| 	வருத்தமிக்க அச்சனற்குமாரர் ஒட்டகமாகி வளமிக்க நிலவுலகிற்றிரி தருங் காலத்தில் முன்னாளியற்றிய நல்வினைப்பயன் வந் துதவக் கச்சிமா நகரத்தை
 யடைந்தனர்.
 பிரமன் கச்சபேசரைப் போற்றல்	      ஆயிடைக் கச்ச பேசனாம் இறைவன் அமர்ந்தருள் கோயிலின்    மாடே, காயும்ஐம் பொறியின் உலகெலாம் படைக்குங் கருத்தினான்
 மலரணைப் புத்தேள், தூயமா தவத்தின் இனிதுவீற் றிருக்குஞ் சூழலின்
 நணுகுத லோடும், தீயபா வத்தின் ஒட்டக வடிவாஞ் சிறுவனைக்
 கண்டனன் தாதை.                                     	28
      மலரை இருக்கையாகவுடைய பிரமன், உலகைச் சிருட்டிக்கும் ஆற்றல்    பெறும் விருப்பொடும் காஞ்சியில் கச்சபேசப் பெருமான் எழுந்தருளியுள்ள
 திருக்கோயிலின் சார்பில் ஐம்பொறிகளை அடக்கிப் புனித மாதவம்
 செய்யுமிடத்தை ஒட்டகம் நண்ணிய அளவிலே, இறைவனைக் கண்டெழாத
 பாதகத்தால் ஒட்டக வடிவாய தன்மகனைக் கண்டனன்.
      பாவடி நெடுங்கால் திரையெழு தோல்வாய்ப் பழியுடல்    நெளிந்துநீள் கழுத்தின், யாவரும் இழிக்கும் ஒட்டக யாக்கை
 இளவலை நோக்கிநின் றந்தோ, சேவுயர்கொடியான் அடித்தொழும்
 பாற்றுந் திருவருட் குரியனாம் இவனுக்,  காவஎன் செய்கோ என்மகற்
 இதுவந் தடுத்ததெவ் வாறென எண்ணி.                     29
      பரந்த அடியையும், நீண்ட காலையும் திரைந்தெழுந்த தோல் வாயையும்,    நெளிந்து நீண்ட கழுத்தையும், யாவரும் பழித்துப்பேசும் ஒட்டக வுடம்பையும்
 தாங்கிய தன் இளைய மகனைப்பார்த்து, ஐயோ, உயர்ந்த இடபக்
 கொடியையுடைய இறைவன் திருவடித் தொண்டு செய்தற்குக் காரணமாகிய
 திருவருளுக்குப் பாத்திரமாம் தன் மகனுக்கு இவ்வுடம்பு வந்து பொருந்தியது;
 ஆவ! என் செய்கோ! ஈது எவ்வாறென நினைந்து,
      யோகினைக் கூடி முன்நிகழ் வனைத்தும் உணர்ந்தனன்     அவ்வினை தவிர்ப்பான், ஆகம முறையாற் கச்சபே சன்பால்
 அடைந்துபூ சனைசெய்தேத் தெடுப்பான், மாகர்போற் றிசைக்கும்
 இளம்பிறை மோலி வள்ளலே உலகளித் தழிக்கும், ஏகனே ஆமை
 உருவொழித் தரியை ஆண்டநின் இணையடி போற்றி.           30
      யோகத்திருந்து முன் நிகழ்ந்த செயல் முற்றவும் அறிந்து, தன்     மகனுக்கு நேர்ந்த தீவினை தீரும்பொருட்டுக் கச்சபேசப் பெருமானை
 அடுத்து ஆகமமுறைப்படி பூசை செய்து போற்றும் பிரமன், விண்ணவர்
 துதிசெயும் பிறையை அணிந்த சடாமுடி புனைந்த வள்ளலே! உலகைத்
 தந்து காத்தொடுக்கும் ஒருவனே! திருமால் கொண்ட ஆமை வடிவை
 அழித்து அத்திருமாலை அடிமைகொண்ட நின் திருவடிகளுக்கு வணக்கம்.
 மாகம்-ஆகாயம். செய்து-செய்வேன்.	 |