புராணவரலாற்றுப் படலம் 107


படலம்-17) வேள்விக்கு நாயகன்; ‘‘உயர் வேள்வியிறை நாம்’’, மகந்தனக்
கரசன் முக்கண் வள்ளலே’’ (சிவாத்தானப் படலம்-26. தக்கேசப்படலம் 19).

மகவு

மகவே மேலாங் கதியாக்கும் மகவான் உலகந் தனைவெல்லும்
மகவின் மகவான் முடிவின்மை எய்தும் மகவின் மகவளித்த மகவான் மேலைப் பதமுறுந்தென் புலத்தார் கடனை மாற்றுவதும் மகவான் அன்றி யில்லையென வகுத்தான் தெரித்துக் கண்ணுவனே,     18

     மக்கட்பேறே மேலாம் கதியினைக் பெறச் செய்யும். மகனின் மகனால்
இந்திர உலகைத் தன் கீழ்ப்படுத்தும் நீடித்த இன்பம் தரப்பெறும்; மகனுக்கு
மகன் மகனால் (பெயரன் புதல்வனால்) வீடு பேற்றினை நல்குவிக்கும்; பிதிரர்
கடன் மகப் பெறுதலான் இறுக்கப் படுதலின், கடனைக் கொடுத்துக்
கடத்துதலைச் செய்யும் எனக் கண்ணுவர் கூறினர்.

     புத்திரன் - புத் என்னும் நரகின் மீட்பவன், இதனை ‘‘வெங்கைப்
பழமலையார்க்கு, அத்திர மன்ன அயில்விழி யாளயில் வேலவனைப்
புத்திரனென்னும் பொருள்பட ஈன்றிலள் பொன்னுரைத்த, சித்திரம் அன்னவள்
புத்திரற் பூத்துச் சிறந்தனளே” (திருவெங்கைக் கோவை).

துறவு

     துறவே அறங்கள் எவற்றினுக்கும் பெரிதாம் விடையூர்
தோன்றலுக்கும், துறவே உவகை வரச்செய்யும் துறவே அயன்மால்
உலகளிக்கும், துறவே ஈச னிடத்திருத்தும் எவரும் மேலாச்
சொல்லுவதும், துறவே யாமென் றெழுந்துநின்று சொற்றான் சைவத்
துருவாசன்.                                          19

     இருவகைப் பற்றுக்கள் நீங்குதலே துறவாது செய் அறங்கள் எவற்றினும்
மிக்கதாகும். காளையை ஊர்தியாக வுடைய இறைவன் திருவுள்ளத்துக்
கருணையை எழத் தூண்டுவதும் அதுவே. அப்பற்றறுதலே சத்திய உலகையும்,
வைகுந்தத்தையும் ஒருங்கு தரும். துறவே ஈசன் அடியிணைக் கீழ் இருத்தும்.
யாவரும் பிறவற்றின் மேலாகப் போற்றுவதும் துறவறமே என
இருக்கையினின்றும் எழுந்து நின்று வலியுறுத்திப் பேசினர் சிவசம்பந்தமுடைய
துருவாச முனிவர்.

சூத முனிவர் வரவு

மேற்படி வேறு

     இன்ன வாறுபன் முனிவரும் இயம்பினர் பிணங்குழி இவர்
ஈட்டு, நன்னர் வான்தவங் கொணர்ந்தென ஆயிடை நணுகினான்,
விடைஊரும், என்னை ஆளுடை இறையடி தைவரும் இடையறாத்
தியானத்தான், பன்னு மெய்த்தவப் பராசரன் பயந்தருள் பண்ணவன்
மாணாக்கன்.                                        20