புராணவரலாற்றுப் படலம் 103


     திசைமுகன் உந்தி யுறவளை நேமி சேர்ந்திடுங் கொள்கையால்
என்றும், அசைவில்வா னவர்க்குப் புரைஅவி அமிழ்தம் அளித்தலாற்
பூமணம் பெறலால், வசைதபு காட்சிக் கருநிறக் கருவி மழைமுகில்
மேனிவந் தழகாய், இசைதலாற் சார்ங்கம் ஏந்தியோன் நிகர்க்கும்
இணையிலா நைமிசக் காடு.                               6

     நான்முகன் உந்திக் கமலத்திற் பொருந்த, பாஞ்ச சன்னியமும், சக்கரமும்
வாய்ந்த இயல்பானும், துளக்கமில்லாத தேவர்க்கு நரைதிரை மூப்பு முதலிய
குற்றங்களை அழிக்கின்ற அமிழ்தம் அளித்தலானும், பூதேவியை மணம்
புணர்தலானும், குற்றம் நீங்கிய அறிவினையுடைய கரிய நிறமுடைய மின்னு
முதலிய தொகுதிகொண்ட முகில்போலும் திருமேனி வந்து அழகாய்
இயைதலாற் சார்ங்கம் என்னும் வில்லேந்திச் சார்ங்க பாணியாகிய திருமாலை
ஒக்கும் நைமிசவனம்.

     (வே-ள்) நான்முகன் செலுத்த வளைந்த சக்கரம் சேர்ந்திடும்
கொள்கையானும், தேவர்க்கு அவிசாகிய அமிழ்தம் அளித்தலானும், பூவின்
மணம் பெறலானும், மேகம் மேல் உயர்ந்து அழகாகப் பொருந்துதலானும்
நைமிசாரணியம் திருமாலை ஒக்கும்.

     மேனி வந்து-மேல் நிவந்து-திருமேனி வந்து; மேல் உயர்ந்து. உந்தி
உற-உருட்ட; செலுத்த; உந்திக் கமலத்தில் பொருந்த.

     குலவுகால் வாய்கள் மருவலால் அகலங் கொண்டமுந் நூல்வயங்
குதலால், சலமற வேத மொழிதலால் வனத்துத் தாமரை இருக்கைமே
வுதலால், பலபொறிச் சுடிகைப் பையராச் சுமந்த பரவைசூழ் புடவியே
முதலா, மலர்தலை உலகம் முழுதும்ஈன் றளித்த வள்ளலாம் நைமிசப்
புறவம்.                                               7

     விளங்குகின்ற நால்வாய்கள் பொருந்துதலாலும், மார்பின் கண் முப்புரி
நூல் விளங்குதலாலும், மாறுபாடு நீங்க வேத மொழிதலாலும், நீரின் எழுந்த
தாமரை மலராகிய தவிசில் இருத்தலாலும், பல புள்ளிகள் கொண்ட
உச்சியையும், படத்தையும் உடைய ஆதிசேடன் என்னும் பாம்பாற் சுமக்கப்
பெற்ற கடல் சூழ்ந்த உலகம் முதலாய் விரிந்த உலகங்கள் முற்றவும்
படைத்தளித்த பிரமனாகும் நைமிச வனம்.

     (வே-ள்) யானைகள் மருவுதலும், விரிந்த மூன்று வேதங்கள்
ஓதப்படுதலும், பொய் ஒழிதலின் குற்றம் ஒழிதலும், தாவுகின்ற மரை என்னும்
மான்கள் உலவுதலும் உடைய நைமிசவனம்.

     5,6,7 நைமிசவனத்தைச் சொல்லொப்புமையால் மும்மூர்த்திகளொடு
ஒப்புக்காட்டல் அறிந்தின்புறத் தக்கது.

முனிவர் குழாம்

     புகலும்இவ் வனத்தில் வசிட்டன், வே தார ணியன், புலத்தியன்,
துரு வாசன்-சுகன், வசுச் சிரவன், ஆணிமாண் டவியன், சுனப்புச்சன்,
சமுவர்த்தன், மணிமே-சகன், சுனச் சேபன், இரைக்குவன், சம்பு
தற்பரன், ஆத்திரே யன், சௌ-நகமுனி, புலகன், ஆசுவ லாய னன்,
சம தக்கினி, சங்கன்.                                    8