அவ்விடத்து அச்சனற்குமார முனிவர் அவ்வியல்பின் செய்தற் கரிய சிவயோகத்தால் ஆனந்த பரவசம் உடையவராகி ஓங்கு பேரறிவாகிய இறைவனிடத்துக் கலந்து சாக்கிராதீத நிலையில் இருக்கும் காலத்தில் தேவர்கள் பெருமான் மாமரத்தில் வதியும் குயிலிசைபோலுஞ் சொற்களையுடைய இமயவல்லியோடும் விரிந்த உலகைக் காத்தருளப் பெருங்கருணை பெருக்கெடுப்ப அறவடிவாகிய வெள்ளைவிடை இவர்ந்து, உரகர்கந் தருவர் இராக்கதர் சித்தர் யோகிகள் ஆசைகாப்பாளர், நிரைமணி மோலி பாதுகை வருட நிகழும்ஆ காவுடன் ஊகூ, விரிபுகழ்ஏனை வீணைவல் லவரும் விருதெடுத் தோதியாழ் தடவ, இருவிசும் பகத்தின் இனிதெழுந் தருளி உலவினன் என்னைஆ ளுடையான். 25 நாகர், கந்தருவர், இராக்கதர், சித்தர், யோகிகள், இந்திரன் முதலிய எண் திசையைக் காவல் செய்பவர் தம் மணிமுடிகள் பெருமானுடைய பாதுகைகளை வணங்குதலால் தீண்டவும் நிகழும் ஆகாவும், ஊகூவும் பரவிய புகழுடைய ஏனை வீணை வல்லவராகிய கந்தருவரும் வெற்றிகளை எடுத்தோதியாழ் வாசிப்பவும் பெரியகரிய விண்ணிலினிதாக எழுந்தருளி உலாப் போந்தருளினன் என்னை ஆளாகவுடையான். அதுசனற் குமாரன் யோகினில் வைத்த கருத்தினால் அறிந்திலனாகிக், கதுமென இருக்கை எழாமைகண் டெம்மான் கருணை கூர்ந் துமையவ ளோடு, விதுவணி சடிலத் தெம்மையே உளத்தின் விழைதர இருத்திமற் றெம்பாற், பொதுவற ஒருக்கு மனத்தினன் என்னாப் புரிவொடுங் கோயில்புக் கனனால். 26 இறைவன் திருவுலாக் கொண்டமையைச் சனற்குமார முனிவர் யோகத்தில் சிந்தையைச் செலுத்தியிருந்தமையால் அறியாராக, அதனால் இருக்கையினின்றும் விரைய எழாமையைக் கண்ட எம்பெருமான் உமையம்மையோடும் கருணை மீக்கூர்ந்து, இளம்பிறையைச் சடையிடை முடித்த தம்மையே உள்ளத்துள் விரும்ப இருத்திப் பிறவற்றிற் குரிமையில்லையாம்படி ஒருவழிப் படுத்திய மனமுடையவர் எனத்திருவுளங் கொண்டு கருணையொடுந் திருக்கோயிலைச் சேர்ந்தனன். சனற்குமார முனிவர் சாபமேற்றல் நந்திஎம் பெருமான் நோக்கினன் வெகுண்டு நலமிலா ஒட்டகமேபோல், அந்தில்எம் பிரானை இகழ்திருந் ததனால் அவ்வுரு வாகெனச் சபிப்பச், சிந்தைகூர் முனியும் ஒட்டக மாகிச் செழுநிலத்துழிதரு காலை, முந்தைஞான் றியற்று நல்வினைப் பயனான் முன்னினன் கச்சிமா நகரம் 27 நந்தியாகிய எமது பெருமான் பார்த்துக் கோபித்துச் சிறிதும் நலமில்லாத ஒட்டகத்தைப்போல அவ்விடத்தில் எமது பெருமானைப் பழித்திருந்ததனால் அவ்வொட்டகவடிவு பெறுகெனச் சபித்த அளவிலே |