(விரும்பப்படும்) பேசப்பெறும் இந்நைமிச வனத்தில் வசிட்டன், வேதாரணியன், புலத்தியன், துருவாசன், சுகன், வசுச்சிரவன், ஆணி மாண்டவியன், சுனப்புச்சன், சமுவர்த்தன், மணிமேசகன், சுனச்சேபன், இரைக்குவன், சம்புதற்பரன், ஆத்திரேயன், சௌநக முனி, புலகன், ஆசுவலாயனன், சமதக்கினி, சங்கன். இரைவதன், குசுரு விந்தன், மா தேசன், இலிகிதன், பராசரன், கற்கன்,-கிருது, அக் கினிபன், பருப்பதன், நாசி கேதன், நா ரதன், அசிகர்த்தன்-உருரு, விச்சுவாமித்திரன், குணி, பரத்துவாசன், உத் தாலகன், வாசச்-சிரவன், சாண் டிலியன், காசிபன், வாம தேவன், தாற் பியன், இர சனியே. 9 இரைவதன், குசுருவிந்தன், மாதேசன், இலிகிதன், பராசரன், கற்கன், கிருது, அக்கினிபன், பருப்பதன், நாசிகேதன், நாரதன், அசிகர்த்தன், உருகு, விச்சுவாமித்திரன், குணி, பரத்துவாசன், உத்தாலகன், வாசச்சிரவன், சாண்டிலியன், காசிபன், வாமதேவன், தாற்பியன், இரசனி. 8,9ல் முனிவர்கள் பெயரை அடைமொழி யின்றிக் கூறுதலுடன் சனற்குமாரப் படலம் 6ஆம் செய்யுளில் மரங்களையும், தக்கேசப்படலம் 46-ஆம் செய்யுளில் வாச்சியங்களையும், அவ்வாறு கூறுதல் மகிழத்தக்கன. கண்ணுவன் முதலாம் எண்ணரு முனிவர் கழிபெருஞ் சீர்த்திதியர் மாசு, மண்ணிய மனத்தார் பசுபதி அடியார் வடிவெலாம் நீறுசண் ணித்த, புண்ணியர் மும்மைப் புண்டர நிரையார் அக்கமாலிகையர் போர் விடையூர், அண்ணல்வாழ் தலத்திற் பற்றினோர் அன்னான் அருச்சனை இயற்றும்ஆர் வத்தார். 10 கண்ணுவன் முதலாகும் மதித்தற்கரிய மனனசீலராகிய முனிவர் மிகப் பெரும்புகழினர்; மனத்தால் தூயர்; பசுக்களுக்குப் பதியாகிய சிவனடியார் வடிவமுற்றும் முழுநீறு பூசிய புண்ணியர் திரிபுண்டரமாக நீறணிந்தவர்; உருத்திராக்க வடம் அணிந்தவர்; இறைவன் எழுந்தருளியுள்ள தலங்களிற் பற்றுடையவர், அப்பரனை அருச்சனை புரியும் பெரும்விருப்பினர். மன மாசு மண்ணியோர்-மன அழுக்கைக் கழுவினோர். ‘‘மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான்” (திருநாவுக்கரசர்) சண்ணித்தல்-பூசுதல். அங்கமும் மறையும் தெளிந்தவர் வேதம் அந்தித்த அறிவினர் விமலர், தங்கும்அஞ் செழுத்தே கிளப்பவர் பொறியைத் தடுத்துயர்ந் தவர்மக மனைவி, செங்கன லோடும் உறைபவர் தமைப்போற் சிற்றுயிர் அனைத்தையுங் காணும், பொங்குபேரருளின் எல்லையர் இனையோர் பொலிவுற ஒழுங்குடன் குழுமி. 11 |