துயர்ந்துலகின்
      முடிக்கோர் சூளா மணியானான்.
உரை
   
2128. அருமால் வினையகல அமரர் நாளு மடிபரவப்
பெருமான் பிரசாபதி பிரம லோக மினிதாளத்
திருமால் பெரு நேமி திகழ்ந்த செந்தா மரைத்தடக்கைக்
கருமால் கடல்வரைத்த கண்ணார் ஞாலங் காக்கின்றான்.
உரை
   
2129. தங்கோ னமருலக மினிதி னாளத் தரங்கநீர்ப்
பொங்கோதம் புடையுடுத்த பூமியெல்லாம் பொது நீக்கிச்
செங்கோ லினிதோச்சித் தேவர் காப்பத் திருமாலும்
அங்கோல வேலரச ரடிபா ராட்ட வாள்கின்றான்.
உரை
   
விசய திவிட்டரை வாழ்த்துதல்
 
2130. வலம்புரி வண்ணனு மகர முந்நீர் மணிமேனி்
உலம்புரி தோளினனு முலக மெல்லா முடன்வணங்கச்
சலம்புரி வினைவென்ற தங்கோன் செந்தா மரையடிக்கீழ்
நலம்புரி விழவியற்றி நாளு நாளு மகிழ்கின்றார்.
உரை