வாடாது மலர்ந்து கேவல சகல அவத்தை என்னும் இருநிலைகளையுங் கடந்து அழகிய இளம்பிறையை மாலையாகச் சூடிய இறைவரது திருவடியைச் சேர்ந்த சிவஞானச் செல்வர்களை ஒத்தன வளவிய சுனைமலர்கள். உயிர்கள் கருவிகளொடு கூடிய நிலை சகலமும், நீங்கியநிலை கேவலமும் ஆகும். இவை நீங்கிய நிலை சுத்தம் ஆகும். திருவருளே சார்பாக அறிதல், ‘மலர்தலும் கூம்பலும் இல்லதாகிய அறிவுநிலை’ (திருக். 425) முந்நிலைகளையும் வள்ளுவப் பெருந்தகையார் இருள்நிலை, மருள்நிலை, (தெருள்நிலை) மாசறுகாட்சி, என்ப. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி, மாசறு காட்சி யவர்க்கு’’ (திருக். 352) வென்ற ஐம்புல வாழ்க்கையர் வடிவின் விளங்கு பூதியும் விரைகமழ் கடாத்த, குன்று போல்உயர் களிற்றுநீள் கோட்டுக் குலவுமுத்தமும் வேய்உகு மணியும், துன்றி வானிலாக் கற்றைகால் வெண்மை தூய பொன்மையை விழுங்கிய தேயோ, அன்றி அவ்வரைப் பொன்மையே வெண்மை தனைவி ழுங்கிய தோஅது அறியேம். 10 ஐம்புலன்களை வென்ற தவ வாழ்க்கையுடையவரது திருமேனியில் விளங்கும் விபூதியும், மணங்கமழும் மதங்களையுடைய மலைபோல் உயர்ந்த களிற்றின் நீண்ட தந்தத்தினின்றும் சொரியும் முத்தும், மூங்கிலினின்றும் உதிர்கின்ற முத்தமும் பொருந்தி, வெள்ளொளித் தொகுதி உமிழ்கின்ற வெண்மை, களங்கமில்லாத பொன்மையை விழுங்கியதோ? அன்றி அம்மலையது பொன்மை வெண்மைதனை விழுங்கியதோ? அதனையறியேம். இனைய சீர்பெறு சதசிருங் கத்தின் எண்ணி லாப்பெரு வளத்தன வாகி, நனைம லர்ப்பொழில் சண்பகம் சரளம் நரந்தம் தெங்கு கோங் கரம்பைகள் உடுத்து, வனச நீள்சுனை மல்கிய பிரம வனமொன் றுள்ளது மற்றதன் நாப்பண், தனைநி கர்ப்பது நான்மறைக் கிழவன் தான மாயது பிரமமா நகரம். 11 இத்தன்மை வாய்ந்த சிறப்பினையுடைய சதசிருங்க மலையில் அளவிட அடங்காத வளங்களை யுடையன வாகித் தேனூறு மலர்களைக் கொண்ட சோலைகள் சண்பகமும், தேவதாரும், நாரத்தையும், தென்னையும், கோங்கமும், வாழையும் சூழத் தாமரைகள் மிக்க சுனைகள் நிறைந்த பிரமவனம் ஒன்றுள்ளது; அவ்வனத்தின் மத்தியில் பிரமனது தானமாயுள்ள பெரிய பிரம நகரம் தன்னைத் தானொப்பது உளது. சனற்குமார முனிவர் யோகுசெய் திருத்தல் எழுசீரடி யாசிரிய விருத்தம் பொற்பமர் இனைய நகர்க்கொரு பாங்கர்ப் பொங்கொளி மடங்கலே றொன்று, பற்பல மடங்கல் சூழவீற் றிருக்கும் பரிசெனத் தவளநீற் றொளியின், அற்புதக் கோலத் தறிஞர்சூழ்ந் தேத்த அருட்சனற் குமாரமா முனிவன், எற்பணிப் பெருமான் சரண் உளத் திருத்தி யோகுசெய் திருக்குநாள் ஒருநாள். 12 |