யோகத்தைத் தலைப்பட்டு இறைவனை உடைய இருதயத்தில் அணிமா முதலிய எட்டு ஐஸ்வரியங்களே எட்டிதழ்களும், தீது தீர் வைராக்கியமே பொகுட்டும், எடுத்துப் பேசப்படும் வாமை முதலிய சத்திகளே மகரந்தமும் ஆகிய தாமரையைப் பிராணாயாமத்தால் கீழ்நோக்கியுள்ள தாமரை மேல் நோக்கி மலரக்கண்டு அத்தாமரையின் மேல் தியானிக்கப்படும் இறைவன் ஏகனாய், மும்மூர்த்தியாய், முக்குணங்களுக்கும், மும்மண்டிலத்திற்கும் ஈசனுமாகி, வாமாதி: வாமை, சேட்டை, இரவுத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூத தமனி என்ப. ஆவி ஆயாமம் - பிராணாயாமம். ஆயாமம்-தடுத்தல். முக்கணன் புட்டி வருத்தனன் நீலப் பொன்மயன் முதிர்கறை மிடற்றன், தக்கஈ சானன் வன்னிரே தாநற் சத்தியன் அருவினன் உருவன், புக்கசீர்ப் புருடன் விச்சுவ ரூபன் புருட்டுதன் சிவன் புருகூதன், வைக்குமெய்ச் சத்துப் பராபரம் பரமான் மாமகத் துயர் பரப்பிரமம். 22 முக்கண்களையுடையனும், அடியவர் ஆற்றலை மிகுப்பவனும், மங்கை பங்கனாய வடிவில் நீலமும் பொன்னிறமும் செம்பாதியாய் நீலப் பொன் மயனும், திருநீலகண்டனும், தக்க ஐஸ்வரிய முடையவனும், அக்கினி மயமான விந்துவையுடையவனும், சிற்சத்தியனும், அருவனும், உருவனும், அருவுருவனும், சிறப்புடைப் பௌருஷனும், உலக வடிவினனும், உயிர்களால் துதிக்கப்படுபவனும், சிவனும், முன் அழைக்கப்படுபவனும், மெய்ச்சத்துவும், மேலதற்கும் மேலதும், என்றெடுத் துரைக்கும் பெயர்களின் பொருளாய் இயம்பரும் பரவெளி நாப்பண், நின்றபே ரொளியின் பிழம்பினை இனைய சத்தியி னோடுநேர் நோக்கி, ஒன்றுதன் உயிரை அப்பெரும் பொருளோ டொன்றுவித் திருபகுப் பிறந்து, மன்றயோ கத்தின் அசைவற இருந்தான் மறையவன் ஈன்றருள் மதலை. 23 வேதா கமங்கள் ஆங்காங்கு எடுத்துரைக்கும் பெயர் நடுவண் நின்ற பெரிய ஒளியின் திரட்சியை அப்பரமாகாசமார் சத்தியால் நேரே நோக்கி ஒன்றற் குரிமையுடைய தன் அறிவை அப்பெரும் பொருளாகிய இறைவனோ டொன்றுபடுத்தி அது தான் என்னும் வேற்றுமையற்றுப் பிரமன் புதல்வராகிய சனற்குமார முனிவர் யோகத்திற் சலிப்பின்றித் தெளிய இருந்தனர். சிவபெருமான் திருவுலா ஆங்கவன் அவ்வா றரியயோ கத்தின் ஆனந்த பரவச னாகி, ஓங்குபே ரறிவின் விழித்தனன் உறங்கும் ஏல்வையின் உம்பர்தம் பெருமான், மாங்குயிற் கிளவி மலைமக ளோடு மலர்தலை உலகுகாத்தளிப்பான், வீங்கிய கருணை ஊற்றெழத் தரும வெள்விடை ஊர்தி மேல் கொண்டு. 24 |