112காஞ்சிப் புராணம்


போர் செய்தழித்து அவ்விந்திரன் வளைக்கும் வில்லைப் பறித்து அவ்விடத்து
வைத்தாற்போல அம்மலையிலுள்ள அருவியின் திவலைகள் அவ்விந்திர
தனுசின் வடிவைக் காட்டா நிற்கும் அம்மலை அழகிய பொன் வகையுள்
மாற்றினில திகமானது, நிலைபெற அளவிறந்த தவமுடையோர் ஒருங்குகூடிச்
செய் தவ நெருப்புப் பற்றுதலால் போலும்.

     நீர்த் திவலைகளில் சூரிய ஒளியாலும், மேருவின் ஒளியாலும் பல
நிறங்கள் காட்டுதலின் இந்திரவில் என்றனர். ‘பொன் சுடச் சுடரும்’ (திருக்.
267) ‘தவாக்கினியில் ஒளி மிகுகிறது மேரு’ என்பர்.

சதசிருங்க மலைவளம்

     தடாத பேரொளித் தமனியம் பழுத்த தண்ண றாச்சுனைக்
குடுமியங் குவட்டு, வடாது மாமலைக் காந்தியின் பிறக்கம்
மடங்கிடாதுபல் சுடர்விரித் தெழுந்த, கெடாத தோற்றமே உறழமற்
றதன்மேற் சிளர்சு ரும்பினம் பெடையொடு தழுவி, விடாது பண்படு
பொழிற்சத சிருங்க வெற்பெ னத்திசை போயதொன் றுளதால்.     5

     தடுத்தற்கரிய பெரிய ஒளி வாய்ந்த பொன்னொளி முதிர்ந்த குளிர்ந்த
சுனைகளைக் கொண்ட சிகரங்களையுடைய வடக்கின் கண்ணுள்ள பெரிய
மேருவின் ஒளியின் மிகுதி மடங்காத பல கிரணங்களையும் விரித்தெழுந்த
அழியாத காட்சியையே ஒப்ப அம்மலை மேலிடத்து விளங்கும் ஆண்வண்டின்
கூட்டம் பெட்டை வண்டுகளோடு தழுவிப் பிரியாது துயில் கொள்ளும் சோலை
சூழ்ந்த ‘சதசிருங்கம்’ எனப் பெயர் கொண்ட சிகரம் திசையெலாம் புகழால்
பரவியது உண்டு.

     தண்+நறா=தண்ணிய தேன் எனினுமாம்.

     குரவு, மாதவி, உழிஞை, மந் தாரம், குருந்து, பாடலம், பாலை,
முந் திரிகை, மருது, போதி, பி டாஞெமை, ஓமை, வஞ்சி, காஞ்சி, குங்
குமம், நமை, ஒடு, ஆண், அரை, த ளா, உதி, செருந்தி, சே, எகினம்,
அகில், ப லாசு, சந், தில்ல, மா, வில்லம், வரை, த மாலம், மா தளை,
கணி, அதிங்கம், வகுளம், இன்னன நெருங்கின ஓங்கும்.         6

     குரா, குருக்கத்தி, சிறுபூளை, மந்தாரம், குருந்தம், பாதிரி, பாலை,
முந்திரிகை, மருது, அரசு, பிடா, ஞெமை, ஓமை, வஞ்சி, காஞ்சி, குங்குமம்,
நமை, ஒடு, ஆண், அரை, முல்லை, ஒதி, செருந்தி, சே, புளி, அகில், முருக்கு,
சந்தனம், தேற்றா, மா, ஆச்சா, வில்வம், மூங்கில், பச்சிலை, மாதளை,
வேங்கை, அதிங்கம், மகிழ், இவை போல்வன நெருங்கி வளர்ந்தோங்கும்.

     குருக்கத்தி, வஞ்சி, முல்லை இவை கொடிகள்; பிறமரங்கள், புராண
வரலாற்றில் 8,9 செய்யுட்களில் முனிவரர் பெயர் அடையின்றிப் பேசப்
பெறும். இல்ல மா=இல்லம்+ஆ எனவும்!  இல்லம்+மா எனவும் பிரித்து ஆ,
ஆச்சாமரம்; மா, மாமரம்,