சனற்குமாரப் படலம் 117


     சுத்தி செய்யப்பெற்ற உடம்பில் முன்புபோல நிலைபெறச் செய்து
அவ்வுடம்பில் மூலாதார முதலிய ஆறாதாரத் தானமாகிய தாமரை மலர்களில்
விளக்கம் அமைந்த எழுத்து வடிவாய் நிறைந்த காயத்திரி தேவியை முறை
வழுவாமல் நிறுவிச் சொல்லும் இருபத்தோராயிரத்தறுநூறு சுவாசங்களை
அம்ச மந்திரத்தால் பிரித்துக் குற்றமற்ற விநாயகக் கடவுள் முதலியோர்
மகிழ அவர்க்கு அவற்றை நிவேதித்து.

     ஆறு ஆதாரம் ஆவன: மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம்,
அநாகதம், விசுத்தி, ஆக்கினை என்பன. இவை முறையே நான்கு. ஆறு,
பத்து, பன்னிரண்டு, பதினாறு, இரண்டு இதழ்களான் அமைந்த மலர்
வடிவும் இதழ் ஒன்றுக்கு எழுத்தொன்றாக ஐம்பது எழுத்துக்களின் அமைந்த
மந்திர வடிவும் கொண்டன ஆகும். ‘‘அகரமுத லெனஉரை செய்
ஐம்பத்தொரக்ஷரமும்” (திருப்புகழ்).

     ஆவியாம் இலிங்கத் தந்தரியாக அருச்சனை விதியுளி யாற்றி,
மேவிய பின்னர்ப் புறத்தினுஞ் சென்னி முகமுதல் விளம்புறுப்பெல்லாந்,
தேவியை ஐம்பான் எழுத்துரு வான செல்வியை நலம்வர அமைத்துப்
பாவுறும் பிராணா யாமங்கள் முறையிற் செய்துபின் பரிதிகா ணளவும். 19

     ஆன்மாவாகிய இலிங்கத்தில் அகப்பூசையாகிய அருச்சனையை நூல்
விதித்தபடி நிகழ்த்திப் பின்பு புறத்தினும், தலை, கண், காது முதலிய
உறுப்புக்களில் தேவியும் அகார முதலாகிய ஐம்பதெழுத்தின் வடிவான
செல்வியுமாகிய காயத்திரி சத்தியைத் தாங்கருதிய நன்மை கைகூட
அமைத்துப் பரவிநிற்கும் பிராணனைப் பதினாறு முறை தடுத்தல்
விடுத்தல்களைச் செய்து, பின்னர்ச் சூரியோதயம் வரையிலும்.

     அருமறைக் காயத் திரிப்பெரு மனுவை ஆயிரத் தெட்டுருக்
கணித்துக், கருதிய யோக சித்தியின் பொருட்டுக் கணேசனை
முன்புபூ சித்துப், பரிதிமண் டிலத்தும் தண்டிலந் தனினும் பகர்தரும்
இலிங்கமூர்த் தியினும், மருவும்அங் குட்ட ரூபியாஞ் சிவனை
வரன்முறை அருச்சனை புரிந்து.                            20

     வேதத்துட் சிறந்த காயத்திரியாகிய அரியபெரிய மந்திரத்தை
ஆயிரத்தெட்டு முறை உருவேற்றித் தாங்கருதிய சிவயோகஞ் சித்தியாதற்
பொருட்டு முன்பு விநாயகப் பெருமானைப் பூசை செய்து சூரிய
மண்டிலத்தினும், வேள்வியினும், ஓதப்பெறும் இலிங்க வடிவினும் பொருந்திய
பெருவிரலளவு வடிவின் விளங்கும் சிவபெருமானை வழி வழியாக வருகின்ற
வழக்காற்றில் பூசையை விரும்பிச் செய்து.

     யோகினைக் கூட்டித் தன்னுடை இதயத் தீசமென் றுரைக்கும்
எட்டிதழும், சேகறும் வயிராக் கியமெனும் பொகுட்டும் செப்புவா
மாதிகே சரமும், ஆகிய கமலம் ஆவி ஆயாமத் தலர்தரக்
கண்டுமற்றதன்மேல், ஏகன்மும் மூர்த்தி யாகிமுக் குணங்கட்
கிறைவன்மும் மண்டில ஈசன்.                              21